Tuesday, April 2, 2013

முத்தூட் மற்றும் மணப்புரம்

எந்த ஒரு கபட விஷயமும் தமிழனுக்கு உதிக்காது. அதற்கென்றே புகழ் பெற்ற சில வெளி மாநிலக் கூட்டம் இருக்கிறது. எந்த சந்தில் புகுந்தால் குறுகிய காலத்தில் இலாபம் கிடைக்கும் என்று பார்த்துக் கொண்டு இருப்பார்கள். இதை உறுதிப் படுத்த மகா நதி படத்தில் வரும் 'தனுஷ்' கேரக்டரைச் சொல்லலாம். சுமார் நாற்பது வருடங்களுக்கு முன் தொடங்கப்பட்ட மணப்புரம் அடகு வியாபாரக் கடையை தொடங்கியது திருச்சூரைச் சேர்ந்த பத்மநாபன் மற்றும் மகன் நந்த குமாரும். திருச்சூர் நகரை சுற்றி மட்டுமே செய்த நகை அடகு வியாபாரம் மெல்ல கேரளா முழுவதும் வியாபித்தது. 1992 இல் முதன் முதல் பங்கு சந்தையில் பதிவு செய்த அடகு கடை எனும் முத்திரையோடு தங்களின் வணிகத்தைப் பெருக்கினார்கள். இன்றைய தேதியில் 26 மாநிலங்கள் மற்றும் அனைத்து யூனியன் பிரதேசங்களையும் சேர்த்து சுமார் 3000 கிளைகளைக் கொண்டு பரப்பி, சுமார் ரூ 11600 கோடி அளவு சொத்துக்கள் உள்ள நிறுவனம் என்றும், 22000 ஊழியர்களையும் 16 இலட்சம் வாடிக்கையாளர்களையும் கொண்ட நிறுவனம் என்று மார்தட்டிக் கொள்கிறார்கள். அதே போல மற்றொரு நிறுவனம் முத்தூட் நிறுவனம். 25000 ஊழியர்களையும், 22 மாநிலங்களில் மற்றும் 4 யூனியன் பிரதேச பகுதிகளில் மொத்தம் 4000 அலுவலகங்கள் இந்தியா முழுவதும் இல்லாது என்று மார் தட்டிக் கொள்கிறார்கள். நிகர சொத்து மதிப்பு ரூ 23372 கோடிஎன்று சொல்கிறார்கள். அதே நேரம் அவர்களது திருப்பிச் செலுத்த வேண்டிய வெளிக் கடன் சொத்து மதிப்பை விட அதிகம். அதை விட மற்றொரு முக்கிய விஷயம், இந்த நிறுவனத்தின் முழு பங்குகளும் அவர்களது குடும்பத்திற்கு உள்ளேயே இருக்கிறது. சரி எதற்கு இந்த விளக்கமெல்லாம்? இவர்களின் வியாபார தந்திரத்தையும், அதை பயன் படுத்திய புத்திசாலித்தனமும், இன்றைக்கு ரிசர்வ் வங்கியின் சட்டத்தால் பாதிக்கப் பட்டதும் மற்றும் அடகு வைத்துள்ள மக்களின் நிலை என்ன ஆகும் என்று தெளிவிக்கத்தான் இந்தப் பதிவு. இந்த நிறுவனங்கள் கண்டெடுத்த முதல் வளமான வாடிக்கையாளர் உள்ள மாநிலம் தமிழ் நாடு. சட்டென்று தேவைப் படும் பணம் உடனடியாக கிடைக்கும் இடம் ஒரே இடம் நம் லாலா சேட்டுக் கடைதான். சேட்டு ஒரு எல்லைக்கு மேல் கொடுக்க மாட்டார் என்பதால் உடனே செல்வது வங்கிகளுக்குத்தான். இதிலும் இரண்டு விதமான வங்கிகள். ஒன்று தேசியமயமாக்கப் பட்ட வங்கி மற்றது நிதி அல்லது சிட் பண்டு அல்லது கூட்டுறவு வங்கி. பின்னவைகளில் வாடிக்கையாளருக்கு ஓரளவு அனுசரணை உண்டு, ஆனால் தேசிய