Thursday, February 27, 2014

ஐ.மு.கூ ஆட்சி: பத்து வருட பகாசுர ஊழல்கள் – 1

ஐ.மு.கூ ஆட்சி: பத்து வருட பகாசுர ஊழல்கள் – 1
February 6, 2014
- ஈரோடு ஆ.சரவணன் 
அச்சிட அச்சிட 
2004-ம்வருடம் ஆட்சிக்கு வந்து, 10 ஆண்டுகள் நிறைவடையும் நிலையில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி உள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் நாட்டில் இவர்கள் நடந்தியுள்ள ஊழல்களின் பட்டியல் ஏராளமானது. இந்த 10 ஆண்டுகளில் நடந்துள்ள ஊழல் மற்றும் மோசடிகளை பட்டியலிட்டு காட்டினால், மீன்டும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக்கு வரவேண்டுமா? என்ற கேள்வி எல்லோர் மனதிலும் எழும், அதே
வேளையில் ஏன் காங்கிரஸ் கட்சியின் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் ? என்கின்ற சிந்தனையும் வெளிப்படும். ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் அடித்த கொள்ளை தொகையின் அளவு, நாம் வெளிநாடுகளில் பெற்ற கடனை அடைக்க காங்கிரஸ் கட்சியின் ஆட்சியில் கொள்ளையடித்த தொகையில் 25 சதவீத கொள்ளை பணத்தை பயன்படுத்தினால் கடன் அடைபடும் என பலர்
கூறுகின்றனர்.

corruptionமத்தியில் ஆளும் கட்சியாக காங்கிரஸ் இருந்த போதெல்லாம் ஊழல் என்பது சகஜமானதாகவே மாறிவிட்டது. நேரு காலம் முதல் தற்போது ராகுல் காந்தி காலம் வரை காங்கிரஸ் கட்சி என்றாலே அது ஊழல் கட்சி என கூறும்படி மாறிவிட்டது. வேடிக்கையாக ஒரு பத்திரிக்கையில் குறிப்பிட்டார்கள், All India Congress Committee என்றாலே அது All India Corruption Congress என்பதாக குறிப்பிட்டார்கள். இவர்களின் ஆட்சிக் காலத்தில்
ஊழல் புகாரில் சிக்கிய அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்கள் எவர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை, ஊழல் குற்றச்சாட்டில் சம்பந்தப்பட்டவர்களுக்கு உயர் பதவி கொடுத்த பிரதம மந்திரிகள் உண்டு. உதாரணமாக நேரு பிரதம மந்திரியாக இருந்த போது, ராணுவத்திற்கு 200 ஜீப் வாங்கியதில் நடந்த ஊழலை விசாரிக்க முற்பட்ட போது, ஊழலுக்கு துணை போன கிருஷ்ண
மேன்னுக்கு ராணுவ அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. திருடன் கையில் அரசின் கஜானாவின் சாவியை கொடுத்த்து போல.

இந்தியாவில் ஊழலின் பன்முகத் தன்மையை ஆராய கே.சந்தானம் அவர்கள் தலைமையில் ஒரு கமிட்டி அமைக்கப்பட்டது. 1964ம் வருடம் கே.சந்தானம் அவர்கள் அளித்த அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. இதன் பின்னர் பல்வேறு முட்டுக் கட்டைகளுக்கு பின்னர் மத்திய லஞ்ச ஒழிப்பு ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையம் கூட குற்றம் சாட்டப்பட்டவர்களை பற்றி விசாரிக்க வேண்டுமானால்
சி.பி.ஐ யை மட்டும் நம்ப வேண்டியுள்ளது. தற்போது சி.பி.ஐ. என்பது காங்கிரஸ் கட்சியின் எடுபிடி ஏவள் ஆட்களாக மாறிவிட்டார்கள். இதன் காரணமாக பல ஊழல் குற்றச்சாட்டுகள் விசாரனைக்கு வராமலே புதைக்கப்பட்ட சம்பவங்களும் உண்டு. விசாரணை என்ற பெயரில் ஆண்டுக்கணக்காக இழத்தடிக்கும் போக்கும் உண்டு. லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுக்கு உட்பட்ட தாமஸ் என்பவரை ஊழல் கண்கானிப்பு ஆணைய
தலைவராக காங்கிரஸ் நியமனம் செய்தது, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டதால், தானாகவே பதவி விலக வேண்டிய நிர்பந்தம் தாமஸ்க்கு ஏற்பட்டது.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் நடந்துள்ள ஊழல்கள்

2004-ம் வருடம் முதல் 2013-ம் வருடம் வரை இந்திய திருநாட்டை ஆட்சி செய்து வருவது காங்கிரஸ் கட்சியின் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாகும். இதில் செய்துள்ள ஊழல்களின் எண்ணிக்கை பட்டியல் போடுவதுடன், சில முக்கியமான ஊழல்கள் பற்றி மத்திய கணக்கு தணிக்கை அறிக்கை கூறுவதையும் பார்க்க வேண்டும். முக்கியமாக வெளியே விவாதிக்கப்படும் ஊழல்கள் (1) 2ஜி அலைக் கற்றை ஊழல், (2)
நிலக்கரி ஒதுக்கீடு ஊழல் (3) காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் நடந்துள்ள ஊழல் (4) பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பில் அரசுக்கு ஆதரவாக வாக்களிக்க பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கொடுக்கப்பட்ட லஞ்சம் (5) ஹெலிக்காப்டர் வாங்கியதில் ஊழல் (6)ஆந்திரக்ஸ் தேவாஸ் ஊழல் (7) பங்கு சந்தை ஊழல் போன்ற ஊழல்களும் மற்றும் காங்கிரஸ் கட்சியின் தயாவால் கூட்டணி கட்சியினர் அடித்த
கொள்ளைகள் மற்றும் காங்கிரஸ் ஆளும் மாநில அரசுகள் அடித்த கொள்ளைகளும் உண்டு. இதன் காரணமாக மத்தியில் உள்ள அரசு தனது ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள, மாநில கட்சிகள் அடித்த கொள்ளையை காட்டியே அரசை காப்பாத்திக் கொள்கிறார்கள். ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் அடித்த கொள்ளைகளின் பரிணாம வளர்ச்சியை சற்றே கானலாம்

2ஜி அலைக் கற்றை ஊழல்

சுதந்திர இந்தியாவில் இதுவரை நடந்த ஊழல் தொகை முழுவதும் கூட்டினால் கூட ஸ்பெக்ட்ரம் ஊழல் தொகை நெருங்க முடியாது. இந்த ஊழல் சம்பந்தமாக பாராளுமன்றத்தில் பாரதிய ஜனதா கட்சி கேள்வி கனைகளை தொடுத்த போது, பிரதமர் உட்பட கேபினட் அமைச்சர்கள் அனைவரும், ஊழல் நடக்கவில்லை என்றே வாதிட்டார்கள். சி.ஏ.ஜி அறிக்கை வெளி வந்த பின்னர் தான் இந்த மோசடியில் அரசுக்கு ஏற்பட்ட இழப்பீடு
தெரியவந்தது. இதில் ஒரு லட்சத்த்து 76 ஆயிரம் கோடி இழப்பீடு என்ற மதிப்பீடு பலரையும் திகைக்க வைத்த்து.

இது சம்பந்தமாக நிறைய விஷயங்களுக்கு பிரதமர் பதில் சொல்ல வேண்டியிருக்கிறது. பல்வேறு தரப்பிலிருந்தும் 2ஜி அலைக்கற்றை தவறாக வழங்கப்பட்டுள்ளது என்ற குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் இந்த போது, 2ஜி கோப்புகளை வரவைத்து, தனது அதிருப்தியை ஒரு முறைகூட பிரதமர் தெரிவிக்காத்து ஏன்? அந்த துரதிருஷ்டவசமான முடிவு அமலாக அனுமதித்த்து எவ்வாறு? அலைக்கற்றையின் அளவு குறித்த
அமைச்சரவைக் கூட்டத்திற்கான வரையறையில் அலைக்கற்றையின் விலை சேர்க்கப்படாத்து ஏன்? முதல்வரையறையில் விலை இடம் பெற்றிருந்த்தாகவும், தி.மு.க.வின் நெருக்கடியால் கடைசி நேரத்தில் அது கைவிடப்பட்டதாகவும் தெரிய வருகிறது. சட்டத்திற்குப் புற்ம்ப உரிமம் பெற்ற நிறுவனங்கள் குறுகிய காலத்தில் அதில் கணிசமான பங்குகளை மற்றொருவருக்கு விற்க எவ்வாறு அனுமதிக்கப்பட்டது? 
அலைக்கற்றையின் சரியான விலையை அறிவதற்காக ஏலம் என்ற ஒளிவு மறைவற்ற முறையை பயன்படுத்துமாறு 2.11.2007ந் தேதி அமைச்சர் ராசாவிடம் கூறிய பிரதம மந்திரி 3.1.2008-ல் அது பற்றி கண்டும் கானாமலும் இருந்த்து ஏன்? 2.11.20007க்கம் 3.1.2008க்கும் இடைப்பட்ட காலத்தில் என்ன நடந்த்து, அல்லது தி,மு.க. கொடுத்த நெருக்கடி அவ்வளவு கடுமையானதாக இருந்த்தா? என்பது போன்ற கேள்விகளுக்கு இன்னு வரை
பிரதமரிடமிருந்து விளக்கம் வரவில்லை.

upa-spectrum-2gதிரு அனில் தீருபாய் அம்பானிக்குச் சொந்தமான ஸ்வான் காபிடல் கம்பெனியின் பங்குகள் டி.பி.ரியாலிடி கம்பெனிக்குச் சாதகமாக திடீரென மாற்றம் செய்யப்பட்டன. இந்த மாற்றம் தொலை தொடர்ப்பு துறை அமைச்சர் ராசாவுக்கு சாதகமாகவே செய்யப்பட்டது. இதன் காரணமாக திரு.சுப்பிரமணிய சுவாமி 29.11.2008-ந் தேதி பிரதமர் மன்மோகன்சிங்க்கு ஒரு கடிதம் எழுதினார் ” லஞ்ச ஊழல் ஒழிப்பு
சட்டத்தின் (1988) 19வது பிரிவின் கீழ், தொலைத் தொடர்பு அமைச்சர் ஆ.ராசா மீது தனி நீதி மன்றத்தல் வழக்கு தொடர அனுமதி கோரி கடிதம் எழுதியிருந்தார். இதனால் இதில் நடந்த ஊழல் வெளிச்சத்திற்கு வந்த்து, இது மட்டுமில்லாமல், பயனிர் பத்திரிக்கையின் நிருபர் கோபி கிருஷ்ணன் 2ஜி அலைக்கற்றை ஊழல் தொடர்பாக பல கட்டுரைகள் எழுதியதும், இந்த ஊழல் தெருவிற்கு வந்த்து.

இதில் உள்ள மர்மங்கள் சிந்துபாத் தொடர்கதையை போல் நீண்டுகொண்டே போகிறது. காங்கிரஸ் கட்சி தன்னை காத்துக் கொள்ள ராசாவை பலிகடாவாக மாற்றிவிட்டது. பாராளுமன்றத்திலும், பாராளுமன்றத்திற்கு வெளியிலேயேயும், அமைச்சர் கபில் சிபில் உட்பட பலரும், ஊழல் நடைபெற வில்லை, தொலை தொடர்ப்பு துறைக்க எவ்வித இழப்பும் எற்படவில்லை என்ற கோஷத்தை மட்டுமே லாலிபாடினார்கள். உச்ச
நீதிமன்றத்தின் மூலமாகவும், பொதுநல அமைப்புகள் மூலமாகவும், பாராளுமன்றத்தில் பாராதிய ஜனதா கட்சி உட்பட பல எதிர்கட்சிகளில் தொடர் போராட்டத்தின் காரணமாகவும், அமைச்சர் பதவியிலிருந்து ராசா தனது பதவியை ராஜினாமா செய்தார். ஆகவே நாட்டிலே நடந்த மிகப் பெரிய ஊழல் 2ஜி என்றால்ஈ அதற்கும் போல் ஊழல் எங்களால் செய்ய இயலும் என்பதை காங்கிரஸ் கட்சியினர் பல்வேறு முறைகேடுகளில்
தாங்கள் யார் என்பதை காட்டியுள்ளார்கள்.

