Friday, November 8, 2013

சிட்டிபாபு

கானா பிரபா @kanapraba


8th November 2013 from TwitLonger
அஞ்சலி _/\_ சிட்டிபாபு

அரிகிரி அசெம்ப்ளி என்றதொரு நிகழ்ச்சி பாஸ்கி, சிட்டிபாபு படைப்பில் அப்போது ஜெயா டிவி வழியாக ஏக பிரபலம். பாஸ்கி சீரியசாக அல்லது கொஞ்சம் பொடி வைத்துக் கிண்டலாக வந்திருக்கும் விருந்தினரைப் பார்த்துக் கேள்வி கேட்பார். பக்கத்தில் உட்கார்ந்திருக்கும் சக நிகழ்ச்சிப் படைப்பாளர் சிட்டிபாபு அதையெல்லாம் சட்டை பண்ணாமல் எங்கோ வேடிக்கை பார்ப்பது போல இருப்பார். சில சமயம் தூங்கி வழிவது போலவும் நடிப்பார். திடீரென்று எடக்கு மடக்காக வந்திருக்கும் விருந்தினரைப் பார்த்துக் கேள்வி கேட்க, வந்தவரோ திணறிப் போவார். ஒருமுறை இந்த நிகழ்ச்சிக்கு வந்த மன்சூர் அலிகான் அடிக்கவே போனதாகக் கேள்வி. பெரும்பாலும் இந்தக் குசும்புகளுக்காக அரிகிரி அசெம்ப்ளி நிகழ்ச்சிக்கு மேடையேறாத பிரபலங்களும் உண்டு.

பின்பு சன் டிவியில் காமெடி டைம் அர்ச்சனாவுடன் சில வருடங்கள் இவர் தொகுத்து வழங்கிய அந்த நிகழ்ச்சியும் ஏக பிரபலம். போலித்தனமான தொலைக்காட்சி அரிதாரங்களுக்கு மத்தியில் ரசிக்க வைத்த கலைஞர்களில் இவரும் ஒருவர். தசாவதாரம் போன்ற ஒரு சில படங்களிலேயே முறையாகப் பயன்படுத்தப்பட்டவர்.

49 வயதெல்லாம் வயதா? இவ்வளவு சீக்கிரமாகப் போய்விட்டாரே :-(

http://www.youtube.com/watch?v=G0DeyE4ciKk&sns=tw 

No comments:

Post a Comment