மயமாக்கப் பட்ட வங்கிகள் இந்த மாதிரி வாடிக்கையாளர்களை படுத்திய பாடு இருக்கிறதே? அப்பப்பா? விரட்டு வார்கள், நாளைக்கு வரச் சொல்வார்கள், குறைத்து மதிப்பீடு செய்வார்கள், கடன் கொடுக்கும் தொகையில் ஒரு பகுதியை டெபாசிட் செய்யச் சொல்வார்கள். டோக்கன் கொடுத்து விட்டு நாள் பூராவும் இழுத்தடிப்பார்கள். காரணம் இவர்களது வட்டி விகிதம் தனியார் வங்கிகளை விட சற்றே குறைவு. மனம் நொந்த மக்கள், வேறு வழியில்லாமல் தனியார் வங்கிகளை நாடத் தொடங்கியபோதுதான், இது போல மலையாளிக் கம்பெனிகளுக்கு இதில் உள்ள குள்ள நரித்தனமான மிகப் பெரிய வர்த்தகம் புலனாகியது . சிறிய அளவில் இது போல நிதி நிறுவனம் தொடங்க முதல் பெரியதாகத் தேவை இல்லை. அனால் அபரிமிதமான வளர்ச்சி வேண்டும் என்று எண்ணும் பண முதலைகள் இல்லையா? அதற்க்கான குறுக்கு வழிகளை ஆராய்ந்தார்கள். அவர்களுக்கு கிடைத்தது ஒரு மிகப் பெரிய கொழு கொம்பு. மக்களிடம் இருந்து நகைகளை அடமானம் வாங்கி அதே நகையை மறு அடமானம் வைப்பது எனும் மாபெரும் சட்டத்தின் ஓட்டையை உபயோகித்தார்கள். இந்த ஓட்டையை வேண்டுமென்றே உண்டாக்கினார்களா இல்லை இந்த ஓட்டையினால் பலன் பெரும் அரசியல் வாதிகள் தெரிந்த்தேதான் இவ்வாறு சட்ட விதிகளை உண்டாக்கினார்களா எனத் தெரியவில்லை. அதாவது இந்த இரண்டு நிதி நிறுவனங்களும், தேசிய மயமாக்கப் பட்ட வங்கிகளுடன் புரிந்துணர்வு இட்டுக் கொண்டு, மக்களிடம் பெற்ற நகைகளை இங்கே வந்து அடகு வைத்து பணம் பெற்றுக் கொள்வார்கள். சரி, இதில் என்ன தவறு? வர்த்தகம் சரியாகத்தானே நடக்கிறது? இதில் என்ன விதி முறை மீறல் இருக்கிறது என்று கேட்பவர்களே..... இதை நீங்கள் லென்ஸ் கொண்டு பார்க்க வேண்டும். தேசிய வங்கிகள் நகை அடமானத்திற்குக் கொடுக்கும் வட்டி விகிதம் சுமார் 12%. அவர்களது நிர்ணயம், நகைகளின் மொத்த மதிப்பில் இருந்து 60 முதல் 70 சதம் வரையே கொடுக்கும். இதற்கு மேல் கடன் வேண்டும் என்றால் நீங்கள் அதிக நகைகளை கொடுக்க வேண்டி வரும். உதாரணத்திற்கு, உங்களுக்கு உடனடி தேவை ரூ 50000 என்று வைத்துக் கொள்வோம். உங்களிடம் உள்ள நகையின் மதிப்பு ரூ 60000 மட்டுமே. தேசிய வங்கிகள் உங்களுக்குக் கொடுக்கப் போகும் கடன் ரூ 36000 முதல் ரூ 40000 மட்டுமே (அதாவது நகை மதிப்பில் 60% முதல் 70% வரை). ரூ 50000 தேவைப் படும் இடத்தில் வெறும் ரூ 40000 மட்டுமே கிடைக்கையில் மீதம் தேவைப்படும் தொகைக்கு என்ன செய்வீர்கள்? இங்கேதான் வருகிறார்கள் நமது ஹீரோக்கள் முத்தூட் மற்றும் மணப்புரம் நிறுவனங்கள். உங்களை அன்போடு வரவேற்பார்கள். உங்களுக்குத் தேவையான