Tuesday, October 29, 2013

தீபாவளி லேகியம்

மாயவரத்தான்.... @mayavarathaan


29th October 2013 from TwitLonger
தீபாவளிக்கும் நாற்பது, ஐம்பது நாட்களுக்கு முன்னரே தீபாவளி பரபரப்பு தொற்றிக் கொண்டு விடும்.

தீபாவளி லேகியம், தீபாவளிப் பட்டாசு, தீபாவளி புது ட்ரஸ், தீபாவளி ஸ்வீட், தீபாவளி மலர், தீபாவளி ரிலீஸ் படம் வரிசையில் தீபாவளி வாழ்த்து அட்டை முக்கிய இடம்.

ஆரம்ப காலங்களில் பொங்கலுக்கு மட்டுமே இருந்து வந்த இந்த வாழ்த்து அட்டை அனுப்பும் பழக்கம் வியாபாரிகளால் தீபாவளிக்கும் கடைவிரிக்கப்பட்டது.

ரஜினி, கமல்ஹாசன் படம் போட்ட வாழ்த்து அட்டைகளுக்கு எப்பவுமே டிமாண்ட். அதே போல பிரித்தால் ‘ஙொய்ய்ய்ய்ய்ங்..ஙொய்ய்ய்ய்ய்ங்..’ என்று சப்தமெழுப்பும் வாழ்த்து அட்டைகள் அந்தக் காலத்தில் உலக அதிசயம். 

ஒட்டு மொத்தமாக வாழ்த்து அட்டைகள் வாங்கி அவற்றில் முகவரி எழுதி, தபால் தலை ஒட்டி அஞ்சலில் அனுப்புவது படு பயங்கர வேலை. அஞ்சலகங்கள் ஓவர் டைமில் செயல்படும் காலங்கள். வாழ்த்து அட்டைகளை டெலிவரி செய்ய முடியாமல் கால்வாய்களில் தூக்கியெறிந்து மாட்டி தர்ம அடி வாங்கிய போஸ்ட்மேன்கள் உண்டு.

ஆரம்ப காலங்களில் தீபாவளி பூஜையில் ஆனந்த விகடன் தீபாவளி மலரையெல்லாம் வைத்து பூஜித்த குடும்பங்களையெல்லாம் கூட நான் பார்த்திருக்கிறேன். கல்கி, அமுதசுரபி போன்றவையெல்லாமும் அதே போல தலையணை சைஸ் தீபாவளி மலர்களை ரிலீஸ் செய்தன.

தினமலர் தீபாவளி மலர் பிஸினசில் குதித்த பிறகு அப்படியே ட்ரெண்டு மாறி விட்டது. அதனுடன் கொடுக்கும் ரஜினி & கமல்ஹாசன் முழு நீள ப்ளோ-அப் புகைப்படங்களுக்காகவே பரபரப்பான விற்பனை.

”கமல்ஹாசன் ஃபோட்டோ மட்டும் சூப்பரா போட்டுட்டான். நம்மாளு ஃபோட்டோவை சொதப்பிட்டான் பாரு. எப்படியிருந்தாலும் நாமெல்லாம் வாங்கிடுவோமுன்னு தான் இப்படி பண்றான் வருஷா வருஷம்” என்று ரஜினி ரசிகர்களும், அதையே அப்படியே உல்டாவாக கமல் ரசிகர்களும் பேசிக் கொள்வது வருடா வருடம் வழக்கம் தான்.