நிலக்கரி ஊழல்

2011-ம் வருடம் மே மாதம் 12-14 தேதியிட்ட ஒரு தமிழ் வார பத்திரிக்கையின் முகப்பு அட்டையில் 26 லட்சம் கோடி…….. ஸ்பெக்ட்ரத்தை மிஞ்சும் நிலக்கரி ஏழல் அம்பலத்திற்கு வரும் அதிர்ச்சி தகவல்கள் என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வெளிவந்துள்ளது. ஆனால் 2012-ம் வருடம் செப்டம்பர் மாதம் தான் இது பாராளுமன்றத்தில் பற்றி எரிந்த்து. ஸ்பெக்ட்ரம் விஷயத்தில் என்ன நடந்த்து என்று எனக்க தெரியாது. 
தவறே நடக்கவில்லை என்று துறை அமைச்சர் ராசா சொன்னதை நான் நம்பினேன். இதற்கு மேல் எனக்கு அதில் எந்தப் பங்கும் இல்லை. என பிரதமர் தெரிவித்தார். ஆனால் தன்வசம் வைத்திருந்த நிலக்கரி துறையில் மிகப் பெரிய ஊழல் நடந்துள்ளது என்பது எவ்வாறு தெரியாமல் போனது, விக்கரமாதித்தன் கதையாக மாறிவிட்டது.

2004-ல் ஆட்சிக்கு வந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் மத்திய நிலக்கரித் துறை அமைச்சராக இருந்த சிபுசோரன் ஒரு கொலை வழக்கில் கைதாகி சிறை செல்ல அந்த்த் துறையை பிரதமராக இருந்த மன்மோகன் சிங் தனது நேரடி கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டார். அந்த சமயத்தில் மட்டும் 63 சுரங்கங்கள் தனியாருக்கு தாரை வார்க்கப்பட்டன. 2004லிருந்து 2010 வரை 168 சுரங்கங்களுக்கு உரிமங்கள்
வழங்கப்பட்டுள்ளன. இதில் தனியாருக்கு தாரை வார்க்கப்பட்டது 113 சுரங்கங்கள். தனியாருக்கு விடப்பட்ட சுரங்கங்களில் நிலக்கரியின் அளவு 21.69 பில்லியன் டன்கள். இழ்ப்பீடு சம்பந்தமாக அரசு தெரிவித்த கருத்து, நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சியையும், மின் தேவையையும் கவனத்தில் கொண்டு என்ற வார்த்தையை பயன்படுத்தி தவறுகளுக்கு பரிகாரம் தேட அரசு முயல்கிறது.

coal-gateஇதில் 26 லட்சம் கோடி அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என்பதற்குறிய கணக்கு, இன்றைய மார்க்கெட் நிலவரப்படி 1டன் நிலக்கரியின் விலை ரூ2500 என்றாலும், இதில் உற்பத்திச் செலவு மற்றும் போக்குவரத்துச் செலவு போக நிகர லாபம் 1டன்னுக்கு ரூ1250 கிடைக்கும். ஆனால் அரசு தனியாருக்கு விடப்பட்ட சுரங்கங்களில் வெட்டி எடுக்கும் நிலக்கரிக்கு டன் 1க்கு ரூ100 மட்டுமே மத்திய
அரசுக்கு ராயல்டியாக கொடுத்தால் போதும் என அரசு அறிவித்த்து. இதனால் 21.69 பில்லியன் டன் விற்பனை செய்தால் அரசுக்கு கிடைக்கும் லாபம் ரூ26.91 லட்சம் கோடி ரூபாய்.

விதிகளுக்கு புறம்பாகவே ஒதுக்கீடு செய்யப்பட்டது. சுரங்க ஒதுக்கீடு பெற்றவர்கள் 36 மாதங்களுக்குள் தனது உற்பத்தியை தொடங்கி விட வேண்டும், வனப்பகுதியில் அமைந்திருந்தால், கூடுதலாக ஆறுமாதம் அவகாசம் எடுத்துக் கொள்ளலாம் என்பதே விதி, இந்த விதிக்கு மாறாக உரிம்ம் பெற்ற தனியார் நிறுவனங்கள் உற்பத்தியை தொடங்காமல், வேறு ஒருவருக்கு விற்று கொள்ளையடித்த சம்பவமும் உண்டு.

தனது அரசை காப்பாற்றிக் கொள்வதற்கு, காங்கிரஸ் அமைச்சர்கள் பாரதிய ஜனதா கட்சியின் மீது பழியை போட்டார்கள். சுரங்க ஒதுக்கீட்டை ஏன் ஏலத்தில் விட வில்லை என்ற கேள்விக்கு, பாரதிய ஜனதா கட்சி ஆளும் மாநிலத்தின் முதல்வர்கள் ஏலத்தில் விட எதிர்ப்பு தெரிவித்தார்கள் என பிரதமர் நா கூசாமல் பொய் பேசினார். போட்டிசார் ஏலமுறைக்கு பா.ஜ.க. முதல்வரகர்கள் எதிர்ப்பு
தெரிவிக்கவில்லை, மாறாக 2006-ல் பா.ஜ.க. ஆளும் மாநிலங்கள் ஏல முறையை ஏற்றன., ஏல வருவாயில் தமக்கு பங்கு வேண்டும் என்பதே அவர்கள் விதித்த நிபந்தனை என்பதை தெரிவிக்க பிரதமர் மறந்து விட்டார்.

தற்போது விசாரனையில் உள்ள விவகாரத்தில், பல்வேறு திருப்பங்கள் நடந்தன. நிலக்கரி ஒதுக்கீடு சம்பந்தமான கோப்புகள் கானவில்லை என உச்ச நீதிமன்றத்தில் அரசு தகவல் தெரிவித்த்து. பிரதமரை காப்பதற்காகவே, சட்ட அமைச்சர் தன்னிசையாக சி.பி.ஐ.யின் பிரமான வாக்குமூலத்தை திருத்தியது. ஆகவே மிகப் பெரிய ஊழல் நடந்த போதும் வருங்கால பிரதம மந்திரியாக சித்தரிக்கப்படும் ராகுல்
காந்தி வாய் திறக்கவில்லை. ஆகவே இந்தியாவின் ஓராண்டுகால் வரி வருவாய் ரூ9.32 லட்சம் கோடி, இந்த மோசடியின் காரணமாக மூன்றாண்டுகளுக்கு இந்தியர்கள் செலுத்தும் மொத்த வரி பணம் அளவுக்கு இந்த ஒரே ஊழலில் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. எனவே மீன்டும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஆட்சிக்கு வர வேண்டுமா என சிந்திக்க வேண்டும்.

பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பிற்கு லஞ்சம்

2008-ல் அமெரிக்காவுடன் இந்தியா போட்டுக் கொண்ட அணுசக்தி ஒப்பந்தத்துக்காக அரசை ஆதரித்த இடது சாரிகள் தங்களது ஆதரவை விலக்கிக் கொண்டார்கள். இதன் காரணமாக பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்நிலையில் அரசை காப்பதற்காக பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு நம்பிக்கை வாக்கெடுப்பின் போது அரசுக்கு ஆதரவாக வாக்களிக்க எதிர்கட்சி
உறுப்பினர்களுக்க கோடிக் கணக்கில் லஞ்சம் கொடுக்க்பட்ட சம்பவம், இந்த அரசு ஊழலை தவிர வேறு எதுவும் செய்ய வில்லை என்பதை காட்டும் சம்பவமாகும். நேரிடையாகவே பாராளுமன்றத்தில் பணக் கட்டுக்களை காட்டிய பின்னரும் குற்றவாளிகளை பிடிப்பதற்கு பதிலாக, பாராளுமன்றத்தில் பணக் கட்டுக்களை காட்டிய பாரதிய ஜனதா கட்சியினர் மீது வழக்கு போடப்பட்டுள்ளது.

காமன்வெல்த் விளையாட்டு ஊழல்

சுமார் 8,000 கோடிக்கு மேல் மக்கள் வரி பணத்தை வைத்து நடந்திருக்கும் இந்தப் பகல் கொள்ளையில் கல்மாடியும், விளையாட்டு ஏற்பாடு குழுவும் மட்டும் பொறுப்பல்ல, இந்த விளையாட்டு போட்டியை அமலாக்தில் பங்கு வகிக்கும் தில்லி முதல்வராக இருந்த ஷீலா தீட்சித், உட்பட பல்வேறு அமைச்சர்களுக்கும் இதில் தொடர்ப்பு உள்ளது. விஞ்ஞான ரீதியாக கொள்யைடிப்பதில் காங்கிரஸ் கட்சியின்
கைதேர்ந்தவர்கள் என்பதை காட்டுவதாக உள்ள காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் அடித்த கொள்ளைகள். சில கொள்ளைகளை பார்த்தாலே இதன் விபரீதம் நன்கு புரியும். அவசர விளக்கு வாங்கும் போது 1 விளக்கின் சந்தை விலை ரூ920 , கல்மாடி வாங்கியது ரூ2,623 ஒரு விளக்கின் விலையில் வாங்கியுள்ளார். ரூ18,000க்கு சந்தையில் விற்கப்படுகின்ற வின்டோ ஏ.சியின். விலை, கல்மாடி வாங்கும் போது ரூ1,18,182க்கு
வாங்கப்பட்டதாக கணக்கு காட்டப்பட்டுள்ளது, இது போல் 110 வின்டோ ஏ.சி வாங்கப்பட்டுள்ளது, இதில் மட்டும் கோடிக்கு மேல் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