பணம் ரூ 50000 ஐயும் கொடுப்பார்கள். ஆனால் வட்டி 36% மட்டுமே. அதுவும் நீங்கள் கடனின் அசலைத் திரும்பச் செலுத்தப் போகும் கால அளவை அனுசரித்து. மூன்று மாதம் மட்டுமே தவணை. மீறினால், அதாவது நீங்கள் கட்டத் தவறினால், உங்கள் நகை நீங்கள் அறியாமலேயே விற்கப்படும். அதற்கான சட்ட விதிகளை மதிப்பதாக நீங்கள் கையெழுத்துப் போட்டிருக்கிறீர்கள், கடன் வாங்கும்போது. ஆனால் இவர்கள் வைக்கும் உங்களுடைய நகைக்கு 8% மட்டுமே கார்ப்பொரேட் வட்டி. ஆனால் இவர்கள் உங்களுக்கு உங்கள் நகையை வைத்தே பெற்ற பணம் கொண்டு உங்களுக்கே கடனுக்குக் கொடுக்கும் வட்டி விகிதம் 36% யார் இவர்களுக்கு உதவுகிறார்கள்? ஏன் இந்த 26% பண இலாபத்தை அனுமதிக்க வேண்டும்? யார் இதன் பின் புலத்தில்? விடை தெரியாத கேள்விகள். இந்த வேலையை ஏன் தேசிய மயமாக்கப் பட்ட வங்கிகள் செய்து பயனை நாட்டுக்குத் தரவில்லை? எதற்காக தனியார் கொள்ளை இலாபம் சம்பாதிக்க உடன் பட வேண்டும்? ஒரு ஏழை மாணவனுக்கு கல்வித் தொகை கடன் தர இவர்கள் மனப்பூர்வமாக முயன்றதுண்டா? ஒரு குறு தொழில் முனைவோருக்குத் தந்ததுண்டா இச்சலுகை? சரி, போகட்டும்...... என்ன ஆகும் இப்போது? உங்களின் நகையின் மதிப்பீடு சரிதானா? அது எந்த சட்ட விதிகளுக்கு உட்பட்டாவது எடை போடப்பட்டு விலை நிர்ணயிக்கப் பட்டு உள்ளதா? இல்லை.... காரணம், நீங்கள் வாங்கிய அந்த பழைய நகை ஒரு சவரனுக்கு ரூ 400 கொடுத்துள்ளீர்கள். அதை அடகு வைக்கும் போதுதான் உங்களுக்குத தெரிகிறது அதன் மதிப்பு ஒரு கிராமுக்கு ரூ 1800 என்று. நீங்கள் வியந்து போய் 'சரி சரி' என்கிறீர்கள் உடனடியாக. காரணம் உங்களின் கடன் அவஸ்தை மற்றும் நிதி பற்றாக்குறை. உங்களுக்கோ மன நிறைவு. நீங்கள் வாங்கியதைக் கால் அதிக மதிப்பை உங்கள் நகை பெறுகிறது. ஆனால் நீங்கள் சோதிக்க மறந்தது, உங்கள் நகை மதிப்பீடு சந்தை மதிப்பீட்டிற்கு ஒப்பாகிறதா என்று! ஆனால் உங்களின் தங்க மதிப்பு உண்மையில் ஒரு கிராமுக்கு ரூ 2400 என இந்த நிறுவனங்கள் ஏற்கனவே தேசிய வங்கிகளுடன் ஒப்பந்தம் போட்டுள்ளன. அப்போ, மிச்சம் உள்ள உங்களின் தங்க மதிப்பு ரூ 600 எங்கே போயிற்று? இதற்கும் சேர்த்தே இ ந் நிருவனங்கள் பணம் பெற்று அதை சுழற்சியில் இட்டு பணததை இரெட்டிப்பாக்குகிறார்கள். என்னிடம் பதில் இல்லாத கேள்விகள் பலதும் உள்ளன..... அவை ஒவ்வொன்றாக.... 1. எந்த ஒரு நகையும் அடகில் இருந்து குறிப்பிட்டக் காலக் கெடுவிற்குள் திரும்ப மீட்கப் பட இயலாவிட்டால், நிறுவனங்கள் அந்த நகைகளை ஏலம் போடுவதாக தினசரி பத்திரிக்கைகளில் அறிவிக்க வேண்டும். அது மாதிரி விளம்பரங்களை இதுவரை இந்த இரு நிறுவனங்கள் தினசரி பத்திரிக்கைகளில் கொடுத்துப் பார்த்ததாய் நினைவில்லை? உங்களுக்கு? 