Thursday, September 17, 2015

யார் இவர்கள்? இவர்களின் நோக்கம் என்ன? -- By Antony Parimalam

1)ஆட்சிக்கு வந்தவுடன் சமச்சீர் கல்வி நிறுத்த வழக்கு. பழைய பாடங்களை அச்சிட்டு பல கோடி வீண்.
2)சேது சமுத்திர திட்டத்தை நிறுத்த வழக்கு
3) தலைமை செயலகத்தை மருத்துவமனையாக்க மிகப்பெரிய தொகை செலவு மற்றும் வழக்கு
4) துறைமுகம் - மதுரவாயல் சாலைப் பணியை நிறுத்தி வழக்கு
5) மக்கள் நலப் பணியாளர்களை வீட்டுக்கு அனுப்பி விட்டு வழக்கு
6) தாமிரப்பரணி நதி நீர் இணைப்பு பணி பாதியில் நிறுத்தம்.
7) திமுக ஆட்சியில் அடிக்கல் நாட்டி முடிக்கப்பட்ட பணிகளை திறந்து வைத்தல்
8) திமுக ஆட்சியில் ஆரம்பிக்கப்பட்டு பாதியில் உள்ள பணிகளை நிறுத்துதல்
9) நில அபகரிப்பு என்ற பேரில் பிடிக்காதவர்கள் மீது வழக்கு பதிவு செய்தல்
10) மனம் போன போக்கில் அரசு செலவில் அவதூறு வழக்கு போடுதல்
11) மணல் கொள்ளை., தாது மணல் கொள்ளை, கிரானைட் முறைகேடு போன்ற விசயங்களை கண்டுக் கொள்ளாதது.
12) டெண்டரே வைக்காமல் மின்சாரத்தை கொள்முதல் செய்தல்.
13) இந்த துறை அந்த துறை என்று எந்த துறையையும் விட்டு வைக்காமல் அத்தனை துறைகளிலும் ஊழல்
14) தமிழகத்தில் இருந்து தொழில் முதலீடுகள் வெளியே போனதை கண்டுக் கொள்ளாமல் விட்டது.
15) சிறுகுறு தொழில்கள் நசிந்து போனதை கண்டும் காணாமல் விட்டது.
16) மின்சார பகிர்மான கழகத்தின் மீது மிகப்பெரிய கடனை சுமத்தி அந்நிறுவனத்தை பாழ் படுத்தியது.
17) தமிழக அரசின் கடனை ஐந்தே வருடங்களில் இரண்டு மடங்குக்கு மேலாக உயர்த்தி சாதனை படைத்தது.
18) மத்திய அரசு காவல் துறை மேம்பாடு கல்விதுறை மேம்பாடு போன்ற பணிகளுக்கு ஒதுக்கிய பெரும் தொகையை மத்திய அரசுக்கே திருப்பி அனுப்பியது.
19) ஊழல் அதிகாரிகளை தேர்வு செய்து முக்கிய பணிகளில் அமர்த்தியது.
20)மத்திய அரசுடன் இணக்கமான உறவு இருந்தும் காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க முயற்சி செய்யாமல் இருப்பது.
21) அரசு பணத்தை பெரும் அளவில் இலவவசங்களுக்கு செலவிட்டதுடன் விளம்பரங்களுக்கும் ஆடம்பர செலவீனங்களுக்கும் செலவு செய்தது.
22) தமிழகத்திற்கு தானாக வந்த நான்கு வழிச் சாலைகளுக்கு உரிய ஒத்துழைப்பு வழங்காதது.
23) தமிழக அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மேம்பாட்டிற்கு தேவையான நிதியை மத்திய அரசிடம் பெற ஒரு முறை கூட முயற்சிக்காமல் தூங்கி வழிவது.
24) யாரும் கேள்வி கேட்கக் கூடாது என்பதற்காக ஒரு லட்சம் கோடிக்கும் மேற்பட்ட தொகைக்கு 110 இன் கீழ் தொடர்ந்து அறிவிப்புகளை மட்டும் செய்து விட்டு எந்த நிதியும் ஒதுக்காதது.
25) முதலீட்டாளர் மாநாடு என்ற பெயரில் மக்கள் வரிப்பணத்தை வீணாக்கி விளம்பரம் தேடிக்கொண்டது.
இதெல்லாம் சாதனைகளா இல்லை வேதனைகளா ??
நீங்களே முடிவெடுத்துக் கொள்ளுங்கள்

