Thursday, November 7, 2013

இருநாட்களுக்கு முன்

மாமே @freeyavudu


7th November 2013 from TwitLonger
தினமலரில் இருநாட்களுக்கு முன் ட்விட்டர் பற்றி வெளியான ஒரு கட்டுரையை
படிக்க நேர்ந்தது. அதன்பால் எழுந்த எதிர்வினைகளுக்கான என் விளக்கம்.

அக்கட்டுரையை எழுதியது என் பழைய தோழி. சமூக ஊடகங்கள் பற்றிய சிறு
முன்னுரையைத் தாண்டி “குறுகிய மனப்பான்மை“ என்ற தலைப்பில் இருந்து
டக்கென்று வேறு திசைக்கு பயணப்பட்டிருந்தது அக்கட்டுரை. அதின் பொதுவான
சாராம்சம் “சமூகத்தில் பெண்களுக்கு உண்டான தடைகள் போலவே ட்வி்ட்டரிலும்
உள்ளது“ என்பதே. அதன்பின் ட்விட்டருக்கு வரவிரும்பும் பெண்களுக்கு சில அறிவுரைகளும்.

கட்டுரை வெளியான அன்று சிலர் அத்தோழிக்கு வாழ்த்து சொல்லியதும் அதற்கு
அவர் நன்றி சொல்லியதும் நடந்தேறியது.அதற்கு பிறகு இதே தோழி கொஞ்ச நாள்
முன்பு வரை தினமலரை தினமலம் என்றும் தினமலத்தை புறக்கணிப்போம் என்றும்
டேக் போட்டு பொங்கிய டிவிட்டுகளை பலர் ஆர்டி செய்தனர். அப்படியெல்லாம் சொன்னவர் “தினமலரில் என் கட்டுரை வந்திருக்கிறது எல்லோரும் படித்து கருத்துச் சொல்லுங்கள்“ என்று கேட்ட முரண்பாட்டை கிண்டல் செய்யும் ட்விட்டுகள் தான் அவை. அந்த கோபத்தில் திடீரென்று மாலையில் பொதுவாக யாரையோ திட்ட ஆரம்பித்துவிட்டார். வழக்கு தொடுக்கப் போவதாகவும் சொன்னார். யாரை சொல்கிறாரென்று யாருக்கும் புரியவில்லை. செந்தழல்ரவி விளக்கம் கேட்டதற்கு என் பெயரைச் சொல்கிறார். அதற்கான விளக்கம் எதையும் அவர் சொல்லவில்லை. பொது தளத்தில் முன்னுக்குபின் முரணாக பேசினால் விமர்சனங்கள் வருவது சாதாரணம். அதை கடந்து போக வேண்டும் அல்லது அதற்கு பதிலடி கொடுக்க வேண்டும். இதை விட்டுவிட்டு கிண்டல் செய்தவர்களை என்னவோ கொலை பாதகர்கள் போலவும் இவரை பாலியல் சீண்டல் செய்தது போல சித்தரித்து பொங்குவதை இது வரை இங்கிருக்கும் யாரும் தட்டிக் கேட்டாற் போல் தெரியவில்லை. பெண்ணை எதிர்ப்பதால் உண்டாகும் பிரச்சனைகளையோ அல்லது கிடைக்காமல் போகும் லாபங்களையோ கருதி கம்மென்று இருக்கிறார்களோ என்னவோ. கிண்டல் செய்த அல்லது சாதாரண கிண்டல்களை ஆர்டி செய்த பலரையும் அன்பாலோ செய்கிறார். சரி அது அவர் விருப்பம். இதில் குற்றவாளி போல என்பெயரை மட்டும் குறிப்பிட்டு சொல்ல வேண்டிய அவசியமென்ன என்பது தான் புரியவில்லை.

ட்விட்டரில் இயங்கும் பெண்கள் பலரை எனக்குத் தெரியும். சிலர் எனக்கு பழக்கமும் கூட. இதுவரை யாரும் என்மீதோ வேறு ஆண்கள் மீதோ இது போன்றதொரு பழியை சுமத்தியதில்லை. தவிர நான் நேரடியாகவோ மறைமுகமாகவோ கீழ்த்தரமான வார்த்தைகளையும் வீசியதில்லை. மாறாக தினமலர் கட்டுரை எழுதிய தோழி இதுவரை உதிர்த்த வார்த்தைகள்.. (பெரும்பான்மை வார்த்தைகள் ஆண்களைக் குறி
வைத்தே..)

