Tuesday, July 1, 2014

மருத்துவர்தினம்





எங்க ஊரு டாக்டர் பசுபதி.....சும்மா நேற்றய இறந்தகாலம் நோக்கி


இன்று மருத்துவர்தினம் என்றதும் எங்க ஊர் டாக்டர் நினைவில் வந்துவிட்டார்..

”என்னப்பா ஜொரம் நெருப்பா கொதிக்குது இன்னம் பசுபதிட்ட காட்டாம இருக்க” ”தொட்டாலே ஜொரம் போய்ரும்பா போய் காட்டு” என்பார்கள் இதுதான் மக்கள் மத்தியில் அதிகம் அவரை பற்றி பேசபடுவது ...

ஆண் டாக்டர்லாம் அழகா இருப்பாங்க என்ற தமிழ் சினிமா கோட்பாடுக்கு ஏற்ப அப்படியே இருப்பார்,ஆனால் எந்த பெண்ணும் அவர் பின்னால் சுற்றியதில்லை...

அதே பக்கத்து ஊரில் சேஷாத்திரி என்ற டாக்டரும் இருந்தார் அவருக்கும் கைராசி டாக்டர் என பெயர் உண்டு ஆனால் இவரை போல சென்ற நேரம் எல்லாம் மருத்தும் பார்ப்பதில்லை.

கிராமம் என்பதால் பூச்சிகடி,பாம்புகடி மேட்டர்கள் அதிகம் நிகழும் அதற்கு எற்றார் போல் கையாளுவார் 

அவர் கிளினிக்கில் ரொம்ப நாள் அவர்தான் டாக்டர்,நர்ஸ்,பூயுன்,மெடிக்கல் லேபர் எல்லாம் அவர்தான்...

குழந்தைகளுக்கு சாக்லேட் கொடுத்து பெற்றோர்களுக்கு ஐஸ் வைக்கும் பழக்கம் அவருக்கு இல்லை ஆனால் ஊசி போடமாட்டார் எனவே குழந்தைகள் அவர் பக்கம், யாருச்சாம் ரொம்ப முடியலன வீட்டுக்கு வந்து பார்த்து விட்டு செல்வார் அதற்கு தனி ஜார்ஜ்லாம் இல்ல, திரும்ப கொண்டு போய் விட்டரவா சார் என்றால் பரவாயில்லை என்பார் ..அவ்வலோ ஏன் ஊசி போட்டு விட்டு அக்கவுண்ட் வைச்சி அடுத்த வாட்டி வரகுள்ள கழிக்களாம் என்ற பாலிசியும் உண்டு...அதற்கு நோட்டுலாம் இல்ல மன கணக்குதான் டாக்டர் மறந்தாலும் நன்றிக்காய் மக்கள் மறப்பதில்லை...

நான் கோலி குண்டை முழிங்கிய போது வீடே ரிமைண்டர் போட்டு அடித்தது துவைத்தார்கள் ஆனால் அவர் அடிக்காதிங்க தண்ணீர் நிறைய குடி, விளையாட வீட்ல இடம் இல்லையா என்றார் நக்கலுடன்.. பள்ளிகளில் விஷேச நாட்களில் கலந்து கொள்வார் ஆனால் பேசி பார்த்ததில்லை...

ஊரில் யார் இறந்தாலும் வந்து கலந்து கொள்வார் சாம்பிரதாயம் என்றாலும் அதற்கு மனம் வேண்டுமே...

அவரால் பார்க்க முடியாத கேஸ் என்றால் ரமணா படம் மாறி டையலாக் பேசமா பெரிய ஆஸ்பித்திரி கொண்டு போங்க சீக்கிரம் என்பார் சில பெருசுங்க “அவ்லோதான்” என பீதியை கிளப்பினாலும் அதற்கும் அவரின் திட்டை வாங்கி கொண்டு பம்பி விடுவார்கள்....

சில படிச்ச பதறுங்க அவர் கெவி டோஸ் கொடுப்பார் போல என கிளப்பி விட்டாலும் நிருபிக்கும் படியாய் எதும் நிகழ்ந்ததில்லை...

கொஞ்ச வருடங்களுக்கு முன் போலி டாக்டர்களை கவர்மெண்ட் களை எடுத்த போது இவர் பெயர் சிக்கி கொண்டது அது உண்மை என யாரும் நம்மவில்லை பல நாட்களுக்கு பின் ஊருக்கு சென்ற போது இதை எழுப்பினால் அப்படியா அதாலாம் எதும் இல்லையே என்கிறார்கள் ஊர் குசும்புடன்...

இப்போது உள்ள டாக்டர்களில் யாரும் இப்படி இல்லை வாய்ப்பு கிடைத்தாலும் இருக்க போவதில்லை என்பதே நிதர்சன உண்மை...சிறந்த மருத்துவத்திற்கு பெயர் உண்டு எனில் அதைவிட சிறந்த மருத்துவருக்கு மதிப்பும் பெயரும் அதைவிட மக்கள் மனதில் இடமும் உண்டு. 

No comments:

Post a Comment