பெரியார் யார்

பெரியார் யார் ? ? அவர் என்ன அவ்வளவு பெரிய அப்பாடக்கரா என நக்கலாய் பேசும் நண்பர்களின் பார்வைக்காக ..........
1. தான் வகித்த 29 பதவிகளை துறந்து பதவிகள் ஏதுமின்றி 40 ஆண்டுகளுக்கு மேலாய் மக்கள் பணியில் ஈடுபட்டவர்,
2. செல்வக் குடும்பத்தில் பிறந்தும் (1900 ஆம் ஆண்டுகளிலேயே சுமார் 25 கோடிகளுக்கு பெரியார் அதிபதி) சமூகத்தின் அடித்தட்டு மக்களின் துயரங்களை சிந்தித்து அதற்காய் தன் ஆயுளை செலவிட்டு இறுதியில் தன் சொத்துக்களை மக்களுக்கே விட்டுச் சென்றவர்.
3. மக்கள் செல்வாக்கு இருந்தும் தன் இயக்கத்தை அரசியல் கட்சியாய் மாற்றாதவர், அரசியலில் இல்லாமலேயே மக்கள் பணி செய்தவர்,
4. விதவை மறுமணத்தை ஆதரித்தவர்
5. மனிதன் அனைவரும் சமம் அவனுக்குள் மேல் ஜாதி கீழ் ஜாதி என்ற பிரிவினை இருக்கக் கூடாது என ஜாதியத்தை கடுமையாய் எதிர்த்தவர்.
6. ஜாதிகள் மதத்தினால் தான் தோன்றுகின்றன எனவே மதத்தை தூக்கி எறிந்தவர்.
7. இல்லாத கடவுளையும் சாஸ்திரங்களையும் சம்பிரதாயங்களையும் சொல்லி, மதங்கள் மனிதர்களை மூடனாக்குகிறது என்பதை உரக்கச் சொன்னவர்.
8. சாதாரண லுங்கியையும் சட்டையையும் விரும்பிய எளிமையான பகுத்தறிவுவாதி
9. மக்களுக்கு பிடித்தமான மதத்தை எதிர்த்து மக்களின் விரோதத்தை சம்பாதித்தவர், மக்களோடு ஒத்து ஊதி அரசியல் பண்ணத் தெரியாதவர். மக்களுக்கு பிடித்ததை செய்வதை விட தேவையானதை செய்ய முனைந்தவர்.
10. மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு என கர்ஜித்தவர்.
11. பக்தி வந்தால் புத்தி போய் விடும், புத்தி வந்தால் பக்தி போய் விடும் என தத்துவம் பேசியவர்.
12. தம் இயக்கத் தோழர்களை சாதி மறுப்பு - மத மறுப்பு - விதவை மறுமணம் செய்து கொள்ளத் தூண்டியவர்.
13. பெண்ணுரிமைப் போராளி, கணவனுக்கு இல்லாமல் மனைவிக்கு மட்டும் ஏன் தாலி எனக் கேட்டு ஆண் சமூகத்தை அதிரச் செய்தவர்.
14. பெரியாரிடம் பலர் உங்கள் எல்லாக் கொள்கையும் பிடித்திருக்கிறது கடவுள் மறுப்பைத் தவிர என சொல்லிய போது, கை நல்லா இருக்கு கால் நல்லா இருக்கு மூக்கு முழி எல்லாமே நல்லா இருக்கு உயிர் மட்டும் தான் பிடிக்க வில்லை எனச் சொல்வது போல் இருக்கிறது நீங்கள் சொல்வது என பதிலளித்து அவர்களின் வாயை அடைத்தவர்.
15. நீ உணரும் பசியை நானும் உணர்கிறேன், அதனால் பசி இருக்கிறது என ஏற்றுக் கொள்கிறேன், ஆனால் நீ உணரும் கடவுளை என்னால் உணர முடியவில்லை அதனால் கடவுளை மறுக்கிறேன் என கடவுள் மறுப்புக்கு விளக்கம் சொன்னவர். -
Prakash JP