2. தேசிய வங்கிகள் தங்களின் வரை முறைக்குள் கடன் கொடுக்க முடியாமல் போய், பிற தனியார் நிறுவனங்கள் இலாபம் அனுபவிப்பதை ஏன் ரிசர்வ வங்கிக்குச் சொல்லவில்லை? 3. கொள்ளை என்று தெரிந்தும் எப்படி தேசிய வங்கிகள் தனியார் அடகு நிறுவனங்களின் விதிகளை மதித்து அவர்களுக்கு மொத்தக் கடன் (bulk loan) கொடுத்தார்கள்? ஏன் தங்கள் வங்கிகளுக்கு விதி முறைகளைத் தளர்த்தக் கோரவில்லை? 4. அரசாங்க வங்கிகளாக இருந்தும் இது போல மிகப் பெரிய வர்த்தக பரிமாற்றங்களை (ரூ. 70000 கோடி அளவில் உள்ள வர்த்தகம்) ஏன் தனியாருக்குத் தாரை வார்த்துக் கொடுத்தார்கள்? 5. தேசிய வங்கிகள், இத்தனை பெரிய சந்தையை ஏன் பயன்படுத்திக்கொள்ளாமல் தனியாருக்கு வசதிகள் செய்து கொடுத்ததின் பின் புலத்தில் உள்ள பயனாளிகள் யார் யார்? இது போல பல கேள்விகளுக்கு விடை இல்லை. சரி..... இது வரை உள்ள சரித்திரங்கள் போகட்டும்.....எதனால் இந்த கட்டுரை எழுந்தது என்பதை உங்களுக்குத் தெரிவிக்க வேண்டாமா? உண்மை 1: சில நல்ல உள்ளங்கள் மத்திய ரிசர்வ் வங்கிக்கு, இந்த தனியார் துறைகளின் தில்லு முல்லுக்களை வெளிப்படையாகத் தெரிவித்ததின் மூலம், ரிசர்வ் வங்கி தன பிடிகளை இறுக்கி, இந்தத் தனியார் நிறுவனங்களுக்குக் கிடுக்கிப் பிடி போட்டது. அதாவது இந்த தனியார் நிறுவனங்கள் தங்க மதிப்பீட்டில் அறுவது சதவீதத்திற்கு மேல் கடன் கொடுக்கக் கூடாது. மற்றும், கடன் தொகைக்கு 13% மேல் வட்டி விதிக்கக் கூடாது என்றும் தன் விதி முறையைத் திருத்தி கடந்த வருடம் மார்ச் மாதம் தன் பிடியை இறுக்கியது. வியர்த்துப் போன இந்நிறுவனங்கள் என்ன செய்வது என்று அறியாமல் தவித்து, சந்தையிலிருந்து வெளியேற முடியாமலும், வாடிக்கையாளர்களுக்கு அதிக வட்டிக்குக் கொடுத்து இரத்தத்தை உறிஞ்ச முடியாமலும் கிடந்து தவிக்கின்றன. அதன் காரணமாக தங்களின் பெயர் பிரபலத்தை உபயோகித்து பயணச்சீட்டு விற்பனை, ரியல் எஸ்டேட் என்று தொழில் சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்த முற்பட்டு விட்டன. ஆனால் இவையெல்லாம் யானை வாய்க்கு சோளப்பொறி போல. இவர்களால் பழைய ஜமீன்தார் போல வாழ முடியவில்லை என்பதே உண்மை. இவர்களின் நிஜமான வருமானம் ஏழைகள் வயிற்றில் அடித்துப் பிழைக்கும் கந்து வட்டி மூலம் தான். உண்மை 2. அடகு வைத்தவர்கள் மீட்க முடியாமல் பெரும்பாலும் தண்ணீர் தெளித்து விடுகிறார்கள். இதனால் இந்நிருவனங்களுக்குக் கிடைக்கும் இலாபம் 