Wednesday, May 22, 2013

Ilaiyaraaja - Short story courtesy vikatan

http://cdnw.vikatan.com/av/2013/05/zwyzju/images/p74f.jpg





குரல் தழுதழுக்க, என் முன்னாள் காதலியின் கடிதத்தைப் படித்து முடித்த என் மனைவி நந்தினி, ''யாரு இந்த ஜெஸ்ஸி?' என்றாள். அப்போது அவளின் விழியோரம் எட்டிப்பார்த்த கண்ணீர், அடுத்து நான் சொல்லப்போகும் வார்த்தைகளைக் கேட்டு, கன்னத்தில் வழிவதற் காகக் காத்திருந்தது. நான் குரலில் எவ்வித உணர்ச்சியும் இன்றி, ''இந்த லெட்டர் உனக்கு எப்படிக் கிடைச்சது?' என்றேன்.


''உங்களோட ஒரு பழைய புத்தகத்துல இருந்துச்சு' என்ற நந்தினி, படுக்கை அறையில் இருந்து குழந்தையின் சிணுங்கல் சத்தம் கேட்க... வேகமாக உள்ளே சென்றாள்.
நான் பால்கனிக்குச் சென்று ஒரு சிகரெட்டைப் பற்றவைத்துக்கொண்டு வெளியே பார்த்தேன். டெல்லியின் ஜனவரி இரவுக் குளிருக்கும் மனதில் பரவியிருந்த மெல்லிய சோகத்துக்கும் சிகரெட் புகை இதமாக இருந்தது. புகையை இழுத்து வெளியே விட்டபடி தூரத்தில் தெரிந்த துக்ளகாபாத் கோட்டையைப் பார்த்தேன். மெயின் ரோட்டில் விளக்குகள் மின்னியபடி வாகனங்கள் ஊர்ந்துகொண்டிருந்தன. ஜெஸ்ஸி யின் கண்களும் இப்படித்தான்... கண்ணுக்குள் யாரோ நட்சத்திரங்களை ஒளித்துவைத்தது போல் மின்னிக்கொண்டே இருக்கும்.
ஜெஸ்ஸி... சென்னையில் நான் புராஜெக்ட் இன்ஜினீயராகப் பணியாற்றிய கம்பெனியின் ஹெச்.ஆர்-ல் பணிபுரிந்தவள். இளையராஜாவில் ஆரம்பித்து, இளையராஜாவில் முடிந்த காதல் அது.
''ரொம்ப ரேர் இளையராஜா பாட்டெல்லாம் வெச்சிருக்கீங்க. ப்ளுடூத்ல அனுப்புறீங்களா வினோத்?'
''இளையராஜா புரொகிராமுக்கு ரெண்டு டிக்கெட் வாங்கியிருக்கேன்... வர்றீங்களா வினோத்?'
'' 'மயங்கினேன்... சொல்லத் தயங்கினேன்...' பாட்டைக் கேக்குறப்ப எல்லாம் உங்களைத்தான் நினைச்சுக்கிறேன் ஜெஸ்ஸி.'
''நமக்குப் பையன் பிறந்தா இளையராஜான்னு பேர் வைக்கணும் வினோ.'
''இளையராஜாவின் உன்னதமான சங்கீதத்தில் நம் காதல் ரகசியமாக வாழும்.'
காலம் நம்மிடம் இருந்து எல்லாவற்றையும் பறித்துக்கொண்டு, இளையராஜாவை மட்டும் பிரிக்க முடியாமல் தோற்றுக்கொண்டேயிருக்கிறது.
குழந்தையைத் தூங்கவைத்துவிட்டு வந்த நந்தினி, ''சொல்லுங்க... யாரு அந்த ஜெஸ்ஸி?' என்றாள்.