தானியம்

தானியங்களை ஏன் தவிர்க்கவேண்டும்?
பேலியோவில் கார்பை பொதுவாக தவிர்த்து வந்தாலும் பழம், சில வகை கிழங்குகளை மெய்ன்டெனெஸ் டயட்டில் வரம்புகுட்பட்டு சேர்த்துகொள்வோம். ஆனால் தானியங்களை மெய்ன்டெனெஸ் டயட்டில் கூட சேர்க்க முடியாது. காரணம் அவற்றின் தீங்குகள் எண்ணற்றவை.
சிறுதானியம், முழுதானியம் என விளம்பரப்படுத்தபட்டு விற்க்கபடும் வகைகள் கெடுதலானவையா அல்லது தீட்டிய வெள்ளை அரிசியில் கெடுதல் அதிகமா என்பது நாள் முழுக்க பட்டிமண்டபம் வைத்தும் தீர்க்க முடியாத பிரச்சனை. முழுதானியங்களில் இருக்கும் நார்ச்சத்து ஜீரணம் ஆகாத வகை நார்சத்து. இதில் பைட்டிக் அமிலம் ஏராளமாக இருப்பதால் இதனுடன் நீங்கள் உண்ணும் கீரைகுழம்பில் இருக்கும் அத்தனை மினரல்களையும் இது உடலில் சேரவிடாமல் செய்துவிடும். நீங்களும் கீரையில் உள்ல இரும்புசத்து உடலில் சேரும், கால்ஷியம் உடலில் சேரும் என போட்ட கணக்கு எல்லாம் வீண். அதுபோக இத்தகைய ஜீரணம் ஆகாத கால்ஷியம், கிட்னியில் கற்களா தேங்கும் வாய்ப்பும் அதிகம். ஆக தானும் கெட்டு சந்திரபுஷ்கரணி நதியையும் சேர்த்துக்கெடுத்த கதைதான் முழுதானியத்தின் கதை.
அரிசியை/கோதுமையை பாலிஷ் போட்டு தீட்டுவதால் அதில் உள்ள பைட்டிக் அமிலம் அகன்றுவிடுகிறது. ஜீரணம் ஆகாத நார்சத்தும் அகன்றுவிடுகிறது..அத்தகைய தீட்டிய வெள்ளை அரிசி/மைதா என்பது வெறும் சுகர் தான். அதில் என்ன பிரச்சனை இருக்கபோகிறது?
புரதம்...
தானிய புரதங்களில் க்ளூட்டன், க்ளியாடின், ப்ரொலோமைன் (prolamin) என பலவகை உண்டு. க்ளூட்டனின் கெடுதல் ஊரறிந்த விஷயம் என்பதால் க்ளூட்டன் ப்ரி என சொல்லி கோதுமையை தவிர்த்து அரிசியை உண்டுவருகிறார்கள், ஆனால் இது புலிக்குதப்பி முதலைவாயில் வீழ்ந்த கதைதான்
அரிசி, மக்காசோளம்,. ஓட்ஸ் முதலானவற்றை சமைக்கையில் அதில் உள்ள புரதம் தீயாலும், வெப்பத்தாலும் சிதைக்கபட்டும், நம் சிறுகுடல், பெரும்குடலால் ஜீரணிக்கபடும் தருவாயில் 33 மெர் பெப்டைட் (33 mer peptide) போன்ற வகை புரதமாக மாறுகிறது. நம் பெருகுடலால் இதை எளிதில் ஜீரணிக்க முடிவதில்லை. அதனால் ஒரு கட்டத்தில் பெரும்குடலின் செல்களை இது பதம் பார்க்கதுவங்குகிறது.
செல்களை காப்பாற்ற உடலின் நோயெதிர்ப்பு சக்தி களத்தில் இறங்குகிறது. ஆபத்தான தானிய புரதங்களை இது தாக்குகிறது. ஆனால் 33 மெர் பாலிபெப்டைட் புரதம் நம் உடலின் தசைகளில் உள்ள புரதம் போலவே இருப்பதால் நம் நோயெதிர்ப்பு சக்தி நம் தசைகளையே தாக்குகிறது. இதன் விளைவே ஆட்டோஇம்யூன் வியாதிகள்
ஆட்டோஇம்யூன் வியாதிகளின் வகைகள்:
சொரியாசிஸ்,
லூபுஸ்
செலியாக் வியாதி
கிரேவ்ஸ் வியாதி
க்ரோன் வியாதி
இன்னும் 80 வகை ஆட்டோஇம்யூன் வியாதிகள்..(இணைக்கபட்டுள்ள படத்தில் உள்ள நடிகர் சீலுக்கு லூபுஸ் பாதிப்பால் முகத்தில் வெட்டுகாயமே உண்டாகிவிட்டது)
இதுபோக இவை நம் பெரும்குடலில் ஆறாத புண்ணை உண்டாக்குவதால் அல்சர் முதல் பெரும்குடல் செல் மெம்பெர்ரென்கள் கிழிந்து உள்காயம் முதலான பலவகை வியாதிகள் உருவாகின்றன. பிளட் பிரசர், சுகர் வருவது தனிக்கதை.
அரிசியில் உள்ள ஓர்ஸனைன் (orzenin) எனும் ப்ரொலமைன் புரதம் எண்டெர்கொலியோடிஸ் சின்ட்ரோம் எனும் வகை வியாதியை பெரும்குடலுக்கு உருவாக்குகிறது.
தானியங்களால் உன்டாகும் புரதங்களால் வரும் வியாதிகளை குறிக்க FPIES (food protein-induced enterocolitis syndrome.) எனும் பாகுபாட்டை உருவாக்கி மருத்துவ உலகம் ஆய்வு செய்து வருகிறது
அதனால் மெய்ன்டெனெஸ் டய்டட்டிலும் தானியங்களை சேர்ப்பது ஆபத்தானது. ஆட்டொஇம்யூன் வியாதிகள் ஏதோ அபூர்வமானவை அல்ல...ஆறில் ஒருவருக்கு ஏதோ ஒருவகை ஆட்டோஇம்யூன் வியாதி இருக்கிறது. ஆக வெள்ளை அரிசியில் கெடுதல் இல்லை என எளிதில் ஒதுக்க முடியாது.
ஆக தானியம் சாப்பிடுவது பாம்புபுற்றில் கைவிடுவது போல என்றும் ஆபத்தானது.உடல் ஒரு அளவு வரை மட்டுமே அந்த டேமேஜை தாக்குபிடிக்கும்..