Thursday, November 7, 2013

கருத்து சொல்லுங்கள்


The Princess @rajakumaari


7th November 2013 from TwitLonger
//எல்லோரும் படித்துவிட்டு கருத்து சொல்லுங்கள்// இந்த எல்லோரும் யார்ன்னு முதல்ல விளங்கல.ட்விட்டரில் ஒரு தரம் மனக்கசப்பு வந்துவிட்டால் அவர்களுக்கு நம்முடைய எந்த நியாயமும் புரிய வைக்க முடியாது புரிந்துக் கொள்ளவும் போவதில்லை.அதுக்குத்தான் ப்ளாக் அன்ஃபாலோ எல்லாம் இருப்பது.அதையும் மீறி தினமும் ஒவ்வொரு ட்வீட்க்கும் படிச்சிட்டு போய் எதிர்வினையாற்றிட்டு தான் இருக்கீங்க(நீங்களும் இன்னும் பலரும்)
அப்புறம் அந்த தினமலர் முரண்பாடு.சில நாட்களுக்கு முன் இல்லை ஓரிரு வருடம் ஆகிருக்கும்ன்னு நினைக்கிறேன்.அந்த நேரம் தினமலர் ட்விட்டரிலே ஈழத்துக்கு எதிரா செயல் பட்டுக்கொண்டிருந்தாங்க அதுக்காக எல்லோரும் எதிர்த்தோம் அந்த சமயம்.இந்த கட்டுரை வாய்ப்பு போன ட்விட்லாங்கரில் புளி போட்டு விளக்கிட்டேன்.
ஆனா அதை என்னவோ கேவலமான செயல் போல கும்பல் சேர்த்துட்டு எவ்ளோ கேவலமாவோ தான் பேசிருந்தீங்க.இது அசிங்கமான விஷயம்ன்னா இங்க நீங்கலாம் எவ்வளவோ மோசமான விஷயங்கள் செய்துட்டு தான் இருக்கீங்க தினம் தினம்.ஏன் ஒருத்தராவது ஆபாசமா எழுதாம இருந்ததுண்டா?கும்பலா சேர்ந்து செய்தா இங்க எதுவும் தப்பில்லை அதானே இங்க காலா காலமா நடந்துட்டு இருக்கு?
கிண்டல் கேலிகளை என் வட்டத்தில் இருக்க வரை மட்டும் தான் அனுமதிக்க முடியும் பிடிக்கலைன்னு ஆனதுக்கப்புறம் என்ன கிண்டல் கேலிகள் வேண்டியிருக்குன்னு புரியல.
உங்க பேரை தான் முதல்ல சொல்லிருக்கணும்.பிடிக்கலைன்னு அன்ஃபாலோ பண்ணிட்டு போக வேண்டியது எல்லா ட்வீட்களையும் படிச்சிட்டு கேலியா மோசமா மட்டமா பேச வேண்டியது.எதுக்கு அன்ஃபாலோ பண்ணிட்டு போனப்புறம் கஷ்ட்டப்பட்டு தினமும் நான் என்ன பண்றேன்னு பின்னாடியே வந்து பார்க்கணும் பொங்கணும்?

முன்னுக்கு பின் முரண் விமர்சனங்கள்// கும்பல் சேர்ந்து கல் எரிந்தது வீட்டில் உள்ளவரைகளை கேவலமா பேசுறது இதெல்லாம் என்னைக்கு விமர்சனத்துல சேர்த்தாங்கன்னு தெரியல.அந்த தினமலர் முரணை என்னிடம் ஒருவர் கூட சீரியஸா விளக்கம் கேட்கல.நக்கலா கேலியா பேசுறவங்களுக்கு விளக்கம் சொல்லி ஆகப்போவது தான் என்னன்னு அன்ஃபாலோ பண்ணி ஒதுங்கிட்றேன்.
போன தரம் பெண்ணியம் தலைப்பு ஏதோ பேசும்போது குணா மட்டுமே பொறுமையா விவாதம் செய்தார் மத்த எல்லாரும் எவ்ளோ மட்டமா அன்னைக்கு பேசினாங்கன்னு எல்லாருக்கும் தெரியும்.
மிக்ச்சர் சாப்டிறவன் வீட்ல இருக்கவன்,புருஷன்லாம் தெய்வம்யா(திருட்டுகுமரன் எழுதினது),பெண்ணியம் பேசுரவளுகளை ஈசியா மடக்கிடலாம் இது போல எழுதுறவங்களுக்கு நான் எதுக்கு மரியாதையா பேசணும்?
அன்னைக்கு ஆளாளுக்கு வீரத்தனம் நெனச்சிட்டு இதே போல பல ட்வீட் போட்டாங்க அதில் நீங்களும் சேர்த்தி தான்.அதை தொடர்ந்து சிலரை ப்ளாக் செய்தேன்.
அன்ஃபாலோ செய்து ஒதுங்கி போனவளை திரும்ப அன்னைக்கே சம்பந்தமே இல்லாத சிலர் கும்பல் சேர்த்திட்டு மோசமா பேசிட்டு இருந்தது.
அவங்களை தான் திட்டி விட்டேன்.நான் ஆற்றிய எல்லாமே இவங்களுக்கான எதிர் வினை மட்டும் தான்.
அதை தொடர்ந்து பெண் கீச்சர்கள் புகைப்படங்களை இன்ஸ்டா மற்றும் முகநூலிலிருந்து எடுத்து வாட்சப்பில் பகிர்ந்து மோசமா பேசினது,விஜய் ரசிகர்களையும் அவங்க அம்மா உட்பட வீட்டில் இருந்தவர்களையும் கேவலமா பேசினது இப்படின்னு சில பிரச்சனைகளில் நிறைய பேரை ப்ளாக் செய்தேன்.