corruptionwealth-games-2010 எஸ் பாண்ட் ஊழல்

2ஜியை ஜன்பத் ஆதரவு பெற்ற ஊழல் என்றால், 4ஜி எஸ்.பாண்ட் ஊழல் ரேஸ் கோர்ஸ் ஆதரவு பெற்ற ஊழல் என்றால் மிகையாகாது. இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு 150 மெகா ஹெர்ட்ஸ் அலைக்கற்றை கொடுக்கப்பட்டு இருந்த்து. இதற்கு பெயர் எஸ்-பாண்ட் அலைக்கற்றை என்று பெயர். இந்த எஸ் பாண்டிலிருந்து தான் சன், டாடா, ஏர்டெல் என்று பல சேனல்கள் டி.டி.ஹெச் ஒளிபரப்பை நடத்துகின்றன. காலியாக
இருந்த எஸ்.பாண்ட்-ஐ வைத்து இஸ்ரோ வியாபரத்தைத் தொடங்கியது, இதில் தான் மிகப் பெரிய முறைகேடு நடந்துள்ளதாக மத்திய தணிக்கை துறை தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. சுமார் 2 லட்சம் கோடிக்கு முறைகேடுகள் நடந்துள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேவாஸ் மல்டி மீடியா பிரைவேட் லிமிடெட் கம்பெனியே இந்த முறைகேட்டில் மையப் புள்ளி. இஸ்ரோவைச் சார்ந்த டாக்டர் எஸ்.சந்திரசேகர் என்பவர் ஓய்வு பெற்றதும், இன்னும் சிலர் கட்டாய ஓய்விலும் வெளியேறி தேவாஸ் மல்டி மீடியா பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தை தொடங்கினார்கள். இந்த நிறுவனம் இஸ்ரோ வசம் உள்ள அதிக சக்தி வாய்ந்த 70 மெகா ஹெர்ட்ஸ் அலைக்கற்றையை தங்கள் வசம் கொண்டு
வரம் முயற்சிக்கு வித்திட்டார்கள். 12 வருடங்களுக்கு இவர்களுக்கு லைசென்ஸ் வழங்கப்படுகிறது. இஸ்ரோ நிறுவனம் தனது வர்த்தக நிறுவனமான ஆன்ட்ரிக்ஸ் கார்ப்பரேஷன் மூலம் இந்த ஒப்பந்த்த்தை செய்து கொண்டது. இந்திய அரசிடம் இருக்கின்ற சென்சிட்டிவ்வான பல துறைகளில் அணுசக்தியை அடுத்து மிக முக்கியமான விவகாரம் விண்வெளி துறையாகும். 2ஜி விவகாரம் விவாத பொருளாக மாறிய போது, 4ஜி
விவகாரமும் வெளிச்சத்திற்கு வந்த்து. இந்த ஒப்பந்தம் பிரமருக்கு தெரிந்து நடந்த்தா? பிரதமரை ஏமாற்றி விட்டு அவரைச் சுற்றி இருக்கும் லாபி அலைக்கற்றையை முழுங்கியதா? என பத்திரிக்கைகளும், எதிர்கட்சிகளும் குடைய துவங்கின. மிகவும் முக்கியமான துறையான விண்வெளியில் நடந்துள்ள ஒப்பந்தம், என்ன நடக்கிறது என்பது தெரியாமல் ஒரு பிரதமர் இருந்தால், நாட்டின் பாதுகாப்பு
பற்றி அவருக்கு எந்த அக்கறையும் கிடையாது என்றே அர்த்தம். மேலும் 2005 ஜனவரி மாதம் 28-ல் மன்மோகன் சிங் பிரதமாராக இருந்த போது, தனியார் நிறுவனம் பேச்சுவார்த்தையை தொடங்கி ஓர் ஒப்பந்த்த்தைப் போட்டது, அந்த ஒப்பந்தம் பிரதமருக்கும், அவரது அமைச்சரவைக்கும் சரியாக விளக்கப்பட்டதா என்றும் தெரியவில்லை.

இந்த ஒப்பந்த்த்தின் படி இரண்டு செயறகைக் கோள்களை இஸ்ரோ விண்ணில் ஏவியாக வேண்டும். இதைத் தான் பிரதமரது அலுவலகம் தெரியாது என தெரிவித்துள்ளது. இஸ்ரோ தலைவர் கே.ராதாகிருஷ்ணன் வெளிப்படையாக பத்திரிக்கையாளர்களிடம், இது பிரதமருக்கு தெரியாது என ஒப்புக் கொண்டார். இது உண்மை என்றால் பிரதமருக்கு தெரியாமல் மறைத்தவர்கள் யார் என்ற கேள்விக்கு இன்று வரை பதில் இல்லை.

அரிசி ஏற்றுமதி ஊழல்

ஆனந்த் சர்மா தலைமையில் உள்ள வர்த்தக அமைச்சகம், பாசுமதி அல்லாத அரிசி 1மில்லியன் டன் ஏற்றுமதி செய்ததில் மிகப் பெரிய ஊழல் நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அரசின் விதிப்படி 12,500 டன்னுக்கும் ஒரு உரிமம் வழங்கப்பட வேண்டும். இந்த விதிக்கு புறம்பாக 2011 ஜீலை மாதம் 19 தேதி வெளி நாட்டு வர்த்தக இயக்குநர் ஜெனரல் (டி.ஜி.எஃப்டி) வெறும் 14 நிறுவனங்களுக்கும், 24 தனி
நபர்களுக்கு மட்டும் உரிமம் வழங்கியுள்ளார். லட்சக்கணக்கான டன் அரிசி ஏற்றுமதியை ஆறு நபர்களே அனைத்தும் வளைத்து விட்டதாக குற்றச்சாட்டு எழுந்த்து. 2009 முதல் 2011 வரை மட்டுமே இதுவரை இல்லாத அளவுக்கு அரிசி ஏற்றுமதி உரிமங்கள் வழங்கப்பட்டன. அரிசி ஏற்றுமதி உரிமம் வழங்கும் நடைமுறையும் கூட ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் வெளிப்படையானதாக இல்லை. கோட்டாவுக்கு
ஆன்லைனில் விண்ணப்பிக்க இரண்டு நாட்கள் மட்டுமே அவகாசம் கொடுக்கப்பட்டது. இதன் காரணமாக சுமார் 3,500 விண்ணப்பங்கள் ஆன்லைனில் பதவிறக்கும் செய்யப்பட்டதால், இணைய தளமே முடங்கிப் போனது. அரசு ஏற்றுமதி அரிசிக்கு டன் 1க்கு 400 டாலர் என விலை நிர்ணயம் செய்த்து, ஆனால் வெளிச்சந்தையில் டன் 1க்கு 530 டாலர் விற்கும் போது 130 டாலர் குறைவாக விலை நிர்ணயம் செய்ததால் அரசுக்கு இழப்பு ரூ650
கோடி, இது அரசியல்வாதிகள் , அமைச்சர்களுக்கு சென்றதாக விசாரனையில் தெரியவந்தது. 12,500 டன்னுக்கு ஒரு உரிமம் வழங்கப்பட வேண்டும் என்ற விதி இருந்தும், விதி மீறப்பட்டு, அகமதாபாத் நகரைச் சார்ந்த அடானி என்டர்பிரைசஸ் என்ற நிறுவனத்திற்கு 50,000 டன் ஒதுக்கீடு கொடுக்க உரிமம் வழங்கப்பட்டது. மும்பையை சார்ந்த அல் கியாஸ் எக்ஸ்போர்ட் மற்றும் அதன் துணை நிறுவனங்களுக்கும்
சேர்ந்து 62,000 டன்னுக்கு உரிமம் வழங்கப்பட்டது. ஜே.கே ஜெயின் என்பவருக்கு 16 உரிமங்கள், அஸ்வின் ஷா என்ற நிறுவனத்திற்கு 3 உரிமங்கள், அல் கியாஸ் என்ற நிறுவனத்திற்கு 5 உரிமங்கள், பகாரியா நிறுவனத்திற்கு 8 உரிமங்கள் என அமைச்சருக்கு வேண்டியவர்களுக்கு அதிக அளவு உரிமங்கள் வழங்கப்பட்டன.

திராவிட இயக்கங்களை ஏன் எதிர்க்க வேண்டும்

திராவிட இயக்கங்களை ஏன் எதிர்க்க வேண்டும்.?


- வீர. ராஜமாணிக்கம் 

சுதந்திர இந்தியாவில் திராவிட பிழைப்பு வாதம் என்பது துவங்கி ஏறக்குறைய 100 ஆண்டுகள் ஆகப்போகிறது. இந்த 100 ஆண்டுகளில் தமிழ் இனவாதத்தை விறகாக்கி மக்களின் அறிவை பெட்ரோலாக்கி எரித்து குளிர் காய்ந்து கொண்டிருக்கும் பிழைப்பு வாதிகள் எவ்வளவு தீமைகளை செய்திருக்கிறார்கள் என்பதை எண்ணிப்பார்த்தால் அறுவெறுப்பும் அசூயையும் தான் மிஞ்சுகிறது. ஒரு பெரும் ஜனத்திரளையே சாராயத்திற்கும், மலினமான ஆபாச சிந்தனைக்கும், கலாச்சார சீர்கேடுகளுக்கும் ஆளாக்கி கலாச்சார அனாதைகளாக்கி இருக்கிறது திராவிட இயக்கங்கள். தின்னும் உணவுக்கு கூட இலவசமாக பிச்சை எடுப்பதை பெருமைக்குரிய அடையாளமாக்கி இருக்கிறது திராவிட இன அரசியல்.

மக்கள் திரளை மதி மயக்கி, அறிவுச்செயல்பாடுகளை முற்றிலும் இல்லாமலாக்கி அடி முட்டாள்களாக ஆக்கி இருக்கிறது திராவிட இயக்கங்கள். கழைக்கூத்தாடிகளை மட்டும் கொண்டாடிக்கொண்டு ஏனைய சுய சிந்தனைகளையும் அறிவுச்செயல் பாடுகள் அனைத்தையும் எள்ளி நகையாட செய்துள்ளது தான் கடந்த 100 ஆண்டுகளில் திராவிட இயக்கம் சாதித்தது. அறிவு சார், வரலாற்று சார் பண்பாட்டு அறிவு ஓட்டத்தில் மிகப்பெரிய அகழியை வெட்டி தமிழ் மக்களை கலாச்சார, பண்பாட்டு அனாதைகளாக்கி இருக்கிறது திராவிட அரசியல். எளிய ,முட்டாள் தனமான அற்ப சிந்தனை ஒரு சமூகத்தையே இவ்வளவு தூரம் பின் தள்ளும் என்றோ, அடி மடையர்களாகவும் , அடிமைகளாகவும் இருப்பதை பெருமையாகவும் எடுத்துக்கொள்ளும் என்றோ மானுடவியலாளர்களோ, கலாச்சார ஆய்வாளர்களோ சொல்லியிருந்தால் கூட நாம் நம்பி இருக்க மாட்டோம்.

துவக்க புள்ளி

திராவிட இனவாத அரசியலின் ஆரம்பப்புள்ளி என்பது 18ம் நூற்றாண்டில் மக்களை பிரித்து ஆள வேண்டும் என்பதற்காகவும், பாலைவன மத விஷத்தை பரப்புவதற்காகவும்,ஐரோப்பிய கீழ்மைகளை மறைத்து கொள்வதற்காகவும் திட்டமிட்டு மாக்ஸ்முல்லர், பெஸ்கி பாதிரியார் மற்றும் ஜோஸப் கால்டுவெல் உள்ளிட்ட ஐரோப்பிய இனவெறியர்களும், மதவிபசாரம் (வியாபாரம் என்பது விபசாரம் என தப்பாக அச்சிடப்படவில்லை, சரியாக விபச்சாரம் தான் . மங்கல வழக்கில் வேண்டுமானால் ஆன்ம அறுவடை )செய்யவும், இந்த தேசத்தின் மக்களை ஆக்ரமித்து சுரண்டவும் செயல் படுத்திய அரசியல் ஆயுதம் தான் திராவிட ஆபாசத்தின் துவக்கம். 19ம் நூற்றாண்டில் அயோத்தி தாச பண்டிதர் இந்த நோயால் சில காலம் மனம் பிறழ்ந்து இந்த வீண் பிரச்சாரத்தை செய்து கொண்டிருந்தார். உச்ச கட்டமாக 1916 ல் தேர்தல் என்பது திருடர் பாதை என்று சொல்லி வயிறு வளர்த்துக்கொண்டிருக்கும் சுரண்டல் திராவிடர் கழக கும்பலின் மூலமான  நீதிக்கட்சியின் துவக்கத்திலிருந்து பார்க்கலாம்.

kumudam_cartoon_dmk1இப்போதுள்ள மக்களிடம் திராவிட இயக்கத்தின் கொடை  என்றால் என்ன? என்று கேட்டால் சாராயம் விற்று மக்களின் வாழ்க்கையில் மண்ண அள்ளி போட்டது. தினம் உண்ணும் உணவிற்கு கூட அரசின் இலவசத்தை எதிர்பார்த்து தட்டேந்தி நிற்க வைத்தது.750 ரூபாய் மதிப்புள்ள ஃபேனை கூட தன் உழைப்பில் சம்பாதித்து வாங்க வக்கில்லாமல் பிச்சையாக பெற வைத்தது. விவசாயத்தை துடைத்தெறிய பாடு படுவது, 47 ஆண்டுகளில் எந்த விதமான வளர்ச்சி திட்டங்களோ, தொலை நோக்கு திட்டங்களோ இல்லாமலேயே மக்களை தொடர்ந்து ஏமாற்றுவது. புரட்சிகரமாக மக்களுக்கு புது புது வழிகளில் லஞ்சம் கொடுப்பது. தேர்தல்களில் மக்களை ஏமாற்றி ஓட்டு வாங்குவதை ஒரு செவ்வியல் கலையாக வளர்த்தெடுத்து இருப்பது. மாற்று கருத்து சொல்பவர்களை கொன்றொழிப்பதை கம்யூனிஸ்ட்களிடமிருந்து பெற்று அதை மிகவும் நுட்பத்தோடும் ரசனையோடும் செதுக்கி எடுத்துள்ளது. தனிமனித ஒழுக்கம், பிறன் மனை விழையாமையில் துவங்கி கூட்டு கற்பழிப்பு வரை அனைத்தையும் நியாயம் என்பதாக மக்களை நம்ப வைத்தது.

