- @RajanLeaks இல்லை. அதுக்கு ரெண்டு மூணுமாசம் கம்மி.
- @RajanLeaks ஆமா.. பத்தவச்சுட்டியே..
- @RajanLeaks அனுபவத்தில டபுள் மடங்கு
- @RajanLeaks @thirumarant பாலுமகேந்திரா கல்யாணம் பண்ணிகிட்டாரா? அப்பறம் சூசைடா?
- @arattaigirl சூசைட் தான்... கல்யாணம் ஆச்சான்னு தெரில... @RajanLeaks
- @thirumarant கல்யாணம் எல்லாம் ஆகலை. எங்க வீட்டுக்கிட்ட தான் ஷோபா வீடு இருந்தது.@arattaigirl @RajanLeaks
- @thirumarant நம்ம எழுதறதுதானே விக்கி. அதனாலத் தான் அதை முழுசா நம்ப முடியாது. @arattaigirl @RajanLeaks
- @arattaigirl அவர் தான் காரணம். பாடி fanil இருந்து இறக்கும்போதேல்லாம் வாசலில் நின்று வேடிக்கைப் பார்த்த நினைவு.@thirumarant @RajanLeaks
- @arattaigirl அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் வெகுண்டெழுந்து அவர் சில காலம் மறைவு வாழ்க்கை வாழ வேண்டியிருந்தது.@thirumarant @RajanLeaks
- @RajanLeaks appropriate source இருந்தா நம்பலாம். பொதுவில் விக்கியில் வருவது நாம் எழுதிப் போடுவது தான்.@thirumarant @arattaigirl
- @freeyavudu தலைவர் மாதிரி அவரு.. இருக்கிறதுல ரெண்டாவது.. மொத்தத்துல மூனாவது @RajanLeaks @amas32 @thirumarant @arattaigirl
- @thirumarant சுள்ளான்ல தனுஷ் அக்காவா வந்திச்சே அது அர்ச்சனா தங்கச்சியா? கூடவே இருந்துது @gpradeesh @RajanLeaks @amas32 @arattaigirl
- @thirumarant இதுல நடுவால நிக்குது பாருங்க @gpradeesh @RajanLeaks @amas32 @arattaigirl pic.twitter.com/EJ0oHETn6H
- @thirumarant இது கூடத் தெரியாம நீங்க நாட்டாமை ... பப்பி ஷேம் ஐ ஸே !! @freeyavudu @gpradeesh @amas32 @arattaigirl
- @freeyavudu நீங்க எழுதின விதம் சிரிப்பை அடக்க முடியவில்லை :-)))
- @gpradeesh அது ஈரவெங்காயமா கூட இருக்கட்டும். அர்ச்சனா தங்கச்சியாங்கிறது தான் கொச்டீன் @thirumarant @RajanLeaks @amas32 @arattaigirl
- @gpradeesh ஆமாம்... அதுவும் பாலு மகேந்திரா லிஸ்ட்ல இருந்துதா? அவர் தொடர்ல பார்த்த ஞாபகம் @freeyavudu @RajanLeaks @amas32 @arattaigirl
- @amas32 'நடுவுல நிக்குது'ன்னு தான சொன்னேன்... ஙே!!
- @freeyavudu ஈஸ்வரிக்கும் அர்ச்சனாவுக்கு எந்த சம்பந்தமும் இல்லை
- @classic_k7 பாக்க கிட்டத்தட்ட ஒரே மாகிரி இருக்காங்கல்ல. அதான் கேட்டேன்
- @freeyavudu விவிசி அது வேற சோக சூழ்நிலையில் இப்படி சிரிக்கலாமான்னு ஒரு டவுட் வேற :-)
- @amas32 வில்லங்கமா எதோ சொல்றீங்க (அ) புரிஞ்சிக்கிட்டீங்கன்னு நிவசனைக்கிறேன்... மீ அப்பீட்டு !!
Friday, February 14, 2014
ஷோபா
Sunday, February 2, 2014
செல்லக் குழந்தைகளே
- கானா பிரபா @kanapraba
பாடகி சுஜாதாவின் ஆரம்ப காலம்
தமிழ் சினிமாவில் பெண் குரல்களில் தனித்துவமாக மிளிரும் சுஜாதாவின் ஆரம்பகாலப் பாடல்கள் இரண்டு. இந்தப் பதிவை நான் போடுவதற்குக் காரணமாக அமைந்ததே நான் இங்கே தரும் முதல் பாடல் இன்று பல நாட்களின் பின் அடிக்கடி முணுமுணுத்து ரசிக்க வைக்கிறது.