அதன்பிறகு சன் டிவி தினகரன் இதழை வாங்கி தீபாவளி மலரை ஆரம்பித்த பிறகு தான் நூறு ரூபாய் புத்தகத்துடன் நானூறு ரூபாய் ஃப்ரீ கொடுக்க ஆரம்பிக்கப்பட்டது. அப்போதெல்லாம் நிறையக் கடைகளில் புத்தகமே கிடைக்காது. என்னவென்று பார்த்தால் புத்தகத்தை எடைக்கு எடை போட்டு விட்டு இலவசப் பொருட்களை பிரித்து விற்பனை செய்ய ஆரம்பித்திருந்தார்கள் என்ற விஷயம் தெரிய வந்தது. இப்போது அப்படி இலவசங்களை அள்ளிக் கொடுக்க தடை என்று கேள்வி. ஆனாலும் இந்த ஆண்டு தினகரன் தீபாவளி மலருடன் ஒரு சில இலவசப் பொருட்கள் கொடுக்கத் தான் செய்கிறார்கள். தினமலர் தீபாவளி மலர் வருகிறதா என்று தெரியவில்லை. அமுதசுரபி, விகடன், கல்கி, தி இந்தி தமிழ் என்று ‘மொத்த சைஸ்’ தீபாவளி மலர்கள் வந்திருந்தாலும் எதுவுமே சுவாரசியமாக இல்லை என்பது தான் உண்மை.

ஒரு மாதம் முன்னரே துணி எடுத்துக் கொடுத்தாலும் தீபாவளிக்கும் முதல் நாள் நள்ளிரவு அவசர அவசரமாக தைத்துக் கொடுக்கும் சட்டையில் ஒரு பக்கம் கை தூக்கியோ, பேண்ட் இடுப்பில் நிற்காமல் லூஸாகவோ இருந்து, ஒட்டு மொத்த ஊராரின் சாபமும் வாங்காத தையல்காரர்கள் யாரும் உண்டா என்ன? ஊரில் எந்த டைலரிடம் நாம் பேண்ட், சட்டை தைத்தோம் என்பதை வைத்தே நமது சோஷியல் ஸ்டேட்டஸ் எடை போடப்படும். “ஓ.. மேப்ஸ் டைலர்கிட்டயா? நான் இப்போவெல்லாம் அங்கே தைக்கிறதில்ல.. அங்கேர்ந்து முக்கியமான ஆளெல்லாம் பிரிஞ்சு எழுத்தாப்லேயே கடை போட்டிருக்காங்க. ரொம்ப ரொம்ப வி.ஐ.பி.ங்களுக்கு மட்டும் தான் தெச்சுக் கொடுக்குறாங்க. அங்க தான் நான் தெச்சுக்கிட்டேன்” என்ற பீலா விடுதல்களும் உண்டு. அந்த ‘முக்கியமான’ டைலர்கள் தான் முந்தைய தீபாவளிகளில் நம்முடைய சட்டையை மேலும் கீழுமாக கோணல் மானலாக தைத்துக் கொடுத்து வயிற்றெரிச்சலை கொட்டியிருந்திருப்பார்கள்.

பட்டாசுக் கடைகளில் இரண்டு மூன்று வாரங்களுக்கு முன்பே பட்டாசு வாங்கி அவற்றை மொட்டை மாடியில் வெயிலில் காய வைத்து தீபாவளியன்று காலையில் எண்ணை தேய்த்து குளித்த கையோடு வெடிப்பது ஒரு கூட்டமென்றால், தீபாவளிக்கும் முதல் நாள் நள்ளிரவு பட்டாசுக் கடைகளில் மீந்து போன பட்டாசுகளை ‘ஜப்தி ரேட்’டில் ஏலத்துக்கு எடுத்து வாங்கி வந்து காலையில் அவற்றை வெடித்து மகிழ்வோரும் உண்டு. என்னவோ காய வைக்காத வெடி நமத்துப் போன பட்டாசாக சவுண்டு தரும் என்ற நம்பிக்கையின் காரணமாக, ஏலத்தில் வாங்கிய வெடிகளை தட்டில் வைத்து விறகு அடுப்பில் காய வைத்து அதில் நெருப்புப் பொறி பட்டு வீட்டின் சமையலறையினுள்ளேயே ‘ஏர் ஷிப்’, ‘ராக்கெட்’, சடபுடா எனும் சரமெல்லாம் வெடித்து சிதறிய கதையெல்லாம் உண்டு.