எனக்கு எப்படி ஆரம்பிப்பது என்று தெரியவில்லை. நந்தினி, அதிகம் வெளியுலகு தெரியாமல் வளர்ந்த ஒரு கிராமத்து வாத்தியார் வீட்டுப் பெண். என்னைத் திருமணம் செய்து கொண்ட பிறகுதான் செய்தித்தாளே படிக்க ஆரம்பித்தாள். என் மீது மிகவும் பொசஸிவ்வாக இருப்பாள். அபார்ட்மென்ட்டில் பனியனுடன் வெளியே சென்று நின்றால், ஓடிவந்து என் தோளில் துண்டைப் போர்த்திவிட்டு, ''ஏன் உடம்பைக் காமிச்சுக்கிட்டு நிக்கிறீங்க?' என்பாள்.
''ஆமாம்... பெரிய சரத்குமார் பாடி...'
என்பேன் நான். அப்படிப்பட்டவளிடம் பேச்சும், சிரிப்பும், கனவுகளும், கவிதைகளுமாக என் வாழ்வில் ஒரு பெண் இருந்தாள் என்பதை எப்படிச் சொல்ல?

''சொல்றேன். பதட்டப்படாமக் கேளு.ஜெஸ்ஸி... சென்னைல என்கூட வேலை பார்த்த பொண்ணு. அவ கிறிஸ்டியன். ரெண்டு பேர் வீட்லயும் ஒப்புக்கலைனு பிரிஞ்சுட்டோம்.'
''ரெண்டு பேரும் எத்தனை வருஷம் லவ் பண்ணீங்க?'
''மூணு வருஷம்.'
''மூணு வருஷம் ஒருத்திய லவ் பண்ணி யிருக்கீங்க. அவளைக் கல்யாணம் பண்ணிக் காம, என்னை ஏன் கல்யாணம் பண்ணிக்கிட்டீங்க?'
'ஒருவரைக் காதலித்துவிட்டு, இன்னொருவரைத் திருமணம் செய்துகொள்ள சாபம் விதிக்கப்பட்ட தேசம் இது நந்தினி’ என்று மனசுக்குள் நான் சொல்லிக்கொண்டிருந்தபோது, ''இப்பவும் அவளை நினைச்சுப்பீங்களா?' என்றாள் நந்தினி.
''எங்க ஊரு அரச மரத்தடில, எங்கூட உக்காந்து ராட்டினம் சுத்தின குமரேசனையே நான் இன்னும் மறக்கல நந்தினி. மனுஷன்னா, அவன் வாழ்க்கைல கடந்துவந்த எல்லோருடைய நினைவும் இருக்கத்தானே செய்யும்' என்று நான் கூறியபோது என் மொபைல் சிணுங்கியது.
'மெட்டி ஒலி காற்றோடு...’ என்று ரிங்டோன் ஒலிக்க... நான் மொபைலைக் கட் செய்தேன்.
''இது இளையராஜா பாட்டுதானே?' என்றாள் நந்தினி.
''ஆமாம்.'
''என் நினைவில்லாம இளையராஜாவோட ஒரு பாட்டைக் கூட உங்களால கேக்க முடியாதுன்னு எழுதியிருந்தாளே... ஒவ்வொரு தடவை இளையராஜா பாட்டு கேக்குறப்பவும் அவள நினைச்சுப்பீங்களா?' என்று நந்தினி கேட்டபோது, அவள் குரல் தழுதழுத்தது.
நான் நந்தினியின் கேள்விக்குப் பதில் சொல்லாமல், ''நந்தினி... உனக்குக் கஷ்டமாத்தான் இருக்கும். எனக்குப் புரியுது. என்ன பண்றது? நான் ஜெஸ்ஸியைக் காதலிச்சது, உன்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டது... எதையும் இப்ப மாத்த முடியாது. ஆனா, என்னோட காதல் தோல்வி நம்ம வாழ்க்கையை எந்த விதத்துலயும் பாதிக்கலை. உன்கூட நல்லபடியா சந்தோஷமாத் தானே இருக்கேன்.'
''அதெல்லாம் சரி... ஆனா, எனக்கு முன்னாடி ஒரு பொண்ணு, முழுசா மூணு வருஷம் உங்க வாழ்க்கைல இருந்திருக்காளே. அதை எப்படிங்க தாங்கிக்கிறது?' என்ற நந்தினி அழ ஆரம்பித்தாள். நான் மேற்கொண்டு ஒன்றும் பேசாமல், அழுது மனம் ஆறட்டும் என்று விட்டுவிட்டேன்.