எழுத்தாளர் சுஜாதாவின் நாவல்களைப் படமாக்கும் சீசனாக எழுபதுகளின் இறுதிப்பகுதி இருந்தது. அதில் முதல் முயற்சியாக அமைந்தது "காயத்ரி" என்ற திரைப்படம். ரஜினிகாந்த் ஆரம்பகாலத்தில் வில்லனாகவும், எதிர் மறை நாயகனாகவும் நடித்து வந்த காலத்தில் அவருக்குக் கச்சிதமாகப் பொருந்திய படங்களில் காயத்ரியும் ஒன்று. காயத்ரி நாவலின் முடிவில் சொல்லப்பட்ட விடயங்களைச் சினிமாவுக்குப் பொருந்தாது என்று திரைக்கதை அமைத்த பஞ்சு அருணாசலம் மாற்றி விட்டார் என்று எழுத்தாளர் சுஜாதா தன் குறிப்புக்களில் சொல்லியிருக்கின்றார். 1977 ஆம் ஆண்டு வெளிவந்த அந்தப் படத்தில் வந்த ஒரு இனிய பாடல் "காலைப்பனியில் ஆடும் மலர்கள் காதல் நினைவில் வாடும் இதழ்கள்" அந்தக் காலகட்டத்தில் வெற்றிகரமான மசாலாத் திரைக்கதைகளை மட்டுமல்ல, இனிய பாடல்கள் பலவற்றுக்கும் திரையிசைக்கவிஞராக இருந்து சிறப்புச் சேர்த்திருக்கின்றார் பஞ்சு அருணாசலம். கவிஞர் கண்ணதாசனின் உதவியாளராக இருந்த அனுபவம் இந்தத் திரையிசைக் கவிதைக்கு உதவி புரிந்திருக்கின்றது. இசைஞானி இளையராஜாவின் அறிமுகத்துக்குத் துணை போன பெருமையோடு அவரின் ஆரம்பகாலப் படங்களுக்குப் பெருவாரியாகப் பாடல்கள் எழுதிச் சிறப்புச் சேர்த்திருக்கின்றார் பஞ்சு அருணாசலம்.
அந்தவகையில் அமைந்தது தான் "காலைப்பனியில் ஆடும் மலர்கள்" என்ற இந்தப் பாடல். மணமாகிப் புகுந்த வீடு போன அந்தப் பெண் அந்த மலர்ச்சியில் பாடும் சூழ்நிலைக்குப் பொருந்தும் வரிகளுக்குத் துணையாக மெல்லிசையாக இழைத்திருக்கின்றார் ராஜா. ஒரு காலைச் சூழ்நிலைக்குப் பொருந்தும் இதமான இசையாக கையாண்டிருக்கும் கருவிகளும் துணை போயிருக்கின்றன. ஆரம்பத்தில் மெல்லிய ஹம் கொடுத்து ஆரம்பிக்கும் சுஜாதாவின் குரல் கூட கள்ளங்கபடமில்லாத் தொனியோடு இருக்கின்றது. பாடலின் இடையிலும் என்று சங்கதிகளைக் குரலிசையாக பொருத்தியிருப்பது சிறப்பு. ஒரு திகில் படத்துக்கு இப்படியான பாடலை லாவகமாகப் பொருத்தமான இடத்தில் சேர்ப்பது ஒரு சவால். அதில் வெற்றி கண்டிருக்கின்றார்கள் பாடலாசிரியர் பஞ்சு அருணாசலம், பாடகி சுஜாதா கூடவே இசைஞானி இளையராஜா
http://www.youtube.com/watch?v=NI3ouIRVSfQ&sns=em
ஒரே ஆண்டில் ராஜா இசையில் இரண்டு ஹிட் பாடல்களைக் கொடுத்து விட்டு இடையில் காணாமல் போய் பின்னர் ஒரு தசாப்தம் கழித்து (இடையில் தமிழில் ஒரு சில வாய்ப்புக்கள் கிட்டினாலும் பிரபலமாகவில்லை) இன்னொரு புதிய பாணி இசையமைப்பாளராக அறிமுகமான ரஹ்மான் இசையில் தமிழில் மறு அறிமுகமாகும் வாய்ப்பு அல்லது பெருமை சுஜாதாவைச் சேரும். பாடகி சுஜாதா 1977 இல் இளையராஜா இசையில் முன்னர் பார்த்த காயத்ரி பாடத்தில் பாடுவதற்கு முன்னதாக அவருக்கு வாய்த்தது "கவிக்குயில்" வாய்ப்பு. பாலமுரளி கிருஷ்ணா, எஸ்.ஜானகி போன்ற ஜாம்பவான்களோடு சுஜாதாவின் குரலைத் தனித்துவமாக்கியது "காதல் ஓவியம் கண்டேன் கனவோ நினைவோ" இங்கேயும் பஞ்சு அருணாசலம் தான் துணை போயிருக்கின்றார். பதின்மவயதுப் பாடகியாக ஜேசுதாசின் வழிகாட்டலில் இளையராஜாவிடம் அறிமுகம் கிட்டிய சுஜாதா பாடிய "காதல் ஓவியம் கண்டேன்" பாடல் ஒரு காலகட்டத்தில் இலங்கை வானொலியில் மகா மெகா ஹிட் பாடலாகப் பலகாலம் ஒலித்தது இன்னும் ஓயவில்லை. அந்தப் பெருமையில் 1980 ஆம் ஆண்டு கே.ஜே.ஜேசுதாஸ் யாழ்ப்பாணம் வந்தபோது வீரசிங்கம் மண்டபத்தில் இரட்டைச் சடை போட்ட சுஜாதா என்ற இந்தச் சிறுமியும் கூடவே வந்து பாடிய இந்தப் பாடலின் அந்தப் பசுமை நினைவுகளை இன்றும் அந்த வீடியோ கசட்டில் போட்டு இரை மீட்கின்றேன். "காதல் ஓவியம் கண்டேன் கனவோ" 34 வருஷங்கள் கழிந்த நிலையில் இன்றைய இளம் நாயகிக்குக் கூடப் பொருந்திப் பார்க்கக் கூடிய அதே புத்துணர்வைத் தன் இசையாலும் குரலினிமையாலும் நிரப்பிய பாடல். இந்தப் பாடலிலும் சுஜாதாவுக்குச் சுதந்திரமான துள்ளல்களை வெகு இலாவகமாக்கி அடக்கி விட்டிருக்கின்றது.
http://www.youtube.com/watch?v=IZ0Nc1smXj0&sns=em
மேற்குறித்த இரண்டு பாடல்களுமே சுஜாதா ஒரே ஆண்டில் பாடிய வண்ணம் "கா" என்ற அடியில் வருவது இன்னொரு சிறப்பு.
