Wednesday, April 9, 2014
லாஸ் ஆப் பேய்
சூரியன் @sooriyen
9th April 2014 from TwitLonger
வணக்கம் மக்கழே,
நானும் உங்களைப்போலவே டிவிட்டரில் சண்டை என்றால் வேலைவெட்டியெல்லாம் ஒதுக்கிவிட்டு முடிந்தால் தனி அறை சென்று தயார்படுத்திக்கொள்வேன் சிரித்துத்தீர்க்க.. அதிலும் சண்டை டுவிட் லாங்கர் என்றால் "சென்னியாரின் ப்ளாக்கை" விட அதிகமாக புடிக்கும். நிற்க
இன்று ஃபோன் மணி ஒலித்தது ஒரு பிரபல டிவிட்டரிடமிருந்து "மச்சி டிவிட்டர் பாத்தியா இரண்டு ஆளுமைகளுக்கும் சண்டையாமே?" ன்னு நானும் அரை நாள் லீவ போட்டு வீட்டுக்கு ஓடியாந்தேன் உயிரப்பணயம் வச்சு, வரும் வழியில் என்னென்னமோ கற்பனை ஓடுச்சு..
வந்ததே சரின்னு ரெண்டு டிவிட்லாங்கரையும் ஓப்பன் பண்ணி ஒரு முக்கா மணி நேரம் முட்டி மோதினேன், என்னய்யா பண்ண்ணான் என் கட்சிக்காரன் ரேஞ்சுல இருந்த்தது, கடைசி வர எனக்கு புரிஞ்சதே " மோடி, காங்கிரஸ், பிஜேபி தவிர ஒன்னும் இல்ல...
ஒரு சாதாரணனா கேக்கேன் ஏன் இப்டி சண்ட போடுறீங்க?
இதே சந்துல எத்தனை சண்ட வந்துருக்கு?
எப்டி எல்லாம் சண்ட போட்ருக்காங்க?
எவ்வளவோ அழகான வார்த்தைகள் இருக்குறப்ப யாருக்குமே புரியா வண்ணம் இப்படி இலக்கிய நடைல சண்டை இருந்தா எப்டி எங்களை மாதிரி பாமரன் ரசிக்க முடியும்.
இதுக்கு தான் நாங்க வேலை வெட்டியெல்லாம் போட்டுட்டு உங்க சண்டைய பாக்க வர்ரோமா?
லாஸ் ஆப் பேய்யா இன்னைக்கு எனக்கு?
இப்டி புரியாம ஆக்கிட்டீங்களே?
மண்டகாஞ்சதுல சரக்கு செலவு வேற இருக்கு..
இது போன்ற ஆளூமைகள் இனி சண்டை போட்டிங்கன்னா என்னைப்போல் இங்கிருக்கும் பலரை மனதில் வைத்துக்கொண்டு எழுதுங்கள்..
உங்களைப்போல் எழுத்தாழுமைகள் கடின தமிற்சொற்கள் மூலம் விளையாட பல தளங்கள் உள்ளது, தயவுசெய்து எங்களை பல வருடம் இன்பத்தில் ஆழ்த்திவரும் டிவிட்லாங்கரை இது போன்ற விஷயங்களூக்கு பயன்படுத்தி எங்கள் மனதை புண்படுத்தாதீர்கள்..
உங்களுக்கும், மேலாதிக்க குணம் கொண்டோருக்கும் என்ன வித்யாசம்?
ஒரு பணக்காரப்பையன் ஏழைக்கூட்டத்தின் முன்னிலையில் புது ஆடையுடன் தன்னை அடையாளப்படுத்திக்கொள்வது போல் உள்ளது..
இது போன்ற சொல்லாடல்களை பார்க்கும் போது குற்ற உணார்ச்சியில் என் மனம் புண்படுகிறது...
எவ்வளவோ பேச வேண்டுமென நினைத்தேன் ஆனால் துக்கம் தொண்டையை அடைக்கிறது..
என்னை போல் வெளிசொல்ல முடியா கையாலாகதவர்கள் எத்தனை பேர் உள்ளனரோ, அது மோதிக்கே வெளிச்சம்..
இப்படிக்கு ஆர்வமுடன் சண்டை பார்க்க வந்து ஏமாந்த பல கோடி பாமரனில் நானும் ஒருவன்...
பின்குறிப்பு:- தயவுசெய்து ரீடிவிட் பண்ணும்போது ரோபல் மேக்சுன்னு போட்ராதீங்க, இது சீரியசா அவங்களை போய் அடையனும் அவங்க மாறனும்.. **ஆப் கீ மோடி சர்கார்**
ஹி ஹி ஹி ஹி
http://tl.gd/n_1s1b2no
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment