ரத்தமும் தக்காளி சட்னியும்.. must read.. மனசாட்சியுள்ள நடுநிலையாளர்களுக்கு :)
கலைஞரை நடு இரவில் இழுத்துச் சென்றது, ஜெ தீர்ப்பு, கனிமொழி சிறையில் இருந்தது குறித்தெல்லாம் நேற்று நண்பர்கள் பேசிக்கொண்டிருந்தோம். ஆச்சரியத்தில் ஆழ்த்திய சில விஷயங்கள், சில முரண்கள்.
1) கனிமொழி கைதானபோது 'இன்று அவருக்கு திகாரில் முதல் இரவு' என மனசாட்சி இல்லாத சில சாடிஸ்ட்டுகள் இணையத்தில் எழுதினார்கள். ஆனால் இப்போது ஜெ வழக்கின் தீர்ப்பு பற்றி இணையத்தில் எழுதாதீர்கள், குண்டர் தடுப்புச் சட்டம் பாயும் என வாட்ஸ் அப்பில் தகவல் பரப்பப்பட்டு வருகிறது.
2) என்னதான் ஜெ அரசியல் எதிரி என்றாலும், ஹெலிகாப்டர், கொடநாடு என சொகுசாகவே வாழ்ந்த ஒருவர் சிறையில் கஷ்டப்படப்போவது குறித்து லேசான வருத்தம் எங்கள் அனைவரின் பேச்சிலும் இருந்தது. அதுமட்டுமல்லாது அதிமுக எனும் தொண்டர் படை மிக அதிகமாக இருக்கும் கட்சி ஆரிய கைகளுக்கு மீண்டும் போய்விடக் கூடாதே என்ற பதைபதைப்பும் அனைவருக்கும் இருக்கிறது. திமுகவை மட்டுமல்ல, அதிமுகவை காப்பதும் உண்மையான திராவிட உணர்வாளர்களின் கடமை என்பது புரிந்தது.
3) திமுகவினர் கொண்டாடக்கூடாது என அறிக்கை வெளியிட்டு, தீர்ப்பை பற்றி கருத்தே கூறாமல் இருந்த (வைகோ கூட தீர்ப்பை வரவேற்று அறிக்கை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது) கலைஞர், ஸ்டாலின் உள்ளிட்ட 200க்கும் அதிகமான திமுகவினரின் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது! சிலர் எங்கே சென்றாலும் திருந்த மாட்டார்கள் என்பதற்கு இது ஒரு உதாரணம்.
4) நாம் தமிழர் கட்சி, பாஜக என சிலர் நேற்று திடீரென தங்களைத் தாங்களே கதாநாயகர்களாக எண்ணிக்கொண்டு பேசியதைப் பார்க்க பரிதாபமாக இருந்தது. சுப்பிரமணியசாமி 1998ல், அதாவது சொத்துக்குவிப்பு வழக்கு பதியப்பட்டு இரண்டு ஆண்டுகள் கழித்து மீண்டும் ஜெவுடன் கூட்டணி வைத்ததை அனைவரும் மறந்தது இந்த உளறல்களின் சிறப்பம்சம்!
5) தந்தி தொலைக்காட்சியில் இன்னமும் ஜெவை மூச்சுக்கு முன்னூறு முறை முதல்வர், முதல்வர் என விளித்தும், கலைஞர்-ஸ்டாலின் மீதான வழக்குப் பதிவுகளை கொட்டை எழுத்துக்களில் அவர்கள் சோகமாக இருப்பதைப் போன்ற படங்களை வெளியிட்டும் சுகம் தேடிக்கொண்டதை பார்க்கும் போது, "அரசியல்வாதிகள் அல்ல, ஊடகக்காரர்கள் தான் முதல் அயோக்கியர்கள்," என பெரியார் சொன்னது நினைவுக்கு வந்தது. -DONASHOK

Source: http://www.twitlonger.com/show/n_1sc6lhi
No comments:
Post a Comment