சில பாடல்கள் பெண்களுக்கே உரித்தான, பெண்ணின் உணர்வுகளின் அடி நாதமாக விளங்கினாலும் அந்தப் பாடல்களை பொதுவானதொரு உணர்ச்சிப் பிரவாகமாக எல்லோராலும் ரசிக்கத்தக்கதாக மாறிக் கேட்டு ரசிக்க வைக்கும், எவ்வளவு தரம் கேட்டாலும் அவை திகட்டாது என்பதற்கு இந்த இரண்டு பாடல்களுமே சாட்சி.
பி.கு: சுஜாதாவின் குரலில் வந்த "ஒரு இனிய மனது" பாடல் "ஜானி" திரைப்படத் இந்தப் பாடல் ஜென்சி, சுஜாதா குரல்களில் தனித்தனியாக வெளிவந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மை டியர் குட்டிச் சாத்தான் படத்தில் வாணி ஜெயராமோடு சேர்ந்து "செல்லக் குழந்தைகளே" பாடலையும் சுஜாதா பாடியிருந்தார்.

Tuesday, January 21, 2014
கூகிளில் ஒரு எண்ட்ரி
Jackie Chiles @Rasanai
19th January 2014 from TwitLonger
கூகிளில் வேலை பார்ப்பது பல கணிப்பொறியாளர்களுக்கு கனவு. அப்படி கனவாய் இல்லாத எம்போன்றோர் டெக்னாலஜியில் இருந்து விலகிய “சீச்சீ, இந்த பழம் புளிக்கும்” டேமேஜர்கள். ’நான் கடவுள்’ வில்லன் போல் வெறும் ரிசோர்ஸ் மேனேஜ்மெண்ட் செய்து உருப்படிகளை மேய்த்து உருப்படாமல் போன கேஸ்கள். Glassdoor, Forbes முதல் வாராந்தரி ராணி வரை அனைத்து Best Places to work லிஸ்ட்டிலும் வரும் கூகிளில் இருக்கும் பே ஏரியா நண்பனிடம் “ஏண்டா, ஆண்ட்ராய்ட் ப்ராஜக்ட்ல இருந்தா ட்ராயர் மொதக்கொண்டு லாண்ட்ரி செஞ்சு தர்றாங்களாமே, திங்க சாப்பாடு, தூங்க ஸ்லீப்ப்பாடு (Sleep Pod) எல்லாம் ஃப்ரீ ஃப்ரீயாமே” என பெருமூச்சு விடுவதோடு ஜோலி முடிகிறது.
நிற்க, அப்படி கூகிளில் ஒரு எண்ட்ரி கிடைத்து, ’அடடே, இது தான் சிம்பனி ஆர்கெஸ்ட்ராவா?’ன்னு ஆவென ஆச்சர்யப்பட்டு, தட்டுத்தடுமாறி செட்டிலாவதை ஒரு திரைப்படமாக்கினால்? கேட்கவே சுவாரசியமாக இல்லை? அது தான் The Internship திரைப்படம். http://www.imdb.com/title/tt2234155/
கிட்டத்தட்ட நாப்பது வயதில், வாயால் வடை சுட்டு சேல்ஸ் தொழிலில் இருக்கும் 2 நண்பர்களுக்கு வேலை போய்விடுகிறது. எப்படியோ அதே வாயால் வடை சுட்டு கூகிளில் ஒரு இண்டர்ன்ஷிப், அதான் அப்பரசண்டியாகிவிடுகிறார்கள். கூகிள் கேம்பசில் சுகுர்ரான மத்த 20 வயது காலேஜ் பொடிசுகள் இவர்களை ‘யார்றா நீங்க’ எனப்பார்க்க, அவர்களோடு இந்த இரண்டு மாமாக்களும் ஜமா சேர்கிறார்கள். கூகிள்காரன், ஐந்தைந்து பேர் கொண்ட குழுக்களாக செட்டு சேர்ந்து பல ப்ராஜக்ட்ஸ் செய்யனும், முதலில் வரும் ஷேவிங் செட்டுக்கு தான் வேலைங்கிறான். யாருமே சேர்த்துக்கொள்ளாத இவர்களும், இன்னும் 3 பேரும் கட்டாயத்தால் குழுவாக்கப்படுகிறார்கள். கூகிளில் ஆஃபர் வாங்குகிறார்களா, ’ஆப்’பர் வாங்குகிறார்களா என்பதை டாரண்ட் திரையில் காண்க. (கவலை வேண்டாம், ஸ்பாய்லர்கள் ஏதும் சொல்லவில்லை, ஏனென்றால் படத்தில் ஸ்பாய்லர்களே இல்லை!)