தீபாவளி வெடிகளெல்லாம் வெடித்துத் தீர்த்த பிறகு யார் வீட்டு வாசலில் வெடிக் குப்பைகள் குவிந்திருக்கிறது என்று ஊர் முழுதும் போய் கணக்கெடுத்து வருவதெல்லாமும் நடக்கும். வெடிகள் அனைத்தும் தீர்ந்த பிறகு ஏற்கனவே வெடிக்காமல் போன நமத்துப் போன பட்டாசுகளை தேடியெடுத்துப் பிரித்து வெடி மருந்துகளைக் குவித்து ‘புஸ்ஸ்ஸ்ஸ்வானம்’ விட்டு மகிழ்வது தனிக் கலை.

அடுத்து தீபாவளி ரிலீஸ் திரைப்படம்.. அடித்துப் பிடித்து முதல் நாளே படம் பார்ப்பதிலும்.. அதுவும் புது டிரஸ்களைப் போட்டுக் கொண்டு படம் பார்ப்பது ஒரு சுகம் தான்.

படம் பார்க்கப் போகாதவர்கள் மதியம் தூர்தர்ஷனில் ஒளிபரப்பாகும் ‘சிறப்பு ஒளியும் ஒலியும்’, ‘சிறப்பு திரைக் கண்ணோட்டம்’ ஆகியவற்றுடன் அதற்கும் ஏழெட்டு வருடங்களுக்கு முன்பு ரிலீஸாகியிருந்த எதாவது ஒரு திரைப்படம் பார்ப்பதும் சுவாரசியமான விஷயங்கள். தென் தமிழ்நாடுப் பகுதிகளில் இருப்பவர்களுக்கு மாலை வேலைகளில் அதிர்ஷ்டமிருந்தால் ‘ரூபவாஹினி’ மூலம் எதுவும் புதிய நிகழ்ச்சிகள், திரைப்படங்கள் பார்க்கும் வாய்ப்பு கிட்டும்.

‘உலகத் தொலைக்காட்சிகளில் முதன் முறையாக... திரைக்கு வந்து சில நிமிடங்களே ஆன....’ என்று என்றைக்கு ஆரம்பித்தார்களோ.. அன்றைக்கே தீபாவளியும் மற்றோரு ‘விடுமுறை தினம்’ தான் என்றாகி விட்டது.

ரைட்டர் ஆறுமுகம்

senthazalravi @senthazalravi


29th October 2013 from TwitLonger
சைபர் கிரைமில் சாரு நிவேதிதாத்தா !
------------------------------------------------------------------


சாரு நிவேதித்தாத்தாவும், அடத்தூவும், அடத்தூவின் ஆடி காரில் ஆடி ஆடி எழும்பூர் சைபர் கிரைம் அலுவலகம் வாசலில் இறங்கும்போது மணி காலை பத்து ! நாஷ்டா முடித்துவிட்டு வந்த இன்ஸ்பெக்டர் அன்பரசனுக்காக ஐந்து நிமிடம் வெயிட்டீஸில் - அங்கே இடது பக்கம் போட்டிருக்கும் மர பெஞ்சில் குத்தவைக்கிறார்கள் !

அடத்தூ : சாரு, சொன்னதெல்லாம் கரெக்டா நியாபகம் இருக்கில்ல ?

சாரு : அதை எப்படி மறப்பேன் ? நான் ஜென் குருடா !! காலையில் குடிச்ச அர்க்கும், ஜக்கி சாமியார் வேப்ப்பிலை உருண்டையும் இன்னும் நியாபகம் இருக்கு !

அடத்தூ : தலைவரே, நாம இங்க வந்திருக்கிறது வட்டத்தை பற்றி கம்ளெயிண்ட் கொடுங்க. அவனுங்களை முட்டிக்கு முட்டி நல்லா நாலு தட்டு தட்டி இங்க உட்கார வைக்கனும்...

சாரு : முட்டீன்னவுடனே ஒன்னு நியாபகம் வருது...

அடத்தூ : யோவ் பொத்து, இது சைபர் க்ரைம் ஆபீஸ், கம்ளெயிண்ட் கொடுக்க வந்துட்டு என்னைய உள்ளாற உக்கார வெச்சுடாத !!

உதவி ஆய்வாளர் சத்யப்ரியா மேடம் உள்ளே வருகிறார் !! டக்கென எழுந்து இரண்டு கைகளையும் நாமக்கல் கோழி போல நீட்டி வழியை மறிக்கிறார் சாரு...

சாரு : மேடம், ஐயாம் சாரு நிவேதிதாத்தா. தமிழ்ச்சூழலில் அதிகம் கொண்டாடப்படாதா, ஆனால் ஓரான் பாமுக் அளவுக்கு கொண்டாடப்படவேண்டிய எழுத்தாளர்.

சத்யப்ரியா : யார் சார் நீங்க ? எனக்கு நிறைய வொர்க் இருக்கு. வேலை நேரத்துல தொந்தரவு பண்ணாதீங்க.

அடத்தூ : மேடம் நீங்க எக்ஸைலை படிச்சதில்லையா ?

சத்யப்ரியா : எக்ஸஸைஸ் பண்ணியிருக்கேன். யார் நீ, இந்த ஆள் கூட வந்தவனா ? இந்த கிழவனை நகரச்சொல்றியா இல்லை தூக்கி போட்டு மிதிக்கவா ? உள்ள ரைட்டர் சார் இருப்பார் அவர்க்கிட்ட போங்க...இப்ப உடனே வழி விடுங்க...

இரண்டு பேரும் டாமிடம் மாட்டிய ஜெரி மாதிரி பம்மி வழிவிடுகிறார்கள் !!!

இன்ஸ்பெக்டர் அன்பரசன் உள்ளே நுழைகிறார். கொஞ்சம் இலக்கிய ஆர்வம் கொண்டவர், உயிர்மை வாசகர், மாஸ்டர் டிரிகி முடித்தவர், தமிழ்ச்சூழலில் நடக்கும் இலக்கியச்சண்டைகள் பற்றி ரொம்பவே தெரிந்துவைத்திருப்பவர் !!!

அடத்தூ : சார், இளங்கோன்னு இன்ஸ்பெக்டர் இருப்பார்னு சொன்னாங்க. அது நீங்களா சார், இண்டர்நெட் ட்ரோலிங் பத்தி ஒரு கம்ப்ளைண்ட் கொடுக்கனும் !

இன்ஸ்பெக்டர் அன்பரசன் : அதுக்கு நீங்க சிபிசிஐடிக்கு தான் போகனும். அவர் ட்ரான்ஸ்பர் ஆகி ஒரு வருசம் ஆச்சே !! அவரை தெரியும் இவரை தெரியும்னு டுபாக்கூர் அடிக்காம பிரச்சனை என்னன்னு சொல்லுங்க...உங்களை எல்லாம் எனக்கு "நல்லா" தெரியும் !!

பேசிக்கொண்டே இன்ஸ்பெக்டர் அன்பரசனின் சீட்டுக்கு போகிறார்கள் !!

இன்ஸ்பெக்டர் அன்பரசன் : டீ சாப்பிடுறீங்களா ?

சாரு : இல்லை வேண்டாம் சார், டீன்னா சீலே தேயிலை மட்டும் தான் நான் குடிக்கிறது. இண்டியன் / அஸ்ஸாம் / காஷ்மீர் எனக்கு பல் சுளுக்கிக்கும்...

[இன்ஸ்பெக்டர் மனதுக்குள் - "க்கும். இந்த ஈரவெங்காயத்துக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல]

இன்ஸ்பெக்டர் அன்பரசன் : ம் சொல்லுங்க சார், என்ன செய்யனும் ?

