Friday, May 9, 2014

படிப்பு

வருடா வருடம் இதே அக்கப்போர். படிக்காமல் முன்னேற procedural வழி சொல்லுங்கள். அம்பானி இல்லையா, சச்சின் இல்லையா, ரஜினி இல்லையா என்பது போங்கு. https://twitter.com/writercsk/status/464625197241606146
  1. மூச்சு முட்ட படிக்காம அசால்ட்டா படிச்சு ஒரு டிகிரி முடிச்சு சுலபமா ஒரு வேலைல சேந்து அதுல உருப்படியா முன்னேற இப்ப வழி இருக்கு
  2. ஓ இவனுக தான் முன்னேறினவனுகளா! இவனுகளாட்டம் தான் இப்ப படிச்சு முன்னேறிருக்கீங்களா ;-)
  3. இரண்டு விஷயங்கள்: 1) கஷ்டப்படவே சொல்லவில்லை சாரே. நீங்கள் சொல்லும் வழியிலும் கூட கல்வியும், மதிப்பெண்ணும் அவசியம் தான். (1/2)
  4. 2) தவிர, நீங்கள் சொல்லும் வழிகளில் போட்டி குறைவு. +2 முடிக்கும் அத்தனை லட்சம் பேரும் அதை முயன்றால் இதே கஷ்டம் உருவாகும். (2/2)
  5. சம்பாதிக்கறாங்களே! புகழோட இருக்காங்களே! அது ரெண்டும் தானே சமூகப் பார்வையில் முன்னேற்றம் என்பது!
  6. அவ்வ் அதுக்காக 2வது வழிய விடக்கூடாது ரைட்டரே, ஜாலியா படிக்கனும், மத்தபடி படிப்பு 75% மக்களுக்கு அவசியமானது தான்.
  7. அதத்தான் கேக்கறேன் அந்த ரெண்டையும் படிச்சு அவங்க அளவுக்கு அடைஞ்சுட்டீங்களானு ;-)
  8. உங்களுக்குமா புரியல! விதிவிலக்குகளை எடுத்துக் கொண்டு கல்வியை மதிப்பெண்ணை இழிவு பேச வேண்டாம் என்று மட்டுமே சொல்கிறேன்.
  9. இந்தக் கல்விமுறையை உயர்த்திப் பேசுவதற்கு ஒன்றுமில்லை என்றே கருதுகிறேன். மனனம் செய்து வாந்தி எடுப்பது எல்லாருக்கும் கைகூடாது.
  10. அதற்கு கல்வி முறையில் மாற்றம் கொண்டு வர வேண்டியது தானே தீர்வு! தவிர, அதை விட்டு வெளியேறவும் அதன் வழியே போயாக வேண்டிய சூழல்.
  11. அதன் மீதான எரிச்சலே இந்த கிண்டல்கள். அதற்கு நீங்கள் பதற்றம் அடைவது அதிகம் ;-))
  12. இவங்க புள்ளைங்களுக்கு நல்ல கல்வி வழங்க அவர்கள் தவறவில்லை :)
  13. இல்லை. அவர்கள் சொல்லும் தொனியே வேறு. படிப்பது முக்கியமே இல்லை என மாணவர் மத்தியில் பரப்ப விழைகிறார்கள். அதைத் தான் கண்டிக்கிறேன்.
  14. நிஜமாவே படிக்கறது முக்கியமே இல்லைதான். அதுவும் மார்க்குக்காக படிக்கறது முக்கியமே இல்லைதான்.
  15. படிப்புதான் முக்கியம் என்பதற்கும் படிப்பே முக்கியமில்லை என்பதற்கும் இடையில் எங்கோ உலாத்துகிறது விசயம் ;-)
  16. உங்கள் பிள்ளையை பள்ளியில் சேர்க்கவில்லையா?
  17. நானும் படித்தால் மட்டுமே முன்னேற முடியும் என்று சொல்லவே இல்லை. ஆனால் படிப்பது மொக்கை என்று சொல்லும் ட்வீட்களைக் காண நேர்ந்தது.
  18. இங்கே கல்வி என்பது பிழைப்புக்கானதாக மட்டும்தான் பயிற்றுவிக்கப்படுகிறதுன்னு சொன்னா உன் புள்ளைய ஸ்கூல்ல சேத்தியான்னா.
  19. இன்று முதல் மார்க் கோழிகளை விதந்தோதுவார்கள் அல்லவா. அதனால் தான் அப்படிக் கிண்டலடிக்கிறார்கள். கோழிகளை கிண்டலடிப்பது சரியே ;-)
  20. பிழைப்புக்குத் தானய்யா படிக்க சொல்றேன்.
  21. நான் படிக்கறதுனு சொன்னது பள்ளிக்கு போகமலிருப்பதை பற்றியல்ல.. மாங்கு மாங்கனு லூசுமாதிரி மனப்பாடம் பண்ணி வாந்திஎடுக்கறத
  22. படிச்சாதான் பிழைக்க முடியும்னு சொல்றது ஒருமாதிரி குமாஸ்தா மனநிலையோட வெளிப்பாடு.
  23. மதிப்பெண் அட்டை நாக்கு வழிக்கத் தான் ஆகும் என்று யாரோ சொன்னார்கள். எனக்கு அது தான் சோறு போடுகிறது. அது தான் கடுப்பு.
  24. சுத்தமா படிக்காம போனா , நீங்க புத்தகம் கூட ஒழுங்கா படிக்க முடியாது . அதற்கு பயிற்சி அவசியம்.
  25. ரெண்டு தலைமுறை அப்புறம் நீங்க நெனச்சத பண்ணலாம் இந்திய முன்னேறிய நாடானால்