தொட்டில் குழந்தை முதல் சுடுகாடு வரை அனைத்திலும் ஊழல் செய்தும் திருடியும் சொத்து சேர்ப்பது மட்டுமே பெருமை என மக்களை மழுங்கடித்தது, சொரணை என்பதும், வெட்கம் , மானம் என்பதெல்லாம் ஏதோ அயல் கிரக வாசிகளின் மொழி என்பதாக மக்களை நம்ப செய்தது. சிந்திப்பது, வாசிப்பது எல்லாம் பாவச்செயல் என்று மக்களுக்கு போதித்தது. கட் அவுட் கலாச்சாரம். அறுவெறுப்பு வரும் வகையில் மற்றவர்களை புகழ்வது, சுய மரியாதை என்பதை தன் கட்சி தலைவனின் பேரன் முதற்கொண்டு அனைவரின் காலையும் அருகில் தரிசனம் செய்வது என்பது மாதிரியான அகராதிகளை ஏற்படுத்தியது. தமிழ் மொழியை பற்றி ஒன்றுமே தெரியாமலும் , அதன் வளர்ச்சிக்கு ஒன்றும் செய்யாமல் வாய் சவடாலில் அதை அழிப்பது….. இன்னும் ஒரு 1,76,000 கோடி சாதனைகள் இருப்பதால் நாகரீகம் கருதி இதோடு நிறுத்தி கொண்டு 1860-70 கால கட்டத்திற்கு செல்லலாம்.

1850 களுக்கு பிறகு பிரிட்டிஷ் இந்தியாவில் நாராயண குரு, சட்டம்பி சாமிகள் உள்ளிட்ட ஞான குருமார்கள், சாது திரு அருட்பிரகாச வள்ளலார், துவங்கி ஜோதிராவ் புலே, ராஜாராம் மோகன் ராய் , ஈஸ்வர் சந்திர வித்யாசாகர் சுவாமி விவேகானந்தர் துவங்கி நெடிய அறிஞர் மரபு இந்து பண்பாட்டில் இடையில் புகுந்த வெற்று அரசியல் சடங்குகளையும், தேவையற்ற அடுக்கு முறைகளை களைந்து இந்து பண்பாடு அதன் பரிபூர்ண ஒளியில் ஒளிர தேவையான நடவடிக்கைகளை தங்கள் ஞானத்தால் செயல் படுத்தினார்கள்.

அறிவோ, ஞானமோ கைகூடாத எளிய மனிதர்கள் இவர்களின் மறு சீரமைப்பை வெறும் பிராமண எதிர்ப்பாக மட்டும் எளிமைப்படுத்தி கொண்டும் தங்களின் அதிகார சமன்பாடுகளில் வரும் பிழைகளுக்கு மேல் நிலை சாதி என நம்பப்படுபவர்களை குற்றம் சாட்டிக்கொண்டு மிஷனரிகளின் கவனமாக பின்னப்பட்ட சதி வலைகளின் முக்கிய கண்ணிகளாக மாறிப்போயினர். அப்படித்தான் பிராமணர்களுக்கு எதிரான இயக்கம் கேரளாவில் 1880 களில் துவங்குகிறது. நம்பூதிகளுக்கும் நாயர்களுக்கும் இருந்த அரசியல் சமன்பாடுகளில் ஏற்பட்ட முரண்பாடு நாயர்களை ஒரு அரசியல் இயக்கமாக அதை முன்னெடுக்க தூண்டியது. ஒடுக்கப்பட்ட புலையர்களுக்கும், ஈழவர்களுக்கும் நாராயண குரு சமூக அரசியல் மீட்சிக்கான நிஜமான காரியங்களை ஆத்மார்த்தமாக முன்னெடுத்ததால் அந்த சமூகங்கள் மீட்சியை நோக்கி சென்றன. சாதாரண அரசியல் சதிகளுக்கு மேல் செல்லத்தெரியாத எளிய மனிதர்களின் கையில் இனவாத அரசியல் வந்து சேர்ந்தது இப்படித்தான். அவர்களுக்கு நாராயண குரு சட்டம்பி சாமிகள் போல ஞானம் இல்லை என்ற தாழ்வு மனப்பான்மையில் அவர்கள் அரசியல் அதிகாரத்தை குறி வைத்து இந்த வலைக்குள் விழுகிறார்கள்.

இதன் பின் தொடர்ச்சியாக அன்றைய சென்னை ராஜதானியில் நடக்கும் பிரீமியர் தேர்தலில் டி.எம். நாயர், சர்.பி.டி. தியாக ராஜன், பொப்பிலி மகராஜா உள்ளிட்டோர் தேர்தலில் தோல்வியை தழுவுகிறார்கள். இந்த மக்கள் ஆதரவில்லாத தோல்விக்கு பிராமணர்களே காரணம் என ஒரு கண்ணுக்கு தெரியாத காரணத்தை கற்பிக்கிறார்கள். அப்போது பிராமண சமூகமே அதிகம் கல்வி அறிவு பெற்ற சமுகமாக இருந்தது. வேலை வாய்ப்பிலும் அவர்களே முண்ணனியில் இருந்தனர். இது அப்போது பெரும் நிலச்சுவாந்தார்களாகவும், ஜமீந்தார்களாகவும் இருந்த பிற ஜாதியவர்களுக்கு கவலைக்குரியதாக இருந்தது. அப்போது உலகம் முழுக்க ஒரு ஜனநாயகம், தனி மனித சுதந்திரம் பற்றிய விழிப்புணர்வை ஃப்ரென்ச் மறுமலர்ச்சி தோற்றுவித்திருந்தது. 19ம் நூற்றாண்டின் இறுதியில் உலகை பிச்சைக்காரர்களாக தொடர்ந்து வைத்திருக்க விரும்பும் சர்வாதிகார கம்யூனிஸ சிந்தனை உலகம் முழுக்க தப்பும் தவறுமாக புரிந்து கொள்ளப்பட்டு வந்த காலம். கல்வி அறிவு பெற்றவர்கள் சுதந்திர சிந்தனைக்கும், ஜன நாயகத்திற்கும் ஆட்பட்டு தங்களுடைய நில உடைமைக்கு எதிராக ஜனத்திரளை திருப்பி விட்டு விட்டால் என்ன செய்வது என்ற பயம் இருந்தது. பாமர மக்களுக்கு நடுவில் படித்தவர்கள் ஊடுருவி அவர்களை சுரண்டுவதை பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தி விட்டால் தங்களின் நில உடைமைக்கும் வரி வசூலிப்பிற்கும், ஆடம்பர வாழ்விற்கும் ஊறு விளைந்து விடுமோ என்று பதட்டப்பட்டனர். இந்த சிந்தனை சாக்கடை சென்னை ராஜதானியில் மட்டுமின்றி, திருவனந்தபுரம் வரை ஓடியது. ஒருங்கிணைந்த ஆந்திரா, கேரளா, தமிழகத்தில் இருந்த நிலக்கிழார்கள் இதை தடுக்க பிராமண சமூகத்திற்கும் ஏனைய பிற சமூகத்திற்கும் இடையே ஒரு நச்சு ஏரியை வெட்டினர்.

அதை முழுக்க தங்களின் வெறுப்பு பிரச்சாரத்தால்  நிரப்பினர். சில எளிய பிராமண துறவிகளின் சடங்காச்சார பற்றையும், தீண்டாமையையும் கொண்டு பிராமண எதிர்ப்பு கரையை பலப்படுத்தினார்கள். பிளவு படுத்தப்பட்ட மக்களை வெறியேற்ற இத்தாலிய மிஷனரியான ராபர்ட் டி நொபிலி கண்டு பிடித்து கொடுத்துள்ள இனவாதத்தையும், மாக்ஸ்முல்லரின் மொழிசார் அடையாளத்தையும், தூய இன சிந்தனைகளையும் தங்களின் சாதனங்களாக ஏற்றுக்கொள்கின்றனர். இந்த களவாணித்தனத்தை ஒருங்கிணைக்க ஒரு நாளிதழ் துவங்குகின்றனர். அதன் பெயர் ஜஸ்டிஸ் . நீதி என்று பெயர் வைத்து கொண்டு அநீதி இழைத்த கும்பல் அன்பின் மார்க்கம் என்று சொல்லிக்கொண்டு அதிக கொலைகள் செய்யும் மார்க்கத்தின் வழியை அப்படியே பின்பற்றியது. ஏமாந்த தென் இந்திய ஆட்டுக்கூட்டம் திராவிட இனவாத ஓநாய்களின் பின்னே அப்படியே மே…, மே  என்று ஓடியது…ஓடிக்கொண்டிருக்கிறது.

justice-katchiபின்னர் அது அரசியல் இயக்க அவதாரம் எடுத்தது. ஜஸ்டிஸ்பார்ட்டி ஆனது. கறையான் புற்றுக்குள் பாம்பு குடியேறுவது போல நாய்க்கர் அதை கைப்பற்றினார். தமிழ் பெயரால் திராவிடத்தின் பெயரால் தங்களின் ஜமீந்தாரிமுறையை அங்கீகரிக்க மறுத்த அல்லது தங்களின் நில உடைமையை கேள்வி கேட்ட பிராமண சமூகத்தையும், பிராமணர்கள் சொல்கேட்டு செய்யும் வேலைக்கு கூலி கேட்டும், உழைப்பிற்கு தகுந்த ஊதியம் வேண்டும் என்றும் கேட்ட சூத்திரர்களை பழி தீர்ப்பதோடு காலம் காலமாக இவர்களின் வளர்ச்சியை அழிக்க சூளுரைத்த இயக்கமாக திராவிட இயக்கம் பரிணாம வளர்ச்சி அடைந்தது.

பொப்பிலி மகராஜா, சர்.பிடி தியாகராஜர், டி எம் நாயரில் துவங்கி அனைத்து நீதிக்கட்சி தலைவர்களும் எப்படி பெரும் நில உடைமையாளர்களாக இருந்தார்கள் என்பதையும் அவர்கள் அனைவருக்கும் எதிராக தொழிலாளர் போராட்டங்கள் ஏன் நடந்தது என்பது பற்றியும் தெரிய வரும் ஒருவருக்கு அவர்கள் ஏன் அரசியல் இயக்கம் துவங்கி மக்களை மண்ணாந்தைகளாக ஆக்க பாடு பட்டார்கள் என்பது புரிய வரும். மக்கள் மீது தீராத குரோதம் உள்ளவர்கள் மட்டுமே செய்யகூடிய தீமைகளை திராவிட இயக்கம் 100 ஆண்டுகளில் தமிழ் மக்கள் மீது செய்துள்ளது. தெலுங்கு, கன்னடம், மலையாளம் பேசும் தாய் மொழிப்பற்று மிக்க திராவிட இயக்க முன்னோடிகள் ஏன் மொழி சார் வெறியை வளர்த்தெடுக்கிறார்கள் என்பதை யோசிக்கும் யாருக்கும் அதன் உள்ளரசியல் புரியும்.