மறுநாள் இரவு. அருகில் நந்தினி அசந்து தூங்கிக்கொண்டிருந்தாள். குனிந்து அவள் நெற் றியில் அன்புடன் முத்தமிட்டேன். நந்தினியின் அருகில் படுத்திருந்த குழந்தையின் கையில் நந்தினியின் புடைவை நுனி. நான் புடைவையின் நுனியை எடுக்க முயற்சித்தேன். குழந்தை சிணுங்க... விட்டுவிட்டேன். தன் புடைவை நுனியைப் பிடித்துக்கொண்டு தூங்க நந்தினி குழந்தைக்குப் பழக்கப்படுத்தியிருந்தாள்.
எனக்குப் பாட்டு கேட்க வேண்டும்போலத் தோன்றியது. எழுந்து பால்கனிக்குச் சென்றேன். மொபைலில் ''வானுயர்ந்த சோலையிலே...' பாடலை ஒலிக்கவிட்டு சிகரெட்டைப் பற்றவைத்துக்கொண்டேன். பாடலில் மெள்ள மெள்ளக் கரைய ஆரம்பித்தேன்.
'தேனாகப் பேசியதும்
சிரித்து விளையாடியதும்...
வீணாகப் போகுமென்று
யாரேனும் நினைக்கவில்லை...’
என்ற வரிகளைக் கேட்டவுடன் ஜெஸ்ஸியின் நினைவில் இருந்த எனக்குக் கண்கள் கலங்கின. அப்போது ''என்ன... அவ நினைப்பா?' என்று பின்னால் இருந்து நந்தினியின் குரல் கேட்க... அவசரமாகக் கண்களைத் துடைத்துக் கொண்டு திரும்பினேன்.
நந்தினியின் கண்களில் கோபம் மின்ன, ''நான் வந்து நின்னதுகூடத் தெரியாம பாட்டு கேட்டுட்டு இருக்கீங்க. அவ நினைப்புல தான் தினம் வீட்டுக்கு வந்தவுடனே இளைய ராஜா பாட்டு கேக்குறீங்களா?'
''இல்லம்மா... சாதாரணமாதான் கேக்குறேன்.'
''சும்மா சொல்லாதீங்க. இப்ப இந்தப் பாட்டுல, 'தேனாகப் பேசியதும், சிரித்து விளையாடி யதும், வீணாகப் போகுமென்று’னு கேட்டப்ப அவ நினைப்பு வரலைனு சொல்லுங்க பாப்போம்?'
மற்ற விஷயங்களில் சற்று விவரம் இல்லாத பெண்கள்கூட, கணவனின் பெண் நட்பு சார்ந்த விவகாரங்களில் மட்டும் மிகவும் நுணுக்கமான புத்திசாலிகளாகிவிடுகிறார்கள். உண்மையைச் சொன்னால் மேலும் பிரச்னை என்பதால், ''அதெல்லாம் இல்ல நந்தினி... நீயாவே நினைச்சுக்கிற?' என்றதும், வேகமாக உள்ளே சென்ற நந்தினி, தூங்கிக் கொண்டிருந்த கைக்குழந்தையைத் தூக்கிக்கொண்டு வெளியே வந்தாள். நான் சற்றும் எதிர்பாராதவிதமாக என் முன் குழந்தையை நீட்டி, ''நம்ம பொண்ணு மேல சத்தியம் பண்ணிச் சொல்லுங்க. அந்தப் பாட்டக் கேக்குறப்ப, அவ நினைப்பு வரலைனு சொல்லுங்க பாப்போம்' என்று கூற... நான் அதிர்ச்சியுடன் நந்தினியை நோக்கினேன். எனக்கு இதில் எல்லாம் நம்பிக்கை இல்லை என்றாலும், பெற்ற குழந்தை மீது பொய் சத்தியம் பண்ணச் சங்கடமாக இருந்தது. குழந்தை தூக்கம் கலைந்து அழ ஆரம் பித்தது. நான் வேகமாகக் குழந்தையை வாங்கி என் தோளில் சாய்த்து இறுக்கமாக அணைத்தபடி, ''ஆமாம் நந்தினி... அந்தப் பாட்டக் கேட்டப்ப ஜெஸ்ஸியத்தான் நினைச்சுட்டிருந்தேன்' என்றேன்.
