Friday, September 20, 2013

மூணாவது அணி


MBA படிச்ச ஒருவன் கிராமத்திற்கு செல்கிறான்...

அங்கே ஒரு செக்குமாடு மட்டும் தனியா செக்கு சுத்திக் கொண்டிருந்தது...

அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது
பக்கத்தில் ஒரு குடிசைக்குள் ஒரு விவசாயி சாப்பிட்டுக்
கொண்டிருந்தார்...
அவரிடம் கேட்டான்…

MBA : மாடு மட்டும் தனியா செக்கு சுத்திட்டு இருக்கே..?

விவசாயி: அது பழகின மாடு தம்பி, அதுவே சுத்திக்கும்...

MBA : நீங்க உள்ளே வந்த உடனே அது சுத்தறத நிறுத்திட்டா…!
எப்படி கண்டுபிடிப்பீங்க..?

விவசாயி: அதோட கழுத்தில ஒரு சலங்கை இருக்கு தம்பி, சுத்தறதை நிறுத்திட்டா அந்த சலங்கை சத்தம்வராது... அதை வெச்சி கண்டுபிடிச்சிடு ­வேன்...

MBA : அது சுத்தறதை நிறுத்திட்டு ஒரே இடத்துலநின்னு தலைய மட்டும் ஆட்டினா..! அப்ப எப்படி கண்டுபிடிப்பீங்க..?

விவசாயி: இதுக்குதான்தம்பி நான் என் மாட்டை காலேஜிக்கெல்லாம் படிக்க அனுப்பலை...

#Jaya Prakash #facebook

No comments:

Post a Comment