Wednesday, April 2, 2014

சர்வதேச சிறுவர் புத்தக தினம்

Lekha @yalisaisl

2nd April 2014 from TwitLonger
இன்று சர்வதேச சிறுவர் புத்தக தினம்

இன்றைய சிறுவர்களிடம் மிகப் பிடித்த பொழுதுபோக்கு எதுவெனக் கேட்டால், பெரும்பாலும் பதில் ஐபாடில் ஒரு விளையாட்டோ, ஏதேனும் ஒரு தொலைகாட்சி நிகழ்ச்சியாகவோ தான் இருக்கும்.கணினியும்,லைக்காட்சியும் சிறுவர்களின் நேரத்தை விழுங்கி வாசிப்பு பழக்கத்தில் இருந்து அவர்களை தூரம் விலகச் செய்கின்றன.

கதையுலகம்,அதிசயகுகை போல,எத்தனையோ வேர்கள் விட்டு படர்ந்திருக்கும் அதனுள் ஒருமுறை புகுந்து விட்டால் வெளிவருவது அவ்வளவு சுலபம் இல்லை,வெளி வரவேண்டிய அவசியமும் இல்லை,இனிதாய் பயணத்தை தொடர்ந்து கொண்டே இருக்க காரணங்கள் பல இங்குண்டு.இந்த அதிசயகுகையை குழந்தைகளுக்கு அறிமுகம் செய்யுங்கள்..

ராணி காமிக்ஸ்/இரும்புக்கை மாயாவி/அம்புலிமாமா/சிந்துபாத்/தெனாலி ராமன்/அக்பர்-பீர்பால்/ நீதிக் கதைகள்/பஞ்சதந்திர கதைகள் என கழித்த விடுமுறை நாட்கள் மறக்க முடியாதவை.தேடித்தேடி வாசிக்க சலிக்காதவை சிறுவர் இலக்கியம் சார்ந்தவை.வாசிப்பு,கற்பனை திறனை வளர்க்க பெரும் உந்துதல்!

ஏப்ரல் 2 சர்வதேச சிறுவர் புத்தகதினமாக கொண்டாடப்படுகின்றது.நான் வாசித்து,மகிழ்ந்த சில சிறுவர் புத்தகங்களை பகிர விருப்பம்.உங்களுக்கு தெரிந்த குட்டீசுகளுக்கு பரிசளிக்க சிறந்தவை இவை.

1.அனிதா தேசாயின் கடல்புறத்து கிராமம்
2.ஆர்.கே நாராயணனின் மால்குடி டேய்ஸ்
3.ரஸ்கின் பாண்டின் ரஷ்டியின் வீரதீரங்கள்
4.ஜெமோவின் பனி மனிதன்
5.எஸ் ரா படைப்புகள்: கிறுகிறுவானம்,ஏழுதலை நகரம், கதைக் கம்பள வரிசை,நகுலன் வீட்டில் யாருமில்லை,ஆலீஸின் அற்புத உலகம்
6.க்ரியா வெளியீடாக வந்துள்ள குட்டி இளவரசன்(பிரெஞ்சு)
7.கிரா'வின் பிஞ்சுகள்
8.யூமாவின் பிங்கோவும் விஜியும்
9.வேலுசரவணனின் தங்க ராணி
10.விழியனின் டாலீயும் ழீயும்,மாகடிகாரம்
11.விஷ்ணுபுரம் சரவணனின் வாத்து ராஜா
12.லயன் காமிக்ஸ் புத்தகங்கள்
13.சத்யஜித்ரேயின் கதை வரிசை

No comments:

Post a Comment