Thursday, November 7, 2013

பாஸ் அமெரிக்கர்

போக்கிரி @ipokkiri


7th November 2013 from TwitLonger
இதை பகிரவேண்டாமென்றுதான் முதலில் நினைத்தேன். நம்மீது ஒருவர் குற்றம்சாட்டும்போது, அதனை மறுக்கவாவது இது பயன்படும் என்பதால் பகிர்கிறேன்.

இடம்: அமெரிக்கா. என் பாஸ் அமெரிக்கர். அவர் சில நாட்களுக்கு முன் தன் மகன் பிறந்தநாளுக்கு என்னை இன்வைட் செய்து கெளரவப்படுத்தினார். அங்கே பீட்சாவும், பர்கரும், சாலடும் தின்றுவிட்டு சூப்பர் என்றுவிட்டு, வாழ்த்தி விடைபெற்றேன்.

எனக்கு ஓர் ஆசை. ஓர் ஞாயிற்றுக்கிழமையன்று, என் பாஸை வீட்டுற்கு குடும்பத்துடன் அழைத்து, தலைவாழை விருந்து போட்டால் என்ன? அதுவும் நம்ம ஸ்டைலில் உணவு என்று கலக்கினால் என்ன?

ஓர் நாள் அழைத்தேன். வந்தார். சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தோம். லஞ்ச் டைமும் வந்தது. தலைவாழை இலையில் சாப்பாடு. செட்டிநாடு சிக்கன், மட்டன் சுக்கா, மட்டன் பிரியாணி என்று கலக்கு கலக்கென்று கலக்கியிருந்தோம். மிகவும் ஆர்வத்துடன் செட்டிநாடு சிக்கனை பரிமாறி, அவர் வாயில் வைத்ததுதான் தாமதம். அவர் முகம் போன போக்கு. எனக்கு வேலை போய்விடுமோ என்றோர் பயம். மெல்ல சொன்னேன் பீட்சாவும் இருக்கு? ஒக்கேவா? என்றேன். ஓக்கே என்றார். நல்லவேளை பேக்கப்புக்கு வாங்கிவைத்தது நல்லதாகிவிட்டது.

பீட்சா எடுக்கும்போது, ஹோம் தியேட்டரில் வருடிக்கொண்டிருந்த 'அந்த நிலாவத்தான் நான் கையில புடிச்சேன்' பாடலை நிறுத்துவிட்டு, "பில்லி ஜீன்" பாடலை அலறவிட்டேன்.

பாஸ் ரொம்ப ஹேப்பி அண்ணாச்சி.

இதற்கும் இசைராசா-ஆஸ்கருக்கும் முடிச்சி போட்டு யாரும் படிக்கவேண்டாம்.

நன்றி: பிளிறல் பாலா.

No comments:

Post a Comment