கதை கனத்திலோ இல்லை பர்ஸ் கனத்திலோ வெயிட்டான பல ஆங்கிலப் படங்கள் உண்டு. அவை தான் பொதுவாய் உலகளவில் போனியாகின்றன, ஆஸ்கருக்கு தீனியாகின்றன. ஆனால், நிஜ சமகால அமெரிக்கா இதுபோன்ற சாதுவான காமெடிகள்,ரொமாண்டிக் காமெடிகள் மூலமாகத்தான் (ஓரளவுக்கு) வெளிப்படுகிறது என்பதென் துணிபு. இந்த ’ழான்றா’ (genre) படங்களின் பெருரசிகன் நான். இதற்கென்றே ஒரு செட்டு நடிகர்கள் உண்டு ஹாலிவுட்டில். நம் ஜெயம்ரவி,ஜீவா போல் முதல்வரிசைக்கு பின்வரிசையில் நின்றுகொண்டு வதவதவென ரெகுலர் இண்டர்வலில் படங்கள் விட்டுக்கொண்டேயிருப்பார்கள். வின்ஸ் வான் (Vince Vaughn), ஓவன் வில்சன் (Owen Wilson) இந்த கேட்டகரி நடிகர்கள். இவர்கள் அவதாரிலோ, அவெஞ்சர்சிலோ, அஃப்கானிஸ்தானிலோ அமெரிக்காவை (எத்தனை அ?) காப்பாற்றும் ஸ்க்ரிப்டில் நடிப்பதில்லை. இவர்களது காம்பினேஷனில் Wedding Crashers செம கல்லா. ’சின்னதம்பி பெரியதம்பி’ பிரபு,சத்யராஜ் போல் ஒரு இயல்பான கலாமாஸ்டர் மேட்டர் இவர்களுக்குள் உண்டு , அது இப்படத்திலும் நன்கு வொர்க் அவுட் ஆகியிருக்கிறது.
இப்படத்தில் எனக்கு பிடித்த இன்னொரு விஷயம், சப்போர்டிங் காஸ்ட். குறிப்பாய் படத்தில் காண்பிக்கப்படும் இரு இந்தியர்கள். ஒருவர் இந்த அப்பரசண்டிகளை வடிவேலு போல் கரித்துக்கொட்டிக்கொண்டே இருக்கும் கூகிள் மேனேஜர் Mr.செட்டி. உழைத்து கூகிளில் முன்னேறிய ஒரு இந்திய மேலாளர் இப்படித்தான் இருப்பான். இந்தியர்களுக்கான டிபிக்கல் ஹாலிவுட் ஸ்ட்ரீயோடைப்பிங் இல்லாது, ஒரு தவிர்க்கமுடியாத thick accentஓடு, ஒரு boring பெர்சனாலிட்டியாக கச்சிதம். போலவே, நேஹா பட்டேல் என இவர்கள் செட்டில் உள்ள ஒரு இளம்பெண். என் மகள் 16 வயதில் இப்படித்தான் இருப்பாள் என தோன்றியது. போக, ஒரு முசுடு வெள்ளக்கார பய, ஒரு மரபார்ந்த சைனீஸ் பையன், ஒரு அக்ரெசிவ் ப்ரிட்டிஷ் பையன் என சாம்பிளுக்கொன்றாய் இன்றைய தலைமுறை. ஒரே சீனில் வந்தாலும் வில் ஃபெரல் பட்டாசு.
படத்தில் கதை, பெரிய திருப்பம், ஏமாற்றங்கள், வில்லன் ஏதுமில்லை. முடிவும் யூகித்திருப்பீர்கள். வில்லனாக சித்தரிக்கப்படும் அந்த ஒரு விஷயம் எனக்கு மிகச்சரியாக ஒத்துப்போகும் ஒரு விஷயம். அடிப்படையில் டீம் ஒர்க், சம்பந்தமேயில்லாத 5 பேர் எவ்வாறு அவரவர் கூடை விட்டு வெளியே வந்து நட்பாகி வெல்கிறார்கள் எனச்சொல்கிறது படம். படம் முழுதும் கூகிள் காம்பசில். ‘சொக்கா எனக்கில்லை’ என அங்கலாய்க்கும் அளவுக்கு சம்மரில் ஜொலிஜொலிக்கிறது கூகிள் ஆபிஸ். ஆமா, இவ்வளவு திருவிழா கூட்டமாவா இருக்கும் கூகிள்?
குறைகள்? நிறைய உண்டு. IMDBயில் பெரிய ரேட்டிங் இல்லை, கூகிளுக்கான ப்ராண்ட் ப்ளேஸ்மெண்ட் என வண்டி வண்டியாக கமெண்டுகள். கொஞ்சம் தட்டிகிட்டி நீட்டி முழக்கினால், ஹிந்தியில் அருமையாக செய்யலாம். ஒரு குளிர்ந்த வாரயிறுதி மாலையில், மனைவி அனுமதித்த ஒரு பியருடன், பக்கோடாவை கொறித்துக்கொண்டே பார்க்க, சிரிக்க ஏதுவான,சாதுவான படம். நான் அப்படி தான் பார்த்தேன், ஹிஹி.
பார்த்தேயாகவேண்டிய படமில்லை. ஆனா பார்த்துத்தான் பாருங்களேன்.
