தேர்தல் நெருங்குகிறது..... மோடி மயக்கத்திலிருந்து மக்களை தெளிவிப்பது எப்படி?

இன்றொரு நிகழ்வு.
இருபது வயது மதிக்கத்தக்க ஒரு இளைஞரோடு பேசும் சூழல் ஏற்பட்டது.
பேசிக்கொண்டிருக்கும்போது, 'மோடிதான் அடுத்த பிரதமர்' என்றார்.
மோடி பிரதமரானால் என்ன நடக்கும்? என்று கேட்டேன்.
'இந்த நாடே கெட்டுபோய் இருக்கு சார்! மோடி வந்தால்தான் எல்லாம் மாறும்' என்றார்.
எப்படி இவருக்கு விளக்குவது என்று யோசித்த நான்....
மோடி மீது இவ்வளவு நம்பிக்கையா? என்று கேட்டேன்.
ஆமாம் சார்! என்றார்.
குஜராத்தில் மோடி எந்த ஊரில் பிறந்தார்? என்று கேட்டேன்.
தெரியாது! என்றார்.
மோடிக்கு இப்போது எத்தனை வயது? என்று கேட்டேன்.
தெரியாது! என்றார்.
இதெல்லாம் தெரியாது ஆனால் மோடி பிரதமரானால்தான் நல்லது என்று எப்படி சொல்லுகிறீர்கள்? என்று கேட்டேன்.
அவர் குஜராத்தில் சாதித்து காட்டியவர். குஜராத்தின் வளர்ச்சிக்கு காரணமானவர் என்றார்.
குஜராத்தில் படித்தவர்கள் எத்தனை சதவிகிதம்? என்று கேட்டேன்.
தெரியாது! என்றார்.
குஜராத்தில் அந்நிய நாடுகளின் முதலீடு எவ்வளவு? என்று கேட்டேன்.
சார் இதெல்லாம் எனக்குத் தெரியாது சார். என்ன சார் இது... என்றார்.
தப்பா எடுத்துக்காதீங்க.... நான் கேட்பதற்கு பதிலை சொல்லுங்கள். நான் அப்புறம் சொல்லுகிறேன். என்றேன்.
ஜெயலலிதா எந்த ஊரில் பிறந்தார்? என்று கேட்டேன்.
கர்நாடகாவில் பிறந்தார் சார். என்றார்.
அவர் தமிழ்நாடு இல்லையா? என்று கேட்டேன். அவங்க அப்பா ஊர் ஸ்ரீரங்கம் சார். என்றார்.
கலைஞர் கருணாநிதி?
அவர் திருவாரூரில் பிறந்தவர் சார்.
தமிழ்நாட்டில் படித்தவர்கள் எத்தனை சதவிகிதம்?
தெரியாது சார்! என்றார்.
தமிழ்நாட்டில் அந்நிய நாடுகளின் முதலீடு எவ்வளவு? என்று கேட்டேன்.
அதெல்லாம் எனக்குத் தெரியாது சார். சார்.... என்னை விடுங்க சார்! என்றார்.
எதுவும் தெரியாத நீங்கள் மோடி பிரதமரானால் எல்லாம் நாட்டில் மாறிவிடும் என்று எப்படி சொன்னீர்கள்? என்று கேட்டேன்.
'சார் பத்திரிக்கைகளில் படிப்பது மூலமாகத்தான் எனக்குத் தெரிந்ததை சொன்னேன்' என்றார்.
அவருக்கு நான் அளித்த விளக்கங்கள் பல இருக்க....
இதிலிருந்து நாம் தெரிந்துகொள்வது என்னவென்றால்.....
ஊடகங்கள் ஒரு போலியான விளம்பரத்தை மோடிக்கு ஏற்படுத்திக் கொடுக்கிறது என்பதையும், அதன் மூலமாக சொந்த அறிவை (பகுத்தறிவை) என்றைக்குமே பயன்படுத்த பழக்கபடுத்தாத நம் மக்கள்.... சொன்னதை நம்பும் சிந்தனை சோம்பேறிகளாக, சொல்லுவதை அப்படியே நம்பும் முட்டாள்களாக இருக்கும் நம் மக்கள்.....
பார்ப்பன (ஹிந்துத்துவா) பிரசாரத்தை அப்படியே நம்பி ஏற்றுக்கொள்கிறார்கள் என்பதும்.... இது சமூகத்திற்கு நல்லதல்ல என்பதும் தெளிவாகிறது.
பகுத்தறிவு சிந்தனை ஓரளவிற்கு ஊட்டப்பட்ட தமிழ்நாட்டில், தி.மு.க கொள்கை ரீதியாக செயல்படாமல், மக்களின் பகுத்தறிவு சிந்தனையை தூண்டாமல், ஜெயலலிதாவின் நிர்வாக குறையை சுட்டிக்காட்டுவதன் மூலமாக மட்டும் நாம் வெற்றிபெற்றுவிடலாம் என்று கருதினால்....
மோடி மயக்கத்தில் இருப்பவர்களிடம் அது செல்லுபடியாகாது.
இன்றைய நிலைமையில், தி.மு.கவின் நிரந்தர வாக்குவங்கியை மட்டும் நம்பி தேர்தலில் களம் இறங்குவது என்பது இந்தியா ஒலிம்பிக்கில் கலந்துகொள்வது போலத்தான்.
தி.மு.கவின் நிரந்தர வாக்கு வங்கியை தாண்டி பொதுவானவர்களின் வாக்கு தி.மு.க என்ற இயக்கத்திற்கு வருவதற்கு ஏதுவான சூழலை தி.மு.க உருவாகியிருக்கிறதா? என்பதை சிந்தித்துப் பார்க்கவேண்டும்.
கடந்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.கவிற்கு எதிராக விழுந்த பொதுவானவர்களின் வாக்கு தி.மு.க பக்கம் மாற என்ன சாத்தியம் இருக்கிறது? என்பதை சிந்தித்துப்பார்க்கவேண்டும்.
ஜெயலலிதாவை எதிர்ப்பதால் மட்டுமே நாம் வெற்றிபெற முடியுமா? என்பதை நாம் கவனத்துடன் பரிசீலனை செய்யவேண்டும்.
தி.மு.கவின் வெற்றி என்பது திராவிடத் தமிழர்களின் வெற்றி!
என்ற சிந்தனையை கொண்டவர்களை அதிக அளவில் உருவாக்கும்வண்ணம் செயல்படுவதும் பிரச்சாரம் செய்வதும்தான் இப்போதைய தேவை!
மக்களை நமக்கு சாதகமாக மாற்றுவதற்கு முன்பு நாம் மாறியிருக்கிறோமா? என்று சுயபரிசோதனை செய்துகொள்வது அதைவிட அவசியமானது!
- திராவிடப் புரட்சி
via https://www.facebook.com/notes/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF/526102980811967

No comments:
Post a Comment