Wednesday, July 17, 2013

குழந்தை பிறந்தபோது

இப்படித்தான் இது ஆரம்பிச்சு. குழந்தை பிறந்தபோது @rasanai அலைபேசியில கூப்பிட்டாரு. கூப்பிட்ட நேரத்துல மருத்துவமனை அறை முழுக்க மருத்துவரும், செவிலியர்களுமாக நிறைந்த நேரம். கூப்பிட்டவர்ட்ட நான் மெதுவா, உச்சபட்சமா குசுகுசுப்பாத்தான் பேசிட்டு இருந்தேன். அதுவுமில்லாம் அதுதான் நாங்க முதன் முறையா பேசிக்கிறது. ஆனாலும் கலகலப்பா பேசுற மாதிரிதான் நான் ஆரம்பிச்சேன். ஆனா @rasanai என்னமோ காவலன் விஜய் மாதிரி இல்லை இல்லை அதுக்கும் மேல யாரு?.. ஆங் சிங்கம்-2 சூரியா கணக்கா வெறப்பா பேச ஆரம்பிச்சாரு. எனக்கோ சிரிப்பான சிரிப்பு.. சமாளிச்சுட்டு கட் பண்ணிட்டேன். அப்ப போட்ட ட்விட்டுதான் இது https://twitter.com/vivaji/status/355724349052956672 . அப்புறமா @Sricalifornia யும் வந்து அதையே சொல்ல கலாய்க்கலாம்னு முடிவு செஞ்சோம். நாள் குறிக்கப்பட்டது செவ்வாய் (என்னதான் வெட்டியா இருந்தாலும் மூனு பேரும் ஒரே நேரத்துல வெட்டியா இருக்கனும்ல). என்கிட்டேயும் @Sricalifornia யும் @rasanai யோட அலைபேசி இருந்தாலும் புதுசா ஒரு ஆள் பேசினா எப்படி எண் கிடைச்சதுன்னு சந்தேகம் வருமேன்னு நினைச்சேன். உடனே @rasanai ஊரம்மா @rakamali ஞாபகத்துக்கு வந்தாங்க. அவுங்ககிட்ட பேசி அவுங்க கோவில்ல ஒரு பெரியவர் சந்திச்சதாவும், அவர் @rasanai கிட்ட பேச விரும்புறதாவும் கொஞ்சம் பில்ட்- அப் ஏத்திவிட்டாச்சு. அப்புறமா நான் Caller ID மறைச்சு, @rasanai ஊருக்குப் பேச (International Call) வழி ஏற்படுத்தவுமே 20 நிமிசம் ஆச்சு. அதுக்கு முன்னாடி அவரோட ஃபாலோவர் பேரைப் பார்த்து ட்விட் போடாத ஒருத்தரை பெரியவர் ஆக்கிட்டேன். இதுதான் முன்னுரை

@Sricalifornia அழைச்சேன், பிறகு @rasanai Conferenceல் அழைச்சேன்.

ஹலோ

ஹலோ, வணக்கம், நான் சண்முக வேலாயுதம் பேசுறேன். நீங்க ரசனைதானே?

ஆமாங்க

நான் கோவிலில் @rakamali யைச் சந்திச்சேன். அவுங்ககிட்ட உங்க நம்பர் வாங்கினேன். நானும் உங்க ஃபாலோவர்தான்.

சொன்னாங்க, சொன்னாங்க. நீங்க எங்கே இருக்கீங்க?

அரோரா (கூகிள் பண்ணி எடுத்த பக்கத்து ஊர்தான் அது). இங்கே மகள் வீட்டுக்கு வந்தேன், போன மாசம்தான் வந்தேன். இங்கே பொழுது போகலை, அதனாலதான் ட்விட்டர்ல இருக்கேன் [சரியாப் பேசறனா?]


ஓஹ் அப்படிங்களா? மகள் இங்கேதான் இருக்காங்களா?

ஆமா, ஆனா அவுங்களுக்கு இப்பத்தான் கல்யாணம் ஆகி 2 மாசம் ஆச்சு [என் மனசுக்குள்ள இது ஓடுது: ஆ, @Sricalifornia க்கு இந்த ஊரைப் பத்தி என்ன தெரியும்?, இரு தேனிலவு நேரத்துல அப்பனுன்னு இங்கே என்ன வேலை ]

ஓஹ் அப்படிங்களா? [அடப்பாவி, எந்தக் கேள்வியுமேவா தோணலை. அம்புட்டு அம்மாஞ்சியா நீ?]

நீங்க நல்லா ட்விட் போடுறீங்க [அட்றா அட்றா] உங்க ட்விட்டெல்லாம் படிக்கும் போது ஏதோ எங்க வீட்டு திண்ணையில உக்காந்துட்டு நீங்க பேசுறதையெல்லாம் கேட்குறாப்பலயே இருக்கும் [நம்புறாருடா,, ஹ்ம்ம் அழுத்து] மனசு எல்லாம் லேசாகி ஒரு குடும்பமாட்டம் இருக்கும் [இன்னும் நிறைய சொன்னேன், மறந்துட்டேன் :( ]

ஹிஹி, தேங்கஸ்ங்க [ இதுக்கேவா? ரொம்ப நம்புறாருடா, இனிமே கலாய்க்கவே வேணாம்]

நீங்க எங்கே வேலை பார்க்கிறீங்க?

*(&(*)&
(*&^*(&

)(%^*&%(*&%^&$%^%#*$*

(அவ்வளவு முக்கியமில்லா பேச்சுகள்)

முடிச்சிக்கலாங்க. போதுங்க. நான் இளா பேசுறேங்க. Conferenceல @Sricalifornia இருக்காங்க

@Sricalifornia - சிரிக்கிறாங்க (குறைந்தது 1 நிமிசத்துக்கு) நானும் சிரிக்கிறேன்.

ஹலோ, யாருங்க? ஆமா.. ஹோ நோ..? ஸ்ரீ நீங்களுமா? [மன்னன்ல குஷ்புகிட்ட தான் ஒரு பணக்காரர்னு சொல்லி பேருந்துல பில்ட் அப் பண்ணிட்டு அலுவலகம் வந்து குஷ்புகிட்ட பல்பு வாங்கி ரஜினி சிரிப்பாரே அதை விட மொக்கையா பல ரியாக்சன் வந்துச்சு, அது எல்லாம் எழுத்துல வடிக்கவே முடியாது]

அப்புறம் நாங்க கலாய்ச்சிட்டே இருந்தோம். "அதுல ஒன்னு ஒடக்கானைப் பார்த்து துள்ளிக்குதிச்சு ஓடுறாப்ல ஒரு படம் போட்டீங்களே அப்படியா?" https://twitter.com/Rasanai/status/356122605167730688/photo/1

-------------------------
எச்சரிக்கை: இனிமே யாராவது ரசனைக்கு ரசிகன்னு பேசினாலோ, கூப்பிட்டாலோ என்னை கண்டிப்பா திட்டுவாரு. அதனால ஜாக்கிரதையா இருந்துக்குங்க.
http://tl.gd/n_1rld9gr

No comments:

Post a Comment