படத்தின் ட்ரைலர்
http://www.youtube.com/watch?v=a8DjuGlVknQ
(இப்பதிவை இங்கும் படிக்கலாம்
https://www.facebook.com/rasanaikkaaran/posts/1415275495381152 )

கரும்புனல் நாவல்
Sushima Shekar @amas32
படித்து முடித்தக் கையோடு புத்தக ஆய்வை எழுதத் தூண்டியுள்ளது @penathal சுரேஷ் alias ராம் சுரேஷ் எழுதியிருக்கும் கரும்புனல் நாவல். எடுத்தப் புத்தகத்தைக் கீழே வைக்கத் தோன்றாத அளவு சுவாரசியமானக் கதை.மிக மிக மாறுபட்டக் கதைக் களம். அதுவே கதையின் பலம். நகைச்சுவை இழையோடும் எழுத்து நடை படிக்கத் தூண்டும் அடுத்தக் காரணி. உரையாடல்கள் மூலம் கதைச் சொல்லும் இவரின் பாணி மிகவும் சுவாரசியமற்ற சரித்திர பூகோள விஷயங்களையும் படிப்பவர்கள் புரிந்து கொண்டு ரசிக்கும்படியாக அமைந்துள்ளது.
பீகார் நிலக்கரிச் சுரங்கம், பீகாரின் சாதி வெறி,பொருளாதாரத்தில் பின் தங்கிய உழைக்கும் வர்க்கம், ஆளுநர்களின் அசுர பலம், தொழிலாளர் நலனில் அக்கறை இல்லாத தொழிற் சங்கத் தலைவர்,மலிந்து கிடக்கும் ஊழல், தலைமை சரியில்லாததால் சிதைந்து போகும் சமுதாயம் என இந்தக் கதையை நல்ல ஒரு திரைப்படமாக எடுக்கக் கூடிய அளவு துரோகமும், காதலும், சூழ்ச்சியும், சஸ்பென்சும் நிறைந்ததாக உள்ளது. எந்தக் கதையும் நம் அனுபவத்தோடு சொல்லப்படும்போது நம்பகத் தன்மை அதிகமாகிறது. அதனாலேயே இந்தக் கதை அன்னியமாகத் தோன்றாமல் நமக்கே நடப்பது போல் ஒரு தோற்றத்தை ஏற்படுத்துகிறது. ஒவ்வொரு கதாபாத்திரமும் எந்த ஒரு சமுதாயத்திலும் நாம் காணும் மனிதர்களைக் கொண்டதாக உள்ளது.
இது இவரின் முதல் நாவலா என்று தெரியாது. ஆனால் மிகவும் சிறப்பாக எழுதி பண்பட்ட எழுத்தாளர் நிலையில் நிற்கிறார். இன்னும் நிறைய புத்தகங்கள் எழுதி வெளியிட்டு அவர் புகழ் அடைய வேண்டும் என்று வாழ்த்துகிறேன் :-)

Monday, January 20, 2014
பெரியார் ரசிகன்
நீங்கள் நாத்திகரோ ஆத்திகரோ பிரச்சினையில்லை. தமிழர் என்றால் உங்களுக்கு பெரியார் தவிர்க்க முடியாதவர். நாத்திகர்கள் பலரும் பெரியாரை கடவுளாக்கி வழிபட ஆரம்பித்துவிட்டார்கள் என்றால், ஆத்திகர்கள் பெரியாரின் தாக்கத்தால் அடையாளச் சிக்கல் அவஸ்தையில் அலைக்கழிக்கப் படுகிறார்கள்.
இந்த சுவாரஸ்யமான முரணை களமாக்கி நாவல் ஆக்கியிருக்கிறார் குகன்.
எம்.ஜி.ஆர் ரசிகன், சிவாஜி ரசிகன், ரஜினி ரசிகன், கமல் ரசிகன், விஜய் ரசிகன், அஜீத் ரசிகன் என்று கேள்விப்பட்டிருப்போம். இந்நாவல் பெரியார் ரசிகனைப் பற்றியது. பெரியாருக்கு தொண்டர்தான் உண்டு. ரசிகன் இருக்க முடியுமா என்று கேட்டால் ஏன் இருக்கக்கூடாது என்கிற கேள்வியை எழுப்பி, சுவாரஸ்யமான சமகால வரலாற்றை புனைவில் முயன்றிருக்கிறார் குகன்.
இளம் தலைமுறை எழுத்தாளர்களின் இம்மாதிரியான துணிச்சலான முயற்சிகள்தான் எதிர்கால தமிழ் இலக்கியத்தின் மீதான நம்பிக்கையை அதிகரிக்கிறது. எழுத்துப்பிழை, எடிட்டிங் பிரச்சினைகள் உள்ளிட்ட சில குறைகளை களைந்துப் பார்த்தால் ‘பெரியார் ரசிகன்’ குறிப்பிடத்தக்க சமீபத்திய நாவல்களில் ஒன்று.
விலை ரூ. 100/- பக்கங்கள் : 160
வெளியீடு : உதயகண்ணன், 41, கல்யாண சுந்தரம் தெரு, பெரம்பூர், சென்னை-11. தொலைபேசி 044-25582552, மின்னஞ்சல் : bookudaya@rediffmail.com
சென்னை புத்தகக் காட்சியிலும் விற்பனைக்குக் கிடைக்கிறது.

Thursday, January 16, 2014
தமிழ்க்கவி
புலிகளின் குரல் வானொலியில் பணிபுரிந்தவர். பாடகி, கேமிரா விமன், எடிட்டர், தயாரிப்பாளர், எழுத்தாளர். ஊடகத்தின் அத்தனை துறைகளிலும் அனுபவம் வாய்ந்தவர். தமிழ், ஆங்கிலம், சிங்களம் மூன்று மொழிகளையுமே சரளமாகப் பேசக்கூடியவர்.