அவனுங்க,
டேஷ்,
கடங்காரனுங்க,
போங்கடா டேய்,
வெட்கம் மானம் சூடு சொரணை ஒண்ணாவது இருக்காடா..
டேய் நீங்கல்லாம் எனக்கு மாமனா மச்சானாடா..
பன்றிகள் ..
பெண் சொம்பு..
ஊளை சவுண்டு விடற டாக்கீஸ்..
பக்கி..
சைக்கோ ஆண்கள்..
எவளும்..
முட்டாள் ஆண்கள்..
கேடுகெட்ட ஜென்மங்கள் ஆண்கள் ..
சில நாய்கள்..
கண்ட நாய்ங்க...
இந்த சனியங்களுக்கு..
வெட்டி பயலுவளா...
அட தொட நடுங்கிப் பயலுவளா...

தவிர குறிப்பிட்ட ஒரு நபரை அவர் பெயர் சொல்லியே திட்டியது
எத்தன தரம் தாண்டா கேவலப்படுவே
என்னாத்த திங்குறானோ
வீடு தேடி வந்து செருப்ப பிக்கிறேண்டா
சைக்கோ புடிச்ச லூசு, மு்ததிப்போச்சு
நீலாம் என்ன ஜென்மம்டா
பைத்தியம்
நீ என்ன பெரிய டேஷ்ஷா
என் செருப்பாலேயே அடிப்பேன்
வீடு தேடி வந்து மிதிக்கிறேன்
கொரங்கு
வெ.மா.சூ.சொ எதுனா இருக்காடா
பொறுக்கி
பன்னாட..
உன் முகரை நாய் வாந்தி எடுத்தாப்ல இருக்கு
ரோட்ல அடி பட்டு அனாத பொணமாத்தாண்டா போவ
பொறம்போக்கு

தவிர கட்டுரை வெளியான மாலை தோழி உதிர்த்த வார்த்தைகளும் அதே ரகமே. இதுபோன்ற அவரின் நடவடிக்கையினால் தான் அவரை அன்பாலோ செய்தேன். எனக்குத் தெரிந்து நான் ட்விட்டர் வந்த காலத்தில் இருந்து பெண்ணோ ஆணோ கோபமாகக் கூட யாரும் இவ்வளவு கீழிறங்கிப் பேசியதில்லை. இவ்வளவையும் பேசிவிட்டு எங்களுக்குப் பாதுகாப்பில்லை என்பது எவ்வகையில் சேர்த்தி. தவிர பொதுவாக இப்படி கல் விட்டெறிந்தால் யாரும் திருப்பி மலர் எறியமாட்டார்கள். கல் தான் வரும். அன்று மாலை எனக்கு பொறுக்காமல் நண்பரொருவரிடம் “என்னங்க இவ்ளோ அசிங்கமா பேசுது அந்தம்மிணி“என்று கேட்டதற்கு கூட “விடுங்க மாம்ஸ், இதப் போயி பெருசு பண்ணிகிட்டு“ என்று சிரித்தபடி கூலாக கூறி நகர்ந்து விட்டார். எல்லாவற்றையும் தான் ப்ணணி விட்டு (அ) பண்ணக் காரணமாய் இருந்துவிட்டு தலையை விரித்துப்போட்டு அழுதுவுடன் “எனி யெல்ப் ஷாலினிகள்“ வேறு வரிசை கட்டி வந்துவிடுகிறார்கள்.

கட்டுரை நன்னெறி : யார்மீதும் எனக்கு வன்மமில்லை

டிஸ்கி 1 - ஓரிரு வாரங்கள் முன்பு “தி ஹிந்து“வில் ட்விட்டர் தோழி ஒருவர் கட்டுரை எழுதியிருந்தார். ஆனந்த விகடனில் நண்பர்கள் இருவர் நான்கு ஐந்து கட்டுரைகள் எழுதியிருந்தனர். தினகரன் தீபாவளி மலரில் புகைப்படத்துடன் நம் ட்வி்ட்டர் பிரபலங்கள் சிலரைப் பற்றி கட்டுரை வெளியாகி இருந்தது.

டிஸ்கி 2 - தோழியிடம் “தினமலரை தீவிரமாக எதிர்த்த நீங்கள் ஏன் தினமலரிலேயே எழுதினீர்கள்“ என சிலர் கேட்டதற்கு அவரளித்த பதில் “அவந்தான் இளிச்சவாய்“. கட்டுரை வெளியிட்டதற்கு தினமலர் பத்திரிகைக்கு நல்ல க்ரெடிட். நன்றி!!!

No comments:

Post a Comment