ஆனால் இந்த இனவாத, மொழிவாத பிரிவினை பொருள் ஆந்திராவிலோ, கர்னாடகவிலோ, கேரளாவிலோ பெருமளவில் விற்பனையில் சூடு பிடிக்க வில்லை. இயல்பிலேயே கொஞ்சம் மந்தமான மன நிலையும், சோம்பேறித்தனமும் உள்ள தமிழ் ஆடுகள் இதற்கு அதிகமாக பலியாகின. சாதாரண அறிவு இருக்க கூடிய சிந்திக்க வாய்ப்பிருக்கும் யாரும் திராவிட இயக்க வரலாறை படித்தாலே அதன் முரண் பாட்டை தெளிவாக உணர்ந்து கொள்ள முடியும். அனைத்து நில உடைமையாளர்களும் சேர்ந்து எளிய மக்களின் நில உரிமைக்காக போராடுகிறார்களாமே? தெலுங்கு, கன்னடம், மலையாளம் பேசுபவர்கள் தமிழ் மோழியை தூய்மைப்படுத்தவும் அதன் மேன்மைக்காக வாழ்வை ஒப்புக்கொடுக்கவும் இருக்கிறார்களாமே? இது போன்ற கேள்வித்தொடர்களை வரிசைப்படுத்தினாலே அதில் உள்ள முரண் மெய் நம்மை அச்சப்படுத்தும். ஆனால் எந்த கேள்வியும் கேட்காமல் வாயையும் அறிவையும் மூடி வைத்து வாய்பிளந்து வேடிக்கை பார்த்து இன்னும் திராவிட இயக்கங்களுக்கு நிதி கொடுத்தும் அந்த இயக்கத்தில் உறுப்பினராகவும் தொடரும் சோகத்திலிருந்தே தெரிந்து கொள்ளலாம் எவ்வளவு மட்டிகளாக இந்த மக்கள் இருக்கிறார்கள் என்பதை. இதை சொல்ல வரும் யாரையும் விஞ்ஞானிகளை திருச்சபை கொலைசெய்வது போல தமிழர்கள் தண்டனை தந்து விடுகிறார்கள். தெரியாமல் கூட இவர்கள் விழிப்புணர்வு அடைந்து விடக்கூடாது எனும் சதியின் கண்ணிகளை இன்னும் மக்கள் புரிந்து கொள்ளாமல் இருக்கிறார்கள்.

ஒழுக்க கேடு எனும் தூண்டில்

திராவிட சதித்திட்டம் தேர்ச்சியாக தீட்டப்பட்டு ஒரு மாயாஜாலக்காரன்,குறளிவித்தைக்காரனின் நேர்த்தியோடு வடிவமைக்கப்பட்டு மக்களுக்கு வழங்கப்படுகிறது.தமிழ் மக்கள் மீதான தீச்சொல்லாக அப்படியே அது நிற்கிறது. குறளி வித்தை காட்டுபவர்களுக்கும் சர்க்கஸ் சாகஸகாரர்களுக்கும் அதன் முழு பரிமாணமும் தெரிந்திருக்க வேண்டியதில்லை அல்லவா? அது போல திராவிட சதியை நடித்து நிறைவேற்றும் சிலருக்கு அதை பற்றி முழு விழிப்புணர்வு இல்லாமல் கூட இருக்கும். திரைப்படங்களில் நடிக்கும் நடிகர்களுக்கு கதை பற்றிய முழுமையான புரிதல் இல்லாமலே கூட நன்றாக நடித்து கொடுத்து விட்டு செல்வது போலத்தான். பல பாத்திரங்கள் தேர்ந்து அதை முழுமையாக்குவது போல. திரைப்படத்தை முழுமையாக பார்க்கும் போது தான் தெரியும் சிறு பாத்திரம் ஏந்தி இருக்கும் அந்த நடிகனின் பாத்திரம் எப்படி துல்லியமாக கதைக்குள் பொருந்தி வருகிறது என்று. இதெல்லாம் நம் வீட்டில் இருக்கும் திராவிட இயக்க உறுப்பினர்களுக்கு தெரியாமலே கூட அவர்கள் இந்த சதியின் பாகமாக இருக்கலாம். “ நள தமயந்தி திரைப்படத்தில் பெண் கதாபாத்திரம் ஆண் பாத்திரத்திடம் ஒரு விரல் செய்கையை குடியேற்ற துறை அதிகாரிகளிடம் காட்ட சொல்வார். என்ன என்று கமல்கேட்பதற்கு உனக்கு தெரியவேண்டாம் அவருக்கு புரியும் என்பார்.

திராவிட இயக்கத்திற்கு ஆள் சேர்க்க அவர்கள் விரித்த தூண்டில் எதிர்கலாச்சாரம் எனும் கேடு. எந்த ஒழுக்க விதியையும் மீறலாம். யார் வேண்டுமானாலும் யாரோடு வேண்டுமானாலும் பாலுறவு கொள்ளலாம். அம்மா, அக்கா, தங்கை, அடுத்தவன் மனைவி,மகள் என்பதெல்லாம் சமூகம் நம் மேல் இட்ட குறியீடு தான் பாலியல் சிந்தனைகளுக்கும் செய்கைகளுக்கும் அது தடையாக இருக்க கூடாது. என்பதாக துவங்கி சாராயம் குடிப்பது எப்போதும் நல்லது. குடித்து விட்டு வந்து பெண்டாட்டி பிள்ளைகளை உதைப்பது நாகரீகம். முட்டாள்கள் தான் படிக்க வேண்டும். யாரையும் மதிக்க வேண்டியதில்லை. அனைவரையும் உன்னை விட கீழானவர்களாகே நினைத்து பழகு. அடிமையைபோல நடத்து. அறிவுச்செயல்பாடுகளை முற்றிலும் தடை செய். ஜனநாயகம் மட்டமானது, மன்னராட்சி முறையே சிறந்தது . தினம் குளிப்பது பாவம், பல் துலக்குவது பெருங்குற்றம். அடி முட்டாளாக இருப்பது உன் அடிப்படை உரிமை . ஆபாச வசை சொல் தான் இயல்பானது, நாகரீக மொழியில் மரியாதையாக பேசுவது பெரும் பாவம். குடும்பம் குழந்தை குட்டிகள் என சமூகத்தோடு இணைந்து வாழ்வது தண்டனைக்குரிய செயலாக முன்வைத்தது. இந்த எதிர் கலாச்சாரமே பாமரர்களையும் சில அறிவுள்ளவர்களையும் ஈர்த்து அவர்களின் வாழ்க்கையை அழித்து சமூகத்திலும் பேரழிவை ஏற்படுத்தியது. திராவிட சிந்தனையை தற்கொலை குண்டுகளோடு ஒப்பிட்டு கேள்விப்பட்டிருப்பீர்கள் அதன் நிஜப்பொருள் தானும் அழிந்து சமூகத்திலும் பேரழிவை நிகழ்த்தும் போராளியாக திராவிட இயக்கம் இருக்கிரது. என்பதை புரிந்து கொண்டு அந்த மன நலம் பாதிக்கப்பட்ட மக்களை நல்வழிப்படுத்த வேண்டியது நம் கடமையாகும்.

எதிர்கலாசார உத்தியாக அதன் தலைவர்கள்குறைந்த பட்சம் 3 அதிகாரபூர்வ திருமணம் செய்வது, வேசைகளுடன் கூத்தடிப்பது, பாலியல் வக்கிர சேஷ்ட்டைகளை பெருமையாக மற்றவர்களுக்கு சொல்வது. பொது இடங்களில் ஆபாச இரட்டை அர்த்தமுள்ள வக்கிரங்களை சொல்லி மற்றவர்களை நெளியச்செய்வது. போலீஸ் கார தகப்பன் தன் பெற்ற மகளோடு பாலியல் வல்லுறவு கொள்வது இலக்கியம் என்று பிதற்றுவது. ஜனநாயக நெறிமுறைகளை கடை பிடிக்காமல் தன் சந்ததிகளை மட்டும் பதவியில் அமர்த்துவது. அனைவரையும் காலில் விழச்செய்வது. படித்து கொண்டிருக்கும் தன் மகளின் தோழியை பாலியல் பலாத்காரம் செய்து திருமணம் செய்வது இதில் நான் அன்பழகனையும், கருணாவை மட்டும் சொல்ல வில்லை. அனைத்து திராவிட இயக்க தலைவர்களுக்கும் இந்த குணங்கள் பொருந்தி வருவதை ஒப்பிட்டு பார்த்தாலே தெரிய வரும். எந்த குடும்பப்பெண்ணையும் தன்னுடன் படுக்கையறையை பகிர்ந்து கொள்ள வெக்கமில்லாமல் அழைப்பது, குடும்ப பெண்களை “ அவள் பத்தினியில்லை, நான் உத்தமனில்லை” என்று அடுக்கு மொழியில் தன் அழுகிப்போன மன நிலையை வெளியில் ஜோடித்து சொல்வது , சிறுமிகளை திருமணம் செய்வது, என்று எழுதகூசுமளவுக்கு கலாச்சார சீர்கேட்டின் வடிகாலாக இந்த நிறுவனம் இருக்கிறது.இது போன்ற எதிர்கலாச்சார நிகழ்வுகளுக்கு முன்மாதிரியாக இருப்பதை உலகிற்கு உணர்த்தவே ஈவேரா துவங்கி கருணா வரை நிர்வாண கிளப்களில் பங்கேற்பது, 3 திருமணம் துவங்கி குஷ்பூ, நமீதாவை அருகில் இருந்து காட்சி இன்பம் பெரும் வரைக்கும், மேலும் நார்சிஸ உச்சமாக செயல்படும் ஜெயலலிதா வரை இதை நீங்கள் பொருத்தி பார்க்கலாம்.

தமிழ் பொழி வியாபாரம்: இவர்களின் இன்னொரு வியாபார சாதனம் தமிழ் மொழி மேம்பாடு. எனும் பொய்

வெளிநாடு செல்லும் மோகம்

வெளிநாடு செல்லும் மோகம்! - சுஜாதா

இனி, வெளிநாடு செல்லும் மோகம். பெரும்பாலும் இன்ஜினீயரிங் படிக்கும் நகர்ப்புற இளைஞர்களிடம் இந்த மோகம் தலைக்கிறுக்கி ஆடுகிறது (டாக்டர்களை அவர்கள் அதிகம் அனுமதிப்பதில்லை)

இன்றைய நடுத்தர வர்க்கக் குடும்பங்களில் விதிவிலக்கில்லாமல் ஒரு கஸினோ சித்தப்பாவோ அமெரிக்காவில் இருக்கிறார்கள். அவர்கள் அந்தக் கனவு தேசத்தின் அருமை பெருமைகளை வருடாந்திர விஜயத்தில் எடுத்துக் கூறி அந்த ஆசை சின்ன வயசிலிருந்து இளைஞர்களிடம் விதைக்கப்படுகிறது. அது நிறைவேறுவதற்கான தெளிவான பாதையும் தெரியும். ஜிஆர்ஈ, டோஃபெல் எழுதுவது, இருக்கிற எல்லா பல்கலைக்கழகங்களுக்கும் தலா எழுபது எண்பது டாலர் அனுப்பி - விண்ணப்ப பாரம் பெற்று நிரப்பி அனுப்புவது, அதில் ஏதாவது ஒரு கல்லூரி இடம் கொடுக்க… விசாவுக்கென்று பாங்க் பாஸ் புக்கில் தற்காலிகமாக கடன் வாங்கி எட்டு லட்சம் பத்து லட்சம் காட்டுவது, படித்து முடித்து அடுத்த ப்ளேனில் திரும்பி வந்துவிடுவேன் என்று விசா ஆபீஸரிடம் புளுகுவது, அதை அவர்களும் சிரித்துக்கொண்டே நம்புவது - இது ஆண்களுக்கு.

