Tuesday, February 25, 2014

சவுக்கு

பொதிகைச் செல்வன் @thunukku


6th February 2014 from TwitLonger
@catchvp @raguc_ அண்ணே.. சவுக்கு பத்தி எல்லா விபரமும் தெரிஞ்சுதான் இப்படிச் சொல்றீங்களா? அல்லது சவுக்கு வெளியிட்ட தொலைபேசி உரையாடல் குறித்து உணர்வெழுச்சி காரணமா நீங்க பூரிச்சுப் போயி சொன்னீங்களானு முதல்ல தெரிஞ்சுகிடணும்.

சவுக்கின் சமீப காலச் செயல்பாடுகள் (கனிமொழி - ஜாபர் சேட் தொலைபேசி உரையாடல் வெளியீடு)நான் சொன்ன குற்றச்சாட்டுகளை நிரூபிக்கும் விதமாகத்தான் இருக்கு.

திடீர்னு சவுக்கு வெளியிட்ட தொலைபேசி உரையாடலால தூண்டப்பட்டு என் மேல பாஞ்சிருந்தீங்கனா.. கீழே உள்ள தகவல்கள் உங்கள் கவனத்திற்கு..

சவுக்கு வெளியிட்ட ஜாபர்சேட்-கனிமொழி, ஜாபர்சேட்-சரத்குமார், ஜாபர்சேட்-கருணாநிதியின் உதவியாளர் சண்முகநாதன் ஆகிய உரையாடல் பதிவு கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்கு முன்பாகப் பதிவு செய்யப்பட்டவை. இந்த உரையாடல் இந்தியாவின் மிகப்பெரிய, இமாலய ஊழல் வழக்கான 2ஜி அலைவரிசை ஊழலில் தொடர்புடையோருக்கு எதிரான அசைக்க முடியாத ஆதாரங்களில் ஒன்றாகும்.

2ஜி வழக்கில் தொடர்புடையோர் கைது செய்யப் பட்டு பிறகு அரசியல் செல்வாக்கால் கவனிக்க வேண்டிய முறையில் கவனித்த வகையில் வழக்கு நீர்த்துப் போகச் செய்யப்பட்டு அனைவரும் தப்பிவிட எல்லா முயற்சிகளும் கடந்த மூன்றாண்டுகளில் செய்யப்பட்டு கிட்டத்தட்ட அந்த வழக்கிற்கே முடிவுரை எழுதப்பட்டுவிட்டது.

அத்தகைய ஆதாரத்தை மூன்றாண்டுகளாக அடைகாத்துக் கொண்டிருந்த காரணம் என்ன? அந்த ஒலிநாடாக்கள் குட்டிகள் ஏதேனும் போடும் என்ற எதிர்பார்ப்பிலா?

ஒரு சாதாரண சமூகச் செயல்பாட்டாளராக, நாட்டின் மீது அக்கறை கொண்ட நபராக இருப்பின் என்ன செய்திருப்பார்? கையிலிருக்கும் ஆதாரத்தை உடனே வெளியிட்டு குற்றவாளிகளைத் தண்டிக்க வேண்டுமென்று முனைந்திருப்பாரா? மாட்டாரா? ஆனால் சவுக்கு வெளியிடவில்லை. என்ன நோக்கம்?

ஆதாரங்கள் சவுக்கின் கையில் இல்லை வேறொரு மூன்றாம் நபரின் கையிலிருந்தது என்று நீங்கள் கருதுவீர்களேயானால் உங்களுக்கு சவுக்கின் பின்னணியே தெரியவில்லை என்று பொருள். சவுக்கைத் தவிர வேறு நபர்களிடம் இந்த பதிவுகள் கிடைத்திருக்க வாய்ப்பில்லை என்னும் விசயம் சவுக்கின் பின்னணி அறிந்தவர்களுக்கு மட்டுமே தெரியும்.

சரி... அதுதான் இப்போது வெளியிட்டு விட்டாரே பிறகென்ன என்கிறீர்களா? இப்போதும் வெளியிட்டு பொன்முட்டையிடும் வாத்தை அறுத்திருக்க மாட்டார்.. ஆனால் சூழ்நிலை அவரை இந்நிலைக்குத் தள்ளியிருக்கிறது.

தற்போதைய நிகழ்வுகளைக் கவனித்திருந்தால் உங்களுக்கே தெரிந்திருக்கும். அதையும் நானே விளக்குகிறேன்.

கருப்பான, குண்டான, மீசை வைத்த நபரை ஒரு சிறுவன் மிகவும் அசிங்கமான கெட்டவார்த்தை சொல்லித் திட்டியதையும் கண்டுகொள்ளாமல் கம்மென்று இருக்கும் ஒரு நபர் இருப்பதைப் பார்த்து வடிவேலு பொங்கியெழுந்து சிறுவனைத் துரத்திச் சென்று கிட்னியை இழந்த நகைச்சுவைக் காட்சியைப் பார்த்திருப்பீர்கள்.

அந்த கிட்னி எடுக்கும் சிறுவனைப் போல உளவுத்துறை ஐ.ஜி. ஜாபர்சேட்டை கடந்த காலங்களில் சவுக்கு போட்டு அடி அடி என அடித்த கட்டுரைகளனைத்தையும் படித்திருப்பீர்கள். ஒரு மனிதன்/ இணைய தளம் வைத்திருப்பவர் ஒரு ஐ.ஜி. பதவியிலிருப்பவரைப் போட்டு இந்த அடி அடித்தபோதும் கருப்பான, குண்டான, மீசை வைத்த நபரைப் போல ஜாபர் சேட் அமைதியாக இருந்த காரணத்தை உங்களால் விளங்கிக் கொள்ள முடியவில்லையா?

