Wednesday, February 26, 2014

என்ன நடந்தது

இன்றைய விவாதத்தில் என்ன நடந்தது என்று ட்விட்லாங்கர் போடலாமென இந்த ட்விட்லாங்கர்.

என் டைம்லைனில் ஒரு ஆர்டி கண்ணில் பட்டது...அதன் லிங்க்.

https://twitter.com/thirumarant/status/438738244763525120

அதற்கு நான் ஒரு பதில் ட்விட் போட்டேன்..

https://twitter.com/nilavinmagal/status/438738535634325504

இந்த ஒரு பதில் தான் சுமார் நாலு மணி நேர விவாதத்திற்கும் காரணம்.

ராஜா தாயாக இருக்கும்போது அரர மனைவின்னு சொன்னா, அடுத்த தலைமுறைல அந்த மனைவியாக கருதப்படும் அரர தாயாக தானே மாறுவார்.

இதை தான் சொன்னேன்..ஆனால் தாயுணர்வும்,தாய்மையும் ராஜாவுக்கே சொந்தம் என்ற பொருளில் விவாதம் தொடங்கியது...

அப்போதும் சொன்னேன் அரர க்கு அடுத்த தலைமுறைக்கு வேறு இசை அமைப்பாளர் தாயாக தெரிவார் என்று..


இதற்கு விவாதம் செய்யணும் என்றால் என்ன சொல்லணும் அரர இசை பற்றி சொல்லணும்..இசையின் குறைகளைப் பற்றி சொல்லலாம்..அதை விடுத்து,

1.அரர பிசினஸ் செய்கிறார்
2. அரர விளம்பரம் செய்கிறார்.
3. புதுமுகம்களுக்கு இசை அமைக்கலை
4. காசு வாங்கி படத்தை ப்ரொமோட் பண்றார்
5. சோனி கம்பெனிக்காக முடி வளர்த்தார்
6. எந்த படத்துக்காவது காசு வாங்காமல் இசையமைச்சாரா
7. நல்லது செய்யவில்லை
8. இசையை காசாக்குகிறார்
9. இசையை கலையாக பார்க்கவில்லை..
10. பாட்டுகளில் தோன்றி கூத்தாடித்தனம் செய்கிறார்...
11. உப்புமா கம்பெனிக்கு இசையமைக்கலை


இப்படியான கேள்விகள்....

ஒன்றே ஒன்று மட்டும் புரியவில்லை.. ஒவ்வொரு தலைமுறைக்கும் ஒவ்வொருவர் தாயாக(இசையில்) தெரிவார் என்பதே எனது ட்வீட்...அப்படியானால் இசை நல்லாருக்கா இல்லியான்னு பேசலாம்..

அதைவிடுத்து, பிசினஸ் செய்வதும்,காசு சம்பாதிப்பதும்,முடி வளர்ப்பதும் கேள்வியாக கேட்டால் என்ன செய்வது...அதோடில்லாமல் நல்லது செய்தாரா என்று வேறு..ஆக இசை நல்லா இருக்குன்னு சொல்லனும்ன்னா அவர் ஊருக்கு நல்லது செய்யனுமா..இல்ல ப்ரோமோ மூலம் காசு வாங்காமல் இருக்கனுமா..இல்ல காசே வேணாம் கலையை வளர்க்கிறேன்னு இசையமைக்கனுமா...

தாய்/மனைவி ஒப்புமை வந்ததால் நானும் அதை வைத்து சொன்னேன்..

கண்டசாலா-எம்எஸ்வி -ராஜா தாயாக இருந்தார்கள் என்று ஒப்புக்கொள்பவர் ராஜாவுக்கு பின் அரர,அரர க்கு பின் வேறோர் இசையமைப்பாளர் என்பதை மட்டும் மறுக்கிறார்..அதாவது ராஜாவோடு இசையானது முடிந்ததுன்னு சொல்றாரான்னு புரியலை...இல்லை 80களுக்கு பின் 90s,2000s ன்னு மாறினது தெரியலையா...

மீண்டும் மீண்டும் ஒரு புள்ளியில், அரர நல்லவரா,ஏன் ப்ரோமொக்கு வரார்,காசு வாங்காமல் இசையமைச்சாரா என்று இருந்ததே ஒழிய தலைமுறை மாறியதை ஏற்றுக்கொள்ளும் மனப்பாங்கு இல்லை..


இதில் பதில் என்ன சொல்வதற்கு...முயலுக்கு மூன்று கால்கள் என்று யாராவது சொன்னால், இல்லை நான்கு கால்கள் இருக்கு என்பதை புரியவைக்க முயல்வது முட்டாள்தனம். அது போன்று புரியவைக்கத்தான் முயன்றேன்..

கடைசியில் விவாதம் முடிந்த விதமும் எனக்கு வருத்தம்... நான்கு மணிநேர உரையாடலில் எங்கும் நான் மரியாதை குறைவாக பேசவில்லை...(அவரும் கூட)

ஆனால் அவர் முடித்த விதம்,

"ஒரு பெண் என மரியாதையாக பேசியது என் தவறுதான்.. அதற்காக நான் வார்த்தை இழக்க மாட்டேன். நான் அன்ஃபாலோ செய்துகொள்கிறேன்"


அன்ஃபலோ செய்வதனால் எனக்கு வருத்தமோ, ஃபாலோ செய்வதனால் மகிழ்ச்சியோ அல்ல.. (ட்விட்டரில் யாரோ வருவர்,யாரோ போவர் வருவதும் போவதும் தெரியாது)

ஆனால் ஒரு பெண் என மரியாதையாக பேசினேன் என சொன்னார்..அப்படியானால் நாள் ஆணாக இருந்திருந்தால் பேச்சின் தரம் தாழ்ந்திருக்குமா..

இரண்டாவதாக இன்னொரு ட்விட்டில்,

"ரகுமான் ஃபேன்சிடம் நாகரிகம் எதிர்பார்த்தது தவறுதான்"

என்று போட்டிருக்கார்..ஆக நான் என்ன நாகரிகம் இல்லாமல் பேசினேன்?...அரரக்கு ஆதரவா பேசினால் நாகரிக குறைவா?.. நான்கு மணிநேர உரையாடலில் ஒரு ட்விட்டையும் அழிக்கவில்லை..யாரேனும் நான் என்ன நாகரிக குறைவாக பேசினேன் என்று சொன்னால் தெளிவாகும்.


ஆக, கண்டசாலா-எம்எஸ்வி-ராஜா-அரர-(அனிருத்,இமான்,etc)

இப்படி சங்கிலியாக வராதாம்..ராஜா வரை மட்டுமே சரியாம்..இது தான் உங்கள் நியாயம் இல்லியா?


டிஸ்கி---- நான் ராஜா வெறுப்பாளர் இல்லை..ராஜா இசையும் பிடிக்கும்..அதையும் சிறுபிராயம் முதல் கேட்டு வளர்ந்தவள்...எத்தனையோ நேரங்களில் ராஜா இசையை புகழ்ந்தவள்....

No comments:

Post a Comment