30% மூன்றே மாதத்தில் (எவ்வாறு என்று பின்னால் விளக்கி இருக்கிறேன்) உண்மை 3. இந்த முதலாளிகள் தங்களின் வளமான வாழ்க்கையை எப்படி செலவிடுகிறார்கள் என்றால், தினம் ஒரு நடிகை, நாளும் ஒரு கூத்து என்று வாழ்கிறார்கள், ஏழைகளின் பணம் கொண்டு. உதாரணம், முத்தூட் நிறுவனத்தின் மகன் ஜேக்கப் கோட்டயம் வரும் வழியில் கொல்லப் பட்ட போது அவருடன் காரில் சல்லாபத்தில் இருந்தது ஒரு 'பாவ'மான 'ஜெயம்கொண்ட' நடிகை. உண்மை 4. மூவாயிரம் நாலாயிரம் கிளைகள் எவ்வாறு தோன்றுகின்றன? இதற்கு எந்த சிரமமும் இல்லை. நல்ல வர்த்தகத் தெருவில் ஒரு அலுவலகத்தைத் தேர்ந்தெடுக்கிறார்கள். நல்ல வாடகையும் கொடுக்கிறார்கள். (எவன் அப்பன் வீட்டுக் காசு?) உடனே அவர்கள் கணக்கில் ஒரு அலுவலகம் கூடுகிறது. அங்கு உள்ள மக்களின் நகைகளுக்குப் பாதுகாப்பு இருக்கிறதா? செக்யூரிட்டி போட்டிருக்கிறார்களா என யார் கவலைப் படுகிறார்கள்? இது போலத் தொழிலை எந்தக் கிராமத்திலும் தொடங்கலாமே! யாருக்குத்தான் பண நெருக்கடி இல்லை? உண்மை 5. இத்தனை நகைகள் வைத்துள்ள இடத்திற்கு எந்த விதமான பாது காப்பும் இல்லை என்பதுதான் உண்மை. சமீபத்திய உதாரணம் கோயம்பேட்டில் நடந்த கொள்ளை. முத்தூட் கம்பெனியின் மேலாளர் செந்தில் குமார் என்பவர் ஒரு நாடகம் நடத்தி சுமார் 60 இலட்ச ரூபாய் பெறுமானமுள்ள நகை கொள்ளை போனதாக அறிவித்தார். அதற்குச் சாட்சியாக தன கைகளையே கீறிக் கொண்டு ஆட்டோக் கொள்ளையர்கள் தன்னைக் குத்திவிட்டு சென்று விட்டார்கள் என்று நாடகம் நடத்தினார். ஆனால் போலிசார் ஒரே நாளில் ஆட்களைப் பிடித்து நகைகளை கைப் பற்றி விட்டனர். இது எதைக் காட்டுகிறது? ரூ 60 இலட்சம் நகைகள் (யாருடையதோ) அனாமத்தாகக் கையாள்கிறார்கள் என்று தெரிகிறதல்லவா? உண்மை 6: வங்கிகளில் உள்ள வசதி போல வாடிக்கையாளர்களின் நகைகளை வைக்க, பாதுகாப்புப் பெட்டகமோ இல்லை காமிரா கண்காணிப்போ இந்த நிறுவனங்களிடன் இல்லை. ஆகவே வைக்கப்படும் நகைகளுக்கான உத்திரவாதமும் இல்லை. உண்மை 7: வாடிக்கையாளர்கள் கொடுக்கும் நகைகளுக்கு தேசிய வங்கிகளிடம் இருந்து இவர்கள் பெரும் கடனுக்கான வட்டி 8%, இவர்கள் பதிலுக்கு வாடிக்கையாளர்களிடம் வாங்கும் சராசரி வட்டி 20-24%. நடுவே உள்ள வித்தியாசத்தைப் பாருங்கள். தேசிய வங்கியைத் தூக்கிச் சாப்பிடும் அளவிற்கு இலாபம், ஒற்றைக் கை மாறலில். இது தான் இதன் இரகசியம். ஏன் இவர்களை சட்ட விதி முறைக்குள் கொண்டு வரவில்லை? உண்மை 8: இந்நிறுவனங்கள் இத்தனை நாள், இத்தகைய இலாபத்தில், வர்த்தகம் செய்ய யார் யாரெல்லாம் உதவினார்கள் என்று