Monday, January 20, 2014

பெரியார் ரசிகன்

நீங்கள் நாத்திகரோ ஆத்திகரோ பிரச்சினையில்லை. தமிழர் என்றால் உங்களுக்கு பெரியார் தவிர்க்க முடியாதவர். நாத்திகர்கள் பலரும் பெரியாரை கடவுளாக்கி வழிபட ஆரம்பித்துவிட்டார்கள் என்றால், ஆத்திகர்கள் பெரியாரின் தாக்கத்தால் அடையாளச் சிக்கல் அவஸ்தையில் அலைக்கழிக்கப் படுகிறார்கள்.

இந்த சுவாரஸ்யமான முரணை களமாக்கி நாவல் ஆக்கியிருக்கிறார் குகன்.

எம்.ஜி.ஆர் ரசிகன், சிவாஜி ரசிகன், ரஜினி ரசிகன், கமல் ரசிகன், விஜய் ரசிகன், அஜீத் ரசிகன் என்று கேள்விப்பட்டிருப்போம். இந்நாவல் பெரியார் ரசிகனைப் பற்றியது. பெரியாருக்கு தொண்டர்தான் உண்டு. ரசிகன் இருக்க முடியுமா என்று கேட்டால் ஏன் இருக்கக்கூடாது என்கிற கேள்வியை எழுப்பி, சுவாரஸ்யமான சமகால வரலாற்றை புனைவில் முயன்றிருக்கிறார் குகன்.

இளம் தலைமுறை எழுத்தாளர்களின் இம்மாதிரியான துணிச்சலான முயற்சிகள்தான் எதிர்கால தமிழ் இலக்கியத்தின் மீதான நம்பிக்கையை அதிகரிக்கிறது. எழுத்துப்பிழை, எடிட்டிங் பிரச்சினைகள் உள்ளிட்ட சில குறைகளை களைந்துப் பார்த்தால் ‘பெரியார் ரசிகன்’ குறிப்பிடத்தக்க சமீபத்திய நாவல்களில் ஒன்று.

விலை ரூ. 100/- பக்கங்கள் : 160

வெளியீடு : உதயகண்ணன், 41, கல்யாண சுந்தரம் தெரு, பெரம்பூர், சென்னை-11. தொலைபேசி 044-25582552, மின்னஞ்சல் : bookudaya@rediffmail.com

சென்னை புத்தகக் காட்சியிலும் விற்பனைக்குக் கிடைக்கிறது.

No comments:

Post a Comment