Tuesday, December 23, 2014

பேரெழிலின் பெருங்கோபம்

penathal suresh · @penathal

 23rd Dec 2014 from TwitLonger




பிசாசு


பிசாசு
---------

பேரெழிலும் பெருங்கோபமும் மட்டுமல்ல, பேரன்பும் கொண்ட மாய யதார்த்தவாதப் பிசாசுகள் உலவிடும் அண்டப்பெருவெளியை தன் யப்பானியச் சிந்தனைக்கண்களுடன் நமது கண்முன்னே உலவவிட்டிருக்கிறார் மிசுகின்.

எண்ணங்களை வண்ணங்களால் காட்ட பிகாசோவுக்கும் வான்காவுக்கும் என்ன குத்தகையா கொடுக்கப்பட்டிருக்கிறது? பச்சையும் சிவப்புமாய் படம் நெடுக எண்ணவண்ணங்களால் நம் சிந்தையில் ஓவியமாய்க் காட்டுகிறார். 

நிறக்குருடு என்பதால் விபத்துகள் நடக்கலாம் - அவை சிறிய அளவோடு முடிந்துவிடும் - ஆனால் அலைபேசி சிதைக்கும் கவனங்கள் பேராபத்தை - அப்போது மட்டுமல்ல, காலங்காலத்துக்கும் ஏற்படுத்துவதற்கான அளவிடமுடியாத சாத்தியங்களை நாம் புறந்தள்ளிவிடமுடியாது என்பதை அசைக்கமுடியாத வாதங்களால் நம்மைக்கட்டிப்போட்டுக் கூறுகிறார்.

புகைபிடித்தலை நெருப்புக்குச்சி அணைத்தே நிறுத்தலாம், மதுபானம் அருந்துவதைத் திறப்பானை ஒளித்துவைத்தே கட்டுக்குள் கொணரமுடியும் என்பதை எளிய உதாரணங்கள் மூலம் நிறுவுவதை யாராலும் எளிதில் புறந்தள்ளிவிடமுடியாது.

இல்ல வன்முறைகளுக்குக் காரணங்கள் ஏதும் தேவையில்லை, வன்முறை மனம் இருந்தால் மட்டுமே போதும் என்று நிலவிவரும் சமூகத்தின் அபத்தங்களையும் அதற்கான தீர்வுகளையும் முன்வைக்கும் விதம் பாராட்டுதலுக்குரியது.

பிசாசு - பேரெழிலின் பெருங்கோபம்.