Wednesday, May 21, 2014

பொன்னாடை

பாராளுமன்ற மைய மண்டபத்தில் விஜயகாந்த், பிரேமலதா, சுதீஷ், மோடியை பார்த்து கை குலுக்க தயாராக...

கேப்டன் : ஆப் கி பார் மோடி சர்க்கார்னா என்ன புள்ள ? எங்க பாத்தாலும் பார் திறக்கனும்னு மோடி சொல்றா மாதிரியா ? 

லேடி கேப்டன்: வெங்கங்கெட்ட மனுசா, இங்க வந்தும் “அந்த” நினைப்புத்தானா ? 

கேப்டன் : கோச்சுக்காத புள்ள, நேத்து அடிச்ச டெல்லி சரக்கு கும்முனு இருக்கு..டேய் மச்சான், ரெண்டு பாட்டில் பைல வெச்சுக்கோடா...

சுதீர் : மாமா, ப்ளைட்ல எல்லாம் லோக்கல் சரக்கு எடுத்துக்கிட்டு போக முடியாது...

கேப்டன் : அதுக்கென்னா, மோடி ஜி கிட்ட சொல்லி தனி ப்ளைட்டு வாங்கித்தறேன்..

லேடி கேப்டன்: இந்த ஈர வெங்காயத்துக்கு ஒன்னும் கொறைச்சல் கிடையாது. மீதி எம்.எல்.ஏ எவனும் அம்மாக்கிட்ட போகாம புடிங்க...

இல.கனேசன் : சார், வாங்க வாங்க அடுத்து நாம தான்...

சுதீர் : எங்க மாமா கூப்பிடறார், பந்தியா ? 

கேப்டன் : ஆங். மந்தி. போடாங்..மோடிய பார்த்து கை குலுக்கனும் பொன்னாடை போத்தனும்..

மோடி அருகில் செல்கிறார்கள், மோடியை கட்டி அணைக்கிறார் கேப்டன்...தடுமாறி விழப்போகிறார்...

அருகில் இருந்த பிரகாஷ் சிங் பாதல்: டேய் டேய் டேய். சவத்து மூதி...இவனுக்கு பகல்லயே பசுமாடு தெரியாதுங்கறது சரியாத்தான் இருக்கு...

ஒருவழியாக சமாளித்து பொன்னாடை போர்த்துகிறார்..

கேப்டன் : அது வந்து மோடி ஜி, ஒரிஜினல் சரக்கு போலிருக்கு, கண்ணே தெரியல. பார்லிமெண்ட்ல புல்லா ட்யூப் லைட்டா மாத்துங்க மோடிஜி...

மோடி : கேப்டனை “அம்முலு” செய்து (அதான், திருஷ்டி கழிக்கிற மாதிரி இரண்டு கையாலும் முகத்தினை ஒத்தி எடுப்பது) - செல்லம், கருப்பு எம்.ஜியார், சிரிக்கும்போது அழக்க்கா இருக்கீங்க.. வேர் ஈஸ் ஒய்ப்...

கேப்டன் : என்னாங்க ஜீ ? அப்படீன்னா என்னா மீனிங் ஜி ? 

லேடி கேப்டன் : மாமா, நான் எங்கன்னு கேக்குறார். மனதுக்குள் : இவர் இங்கிலீஸ கொண்டுபோய் சாணிய கரைச்சு ஊத்த ?

லேடி கேப்டன் : எஸ் மிஸ்டர் மோடி, ஐயாம் ஹியர். ஹவ் ஆர் யூ ? 

மோடி : ஐயம் பைன் மேடம். 

சுதீர் : அக்கா, எனக்கு ராஜ்யசபா எம்.பி சீட் கேளுக்கா...

லேடி கேப்டன் : சும்மா இருடா சோம்பேறி..

மோடி : வாட் ஹீ ஈஸ் ஆஸ்கிங் !!

லேடி கேப்டன்: ஹீ வாஸ் அப்செட் ஆப் ஹிஸ் டிபீட் மோடிஜி. இட் வில் பீ கிரேட் ஈப் யூ ஆபர் ஒன் ராஜ்யசபா எம்.பி சீட்..

மோடி : ஷ்யூர் ஷ்யூர். நோ ப்ராப்ளம்..ஐ வில் டேக் கேர். வைகோ ஆல்சோ ஆஸ்கிங் ஒன்..

லேடி கேப்டன் : வீ ஆர் பிக் பார்ட்டி இன் டமில்நாடு மோடிஜி. ப்ளீஸ் கிவ் ப்ரிபரன்ஸ் டு அஸ்.

மோடி : அப்சலூட்லி..

கேப்டன் : எஸ் ஐ நோ. இட் ஈஸ் வோட்கா ஜி. இட் ஈஸ் வெரி காஸ்ட்லி ஜி..கேன் யூ ரெடியூஸ் த ப்ரைஸ்..

மோடி : ஐ யம் கெட்டிங் பிஸ்டு ஆப். ப்ளீஸ் டேக் ஹிம் அவே...

லேடி கேப்டன் : சாரி மோடி ஜி, ஐ வில் டேக் கேர். வில் கேச் யூ லேட்டர்.. (இருவரையும் இழுத்துக்கொண்டு அப்பால் செல்கிறார்)

வீடியோவை பார்த்துவிடுங்கள் : http://www.youtube.com/watch?v=vAmjBLoAGiY#t=30

-

செந்தழல் ரவி · @senthazalravi

No comments:

Post a Comment