சாரு : சார், இணையத்துல என்னைய கிண்டல் பண்றாங்க சார். அவனுங்களை கூட்டிட்டு வந்து முட்டிக்கு முட்டி தட்டனும் சார்...

இன்ஸ்பெக்டர் அன்பரசன் : என்ன பண்றாங்கன்னு தெளிவா சொல்லுங்க...சும்மா கிண்டல் பண்றாங்கன்னு பொதுவா சொன்னா எப்படி நடவடிக்கை எடுக்கமுடியும் ?

சாரு : சார், சாரு நிவேதிதா வாசகர் வட்டத்துல நான் என்ன எழுதினாலும் அதுக்கு பதிலுக்கு பதில் எழுதுறாங்க சார் !

அடத்தூ : ஆமாம் சார்...

இன்ஸ்பெக்டர் அன்பரசன் : எங்க எழுதுறாங்க ?

சாரு : சாரு நிவேதிதா விமர்சர்கர் வட்டதுல...கும்மிடிப்பூண்டியில குத்த வெச்சி கும்மியடிசீங்கன்னு நான் வாசகர் வட்டத்துல எழுதுனா, குத்தாலத்துல குனிய வெச்சு குண்டியடிச்சீங்கன்னு விமர்சகர் வட்டத்துல ஆபாசமா எழுதுறாங்க சார்...

இன்ஸ்பெக்டர் அன்பரசன் : ஒன்னும் பெருசா ஆபாசமா தெரியலையே ? இதுல என்ன சார் பிரச்சனை ? ஜாலியா எடுத்துக்கிட்டு போங்களேன் !! நெகட்டிவ் பப்ளிசிட்டி தானே ? இன்னும் ரெண்டு மூனு எச்சில் புக் வித்துட்டு போகுது !

அடத்தூ : சார், அது எக்ஸைல்...

இன்ஸ்பெக்டர் அன்பரசன் : தெரிஞ்சு தான் சொன்னேன். அல்லக்கை, நீ அடங்கு !

சாரு : [இடைமறித்து], எனக்கு யாரும் பணம் அனுப்பவிடாம செய்யுறாங்க சார். என்னோட வாசகர்களுக்கு எல்லாம் வைரஸால பாதிக்கப்பட்ட என்னோட பக்கங்களை வெப் ஆர்க்கைவ்ல இருந்து எடுத்து அனுப்பி என்னைய காறித்துப்ப வெக்குறாங்க சார்.

அடத்தூ : சாருவுக்கு இருந்த இணைய பெண் வாசகர்கள் அத்தனை பேரையும் காலி பண்ணிட்டாங்க சார். நாங்க இப்பல்லாம் வாசகர் வட்ட கூட்டம் போட்டா அது ஓரினச்சேர்க்கையாளர்கள் மாநாடு மாதிரி இருக்குது சார்...

இன்ஸ்பெக்டர் அன்பரசன் : உங்க அல்லக்கைக்கு பிகருக கூட்டத்துக்கு வராதது தான் பிரச்சனை போலிக்கு...

சாரு : நோ நோ சார், நீங்க தப்பா புரிஞ்சுக்கிட்டீங்க. ஹீ ஈஸ் ஆல்சோ சைட்டர். ச்சே ரைட்டர். அவரோட முதல் 600 பக்க தலைகாணி இந்த புத்தக கண்காட்சிக்கு வருது...

இன்ஸ்பெக்டர் அன்பரசன் : சரி இப்ப என்ன தான் பண்ணனும் அதை சொல்லுங்க !

சாரு : அவனுங்க எல்லாரையும் புடிச்சு FIR போட்டு சுட்டு கத்தியால குத்தி கொலை செஞ்சு ஆயுள் தண்டனை கொடுத்து அது முடிஞ்சதும் மரண தண்டனை கொடுக்கனும் சார். ஜப்பான்ல ஹாருகி முகாரம்னு ஒரு ரைட்டர் டீக்கடை வெச்சிருக்கார் சார், அவரோட ஹிக்கோக்கி முக்காவு அப்படீன்ற சிறுகதைய ஆயா வெச்ச பாயான்னு முப்பது வருசத்துக்கு முன்னால மொழிபெயர்த்தேன். அதுல வரும் தண்டனைகள் அத்தனையும் கொடுக்கனும் சார்...

