Monday, March 11, 2013

திருமணப்பத்திரிக்கை



RagavanG ஜிரா GiRa
இப்பல்லாம் திருமணப்பத்திரிக்கையில் நிறைய தமிழ்ச் செய்யுள்கள். இன்னைக்கு வந்ததுல மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்றூத வரிகள் + முருகன் படம் 1/n

November 28, 2012 #

Ethirajans Ethirajan
@RagavanG அரங்கவாழ் மக்கள் இல்லத் திருமணப் பத்திரிக்கைகளில் மத்தளங்கொட்ட, வரிசங்கம் நின்றூத இடம்பெறாத திருமண பத்திரிகைகளே கிடையாது.

November 28, 2012 #

vNattu The Nothing
@Ethirajans @RagavanG ஹேராம் படத்துல வருமே அந்தப் பாட்டு தானே?

November 28, 2012 #

Ethirajans Ethirajan
@vNattu @RagavanG அதேதான்...வாரணமாயிரம் சூழவலஞ்செய்து, நாரணன்நம்பி நடக்கின்றானென்னெதிர்....

November 28, 2012 #

RagavanG ஜிரா GiRa
@Ethirajans @vNattu கேளடி கண்மணியிலும் வரும். ஆனா அதுக்கெல்லாம் முன்னாடியே திருமால் பெருமையில் சுசீலாம்மா குரலில் வந்துருச்சு. அட்டகாசம்.

November 28, 2012 #

Ethirajans Ethirajan
@vNattu @RagavanG பூரண பொற்குடம் வைத்துப் புறமெங்கும், தோரணம் நாட்டக் கனாக் கண்டேன் தோழி நான்.

November 28, 2012 #

vNattu The Nothing
@Ethirajans வாலி அருமையா எழுதியிருப்பார் சார்

November 28, 2012 #

Ethirajans Ethirajan
@vNattu யோவ், காப்பிரைட் ஆண்டாளோடது, நாச்சியார் திருமொழில ஆறாவது பாசுரம்.

November 28, 2012 #

nchokkan என். சொக்கன்
@vNattu வாலி இல்லை, அந்தப் பாட்டு எழுதினது ஆண்டாளும் ஞானக்கூத்தனும் @Ethirajans

November 28, 2012 #

RagavanG ஜிரா GiRa
@nchokkan @vNattu @Ethirajans ஆண்டாளம்மா எழுதுனதுக்கே இந்த நெலமையா?

November 28, 2012 #

nchokkan என். சொக்கன்
@RagavanG எந்த ஆண்டாள் மிஸ்டர்? அயனாவரம் கோபாலை ஓரங்கட்டிய அண்ணாநகரு ஆண்டாளா? @vNattu @Ethirajans

November 28, 2012 #

RagavanG ஜிரா GiRa
@nchokkan நோ நோ திஸ் ஆண்டாளம்மா ஃபிரம் வில்லிபுத்தூர். மன்னாரை ஓரங்கட்டிய லேடி ஆண்டாள் :) @vNattu @Ethirajans

November 28, 2012 #

nchokkan என். சொக்கன்
@RagavanG அவரும் கோவாலுதானேய்யா :> @vNattu @Ethirajans

November 28, 2012 #

RagavanG ஜிரா GiRa
@nchokkan அவரும் கோவாலுதான். ஆனா அயனாவரம் லேது. ஆனா அயனுக்கு ஆ வரமானது அவர்தான். :) @vNattu @Ethirajans

November 28, 2012 #

nchokkan என். சொக்கன்
@RagavanG அயனப்பன் அவர் @vNattu @Ethirajans

November 28, 2012 #

RagavanG ஜிரா GiRa
@nchokkan அவரேதான் :) @vNattu @Ethirajans

November 28, 2012 #

nchokkan என். சொக்கன்
@RagavanG @vNattu @Ethirajans On a related note, @NVaanathi கல்யாண அழைப்பிதழில் கொஞ்சம் மாறிய ஆண்டாள் :) nkayal.wordpress.com/tag/%E0%AE%85%…

November 28, 2012 #

RagavanG ஜிரா GiRa
@nchokkan அட்டகாசம். இப்பதான் நினைவுக்கு வருது. நவக்கிரகநாயகியில் இதை வாணிஜெயராம் பாடியிருக்காங்க. @vNattu @Ethirajans @NVaanathi

November 28, 2012 #

mokrish Mohanakrishnan
@RagavanG @nchokkan @vNattu @Ethirajans Aha Aha thodarattum indha vivadham

November 28, 2012 #

Ethirajans Ethirajan
@mokrish எது? நாச்சியார் திருமொழிலேந்து கானா பாட்டுக்கு டீவியேட் ஆன டிஸ்கஷனா? @RagavanG @nchokkan @vNattu

November 28, 2012 #

Ethirajans Ethirajan
@nchokkan இவர் @vNattu கடுப்பேத்தறார் மை லார்ட்.