அப்புறம் பிரிட்டோ விவகாரம் அந்த பைய்யன் தான் செய்தது தப்புன்னு ஒப்புக்கிட்டு மன்னிப்பு கேட்ருக்கப்புலன்னா அப்போ அது யாருடைய தப்புன்னு நான் சொல்ல வேண்டியதில்லை.இதுல உங்களுக்கு என்ன ப்ரச்சனைன்னும் புரியல.

நீங்க அன்ஃபாலோ பண்ணிக்கிறேன் தோஸ்த் கொள்கைகள் வேறுபாடு காரணம்ன்னு எஸ்எம்எஸ் போட்டீங்க.அதுக்கு எந்த விளக்கமும் கேட்கல ஏன்னா நானும் அந்த நிலைல தான் இருந்தேன்.நிறைய பேரை அந்த சமயம் ஒதுக்கிரனும்ன்னு தான் நானும் இருந்தான்.
ஆனா இப்ப இப்படி உல்ட்டாவா ஜம்ப் அடிக்குறீங்க.

//பாலியல் சீண்டல் // இப்படி நான் எங்கயுமே சொல்லவே இல்லை.நான் என்ன பேசினாலும் செய்தாலும் பிடிக்கலைன்னு போனவங்களாம் ஏன் கிளம்புரீங்கன்னு தான் கேக்குறேன்?எதுக்கு தொடர்ந்து சீண்டிட்டு இருக்கீங்க?உங்க ட்வீட்களுக்குலாம் தினமும் நான் இப்படிதான் எதிர் ட்வீட் போட்டுட்டு இருக்கேனான்னு யோசிங்க.
அப்புறம் திருட்டுகுமரன் கொஞ்ச நாளா என்னைய திட்டி எழுதுறாப்புல காரணம் ஒன்னே ஒன்னு தான் நான் ப்ளாக் பண்ணது.ஆனா இதே திகு தான் என்ட்ட உதவிலாம் கேட்டு வந்தாந்தாப்புல.கஸ்ட்டம்ஸ் டூட்டி இல்லாம ஏதோ பொருளை கொண்டு வரலாம் கேட்டு இவருக்காக வீட்ல பேசி உதவிலாம் பண்ணது.மேலும் சிலருக்கு இதே போல உதவியும் அலைபேசியை குறைவான விலைக்கு வாங்கியும் கொடுத்திருக்கேன் எல்லாம் நட்புன்னு நெனச்சி பண்ணது.இதை இதுவரை இங்க சொன்னதில்லை எதுக்கு சொல்றேன்னா உதவிங்கவும் இளிச்சுட்டு போறதும் ப்ளாக் பண்ணா வன்மத்தை கொட்டவும் இங்க சிலரால் மட்டும் தான் முடியும்.
போலவே கிட்டத்தட்ட நீங்களும் இங்க எதிர் ட்வீட் போட்டுட்டே(ஏதோ விளையாட்டுன்னு பொறுமையா பல தரம் கடந்து போனதுண்டு) எஸ்எம்எஸ்ல உதவி கேட்டதுண்டு நானும் அதை முயற்சி செய்து அந்த உதவி பண்ண முடியாம போனது .அந்த சமயத்திலும் உதவனும்ன்னு கூட விருப்பம் இருந்து முயற்சியும் செய்தேன்..அப்புறம் என் ஒவ்வொரு ட்வீட்க்கும் எதிர்ட்வீட் போட்றதே உங்களுக்கு ஒரு கட்டத்துல பழக்கமாகிருச்சு.ட்விட்டர்லன்னு இல்ல எங்கயுமே நான் யாரோட உதவியும் கேட்க வேண்டிய நிலையில் இல்லை.
ஒருகட்டத்துல என்ன சொன்னாலும் கேலி கிண்டல்ன்னு ஆகவும் உங்களோட எந்த எதிர்ட்வீட்க்கும் நான் ரியாக்ட் பண்ணாம விட்டேன்.ஆனாலும் பல நாள் கூட்டம் சேர்த்துட்டு பேசினதுண்டு.அதையும் தெரிந்தும் பல முறை கடந்து போனதுண்டு, நான்கு நாள் முன் வரை.
என்னை லூசு மெண்டல் அவ இவ இன்னும் சொல்ல முடியாத தகாத வார்த்தைகளில் பேசின சிலரை திட்டிருக்கேன் இல்லைன்னு நான் சொல்லவே இல்லையே அவங்களுக்கு மரியாதையா கொடுக்க முடியும்?
உங்க பக்கமே வராத உங்க சகவாசமே வேணாம்ன்னு அமைதியா இருந்த என்னை நீங்க எவ்ளோ பேசிருக்கீங்க?
//ட்விட்டரில் இயங்கும் பெண்கள் பலரை எனக்குத் தெரியும். சிலர் எனக்கு பழக்கமும் கூட. இதுவரை யாரும் என்மீதோ வேறு ஆண்கள் மீதோ இது போன்றதொரு பழியை சுமத்தியதில்லை// ஹா ஹா உங்களுக்கு இருக்க பெண் நண்பர்களை விட இணையத்தில் எனக்கு நிறைய பெண் நண்பர்களும் ஆண் நண்பர்கள் உண்டு அவர்களுக்கு எவ்ளோ மரியாதை தந்துட்டு இருக்கேன்னு அவங்களுக்கு தெரியும்.