ஈழத்தின் கடைசிக்கட்ட போர் அனுபவங்களை நாவலாக எழுதியிருக்கிறார். ‘ஊழிக்காலம்’, தமிழினி வெளியீடாக வெளிவந்திருக்கிறது. போரின் வலி நேரடி சாட்சியமாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
இந்த நாவலை எழுத எவருக்குமில்லாத தகுதி அன்னை தமிழ்க்கவிக்கு உண்டு. ஏனெனில் தன்னுடைய இரண்டு மகன்களை போரின் பசிக்கு உணவாக கொடுத்த அவலமான அனுபவம் அவருக்கு இருக்கிறது.
போரிலக்கியம் என்கிற வகையில் வகைப்படுத்தக்கூடிய இந்நாவல், தமிழின் மிக முக்கியமான ஆக்கங்களில் ஒன்றாக நிச்சயம் இடம்பெறப் போகிறது என்று நம்புகிறேன்.

வாழ்ந்தால்தான் புரியும்
மிடில் கிளாஸ்... மிடியல கிளாஸ்!
பொங்கல், தீபாவளினு பண்டிகை வந்துட்டா, பொண்டாட்டி, புள்ளகுட்டிங்களுக்குப் புதுத்துணி, பலகாரம், பட்டாசுனு வாங்கிக் கொடுத்துட்டு, தனக்குப் புதுசா ரெண்டு ஜட்டி மட்டும் வாங்கிக்கிட்டு, நடு ஹால்ல பாயை விரிச்சுப் படுத்துக்கிட்டு, வர்ற போனுக்கெல்லாம் 'ஹேப்பி பொங்கல், ஹேப்பி மாட்டுப் பொங்கல், ஹேப்பி சக்கரைப் பொங்கல்’னு வாய் நிறைய வாழ்த்து சொல்ற ஆயிரக்கணக்கான அப்பாவி மிடில் கிளாஸ் மாதவன்களின் கண்ணீர்தான் இது...
பிஞ்சுபோன செருப்பையே ஃபெவிகால் ஒட்டி பல வருஷம் பயன்படுத்துற பரதேசிங்கய்யா நாங்க. மூணு நாளா யோசிச்சு, சரி 300 ரூபாய்க்குள்ள புதுச் செருப்பு ஒண்ணு வாங்கலாம்னு வந்தா, 'இந்தச் செருப்பை தார் ரோட்டுல போடலாம்... இந்தச் செருப்பைத் தண்ணில போடலாம்’னு 2000 ரூபாய் 3000 ரூபாய் செருப்புகளை எல்லாம் எடுத்துக்காட்டி அவமானப்படுத்துறீங்களே! தண்ணில போட்டு குழம்பு வெக்க நாங்க என்ன பருப்பா வாங்க வந்தோம்? தரையில போட்டு நடக்க செருப்பு தானே வாங்க வந்தோம்!
சாம்பார்ல தண்ணி ஊத்திப் பார்த்திருப்பீங்க, சால்னாவுல தண்ணி ஊத்திப் பார்த்திருப்பீங்க, சரக்குல தண்ணி ஊத்திப் பார்த்திருப்பீங்க... ஆனா, தீர்ந்துபோன ஷாம்பூ பாட்டில்ல தண்ணியை ஊத்தி யூஸ் பண்றதைப் பார்த்திருக்கீங்களா? அதைக் குலுக்கிக் குலுக்கி, ஒரு மாசத்துக்கு ஊரே குளிப்போம்யா!
அரை மூட்டை அரிசியும், ஒரு லிட்டர் நல்லெண்ணையும் வாங்கவே சொங்கிப்போயிக் கிடக்கிற வெங்கப்பய நாங்க. இதுல, அட்சயத் திரியைக்கு நகை வாங்கு, ஆடித் தள்ளுபடிக்கு நெக்லஸ் வாங்குனு, 'சின்னத்தம்பி’ பிரபு ஆரம்பிச்சு 'பெரியதம்பி’ சத்யராஜ் வரை, கேரக்டர் ஆர்டிஸ்ட் அங்கிள்களை வீட்டுக்கு அனுப்பி ஆசையைக் கிளறுறீங்களே... எங்க உடம்புல இருக்கிற ஏதாவது அங்கத்தை அடகு வைச்சாத்தான், தங்கம் வாங்க முடியும்னு உங்களுக்குத் தெரியாதுல்ல?
100 ரூபா கொடுத்துட்டோம்கிற ஒரே காரணத்துக்காக 'ஆல் இன் ஆல் அழகுராஜா’ படத்தையே சிரிச்சுச் சிரிச்சுப் பார்த்தவங்கய்யா நாங்க. 50 ரூபா கொடுத்துட்டோம்கிற காரணத்துக்காக 'அன்னக்கொடி’ல மனோஜ் பண்ண அட்டூழியத்தை வெறிச்சு வெறிச்சுப் பார்த்தவய்ங்களும் நாங்கதான். எங்ககிட்ட போய் ஆயிரம் ஆயிரமா வருமான வரியைப் பிடிச்சு ஈரக்கொலையை உருவுறீங்களே... இது நியாயமாரேரேரே..!