  26. கொஞ்சம் என் டைம்லைன் முழுக்க படிச்சிட்டு மேல கருத்து பேசுங்களேன். - இப்படிக்கு குமாஸ்தா.
  27. பவர் ஸ்டாருக்கு அவரது கேனத்தனங்கள் தான் சோறு போடுகின்றன. ;-)
  28. உங்களை குமாஸ்தானு சொல்லலை. படிப்புதான் நல்ல சோறுபோடும் என்கிற மனநிலையைத்தான் சொன்னேன். நமக்குகல்விபற்றிபுரிதல்தேவை.
  29. மார்க் வாங்காம தொழில் அதிபர் ஆகி அவரு என்னமோ படிக்காதவந்களுக்கு மட்டும் வேலை வாய்ப்பு தருவாங்க போல இனி வரும் காலத்தில்
  30. இங்க நாம் இன்னும் செளுமையாகல . மால், பீட்சாலாம் indicator கெடையாது. சேட்டு வாழ்கை படிக்காத மேதையாகாது
  31. ஒரு பவர் ஸ்டார் தான் உண்டு. அதைத் தான் விதிவிலக்குனு சொன்னேன். ஆனால் படித்து உருப்பட்ட லட்சம் சிஎஸ்கே பார்க்க முடியும்.
  32. படிப்பு முக்கியம் ஆனால் மதிப்பெண் முக்கியம் அல்ல
  33. ஏதோ ஒரு Dr. டிகிரி வச்சி ஆஸ்பத்திரி காசு சம்பாரிச்சு அப்புறம்தான் பவர் ஸ்டார்
  34. திசை திரும்புகிறது. மார்க்தான் உங்களுக்கு சோறு போடுதுன்றதுக்காக அது புனித வஸ்து ஆகிடாதுல்ல. அது போல லட்சம் பேருக்கு 1/2
  35. ப்ராடு வேலைகள் தான் சோறு போடுது. அதனால அதை குறை சொல்லாதீங்க! அதான் எளிய ந.மு சாத்தியமுள்ள வழினு சொல்ல முடியுமா! ;-) 2/2
  36. வெற்றி, பாதுகாப்பு எல்லா அடிப்படையிலும் அது நம்பகமற்ற வழி என்பதே பிரச்சனை. இல்லை எனில் ஏற்றுக் கொண்டு விடலாம் தான்.
  37. வாழ்வது என்பதற்கான வரையறை நபருக்கு நபர் வித்யாசப்படுகிறது. உங்களுக்கு ஊர் போற்றும் பணமும் பதவியும் அந்த கணத்தை 1/2
  38. வாழ்வதாக உணர்த்தலாம். எனக்கு அப்படியில்லை. எனக்கு சந்தோஷமான ஒன்றைச் செய்வதே வாழ்வது. அதனால் பைசா பிரயோசனம் இருக்காதுதான் 2/2
  39. ஆம். ஆனால் என் கேள்வி எளிமையானது. வாழும் வழிமுறை என படிக்காதே என்பதை ஒரு மாணவனுக்கு உபதேசிப்பீர்களா?
  40. இந்த பாடத்திட்டத்தில் படிக்காதே என உபதேசிப்பேன். ஆரம்பக் கல்விக்குப் பிறகு என் பிள்ளைக்கு Home schooling முயற்சிப்பேன்
  41. 100% Agreed! ஒழுங்கா படிச்சு,மார்க் எடுக்காம இருந்திருந்தா வேலை கிடைச்சி, இப்படி செட்டில் ஆகியிருக்க முடியாது என்னால்
  42. நல்லது. ஆனால் கல்வித்துறையில் மாற்றம் கொண்டு வர முயல்வதே தீர்வு. ஆதிரைக்கு மட்டுமின்றி ஞாநி, போதிக்கும் கூட நல்லது நடக்கும்.
  43. ஒரு வருசம் படிச்சதுக்கே இம்புட்டு அலும்பா, நா மூணு வருசம் படிச்சுப்போட்டு கம்முனு இருக்கேன், போங்கய்யா அக்கட்டாள !
  44. சோத்துக்கு சம்பாதிக்க கல்வி தான் எளிய வழி... அதிலும் மனப்பாடக்கல்விக்கு அந்த வலிமை அதிகம்...
  45. அப்படீனா நல்லா படிச்சி நல்லா சோத்துப்பண்டாரமா ஆகிடவேண்டியதுதான்!
  46. சோத்துக்கும் வழி 'எளியவழி'...அதைக் கவனியுங்கள்...
  47. மீண்டும் சொல்கிறேன்.. குறைந்த பட்சம் ஒரு பகுதிச் செயலாளராகப் பணி புரியவும், நீடிக்கவும் மிக 1/2@writercsk
  48. அதிக உழைப்பு வேண்டும்..படித்து முன்னேற குறைந்தபட்ச உழைப்புப் போதும்..assured too...failure rate is less
  49. இந்த தோல்வி பயம்தான் குமாஸ்தாவாவதற்கான முதல் படி.
  50. உண்மை... நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை... பெற்றோர் பயம் அதான்.. பையன் நாட்டை ஆளவேண்டாம்..பிச்சைஎடுக்காமல் இருந்தால் போதுமென்பதே.
  51. குறிப்பாக பொய்நடுத்தரவர்க்க தந்தையின் கனவு அதுதான்.பிள்ளை விழுந்தால் தாங்க முடியும் என்ற குடும்பஅமைப்பு எல்லோருக்கும் வாய்ப்பதில்லை

No comments:

Post a Comment