பெண்களுக்கு மற்றொரு பாதை உள்ளது. இங்கே, எம்.சி.ஏ, பி.எஸ்ஸி. கம்ப்யூட்டர் சயின்ஸ் போன்றவை படித்து இந்துவில் விளம்பரம் கொடுக்கும் அமெரிக்க என்.ஆர்.ஐ. மாப்பிள்ளைகளுக்குப் பதில் போட்டு கல்யாணம் செய்துகொள்வது. அதன் க்ரீன்கார்டு சிக்கல்கள் எல்லாம் அவர்களுக்கு அத்துப்படி. இவர்களுக்கு எல்லாம் என் அறிவுரை-தாராளமாக அமெரிக்கா செல்லுங்கள். உங்கள் திறமையும் புத்திசாலித்தனத்தையும் அங்கு சென்று பயன்படுத்திப் படிப்பதில் எந்தவித ஆட்சேபணையும் - யாருக்கும் இருக்கக்கூடாது. வாழ்த்துக்கள். இந்த தாத்தாவிடமிருந்து ஒரு டாட்டா! ஆனால், ஒரு வேண்டுகோள். அமெரிக்கா செல்வதற்கு கொடுக்கும் மறைமுகமான விலைகள் சில உண்டு. அவற்றைப் புரிந்துகொண்டு செல்லுங்கள். அவை இவை-

1. திரும்ப வரமாட்டீர்கள்… இது கட்டாயம், நூறு சதவிகிதம் நிகழும் ஒரு விளைவு. போய்விட்டு படிப்பு முடித்துவிட்டு உடனே வருகிறேன் என்று சொல்வதெல்லாம் பொய். அந்த நாடு உங்கள் மேல் படரும் நாடு. ஒரு ஆக்டோபஸ், அல்லது மலைப்பாம்பின் இறுக்கம் போல அது உங்களை விடாது. அதன் கிரெடிட் கார்டு சமூகத்தில் உங்களை மூன்றாவது தலைமுறை வரை கடன் வாங்க வைத்துவிடுவார்கள். மீளவே முடியாத கடன் சொர்க்கம் அது. அதைத் தெளிவாக அறிந்து கொள்ளுங்கள்.

2. அங்கே போனபின் உறவு, பாசம் இவற்றுக்கெல்லாம் புதிய அர்த்தங்கள் தோன்றும். எதற்காக அப்பா அம்மாவைக் கவனித்துக்கொள்ள வேண்டும். அவர்கள் கடமையைச் செய்தார்கள். வருஷம் ஒரு முறை ஃபாதர்ஸ் டே, மதர்ஸ் டே கார்டு அனுப்பினால் போதுமே… அல்லது அவ்வப்போது நூறு டாலர், இருநூறு டாலர்… - இப்படித் தோன்றும் இந்த எண்ணத்தையும் தவிர்க்க முடியாது. குறிப்பாக, பிசுநாரித்தனம் அங்கு கொஞ்சம் அதிகமாகும்.

3. அங்கே போய் நிறைய சம்பாதிக்கத் தொடங்கியதும் இந்திய விஷயங்கள் மேல் ஒரு ஏளனம் தோன்றும். என்னப்பா உங்க ஊர்ல சரியா ஒரு டாய்லெட் கட்டமாட்டாங்களா. வாட் ட்ராஃபிக்! ஐம் கெட்டிங் ம்யாட். ரோடுல ஒண்ணுக்கு போறவரைக்கும் உங்க தேசம் உருப்படாது… (கவனிக்கவும் உங்க ஊர். உங்க தேசம்)

4. தமிழ் பேசும் வழக்கத்தையும் மெள்ள இழக்க வேண்டியிருக்கும். நாங்கள் தமிழில் பேசினால் நீங்கள் இங்கிலீஷில் பதில் சொல்வீர்கள். நாளடைவில் தமிழ் படிக்கவே மறந்து போய்விட்டது என்று புளுகுவீர்கள்.
இந்தப் பக்கவிளைவுகள் எல்லாம் பரவாயில்லை என்றால் தாராளமாக வெளிநாடு செல்லுங்கள்.

அண்மையில் நான் ஹாசன் சென்றிருந்தேன். கர்நாடக மாநிலத்தின் மத்தியில் உள்ள சிறிய டவுன். அங்கே இன்சாட் 2-இ செயற்கைக்கோளின் கட்டுப்பாட்டுக் கேந்திரம் உள்ளது. பல இளம் இன்ஜினீயர்களைச் சந்தித்தேன்.
24 மணி நேரமும் இந்தியாவின் செயற்கைக்கோளை திசை பிசகாமல் கட்டுப்படுத்தும் ஷிஃப்ட் வேலை பார்க்கிறார்கள். அவர்களில் ஒருவரைக் கேட்டேன். அமெரிக்கா போயிருக்கலாமே…
அவர், போயிருக்கலாம். அட்மிஷன் கூட கிடைத்தது, ஸ்காலர்ஷிப்புடன் என்றார்.
ஏன் போகலை?
எல்லாரும் போய்ட்டா எப்படி? ஒன்றிரண்டு பேர் தங்கி நாட்டுக்கு சேவை செய்ய வேண்டாமா? என்றார்.

கார்கிலிலிருந்து துவங்கி நம் பிற்பட்ட கிராமங்களில் வயற்புறங்கள் வரை பணிபுரியும் இளைஞர்கள் இருக்கிறார்கள். இவர்கள் மேல்தான் எனக்கு மரியாதை. என்னைக் கேட்டால் இங்கேயே இருந்துகொண்டு எல்லா அசௌகரியங்களுக்கு மத்தியிலும் எதாவது சாதிக்கும் இளைஞர்கள் இந்நாட்டின் கண்கள்… நீங்களோ, நீங்கள் அனுப்பப்போகும் டாலரோ அல்ல! தாராளமாக செல்லுங்கள். சம்பாதியுங்கள். ஆனால், இந்தியாவைக் கேலி செய்யாதீர்கள்.

’அன்புடன்…’ வந்த கடிதங்கள்…

விகடனில் அன்புடன் பகுதியில் வெளி¢நாட்டு மோகம் கொண்ட இளைஞர்களுக்கு நான் எழுதிய கடிதம் மிகப்பெரிய சலனத்தை ஏற்படுத்தி உள்ளது. நிறையப் பேர் போன் பண்ணிப் பாராட்டினார்கள். விவரமாகக் கடிதம் எழுதினார்கள். விகடன் அலுவலகத்தில் இன்னும் அதற்குக் கடிதங்கள் வந்துகொண்டிருப்பதாகச் சொன்னார்கள். இன்டர்நெட்டில் ஒரு பெரிய சர்ச்சை ஓடிக்கொண்டிருக்கிறது. பலர் ஈ-மெயில் அனுப்பியிருந்தார்கள். எல்லோருக்கும் நன்றி.

இவ்வளவு சாதகபாதக விளைவுகளை ஏற்படுத்தியதென்றால் அதில் ஏதோ ஒரு உறுத்தும் உண்மை இருக்கவேண்டும் என்பது தெரிகிறது. பெரும்பாலான பெற்றோர்கள் நான் எழுதியதுடன் ஒத்துப்போயிருந்தார்கள். ஒரு சிலர் நான் இளைஞர்களை வெளி¢நாட்டுக்குப் போகாதீர்கள் என்று சொல்வதாக அர்த்தம் பண்ணிக்கொண்டு இந்த நாட்டில் என்ன இருக்கிறது என்றரீதியில் எழுதியிருந்தார்கள். ஒருவர் பூனாவில் உள்ள ஏ.எஃப்.எம்.சி. போல ஸீட் கொடுத்தால் ஐந்து வருஷம் நாட்டில் இருந்தாக வேண்டுமென்று கண்டிஷன் போட்டு பாஸ்போர்ட் கொடுக்காமல் அவர்களைக் கட்டிப்போட்டால்தான் நாடு உருப்படும் என்று எழுதியிருந்தார். ஜனநாயக நாட்டு நடைமுறைக்கு ஒவ்வாத யோசனை.

நான் அந்தக் கடிதத்தில் தீர்வும் சொல்லி இருக்கலாம் என்று எழுதியிருந்தார்கள் சிலர். என்னை நேரில் வந்து சந்தித்து,வெளி¢நாடு போகாமல் இங்கேயே சாதிப்பவர்களை எனக்கு அடையாளம் காட்ட ஆர்வமாக இருந்தார்கள்.

அந்தக் கடிதத்தின் இலக்கு இளைஞர்கள். அரசாங்கம் அல்ல. அரசாங்கத்துக்கு யோசனை சொல்லிக் கடிதம் எழுதுவதாயிருந்தால் வேறு மாதிரியாக இருந்திருக்கும்.

முக்கியமாக சிலர் உன் இரண்டு பிள்ளைகளுமே அமெரிக்காவில் வாசம் செய்கிறார்களே… உனக்கு என்ன தகுதியிருக்கிறது மற்றவருக்கு உபதேசம் செய்ய, புத்தி சொல்ல என்று கேட்டிருந்தார்கள். அவர்கள் கட்டுரையைச் சரியாகப் படிக்கவில்லை. நான் போகாதே என்று சொல்லவில்லை. தாராளமாகச் செல்லுங்கள். செல்லுமுன் அதற்குக் கொடுக்கும் மறைமுகமான விலைகளை அறிந்து செல்லுங்கள் என்றுதான் எழுதியிருந்தேன். வெளிநாட்டில் போய் சம்பாதிப்பதைத் தவிர்க்க அல்ல. மேலும் என் பிள்ளைகள் இருவரும் அமெரிக்கா சென்று வேலைசெய்வதால்தான் என்னால் அந்தக் கட்டுரையை உண்மையாக எழுத முடிந்தது என்பதை அவர்கள் அறியவில்லை. கட்டுரையில் சொல்லப்பட்டு இருக்கும் விளைவுகளை எல்லாம் சந்தித்தவன் என்கிற தகுதியில்தான் எழுதினேன்.

-- சுஜாதா

Wednesday, February 26, 2014

என்ன நடந்தது

இன்றைய விவாதத்தில் என்ன நடந்தது என்று ட்விட்லாங்கர் போடலாமென இந்த ட்விட்லாங்கர்.

என் டைம்லைனில் ஒரு ஆர்டி கண்ணில் பட்டது...அதன் லிங்க்.

https://twitter.com/thirumarant/status/438738244763525120

அதற்கு நான் ஒரு பதில் ட்விட் போட்டேன்..

https://twitter.com/nilavinmagal/status/438738535634325504

இந்த ஒரு பதில் தான் சுமார் நாலு மணி நேர விவாதத்திற்கும் காரணம்.

ராஜா தாயாக இருக்கும்போது அரர மனைவின்னு சொன்னா, அடுத்த தலைமுறைல அந்த மனைவியாக கருதப்படும் அரர தாயாக தானே மாறுவார்.

இதை தான் சொன்னேன்..ஆனால் தாயுணர்வும்,தாய்மையும் ராஜாவுக்கே சொந்தம் என்ற பொருளில் விவாதம் தொடங்கியது...

அப்போதும் சொன்னேன் அரர க்கு அடுத்த தலைமுறைக்கு வேறு இசை அமைப்பாளர் தாயாக தெரிவார் என்று..