அரசாங்கம் சிபிஐ மூலம் விசாரணை செய்ய வேண்டும். அதிக வட்டி ஈட்டும் தொழிலாகிய இதை, கந்து வட்டி, மீட்டர் வட்டி எக்ஸ்பிரஸ் வட்டி ஆகிய சட்ட விரோத வர்த்தகங்களின் அடிப்படையில் இந்த நிறுவனங்களை தணிக்கை செய்து இது வரை ஈட்டிய பணத்தை அரசாங்கம் தன கஜானாவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். உண்மை 9: தற்காலம் 'அடகு வைத்த நகையை மறு அடகு வைக்க' என்று சில நிறுவனங்கள் நல்ல வேடம் போட்டு, இந்த முத்தூட் மற்றும் மணப்புரம் நிறுவனங்கள் நக்கித் தின்றதில் மிச்சம் உள்ள எச்சிலைத் தின்ன 'மாதா ஃ பைனான்ஸ்' மற்றும் சில குள்ள நரிகள் காத்துக் கொண்டு இருக்கின்றன. இவர்கள் வேலை என்னவென்றால், மூழ்கிக் கிடக்கும் உங்கள் நகையை மீட்டு, அதற்கு மேல் கொஞ்சம் மிச்சம் சொச்சம் போட்டு உங்கள் கையில் கொடுத்து விட்டு உங்கள் நகைகளை லவுண்டிக் கொள்வார்கள். உண்மை 10: வழக்கம் போல நகைக் கடை கொள்ளைக் காரர்கள் தங்கள் பங்கிற்கு, மக்களை சுரண்டும் இன்னொரு பணி. கூலி சேதாரம் எல்லாம் கேள்விப் பட்டிருப்பீர்கள். அது புதிய நகை செய்யும்போது. ஆனால் உங்கள் பழைய நகையை விற்க வேண்டும் என்று முயற்சித்தால், இவர்கள் அதை வாங்க மறுப்பார்கள். விற்று புதிய நகை மட்டுமே வாங்கினால் மட்டுமே பழைய நகைகளை மாற்றிக் கொள்கிறோம் என்பார்கள். நகை விற்றால் ரொக்கம் கிடையாது. காரணம். இந்தக் குள்ள நரிகளுக்கு தங்கள் இடத்திலேயே இரெட்டை இலாபம் தரும் வியாபாரத்தை வாடிக்கையாளர்கள் பழைய நகை எனும் பெயரில் கொண்டு தருகிறார்கள். எப்படி என்று பார்க்கலாம்....... இங்கே நகை வியாபாரிகள் போடும் நாடகம் இது. தங்கத்தை விலைக்கு வாங்கி, பணம் தரமுடியாது, அதற்கு பதிலாக புதிய நகை வாங்குங்கள் என்று பண்ட மாற்று செய்யும்போது, பழைய நகையின் எடையில் 10% முதல் 25% வரை குறைப்பார்கள், காரணம் அதில் உள்ள கல், மற்றும் அழுக்கு என்று நோபல் பரிசு பெரும் ரேஞ்சுக்கு அளந்து விடுவார்கள். பின்னர் நகையின் மதிப்பீட்டை மாற்று குறைவு என்று 22 கேரட் தங்க நகை காலப் போக்கில் இருபது கேரட் ஆகி விட்டது என்று விஞ்ஞானம் ஒப்புக் கொள்ளாத ஒரு கெமிஸ்ட்ரி விதியைச் சொல்வார்கள். அப்படி சொல்லி ஒரு 10% கழித்தபின்னர் பழைய நகைக்கு அவர்கள் இடும் மொத்த விலை அன்றைய தங்கத்தின் விலையில் இருந்து சுமார் 30% வரை குறைப்பார்கள். இந்த பழைய நகையைக் கொடுத்து புதியது வாங்கும்போது, செய்கூலி, சேதாரம், 22 காரெட் தங்கம் விலை, விற்பனை வரி என்று பலதும் இட்டு, உங்களை அதிகப் படியாக 20% வரை செலவு செய்ய வைத்து விடுவார்கள். உதாரணமாக