ரைட்டர் ஆறுமுகம் சில பைல்களோடு உள்ளே வருகிறார்...

இன்ஸ்பெக்டர் அன்பரசன் : வாங்க ஆறுமுகம்...

சாரு : [இருக்கையில் இருந்து எழுந்து] - ஹாய் ஆறுமுகம். ஐயாம் சாரு நிவேதிதா...தமிழ்ச்சூழலின் ஜென் குரு. உத்தம தமிழ் எழுத்தாளருக்கு முன், ரஜினிக்கு முன், இமயமலை தொட்ட ஒரே தமிழ் எழுத்தாளர், ஐ லவ் கனிமொழி...ஜாக்கி ஜட்டி எனக்கு சுடர்மணி..முன்னாள் நித்தி இன்னாள் ஜக்கி...

ரைட்டர் ஆறுமுகம் : [மனதுக்குள் : போடா பக்கி]. யார் சார் இது, சூரியன் படத்து கவுண்டமணி மாதிரி...

அடத்தூ : ஹி ஹி ஹி

சாரு : [மனதுக்குள் : என்னைய மதிக்காத இந்த ஆறுமுகம் அடிக்கிற ஜோக்கும் இவனுக்கு சிரிப்பா இருக்கு. இவன் மட்டும் ஐசிஐசிஐ அக்கவுண்ட்ல என்னைய பேயீயா க்ரியேட் பண்ணலைன்னா என்னைக்கோ கழட்டி விட்டுருக்கலாம்...

இன்ஸ்பெக்டர் அன்பரசன் : சொல்லுங்க சார், எத்தனை பேர் மேல கேஸ் போடனும் ?

சாரு : அது ஒரு 3800 பேர் கொண்ட கும்பல் சார். அத்தனை பேர் மேலயும் போடனும்.

இன்ஸ்பெக்டர் மற்றும் ரைட்டர் ஜெர்க் ஆகிறார்கள். இன்ஸ்பெக்டர் இருக்கையில் இருந்து எழுந்துவிடுகிறார்...

அடத்தூ : சாரு, என்னோட ரெண்டு FAKE ஐடிய எப்.ஐ.ஆர்ல இருந்து நீக்கி சொல்லிடுங்க...

Tuesday, October 22, 2013

எப்படி மழுமழுவென்று சவரம்

ஒரு சில ஆண்கள் மட்டும் எப்படி மழுமழுவென்று சவரம் செய்கிறார்கள் - நாள் முழுவதும் முள்தாடி முளைக்காமல், தோல் தன்மை? பிளேடு? டெக்னிக்?