ஜாபர்சேட்டுக்கும் தெரியும் சவுக்கு யார்? அவரது கையிருப்பு என்ன? என்பது.. ஜாபர் சேட்டை கேவலமாக விமர்சித்து எழுதி அவரை கமுக்கமாக இருக்க வைப்பது மட்டுமா சவுக்கின் நோக்கமாக இருக்க முடியும்? நீங்கள் சொன்னபடி Offshore accountக்கு மாற்றும் வேலையும் நடந்தது. பொன் முட்டையிடும் வாத்தினை அறுத்து விடாமல் பக்குவமாகக் கறந்து வந்திருக்கிறார்.

பிறகேன் இப்போது வெளியிட்டார்?

சவுக்கு இணையதளத்தை முடக்கவும், அவரைக் கைது செய்யவும் சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டிருக்கிறது. அத்தகைய உத்தரவைப் பிறப்பித்த நீதிபதி கருணாநிதிக்கு வேண்டப்பட்ட நபர் என்றும் கருணாநிதி உத்தரவின் பேரில்தான் அவ்வாறு ஒரு வழக்கை அனுமதித்து கைது/முடக்கம் உத்தரவைப் பிறப்பித்திருக்கிறார் என்று சவுக்கு நம்புகிறார்.

சில மாதங்களுக்கு முன்புவரை உயர்நீதி மன்றத்தில் மிகவும் பிரபலமான மனித உரிமை குழுவைச் சேர்ந்த பிரபல வழக்கறிஞர்களான இராதாகிருஷ்ணன், புகழேந்தி போன்றோர் நிழலில் அடைக்கலமாகி அவதூறு மற்றும் ப்ளாக்மெயில் வழக்குகளில் இருந்து தப்பி வந்த சவுக்கு இப்போது அவர்கள் குழுவில் இல்லை என்று சில நண்பர்கள் தெரிவிக்கின்றனர். சவுக்கின் செயல்பாடுகள் அவர்களுக்குத் தெரிந்துவிட்டதோ என்னவோ தற்போது அவர்கள் சவுக்கை தங்கள் குழுவிலிருந்து விலக்கிவிட்டதாகத் தெரிகிறது.

தமிழக அரசு வழக்கறிஞரும், காவல்துறையும் சவுக்குக்கு ஆதரவாக இருந்தும் நீதிமன்றம் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று உத்தரவிட்டிருக்கிறது.

ஆகையால் நீதிமன்ற உத்தரவிலிருந்து தப்பிக்கவோ, கைதிலிருந்து தப்பிக்கவோ வழியின்றி Corner செய்யப்பட்டு விட்டார்.

ஒரு அளவுக்கு மேல் அ.தி.மு.க. அரசு ஏன் சவுக்குக்கு உதவி செய்ய வேண்டும்? அவ்வாறு உதவி செய்யவேண்டுமெனில் அ.தி.மு.க.வுக்கு மகிழ்ச்சியூட்ட வேண்டும்.

ஒரே கல்லில் ரெண்டு மாங்காய்.. அ.தி.மு.க.வுக்கும் மகிழ்ச்சியூட்ட வேண்டும், நீதிமன்றத்தின் மூலம் முடக்கவும் கைது செய்யவும் துணிந்த திமுகவுக்கும் பாடம் கற்பிக்க வேண்டும். அதற்காகத்தான் இப்போதைய தொலைபேசி உரையாடல் வெளியீடு. அதுவும் இது தேர்தல் காலமென்பதால் அ.தி.மு.க. மிகவும் மகிழ்ச்சியடைந்திருக்கும், தி.மு.க. அதிகபட்ச இழப்பைச் சந்திக்க இருக்கிறது. இதைத்தான் நான் ப்ளாக் மெயில் என்று சொல்கிறேன்.

அந்த வழக்கோ, கைதோ, சவுக்கு தளம் முடக்க முயற்சியோ நடக்கவில்லையெனில் உண்மை வெளிவந்திருக்கவே வந்திருக்காது. சவுக்கின் Offshore Account வழக்கம்போல நிரம்பிக் கொண்டிருந்திருக்கும்.

உண்மையிலேயே சமூக அக்கறையிருப்பவர் மூன்றாண்டுகளாக ஆவணங்களைக் கையில் வைத்து ப்ளாக் மெயில் செய்து கொண்டிருக்கமாட்டார். வெற்றியோ?தோல்வியோ? ஆவணங்களை நீதிமன்றத்திலோ அல்லது மத்திய புலனாய்வுத் துறையிடமோ சமர்ப்பித்து உலகமகா ஊழல் பேர்வழிகளான கருணாநிதியையும் அவரது குடும்பத்தினருக்கும் தண்டனை வாங்கித்தர சிறிதளவாவது முயன்றிருப்பார்.

முடிவாக... நீங்கள் அப்பாவியாக இருப்பதில் எனக்கொன்றும் வருத்தமில்லை. எல்லோரும் உங்களைப் போன்றே அப்பாவியாக ”ஷட்டரைச் மூடிக்”கொண்டிருக்க வேண்டுமென்று எதிர்பார்க்காதீர்கள்.

நன்றி. :-)

No comments:

Post a Comment