இதற்கு விவாதம் செய்யணும் என்றால் என்ன சொல்லணும் அரர இசை பற்றி சொல்லணும்..இசையின் குறைகளைப் பற்றி சொல்லலாம்..அதை விடுத்து,

1.அரர பிசினஸ் செய்கிறார்
2. அரர விளம்பரம் செய்கிறார்.
3. புதுமுகம்களுக்கு இசை அமைக்கலை
4. காசு வாங்கி படத்தை ப்ரொமோட் பண்றார்
5. சோனி கம்பெனிக்காக முடி வளர்த்தார்
6. எந்த படத்துக்காவது காசு வாங்காமல் இசையமைச்சாரா
7. நல்லது செய்யவில்லை
8. இசையை காசாக்குகிறார்
9. இசையை கலையாக பார்க்கவில்லை..
10. பாட்டுகளில் தோன்றி கூத்தாடித்தனம் செய்கிறார்...
11. உப்புமா கம்பெனிக்கு இசையமைக்கலை


இப்படியான கேள்விகள்....

ஒன்றே ஒன்று மட்டும் புரியவில்லை.. ஒவ்வொரு தலைமுறைக்கும் ஒவ்வொருவர் தாயாக(இசையில்) தெரிவார் என்பதே எனது ட்வீட்...அப்படியானால் இசை நல்லாருக்கா இல்லியான்னு பேசலாம்..

அதைவிடுத்து, பிசினஸ் செய்வதும்,காசு சம்பாதிப்பதும்,முடி வளர்ப்பதும் கேள்வியாக கேட்டால் என்ன செய்வது...அதோடில்லாமல் நல்லது செய்தாரா என்று வேறு..ஆக இசை நல்லா இருக்குன்னு சொல்லனும்ன்னா அவர் ஊருக்கு நல்லது செய்யனுமா..இல்ல ப்ரோமோ மூலம் காசு வாங்காமல் இருக்கனுமா..இல்ல காசே வேணாம் கலையை வளர்க்கிறேன்னு இசையமைக்கனுமா...

தாய்/மனைவி ஒப்புமை வந்ததால் நானும் அதை வைத்து சொன்னேன்..

கண்டசாலா-எம்எஸ்வி -ராஜா தாயாக இருந்தார்கள் என்று ஒப்புக்கொள்பவர் ராஜாவுக்கு பின் அரர,அரர க்கு பின் வேறோர் இசையமைப்பாளர் என்பதை மட்டும் மறுக்கிறார்..அதாவது ராஜாவோடு இசையானது முடிந்ததுன்னு சொல்றாரான்னு புரியலை...இல்லை 80களுக்கு பின் 90s,2000s ன்னு மாறினது தெரியலையா...

மீண்டும் மீண்டும் ஒரு புள்ளியில், அரர நல்லவரா,ஏன் ப்ரோமொக்கு வரார்,காசு வாங்காமல் இசையமைச்சாரா என்று இருந்ததே ஒழிய தலைமுறை மாறியதை ஏற்றுக்கொள்ளும் மனப்பாங்கு இல்லை..


இதில் பதில் என்ன சொல்வதற்கு...முயலுக்கு மூன்று கால்கள் என்று யாராவது சொன்னால், இல்லை நான்கு கால்கள் இருக்கு என்பதை புரியவைக்க முயல்வது முட்டாள்தனம். அது போன்று புரியவைக்கத்தான் முயன்றேன்..

கடைசியில் விவாதம் முடிந்த விதமும் எனக்கு வருத்தம்... நான்கு மணிநேர உரையாடலில் எங்கும் நான் மரியாதை குறைவாக பேசவில்லை...(அவரும் கூட)

ஆனால் அவர் முடித்த விதம்,

"ஒரு பெண் என மரியாதையாக பேசியது என் தவறுதான்.. அதற்காக நான் வார்த்தை இழக்க மாட்டேன். நான் அன்ஃபாலோ செய்துகொள்கிறேன்"


அன்ஃபலோ செய்வதனால் எனக்கு வருத்தமோ, ஃபாலோ செய்வதனால் மகிழ்ச்சியோ அல்ல.. (ட்விட்டரில் யாரோ வருவர்,யாரோ போவர் வருவதும் போவதும் தெரியாது)

ஆனால் ஒரு பெண் என மரியாதையாக பேசினேன் என சொன்னார்..அப்படியானால் நாள் ஆணாக இருந்திருந்தால் பேச்சின் தரம் தாழ்ந்திருக்குமா..

இரண்டாவதாக இன்னொரு ட்விட்டில்,

"ரகுமான் ஃபேன்சிடம் நாகரிகம் எதிர்பார்த்தது தவறுதான்"

என்று போட்டிருக்கார்..ஆக நான் என்ன நாகரிகம் இல்லாமல் பேசினேன்?...அரரக்கு ஆதரவா பேசினால் நாகரிக குறைவா?.. நான்கு மணிநேர உரையாடலில் ஒரு ட்விட்டையும் அழிக்கவில்லை..யாரேனும் நான் என்ன நாகரிக குறைவாக பேசினேன் என்று சொன்னால் தெளிவாகும்.


ஆக, கண்டசாலா-எம்எஸ்வி-ராஜா-அரர-(அனிருத்,இமான்,etc)

இப்படி சங்கிலியாக வராதாம்..ராஜா வரை மட்டுமே சரியாம்..இது தான் உங்கள் நியாயம் இல்லியா?


டிஸ்கி---- நான் ராஜா வெறுப்பாளர் இல்லை..ராஜா இசையும் பிடிக்கும்..அதையும் சிறுபிராயம் முதல் கேட்டு வளர்ந்தவள்...எத்தனையோ நேரங்களில் ராஜா இசையை புகழ்ந்தவள்....

Tuesday, February 25, 2014

சவுக்கு

பொதிகைச் செல்வன் @thunukku


6th February 2014 from TwitLonger
@catchvp @raguc_ அண்ணே.. சவுக்கு பத்தி எல்லா விபரமும் தெரிஞ்சுதான் இப்படிச் சொல்றீங்களா? அல்லது சவுக்கு வெளியிட்ட தொலைபேசி உரையாடல் குறித்து உணர்வெழுச்சி காரணமா நீங்க பூரிச்சுப் போயி சொன்னீங்களானு முதல்ல தெரிஞ்சுகிடணும்.

சவுக்கின் சமீப காலச் செயல்பாடுகள் (கனிமொழி - ஜாபர் சேட் தொலைபேசி உரையாடல் வெளியீடு)நான் சொன்ன குற்றச்சாட்டுகளை நிரூபிக்கும் விதமாகத்தான் இருக்கு.

திடீர்னு சவுக்கு வெளியிட்ட தொலைபேசி உரையாடலால தூண்டப்பட்டு என் மேல பாஞ்சிருந்தீங்கனா.. கீழே உள்ள தகவல்கள் உங்கள் கவனத்திற்கு..

சவுக்கு வெளியிட்ட ஜாபர்சேட்-கனிமொழி, ஜாபர்சேட்-சரத்குமார், ஜாபர்சேட்-கருணாநிதியின் உதவியாளர் சண்முகநாதன் ஆகிய உரையாடல் பதிவு கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்கு முன்பாகப் பதிவு செய்யப்பட்டவை. இந்த உரையாடல் இந்தியாவின் மிகப்பெரிய, இமாலய ஊழல் வழக்கான 2ஜி அலைவரிசை ஊழலில் தொடர்புடையோருக்கு எதிரான அசைக்க முடியாத ஆதாரங்களில் ஒன்றாகும்.

2ஜி வழக்கில் தொடர்புடையோர் கைது செய்யப் பட்டு பிறகு அரசியல் செல்வாக்கால் கவனிக்க வேண்டிய முறையில் கவனித்த வகையில் வழக்கு நீர்த்துப் போகச் செய்யப்பட்டு அனைவரும் தப்பிவிட எல்லா முயற்சிகளும் கடந்த மூன்றாண்டுகளில் செய்யப்பட்டு கிட்டத்தட்ட அந்த வழக்கிற்கே முடிவுரை எழுதப்பட்டுவிட்டது.

அத்தகைய ஆதாரத்தை மூன்றாண்டுகளாக அடைகாத்துக் கொண்டிருந்த காரணம் என்ன? அந்த ஒலிநாடாக்கள் குட்டிகள் ஏதேனும் போடும் என்ற எதிர்பார்ப்பிலா?

ஒரு சாதாரண சமூகச் செயல்பாட்டாளராக, நாட்டின் மீது அக்கறை கொண்ட நபராக இருப்பின் என்ன செய்திருப்பார்? கையிலிருக்கும் ஆதாரத்தை உடனே வெளியிட்டு குற்றவாளிகளைத் தண்டிக்க வேண்டுமென்று முனைந்திருப்பாரா? மாட்டாரா? ஆனால் சவுக்கு வெளியிடவில்லை. என்ன நோக்கம்?

ஆதாரங்கள் சவுக்கின் கையில் இல்லை வேறொரு மூன்றாம் நபரின் கையிலிருந்தது என்று நீங்கள் கருதுவீர்களேயானால் உங்களுக்கு சவுக்கின் பின்னணியே தெரியவில்லை என்று பொருள். சவுக்கைத் தவிர வேறு நபர்களிடம் இந்த பதிவுகள் கிடைத்திருக்க வாய்ப்பில்லை என்னும் விசயம் சவுக்கின் பின்னணி அறிந்தவர்களுக்கு மட்டுமே தெரியும்.

சரி... அதுதான் இப்போது வெளியிட்டு விட்டாரே பிறகென்ன என்கிறீர்களா? இப்போதும் வெளியிட்டு பொன்முட்டையிடும் வாத்தை அறுத்திருக்க மாட்டார்.. ஆனால் சூழ்நிலை அவரை இந்நிலைக்குத் தள்ளியிருக்கிறது.

தற்போதைய நிகழ்வுகளைக் கவனித்திருந்தால் உங்களுக்கே தெரிந்திருக்கும். அதையும் நானே விளக்குகிறேன்.

கருப்பான, குண்டான, மீசை வைத்த நபரை ஒரு சிறுவன் மிகவும் அசிங்கமான கெட்டவார்த்தை சொல்லித் திட்டியதையும் கண்டுகொள்ளாமல் கம்மென்று இருக்கும் ஒரு நபர் இருப்பதைப் பார்த்து வடிவேலு பொங்கியெழுந்து சிறுவனைத் துரத்திச் சென்று கிட்னியை இழந்த நகைச்சுவைக் காட்சியைப் பார்த்திருப்பீர்கள்.

அந்த கிட்னி எடுக்கும் சிறுவனைப் போல உளவுத்துறை ஐ.ஜி. ஜாபர்சேட்டை கடந்த காலங்களில் சவுக்கு போட்டு அடி அடி என அடித்த கட்டுரைகளனைத்தையும் படித்திருப்பீர்கள். ஒரு மனிதன்/ இணைய தளம் வைத்திருப்பவர் ஒரு ஐ.ஜி. பதவியிலிருப்பவரைப் போட்டு இந்த அடி அடித்தபோதும் கருப்பான, குண்டான, மீசை வைத்த நபரைப் போல ஜாபர் சேட் அமைதியாக இருந்த காரணத்தை உங்களால் விளங்கிக் கொள்ள முடியவில்லையா?

ஜாபர்சேட்டுக்கும் தெரியும் சவுக்கு யார்? அவரது கையிருப்பு என்ன? என்பது.. ஜாபர் சேட்டை கேவலமாக விமர்சித்து எழுதி அவரை கமுக்கமாக இருக்க வைப்பது மட்டுமா சவுக்கின் நோக்கமாக இருக்க முடியும்? நீங்கள் சொன்னபடி Offshore accountக்கு மாற்றும் வேலையும் நடந்தது. பொன் முட்டையிடும் வாத்தினை அறுத்து விடாமல் பக்குவமாகக் கறந்து வந்திருக்கிறார்.