மாசத்துல மொத வாரம் ஹோட்டல்ல இட்லிக்கு சட்னியையும் சாம்பாரையும் தொட்டுக்கிட்டுச் சாப்பிடுற நாங்க, மாசக்கடைசில சட்னிக்கும் சாம்பாருக்கும் இட்லியைத் தொட்டுக்கிட்டுத் தின்னா, ஏதோ அவங்க மச்சினி கையைப் புடிச்சு இழுத்த மாதிரி முறைக்கிறீங்களே ஹோட்டல்கார்... ஹோட்டல்ல டிபன் பார்சல் வாங்கினா, குருமா பாக்கெட் தருவாங்க. ஆனா, அஞ்சு ரூவாவுக்கு வெறும் குருமா பாக்கெட் மட்டும் பார்சல் வாங்குறதைக் கண்டுப்பிடிச்ச கஞ்சப் பரம்பரைங்கப்பா நாங்க!
ஏ அரசாங்கமே... பெட்ரோல் விலையை எவ்வளவு வேணா ஏத்திக்க, நான் 100 ரூபாய்க்குத்தான் வண்டிக்கு பெட்ரோல் ஊத்துவேன். ஏ ஏகாதிபத்தியமே... குவாட்டர்ல ஆயிரம் பிராண்ட் கொண்டு வா. ஆனா, நான் 65 ரூபா குவாட்டர்தான் ஊத்திக்குவேன்னு கடமையாத்துற கன் பார்ட்டி நாங்க. டாஸ்மாக் உண்டியல்ல காசைப் போட்டு கவர்மென்ட் கஜானாவுக்கு ரீசார்ஜ் செஞ்சுட்டு, சிவனேனு போறவனைக் கூப்பிட்டு வாயை ஊது, வயித்தை ஊதுனு டார்ச்சர் பண்றீங்களே, 65 ரூபா குவாட்டர்ல அத்தர் வாசனையா வரும்... ஆல்கஹால் வாசனைதான் வரும்!
வெள்ளைக்காரன் ஒபேரா, கூகுள் குரோம்னு இன்டர்நெட் பிரவுசர் பிரவுசராக் கண்டுப்பிடிக்கிறப்ப, துணிக்கடையில் வாங்குற நாலே நாலு டவுசருக்கும் தனித்தனியா பில் போட்டா, ஒவ்வொண்ணுக்கும் ஒவ்வொரு கட்டைப் பை வாங்கலாம்னு கண்டுபிடிச்சது யாரு... பூரா நம்ம மிடில் கிளாஸ்காரப் பயலுவதான்!
'கால் கிலோ கறி கொடுங்க’னு கேட்டா, ஏதோ கல்லாப்பெட்டி சாவியைக் கொடுங்கனு கேட்ட மாதிரி கோவிச்சுக்கிறாங்க. 'அட எனக்கு கொலஸ்ட்ரால்பா... வீட்டு நாய்க்கு வாங்கிட்டுப் போறேன்’னு சால்ஜாப்பு சொன்னா, 'அப்போ வெறும் எலும்பாப் போடட்டுமா சார்’னு நாக்குல நரம்பில்லாம நக்கல் அடிக்கிறாங்க. அந்தக் கால் கிலோ கறியில குழம்பு வெச்சு, சட்டிக்குள்ள கரண்டியை விட்டு கறி கிடைக்குமானு வரட்டு வரட்டுனு தேடிப் பார்க்கிற வலி உங்களுக்கு என்னைக்குமே புரியாது ப்ரோ!
ஒரு நாள் ஒரு வேளை உப்புமா சாப்பிட்டா தப்பா? வாரத்துல ஒரு நாள் ஒரு வேளை உப்புமா சாப்பிட்டா தப்பா? வருஷம் முழுக்க ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு நாள் ஒரு வேளை உப்புமா சாப்பிட்டா தப்பா? பெரிய தப்பு மாதிரி தெரியுதுல்ல! உப்புசப்பு இல்லாத அந்தத் துப்புக்கெட்ட உப்புமாவைச் சாப்பிட்டுத்தான்யா நாங்க உயிர் வளர்க்கிறோம். அட, அம்மாகூட பெத்த அம்மா, சின்னம்மா, பெரியம்மானு மூணு வகைதான். ஆனா, ரவை, கோதுமை, இட்லி, கிச்சடி, சேமியானு இந்த உப்புமா பல நூறு வகை. ஒரே ஒரு நாள் உப்புமாவை மூணு வேளையும் தின்னு பாரு... அப்பத் தெரியும் மிடில் கிளாஸ் கஷ்டம்!
குடும்பத்தோட தியேட்டர்ல படம் பார்க்கிறக் காசுக்கு, பொத்துக்கிடக்கிற பாத்ரூம் கதவை மாத்திடலாம்னு முடிவு பண்ணித்தான்யா திருட்டு டி.வி.டி. வாங்குறோம். இந்தா... 'தலைவா’ படம் தியேட்டர்ல முதல் நாள் கொண்டாடுறதுக்கு முன்னாடியே, திருட்டு டி.வி.டி-ல 30 நாள் கொண்டாடிருச்சே... அந்த பிசினஸுக்கு யார் காரணம்... நம்ம பயகதேன்!