  1. எனக்கு ஒரு வாரம் அப்படியே இருக்கு. அதெல்லாம் வரம்.
  2. have tried Gillette fusion blades? Damn Gud.
  3. இது பிளேடு மட்டுமே காரணமல்ல என நினைக்கிறேன்; பெருசுகள் சிலர் Swish, Topaz, எல்லாம் உபயோகித்தும் பார்த்திருக்கிறேன்
  4. பெரும்பாலும் அந்த கால ப்ளேடு ரேஸர்களின் லாவகம் இன்றைய டபுள்/ட்ரிபிள் எட்ஜ் ப்ளேடு ரேஸர்களில் இருப்பதில்லை.
  5. no I differ ..somehow I like Gillette wen cmpd to normal blades
  6. I shave alternate days, I get the smooth effect using Gillette Fusion :) Skin type is the difference
  7. I don't like smooth face. I use trimmer once in a week.
  8. Agree. Skin type gives that பளபளப்பு for more than 1 day only for few people, doing daily is pain
  9. maybe thats it.. I am using Gillette fusion for a long time.
  10. I haven't tried anything except Gillette Mach 3!
  11. <- Mr.GiRa why u r getting in to 'perusu'gal jeep :) we yooth no?
  12. I've used barber-shop style switchblade, old 1 blade razor. newer 2, 3 blade razors. I prefer the 3x.
  13. எனக்கும் அது போல ஒண்ணு வாங்கணும்னு ஒரு எண்ணம் உண்டு, ஆனா எதும் மாடர்ன் ஆர்ட் ஆய்டுத்துன்னா என்னனு பயம்
  14. ஆமாமாம். இன்னும் விலை போகாத மாடு வேற..
  15. மோடி வந்தா cow slaughteringஐ தடை செஞ்சுடுவாரே?
  16. நம்ம விவாதத்தை கவனித்திருப்பர் போல :-)
  17. இந்த மாட்டுச் சந்தையை எந்த மோடி வந்தாலும் தடுக்க முடியாது. அவரே தப்பிச்சு வந்தவர்தான் என்பது வேறு விஷயம்.
  18. FYI, நான் சந்தைக்கு வராத மாடாக இருந்தபோதுதான் பயன்படுத்தினேன்.
  19. விலை போனப்பறம் இந்த மாதிரி ஷோக்கெல்லாம் பண்ணினா, நிறைய கேள்விகள் வருமாமே? அப்படியா?
  20. அடர்ந்த தாடியின்கம்பீரமும், நொடிக்கொருமுறை அதை வருடிக்கொடுக்கும் 'கெத்'தும்
  21. எல்லாருக்கும் அது பொருந்தாது. ஒரு நாள் விட்டு ஒரு நாள் பண்ணலேன்னா ஒரு வியாதிக்காரன் ஃபீலிங்
  22. Full beardல் கழுத்துப் பகுதி மட்டும் ஷேவ் செய்துகொள்ளும் ஸ்டைலும் உண்டு
  23. நான் வைத்துக் கொள்ளும் Side-Burn க்கே வீடு ரணகளப்படும், இன்றும்.
  24. கல்லூரிக்காலத்தில் Mutton Chops மாதிரி நீள கிருதா மீது லயிப்பு உண்டு. அப்ப வச்சுக்கமுடியல
  25. நான் சுருளிராஜனின் தீவிர விசிறியாதலால், நீளக் கிருதா எப்போதுமுண்டு. :))
  26. 80-90களில் நிறைய 'நீள-கிருதா'க்கள் பார்க்கலாம். மழுமழு முகம்னாலே கிண்டல்தான் அப்போ :-)
  27. புழுங்கித்தள்ளும் சென்னை எப்படித்தான் அமீர், சசிக்குமார், ராம் எல்லாம் தாடி?!
  28. பாலகுமாரனை விட்டுட்டீங்களே!!
  29. பெல்பாட்டம், நீளக் காலர் சட்டை, கிருதா! அதும் ஒரு ட்ரெண்ட்
  30. மதுரை மக்களே இப்படி தான் டேஸ்ட்டே ஒரு மாதிரி ..யக்கி
  31. ஆல் காட்டான்ஸ்னுட்டீங்க, புரியுது ;-)
  32. really funny video - may be they do a franchise in India for Rs 50 a month :)
  33. அரைக்கல நெல்லிற்காக வீட்டிற்கே வந்து க்ஷவரம் செய்பவர்கள் கிராமங்களில் இருக்கிறார்கள்.
  34. இருக்கி"றார்"கள். இன்னும் நகர வாசனையில்லாத அசல் கிராமங்கள் இருக்கு. :))
  35. எங்கள் மயிலாடுதுறை கிராமத்தில் வீட்டிற்கே வந்து ரூ1 அல்லது ரூ 2க்கு!
  36. திருச்சியில் பல கிராமங்களில் இன்னமும் இம்முறை உண்டு, சலூனிலுள்ள அதே கட்டணத்திற்கு.