November 28, 2012 #

nchokkan என். சொக்கன்
@Ethirajans புரிஞ்சது, இருந்தாலும் ஞானக்கூத்தன் அந்தப் பாட்டுல 1 பேரா எழுதியிருப்பதைச் சொல்லவந்தேன் :) @vNattu @RagavanG

November 28, 2012 #

Ethirajans Ethirajan
@nchokkan @vNattu @RagavanG :))

November 28, 2012 #

RagavanG ஜிரா GiRa
@nchokkan ஞானக்கூத்தன் ஒரு பாராவா? எந்தப் பாரா அது? @Ethirajans @vNattu

November 28, 2012 #

nchokkan என். சொக்கன்
@RagavanG நினைவில்லை மாவுத்தன்னெல்லாம் வரும் @Ethirajans @vNattu

November 28, 2012 #

RagavanG ஜிரா GiRa
@nchokkan மாவுத்தன்னு சொன்னதும் முருகனை ராவுத்தன் என்று சொல்லும் பாட்டு நினைவுக்கு வருது. மயிலேறும் ராவுத்தனே! @Ethirajans @vNattu

November 28, 2012 #

nchokkan என். சொக்கன்
@RagavanG ஞானக்கூத்தன் எழுதியது எந்த பேரா என்று நினைவில்லை, ஆனால் இந்தப் பாட்டில் அவர் உண்டு என்று கேசட் சொன்னது @Ethirajans @vNattu

November 28, 2012 #

krangana Krish
@nchokkan /ஞானக்கூத்தன்/ this is not from Nachiar Tirumozhi by Andal? @RagavanG @Ethirajans @vNattu #DivyaPrabandham

November 28, 2012 #

Ethirajans Ethirajan
@krangana @nchokkan @RagavanG @vNattu மாவுத்தன், மதங்கொண்ட வேழம் இதெல்லாம் நா.திருமொழில கிடையாது. அது ஞானக்கூத்தன் சரக்கா இருக்கலாம்.

November 28, 2012 #

nchokkan என். சொக்கன்
@Ethirajans that's my guess too @krangana @ragavang @vnattu

November 28, 2012 #

Ethirajans Ethirajan
@nchokkan ஆனா பாட்டைக் கேட்கும்போது கிட்டத்தட்ட வித்யாசமே தெரியாது, அதைச் சொல்ற விதம். @krangana @RagavanG @vNattu

November 28, 2012 #

erode14 ♫ரே♫டு ந♫கர♫ஜன்
@Ethirajans இவர், கடுப் எல்லாம் சும்மா சேர்த்தது தானே? :> @nchokkan @vNattu

November 28, 2012 #

Ethirajans Ethirajan
@erode14 கடுப் - சிறுகுறிப்பு வரைக. @nchokkan @vNattu

November 28, 2012 #

erode14 ♫ரே♫டு ந♫கர♫ஜன்
@Ethirajans வரைந்து ட்வீட்டியாகி விட்டது @nchokkan @vNattu

November 28, 2012 #

RagavanG ஜிரா GiRa
@Ethirajans அருமை. கல்யாணக்கனவில் எழுதிய கவிதைகள் அவை. பாவம். நல்ல தீந்தமிழ்ப் பாக்கள்.

November 28, 2012 #

Ethirajans Ethirajan
@RagavanG ஆண்டாளுடைய பாசுரங்கள், கோதைத் தமிழ்.

November 28, 2012 #

kskarun Karunakaran
@RagavanG Our family has the tradition of printing vaaraNamaayiram on the backside of the invitation.

November 28, 2012 #

RagavanG ஜிரா GiRa
@kskarun thatz cool. :)

November 28, 2012 #

kskarun Karunakaran
@RagavanG It is traditionally recited when the married couple do the thengai vilayadal. So helps everyone to follow along.

November 28, 2012 #

No comments:

Post a Comment