//அவனுங்க,
டேஷ்,
கடங்காரனுங்க,
போங்கடா டேய்,
வெட்கம் மானம் சூடு சொரணை ஒண்ணாவது இருக்காடா..
டேய் நீங்கல்லாம் எனக்கு மாமனா மச்சானாடா..
பன்றிகள் ..
பெண் சொம்பு..
ஊளை சவுண்டு விடற டாக்கீஸ்..
பக்கி..
சைக்கோ ஆண்கள்..
எவளும்..
முட்டாள் ஆண்கள்..
கேடுகெட்ட ஜென்மங்கள் ஆண்கள் ..
சில நாய்கள்..
கண்ட நாய்ங்க...
இந்த சனியங்களுக்கு..
வெட்டி பயலுவளா...
அட தொட நடுங்கிப் பயலுவளா...//இதெல்லாமே அவ இவ கரக்ட் பண்ணிரலாம் மிக்சர் சாபிட்றவன் புருஷன் ,புருஷன் தெய்வம் இன்னும் வெளியில் பகிர முடியாத உடலை வைத்து கேலி செய்த பேச்சுகளுக்கு எனக்கு தெரிந்த கொஞ்சமே கொஞ்சமான வார்த்தைகளை வைத்து திட்டி விட்டேன்.இது உங்களுக்கு ஏன் வலிக்கனும்ன்னு புரியல.அதோட இந்த வார்த்தைகள் எப்பெப்ப எதெதுக்கு போட்டேன்னு என்னைய விட உங்களுக்கே நல்லா தெரியும்.நீங்க தான் இவ்ளோ மனப்பாடமா வெச்சிட்டு இருக்கீங்களே.

//தவிர குறிப்பிட்ட ஒரு நபரை அவர் பெயர் சொல்லியே திட்டியது
எத்தன தரம் தாண்டா கேவலப்படுவே
என்னாத்த திங்குறானோ
வீடு தேடி வந்து செருப்ப பிக்கிறேண்டா
சைக்கோ புடிச்ச லூசு, மு்ததிப்போச்சு
நீலாம் என்ன ஜென்மம்டா
பைத்தியம்
நீ என்ன பெரிய டேஷ்ஷா
என் செருப்பாலேயே அடிப்பேன்
வீடு தேடி வந்து மிதிக்கிறேன்
கொரங்கு
வெ.மா.சூ.சொ எதுனா இருக்காடா
பொறுக்கி
பன்னாட..
உன் முகரை நாய் வாந்தி எடுத்தாப்ல இருக்கு
ரோட்ல அடி பட்டு அனாத பொணமாத்தாண்டா போவ
பொறம்போக்கு // இது பிரிட்டோ என்னை தொடர்ந்து சீண்டிட்டு இருந்ததற்கான எதிர் வினை இதில் ராஜன் கூட சொல்லிருந்தாப்புல அவன் சரி இல்லைன்னு.மேலும் அந்த பைய்யனே மன்னிப்பும் கேட்டாச்சு தப்பு பண்ணேன்னு.இனி திரும்ப பிரிட்டோ என்ன பண்ணான்னு பேசுறது சரியாபடல.