பிறகேன் இப்போது வெளியிட்டார்?

சவுக்கு இணையதளத்தை முடக்கவும், அவரைக் கைது செய்யவும் சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டிருக்கிறது. அத்தகைய உத்தரவைப் பிறப்பித்த நீதிபதி கருணாநிதிக்கு வேண்டப்பட்ட நபர் என்றும் கருணாநிதி உத்தரவின் பேரில்தான் அவ்வாறு ஒரு வழக்கை அனுமதித்து கைது/முடக்கம் உத்தரவைப் பிறப்பித்திருக்கிறார் என்று சவுக்கு நம்புகிறார்.

சில மாதங்களுக்கு முன்புவரை உயர்நீதி மன்றத்தில் மிகவும் பிரபலமான மனித உரிமை குழுவைச் சேர்ந்த பிரபல வழக்கறிஞர்களான இராதாகிருஷ்ணன், புகழேந்தி போன்றோர் நிழலில் அடைக்கலமாகி அவதூறு மற்றும் ப்ளாக்மெயில் வழக்குகளில் இருந்து தப்பி வந்த சவுக்கு இப்போது அவர்கள் குழுவில் இல்லை என்று சில நண்பர்கள் தெரிவிக்கின்றனர். சவுக்கின் செயல்பாடுகள் அவர்களுக்குத் தெரிந்துவிட்டதோ என்னவோ தற்போது அவர்கள் சவுக்கை தங்கள் குழுவிலிருந்து விலக்கிவிட்டதாகத் தெரிகிறது.

தமிழக அரசு வழக்கறிஞரும், காவல்துறையும் சவுக்குக்கு ஆதரவாக இருந்தும் நீதிமன்றம் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று உத்தரவிட்டிருக்கிறது.

ஆகையால் நீதிமன்ற உத்தரவிலிருந்து தப்பிக்கவோ, கைதிலிருந்து தப்பிக்கவோ வழியின்றி Corner செய்யப்பட்டு விட்டார்.

ஒரு அளவுக்கு மேல் அ.தி.மு.க. அரசு ஏன் சவுக்குக்கு உதவி செய்ய வேண்டும்? அவ்வாறு உதவி செய்யவேண்டுமெனில் அ.தி.மு.க.வுக்கு மகிழ்ச்சியூட்ட வேண்டும்.

ஒரே கல்லில் ரெண்டு மாங்காய்.. அ.தி.மு.க.வுக்கும் மகிழ்ச்சியூட்ட வேண்டும், நீதிமன்றத்தின் மூலம் முடக்கவும் கைது செய்யவும் துணிந்த திமுகவுக்கும் பாடம் கற்பிக்க வேண்டும். அதற்காகத்தான் இப்போதைய தொலைபேசி உரையாடல் வெளியீடு. அதுவும் இது தேர்தல் காலமென்பதால் அ.தி.மு.க. மிகவும் மகிழ்ச்சியடைந்திருக்கும், தி.மு.க. அதிகபட்ச இழப்பைச் சந்திக்க இருக்கிறது. இதைத்தான் நான் ப்ளாக் மெயில் என்று சொல்கிறேன்.

அந்த வழக்கோ, கைதோ, சவுக்கு தளம் முடக்க முயற்சியோ நடக்கவில்லையெனில் உண்மை வெளிவந்திருக்கவே வந்திருக்காது. சவுக்கின் Offshore Account வழக்கம்போல நிரம்பிக் கொண்டிருந்திருக்கும்.

உண்மையிலேயே சமூக அக்கறையிருப்பவர் மூன்றாண்டுகளாக ஆவணங்களைக் கையில் வைத்து ப்ளாக் மெயில் செய்து கொண்டிருக்கமாட்டார். வெற்றியோ?தோல்வியோ? ஆவணங்களை நீதிமன்றத்திலோ அல்லது மத்திய புலனாய்வுத் துறையிடமோ சமர்ப்பித்து உலகமகா ஊழல் பேர்வழிகளான கருணாநிதியையும் அவரது குடும்பத்தினருக்கும் தண்டனை வாங்கித்தர சிறிதளவாவது முயன்றிருப்பார்.

முடிவாக... நீங்கள் அப்பாவியாக இருப்பதில் எனக்கொன்றும் வருத்தமில்லை. எல்லோரும் உங்களைப் போன்றே அப்பாவியாக ”ஷட்டரைச் மூடிக்”கொண்டிருக்க வேண்டுமென்று எதிர்பார்க்காதீர்கள்.

நன்றி. :-)

Monday, February 24, 2014

அ.தி.மு.க. நாடாளுமன்றத் தேர்தல் 2014 வேட்பாளர்கள் பட்டியல்

அ.தி.மு.க. நாடாளுமன்றத் தேர்தல் வேட்பாளர்கள் பட்டியல்:

வேலூர் - செங்குட்டுவன்

கிருஷ்ணகிரி- அசோக்குமார்

தென் சென்னை- ஜெயவர்த்தன்

மத்திய சென்னை- விஜகுமார்

காஞ்சிபுரம்- குமாரவேல்

தர்மபுரி- மோகன்

திருவண்ணாமலை- வனரோஜா

ஆரணி-ஏழுமலை

விழுப்புரம்-ராஜேந்திரன்

கள்ளக்குறிச்சி- காமராஜ்

நாமக்கல்- சுந்தரம்

ஈரோடு- செல்வகுமார் சின்னையன்

திருப்பூர்- சத்யபாமா

கோவை-நாகராஜன்

நீலகிரி- கோபாலகிருஷ்ணன்

பொள்ளாச்சி- மகேந்திரன்

திண்டுக்கல்- உதயகுமார்

வேலூர் - செங்குட்டுவன்

கிருஷ்ணகிரி- அசோக்குமார்

தென் சென்னை- ஜெய்வர்த்தன்

மத்திய சென்னை- விஜகுமார்

காஞ்சிபுரம்- குமாரவேல்

தர்மபுரி- மோகன்

திருவண்ணாமலை- வனரோஜா

ஆரணி- ஏழுமலை

விழுப்புரம்- ராஜேந்திரன்

கள்ளக்குறிச்சி- காமராஜ்

நாமக்கல்- சுந்தரம்

ஈரோடு- செல்வகுமார் சின்னையன்

திருப்பூர்- சத்யபாமா

கோவை- நாகராஜன்

நீலகிரி- கோபாலகிருஷ்ணன்

பொள்ளாச்சி- மகேந்திரன்

திண்டுக்கல்- உதயகுமார்

கரூர்- தம்பிதுரை

திருச்சி- ப.குமார்

பெரம்பலூர்- மருதைராஜ்

கடலூர்- அருண்மொழி தேவன்

தஞ்சை- பரசுராமன்

சிவகங்கை- செந்தில்நாதன்

மதுரை- கோபாலகிருஷ்ணன்

தேனி- பார்த்திபன்

விருதுநகர்- ராதாகிருஷ்ணன்

ராமநாதபுரம்- அன்வர்ராஜா

தூத்துக்குடி- ஜெயசிங் தேவராஜ் நட்டர்ஜி

தென்காசி- வி.சாந்தி முருகேசன்

நெல்லை- பிரபாகரன்

கன்னியாகுமரி- ஜான் தங்கம்

சிதம்பரம்- சந்திரகாசி

மயிலாடுதுறை- பாரதி மோகன்

நாகை- கோபால்

Tuesday, February 18, 2014

தமிழக சட்டசபை தீர்மான நகல்

011 தமிழக சட்டசபை தீர்மான நகல்

021 தமிழக சட்டசபை தீர்மான நகல்

031 தமிழக சட்டசபை தீர்மான நகல்

041 தமிழக சட்டசபை தீர்மான நகல்

இரகசிய ஆவணம்

பொடா சட்டம் ரத்து


Doha Talkies @dohatalkies

19th February 2014 from TwitLonger

ஜெயலலிதா 23.10.2008 அன்று வெளியிட்ட அறிக்கை இது. அறியாதவர்களும் அறிவில்லாதவர்களும் படித்து பயனடையலாம்.

“ராஜீவ் காந்தி கொலைவழக்கு குறித்து சி.பி.ஐ விசாரித்தபோது, எனது தலைமையிலான தமிழக அரசு அதற்கு முழு ஒத்துழைப்பையும் நல்கியது. நளினி உட்பட இன்னும் சிலருக்கு நிர்ணயிக்கப்பட்ட நீதிமன்றத்தால் மரணதண்டனை வழங்கப்பட்டது. இதை சென்னை உயர்நீதிமன்றமும் உறுதிபடுத்தியது. உச்சநீதிமன்றமும் 1999 ஆம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட மரணதண்டனையை உறுதி செய்தது.

உச்ச நீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்டு ஒன்பது வருடங்கள் ஆகியும், மரணதண்டனை நிறைவேற்றப்படவில்லை. மாறாக, நளினிக்கு விதிக்கப்பட்ட மரணதண்டனை ஆயுள் தண்டனையாக ஆக்கப்பட்டுவிட்டது. இவ்வாறு நளினியை காப்பாற்றியது படுகொலை செய்யப்பட்ட ராஜீவ் காந்தியின் மனைவியும், காங்கிரஸ் கட்சியின் தலைவியுமான சோனியா காந்தி. மேற்படி நளினியை, கொலை செய்யப்பட்ட முன்னாள் பாரத பிரதமரின் மகள் ப்ரியங்கா சிறையில் சென்று பார்கிறார்.

இப்படி போய் பார்க்கலாமா? அது அடுக்குமா? இப்போது நளினி ஏதோ உரிமைக்காக போராடுவதுபோல் தன்னை விடுதலை செய்யவேண்டும் என்று உயர்நீதிமன்றத்தில் மனு போடுகிறார். உலகத்தில் வேறு எந்த நாட்டிலும் நடக்காதது எல்லாம் இந்தியாவில் நடக்கிறது!

இது சோனியா மற்றும் பிரியங்கா ஆகியோருடைய சொந்த பிரச்சனை அல்ல. அவர்களுடைய குடும்ப பிரச்சனை அல்ல. எது ஒரு நாட்டு பிரச்சனை.
ஒரு முன்னாள் பாரத பிரதமர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் இந்த நாட்டின் இறையாண்மைக்கு விடப்பட்ட சவால். யாருடைய தனிப்பட்ட உரிமையும் இதில் இல்லை.

இப்போது தமிழகத்தில் எனது தலைமையிலான ஆட்சி நடைபெற்றுகொண்டிருந்தால்,தடை செய்யப்பட்ட இயக்கங்களுக்கு ஆதரவாக பேசியிருப்பவர்களை நிச்சயமாக கைது செய்திருப்பேன்.

தற்போது பொடா சட்டம் ரத்து செய்யப்பட்டுவிட்டது என்ற அசட்டு தைரியத்தில் சிலர் பகிரங்கமாக தேச விரோத கருத்துக்களை பேச ஆரம்பித்துவிட்டனர்.

POTA இல்லாவிட்டாலும், தற்போதுள்ள சட்டவிரோதமான நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் கீழ், இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம்.

ஆனால் நடவடிக்கை எடுக்க மைனாரிட்டி தி.மு.க அரசின் முதலமைச்சருக்கு மனமில்லை.

எப்போதெல்லாம் கருணாநிதி ஆட்சிக்கு வருகிறாரோ, அப்போதெல்லாம் விடுதலைபுலிகள் அமைப்புக்கு ஆதரவான பேச்சுக்கள் தமிழ்நாட்டில் பகிரங்கமாகவே நடைபெறுகின்றன.” - புரட்சித்தலைவி ஜெ.ஜெயலலிதா."
- அதிமுகவின் நமது எம்.ஜி.ஆர் இதழ் 23.10.2008.

Friday, February 14, 2014

ஷோபா

Reply to  
Image will appear as a link