கிராம் ஒன்று இன்றைய தினம் தங்கத்திற்கு இரண்டாயிரம் ரூபாய் என்றால் உங்கள் பழைய நகை ரூ 1400 ஒரு கிராமிற்கும், புதிய நகை ரூ 2400க்கும் வர்த்தகம் நடக்கும். அதாவது 40% இலாபம். இதன் பெயர் பகல் கொள்ளை. இதைத் தடுக்க, எந்த சட்ட விதியும் இல்லை. உண்மை 11; இந்த நேரத்தில் தான் முத்தூட் மற்றும் மணப்புரம் நிறுவனங்களுக்கு ஜாக்பாட் அடிக்கிறது. 20% வட்டிக்குக் கொடுத்த பணம் மூன்று மாதத்திற்குள் வரவில்லை என்றால் நகையை அவர்கள் விற்றுக் கொள்ளலாம் என்று நீங்கள் எழுதிக் கொடுத்த ஷரத்தை உபயோகிப்பார்கள். ஏற்கனவே உங்கள் நகை மதிப்பீடு 20% குறைவாகவே இட்டிருப்பார்கள், ப்ளஸ் உங்களுக்குக் கொடுத்த கடன் அதிலிருந்து 90% என்று வைத்துக் கொண்டாலும், உங்கள் நகையின் சந்தை மதிப்பில் 30% இழக்கிறீர்கள். நகை வியாபாரி உங்களிடம் வாங்க நினைப்பதும் இதே விலை, முத்தூட், மணப்புரம் நிறுவனங்களில் அடகில் கிடக்கும் நகைகளுக்கும் இதே மதிப்பு, கூடுதலாக வட்டி கட்ட வேண்டிய தொகையும் சேர்த்தால், பழைய நகையின் அடிமாட்டு விலையை விட வாடிக்கையாளர்கள் கூடுதலாகக் கொடுக்க வேண்டி வரும். எனவே இந்தக் கட்டத்தில் வட்டிப் பணம் கட்டாமலும், நகைகளை மீட்காமலும் நிதி நிறுவங்களிடம் போனால் போகட்டும் என்று விட்டு விடுகிறார்கள். நஷ்டம் மக்களுக்கு. மூன்று மாதத்தில் 30% இலாபம் இந்நிறுவனங்களுக்கு., ஆக என்ன செய்ய வேண்டும் மக்கள்? 1. தயவு செய்து நகைக் கடன்களுக்கு தேசிய வங்கிகளையே நாடுங்கள். நீங்கள் வட்டித் தொகை இரண்டு வருடங்கள் வரை கட்டவில்லை என்றாலும் இந்த வங்கிகள் பொறுத்துக் கொள்வார்கள் 2. உங்கள் பாரம்பரிய நகைகளை இந்த நிறுவனங்களிடம் அடகு வைக்காதீர்கள். உங்களின் மதிப்பு மிகும் நகைகளை இழக்க நேரிடும். மதிப்பு மிகும் நகை என்பவை, காணும்போது பழைய நினைவுகளுக்குக் கொண்டு செல்லும் அம்மாவின் தாலி, சங்கிலி, பாட்டியின் பாம்படம், அக்காவின் கை வளையல். பாரம்பரிய பழையக் கால நகைகள் முதலியவை. 3. தனியார் நிதி நிறுவனங்கள் பாதுகாப்பு பெட்டகங்கள் வைத்திருக்கிறார்களா என ஆராயுங்கள். 4. அவ்வப்போது ரிசர்வ் வங்கி இது குறித்து வெளியிடும் விவரங்களைப் படியுங்கள். விவரம் இல்லாத ஜனங்கள் விவரங்களைத் தெரிந்து கொண்டு இந்த மாதிரி நிறுவனங்களை புறக்கணிக்க வேண்டும். அல்லாது ஊசி இடம் கொடுப்பதாலேயே நூல் நுழைந்தது எனும் பழம் சொல்லை, மிகவும் வருத்தத்துடன் இந்த விஷயத்திலும் பொருத்திக் கொள்ள வேண்டி வேண்டும்.
- டிமிடித் பெட்கோவ்ஸ்கி. ஃபேஸ்புக்கிலிருந்து...

No comments:

Post a Comment