கும்பல் சேர்ந்துட்டு கேலி கிண்டல் செய்துட்டு இந்த அசிங்கம் தேவையான்னுலாம் எத்துனை கீச்சுகள் போட்டாங்க?இதுவே அசிங்கம்ன்னா அப்போ ஆபாசமா எழுதுறது இன்னும் பல விஷயங்களை சொல்லலாம் இங்க நடக்குற அசிங்கங்கள்.
நீங்க பிடிக்கலைன்னு சொல்லிட்டு போனப்புறம் எதுக்கு என் பின்னாலையே வரணும்ன்னு தான் விளங்கல.
நீங்க என்னை எவ்ளோ தூரம் தொடர்ந்துட்டு இருக்கீங்கங்குரதுக்கான பெரிய சாட்சி உங்க ட்வீட்லாங்கர் தான்.
//“தினமலரை தீவிரமாக எதிர்த்த நீங்கள் ஏன் தினமலரிலேயே எழுதினீர்கள்“ என சிலர் கேட்டதற்கு அவரளித்த பதில் “அவந்தான் இளிச்சவாய்“. கட்டுரை வெளியிட்டதற்கு தினமலர் பத்திரிகைக்கு நல்ல க்ரெடிட். நன்றி!!!// ரசனை அண்ணா நோண்டி நோண்டி கேட்டுட்டு இருந்தார் எப்படி கட்டுரை வெளியாச்சுன்னு நண்பர் பெயரை சொல்ல விருப்பம் இல்லாம இதை சொல்லி அவர் வாயை அடைத்தேன்.இது போல விஷயங்களை இவ்ளோ சீரியஸா மாத்தலாம் நிறைய பயிற்சி வேணும் போல.இதெல்லாம் சீரியஸ் விஷயம் ஆனா கூட்டமா சேர்ந்து கல் ஏறிவது சாதரணமா மாத்த உங்களால் மட்டுமே முடியும் போல.இன்னும் நிறைய இருக்கு இதே போல நீங்க ஒவ்வொரு தரம் என்னை சீண்டுறது நான் கடந்து போறதும் பல தரம் நடந்தாச்சு.நேரிடையா என்னைய வம்புக்கு இழுக்கனும்ன்னு உங்களுக்கு எண்ணம் இருக்கா இல்லையான்னு உங்க மனசாட்சியவே கேட்டுக்கோங்க.நீங்க அன்ஃபாலோ செய்துட்டு போனதிலிருந்து என்னை பத்தி என்னலாம் எழுதிருக்கீங்க கேலி பேசிருக்கீங்கன்னு நீங்களே யோசிச்சிக்கோங்க.
இப்ப கூட உங்கள்ட்ட பேசனும்ன்னு விருப்பமில்லை.உங்க ட்விட்லாங்கர் அவ்ளோ அபத்தமா இருக்கவும் தான் இந்த பதில் எழுத வேண்டியதாருக்கு.
மத்தபடி உங்க சகவாசமே வேணாம் தெரியாம பேசி தொலைச்சிட்டேன் மைன்ட் செட்ல தான் நான் பல நாட்களாவே இருந்துட்டு இருக்கேன்.

அப்புறம் எல்லாத்துக்கும் மேல ராஜன்ட்ட பேசிட்டேன் நானோ அவரோ இனி ஒருத்தரை பத்தி ஒருத்தர் பேசப்போறதில்லைன்னு முடிவு.ராஜனுக்காக பேசுறதா நெனச்சிட்டு பலரும் அவருக்கு இதுவரை கெட்டதை மட்டுமே செஞ்சிருக்கீங்க அதையும் யோசிச்சு பாருங்க. ராஜனுடைய ஆளுமை என்னான்னு திரும்பவும் புரிய வைத்த உங்களை போன்ற சிலருக்கு நன்றிகள்.!!

No comments:

Post a Comment