Thursday, June 27, 2013

தேவையில்லாத ட்விட்லாங்கர்


கார்க்கிபவா @iamkarki


27th June 2013 from TwitLonger 


தேவையில்லாத ட்விட்லாங்கர்தான். இதை போட்டாலே சண்டை என ஒரு சம்பிரதாயம் ட்விட்டரில் நிலவுவதால் யோசிக்க வேண்டியிருக்கிறது. போகட்டும்.

சினிமா பற்றிய அபிமானமோ, அரசியலில் இருக்கும் கருத்து வேற்றுமைகளோ எப்போதுமே என் நட்பு வட்டத்தை தீர்மானிக்கும் சக்தியாக நான் இருக்க விட்டதில்லை. அந்த வித்தியாசம் கூட தெரியாத சிறுவனில்லை நான். என் வாழ்வில் மிகப்பெரிய சிக்கலுக்கு உடனிருந்து உதவியது திமுகவின் பொதுக்குழு உறுப்பினர் அப்துல்லா தான். ஆனால் அவரிடமே திமுகவை , கலைஞரை முடிந்தளவு கோவமாக எதிர்த்து பேச்க்கொண்டுதானிருக்கிறேன். அது மாதிரியே நடிகர்களும். இந்த ட்விட்டரில் நான் மிக நெருக்கமாக நினைக்கும் நண்பர்களில் பெரும்பாலோனோர் அஜித் ரசிகர்கள் தான். இதையெல்லாம் விளக்கமாக சொல்வதே கேணைத்தனமாக இருக்கிறது எனக்கு.

விஷயம் இதுதான். இன்று காலை லக்கியோடு நடந்த உரையாடல். சரியா, தவறா என்றெல்லாம் யோசிக்க வேண்டாம். இது சில நாட்களாகவே இருந்த உள்ளுணர்வு. லைக்குக்காக, ரீட்விட்காக திமுகவை சிலர் எதிர்ப்பதாக அவர் தொடர்ந்து சொல்லிக் கொண்டுதான் இருந்தார். இன்றுதான் நேரிடையாக என்னை கைகாட்டினார். அந்த கடுப்பு. என்னளவில் இது கேரக்டர் அசாஸினேஷன். அதனால்தான் அப்படி பேசிவிட்டேன்.(எதையும் டெலீட் செய்யவில்லை. என் புரஃபைலில் அப்படியேதான் இருக்கிறது)

ஆனால் யோசித்தால், லக்கி இதையெல்லாம் தாண்டிய நண்பர். கிட்டத்தட்ட 5 ஆண்டுகள். வலையுலகில் என்னுடைய மிக முக்கியமான தோழர்.

எப்போதுமே நண்பர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பவன் நான். நட்பை விட கொள்கை முக்கியம் என்ற ”வினவு” அரசியல் எனக்கு ஒத்துவராது.

எனவே இனிமேல் அரசியல் சார்ந்த கமெண்ட்ஸோ, சினிமா பற்றிய கமெண்ட்ஸோ அதிகம் போட வேண்டாமென இருக்கிறேன்.

இருக்கிற நட்பை வைத்துக் கொண்டு ஒரு சந்தோஷமான, சுயநல வாழ்க்கை வாழும் மிடில்கிளாசாய் இருப்பதே எனக்கு போதும்.

லக்கி: ஏதும் காயப்படுத்தியிருந்தால் மன்னிக்க.



http://tl.gd/n_1rl229b

No comments:

Post a Comment