'என்னது... இன்ஜின் ஆயில் மாத்த 250 ரூபாயா?’னு அதிர்ச்சியாகி, ரெண்டு ரூவாய்க்கு எலுமிச்சம் பழம் வாங்கி ஹெட்லைட்டு மேல வெச்சுக்கிட்டு ஓட்டுறவங்க நாங்க. காய்ச்சல் கீய்ச்சல் வந்தா டாக்டர்கிட்டயா போவோம்? நோ நெவர். 'ஜின்’னு முடியிற ஏதாவது மாத்திரையை வாங்கிப் போட்டுக்கிட்டா, உடம்பு கின்னுனு வந்திடும் என்பதே மிடில் கிளாஸ் நம்பிக்கை சார்!
இறங்கவேண்டிய ஸ்டாப் தள்ளி பஸ்ஸு பாகிஸ்தான் பார்டருக்குள்ளயே போனாலும், கண்டக்டர்கிட்ட மிச்சம் எட்டணா சில்லறையை வாங்காம இறங்க மாட்டோம். அப்படிப்பட்ட எங்ககிட்ட மிச்சம் ஒரு ரூபாய்க்குப் பதிலா, சாக்லேட் தந்து டார்ச்சர் பண்றீங்களே அண்ணாச்சி. போனாப் போகுதுனு தூக்கி எறிஞ்சுட்டுப் போக, அது ஹரி பட அருவா இல்ல அண்ணாச்சி, முழுசா ஒரு ரூவா!
பல்லு விளக்குற பேஸ்ட் தீர்ந்துபோனா, பூட்டை எடுத்து அது மேல தேய்ச்சுத் தேய்ச்சுப் பிதுக்கி, அதுல இருக்கிற பேஸ்ட்டை வேஸ்ட் பண்ணாம, திரும்பத் திரும்ப டேஸ்ட் பண்ணுவோம்!
ஆட்டு காது மாதிரி காலர் வெச்ச அப்பா சட்டையை ஆல்டர் பண்ணி பையனுக்குத் தர்றது, அம்மாவோட பழைய புடவையைக் கிழிச்சு பொண்ணுக்கு சுடிதார் தைக்கிறது, அண்ணன் டிரஸ்ஸை தம்பிக்குப் போட்டுவிடுறது, ரெண்டாவதாப் பொண்ணு பொறந்துட்டா 'பொண்ணைப் பையனாட்டம் வளர்க்கிறோம்’னு ஒரு tagline சேர்த்துட்டு அதே சட்டை-டவுசரைப் போட்டுவிடுறதுனு, ஐந்தாண்டுத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுனதே நாங்கதான் பாஸ்!
சினிமா தியேட்டர் கேன்டீன்ல பாப்கார்ன் வாங்கினா செலவு அதிகம்னு, வீட்டுல இருந்தே கடலை மிட்டாயைக் கர்ச்சீப்ல கட்டிக் கடத்துவோம். ஒண்ணு, வீட்ல இருந்தே வாட்டர் பாட்டில்ல தண்ணி கொண்டுவந்துருவோம். இல்லை, வெளியே எங்கேயாவது தண்ணி பாட்டில் வாங்கினா, அந்தக் காலி பாட்டிலை வீட்டுக்குக் கொண்டுபோயிடுவோம்.
எந்த ஹோட்டலுக்குச் சாப்பிடப் போகலாம்னு நீங்க யோசிப்பீங்க. எந்த ஹோட்டலுக்குப் போனாலும் எதை மட்டும் சாப்பிடணும்னு நாங்க யோசிப்போம். இ.பி.கோ. சட்டத்தை விட அதிக ஓட்டைகள் எங்க பனியன்-ஜட்டியில இருந்தாலும், டி.வி. ரிமோட்ல ஆரம்பிச்சு டி.வி.டி. ப்ளேயர் வரை எல்லாத்துக்கும் சட்டையும் ஜட்டியும் போட்டுவிட்ருப்போம். ரிமோட் ரிப்பேரானா, அதைக் கொட்டிக் கொட்டி வேலை வாங்குவோம். அதே சமயம் டி.வி. ரிப்பேர் ஆச்சுனா, அதைத் தட்டிக்கொடுத்து வேலை வாங்குவோம்.
அம்மாவோ சமையலறையில் டப்பா டப்பாவா சில்லறை சேர்த்துவைக்க, அப்பாவோ டி.வி., ஃப்ரிட்ஜ் ஏன் அயர்ன் பாக்ஸ், குக்கர் வாங்குறப்பக் கிடைச்ச அட்டை டப்பாக்களைச் சேர்த்து வைக்க, பையனோ ஜீரோ பேலன்ஸ் தர்ற பேங்க்ல அக்கவுன்ட் ஆரம்பிச்சு கலர் கலரா ATM கார்டு சேர்த்துவைக்க, அக்காவோ ஃபர்ஸ்ட் ஸ்டாண்டர்டுல இருந்து தனக்கு வந்த கிரீட்டிங் கார்டுகளைச் சேர்த்து வைக்க, ஆக மொத்தக் குடும்பமும் கடைசி வரை காசு- பணத்தைச் சேர்த்து வைக்காம வாழுறதுதான் மிடில் கிளாஸ் வாழ்க்கை. இதெல்லாம் வாசிச்சாப் புரியாது...வாழ்ந்தால்தான் புரியும்!
விகடனில் நம்ம @thoatta ஜெகன்

Subscribe to:
Posts (Atom)

Prakash
Pradeesh
UKG
திரு
சௌம்யா
Sushima Shekar
மாமே
Saravanan
K7