Thursday, September 17, 2015

தானியம்

தானியங்களை ஏன் தவிர்க்கவேண்டும்?
பேலியோவில் கார்பை பொதுவாக தவிர்த்து வந்தாலும் பழம், சில வகை கிழங்குகளை மெய்ன்டெனெஸ் டயட்டில் வரம்புகுட்பட்டு சேர்த்துகொள்வோம். ஆனால் தானியங்களை மெய்ன்டெனெஸ் டயட்டில் கூட சேர்க்க முடியாது. காரணம் அவற்றின் தீங்குகள் எண்ணற்றவை.
சிறுதானியம், முழுதானியம் என விளம்பரப்படுத்தபட்டு விற்க்கபடும் வகைகள் கெடுதலானவையா அல்லது தீட்டிய வெள்ளை அரிசியில் கெடுதல் அதிகமா என்பது நாள் முழுக்க பட்டிமண்டபம் வைத்தும் தீர்க்க முடியாத பிரச்சனை. முழுதானியங்களில் இருக்கும் நார்ச்சத்து ஜீரணம் ஆகாத வகை நார்சத்து. இதில் பைட்டிக் அமிலம் ஏராளமாக இருப்பதால் இதனுடன் நீங்கள் உண்ணும் கீரைகுழம்பில் இருக்கும் அத்தனை மினரல்களையும் இது உடலில் சேரவிடாமல் செய்துவிடும். நீங்களும் கீரையில் உள்ல இரும்புசத்து உடலில் சேரும், கால்ஷியம் உடலில் சேரும் என போட்ட கணக்கு எல்லாம் வீண். அதுபோக இத்தகைய ஜீரணம் ஆகாத கால்ஷியம், கிட்னியில் கற்களா தேங்கும் வாய்ப்பும் அதிகம். ஆக தானும் கெட்டு சந்திரபுஷ்கரணி நதியையும் சேர்த்துக்கெடுத்த கதைதான் முழுதானியத்தின் கதை.
அரிசியை/கோதுமையை பாலிஷ் போட்டு தீட்டுவதால் அதில் உள்ள பைட்டிக் அமிலம் அகன்றுவிடுகிறது. ஜீரணம் ஆகாத நார்சத்தும் அகன்றுவிடுகிறது..அத்தகைய தீட்டிய வெள்ளை அரிசி/மைதா என்பது வெறும் சுகர் தான். அதில் என்ன பிரச்சனை இருக்கபோகிறது?
புரதம்...
தானிய புரதங்களில் க்ளூட்டன், க்ளியாடின், ப்ரொலோமைன் (prolamin) என பலவகை உண்டு. க்ளூட்டனின் கெடுதல் ஊரறிந்த விஷயம் என்பதால் க்ளூட்டன் ப்ரி என சொல்லி கோதுமையை தவிர்த்து அரிசியை உண்டுவருகிறார்கள், ஆனால் இது புலிக்குதப்பி முதலைவாயில் வீழ்ந்த கதைதான்
அரிசி, மக்காசோளம்,. ஓட்ஸ் முதலானவற்றை சமைக்கையில் அதில் உள்ள புரதம் தீயாலும், வெப்பத்தாலும் சிதைக்கபட்டும், நம் சிறுகுடல், பெரும்குடலால் ஜீரணிக்கபடும் தருவாயில் 33 மெர் பெப்டைட் (33 mer peptide) போன்ற வகை புரதமாக மாறுகிறது. நம் பெருகுடலால் இதை எளிதில் ஜீரணிக்க முடிவதில்லை. அதனால் ஒரு கட்டத்தில் பெரும்குடலின் செல்களை இது பதம் பார்க்கதுவங்குகிறது.
செல்களை காப்பாற்ற உடலின் நோயெதிர்ப்பு சக்தி களத்தில் இறங்குகிறது. ஆபத்தான தானிய புரதங்களை இது தாக்குகிறது. ஆனால் 33 மெர் பாலிபெப்டைட் புரதம் நம் உடலின் தசைகளில் உள்ள புரதம் போலவே இருப்பதால் நம் நோயெதிர்ப்பு சக்தி நம் தசைகளையே தாக்குகிறது. இதன் விளைவே ஆட்டோஇம்யூன் வியாதிகள்
ஆட்டோஇம்யூன் வியாதிகளின் வகைகள்:
சொரியாசிஸ்,
லூபுஸ்
செலியாக் வியாதி
கிரேவ்ஸ் வியாதி
க்ரோன் வியாதி
இன்னும் 80 வகை ஆட்டோஇம்யூன் வியாதிகள்..(இணைக்கபட்டுள்ள படத்தில் உள்ள நடிகர் சீலுக்கு லூபுஸ் பாதிப்பால் முகத்தில் வெட்டுகாயமே உண்டாகிவிட்டது)
இதுபோக இவை நம் பெரும்குடலில் ஆறாத புண்ணை உண்டாக்குவதால் அல்சர் முதல் பெரும்குடல் செல் மெம்பெர்ரென்கள் கிழிந்து உள்காயம் முதலான பலவகை வியாதிகள் உருவாகின்றன. பிளட் பிரசர், சுகர் வருவது தனிக்கதை.
அரிசியில் உள்ள ஓர்ஸனைன் (orzenin) எனும் ப்ரொலமைன் புரதம் எண்டெர்கொலியோடிஸ் சின்ட்ரோம் எனும் வகை வியாதியை பெரும்குடலுக்கு உருவாக்குகிறது.
தானியங்களால் உன்டாகும் புரதங்களால் வரும் வியாதிகளை குறிக்க FPIES (food protein-induced enterocolitis syndrome.) எனும் பாகுபாட்டை உருவாக்கி மருத்துவ உலகம் ஆய்வு செய்து வருகிறது
அதனால் மெய்ன்டெனெஸ் டய்டட்டிலும் தானியங்களை சேர்ப்பது ஆபத்தானது. ஆட்டொஇம்யூன் வியாதிகள் ஏதோ அபூர்வமானவை அல்ல...ஆறில் ஒருவருக்கு ஏதோ ஒருவகை ஆட்டோஇம்யூன் வியாதி இருக்கிறது. ஆக வெள்ளை அரிசியில் கெடுதல் இல்லை என எளிதில் ஒதுக்க முடியாது.
ஆக தானியம் சாப்பிடுவது பாம்புபுற்றில் கைவிடுவது போல என்றும் ஆபத்தானது.உடல் ஒரு அளவு வரை மட்டுமே அந்த டேமேஜை தாக்குபிடிக்கும்..

No comments:

Post a Comment