சட்டென்று கண் கலங்கிய நந்தினி, ''அவள நினைச்சுட்டு இருக்கிறதுக்கு என்னை ஏங்க கல்யாணம் பண்ணிக்கிட்டீங்க? பொண்டாட்டி, பிள்ளையத் தூங்கவெச்சிட்டு எவளையோ நினைச்சுட்டு பாட்டு கேக்குறேன்னு சொல்றீங்களே... என் மனசு என்ன பாடுபடும்னு யோசிச்சீங்களா?' என்றாள்.
''எனக்குப் புரியுது நந்தினி... என்னை இப்ப என்ன செய்யச் சொல்ற?'
''நீங்க இனிமே அவள நினைக்கக் கூடாது.'
''சரி...'
''ஆனா, இளையராஜா பாட்டு கேக்குறப்பல்லாம் உங்களுக்கு அவ நினைப்பு வரும்ல?' என்று நந்தினி கேட்க... நான் பதில் ஒன்றும் சொல்லவில்லை.
''சொல்லுங்க... வரும்ல?'
''வரலாம்.'
''அப்படின்னா, இனிமே இளையராஜா பாட்டக் கேக்காதீங்க' என்றவுடன் எனக்கு யாரோ என் கழுத்தைப் பிடித்து நெரிப்பதுபோல் இருந்தது. நான் பிறந்ததிலிருந்து என்னைத் தொடரும் பாடல்கள் அவை. நான் குழந்தையாக இருந்தபோது, 'கண்ணே... கலைமானே...’ பாடலைப் பாடித்தான் என்னைத் தூங்கவைத்ததாக அம்மா சொல்லியிருக்கிறாள். பள்ளியில், 'ஆடி மாசம் காத்தடிக்க...’ பாடலுக்கு நடனம் ஆடி முதல் பரிசு வாங்கியிருக்கிறேன். ஒரு மழைக்கால மாலையில் 'புத்தம் புது பூ பூத்ததோ...’ பாடல் கேட்டு முடித்த பிறகுதான் ஜெஸ்ஸி என் தோளில் சாய்ந்து தன் காதலைச் சொன்னாள். என்னிடம் இளையராஜாவின் பாடல்களைக் கேட்காதே என்று சொல்வது, என் இறந்த காலத்தை அழிக்கச் சொல்வதுபோல். ஒரு மனிதனின் இறந்த காலத்தை எப்படி நந்தினி அழிக்க முடியும்?
ஆனாலும், நந்தினியின் துயரத்தைப் புரிந்து கொண்டு, கொஞ்சம் நாள் சென்றால் சரியாகி விடும் என்ற நம்பிக்கையுடன், ''சரி... இனிமே கேட்கல!'' என்றேன்.
அதன் பிறகு ஒரு வாரம் வரையிலும் நான் இளையராஜாவின் பாடல்களைக் கேட்கவே இல்லை. அதற்கு மேல் என்னால் தாக்குப் பிடிக்க முடியவில்லை. ஒரு புதன் கிழமை இரவு, நந்தினியும் குழந்தையும் தூங்கிய பிறகு கட்டில் ஆடாமல், நந்தினி மேல் என் கை கால் படாமல் கவனமாக இறங்கினேன். அன்றைக்கு பால்கனி யில் பாடல் கேட்டுத்தான் மாட்டிக்கொண் டோமே என்று ஃப்ளாட் கதவைத் திறந்து கொண்டு மொபைலுடன் மொட்டைமாடிக்கு வந்தேன். 'கடவுளே... ஒரு பாடல் கேட்க இவ் வளவு திருட்டுத்தனமா?’ என்று மனம் துக்கத்தில் கசிந்தது.
இருட்டில் மொபைலில் ஆவலுடன் பாடல் களைத் தேடி, 'என்னுள்ளில் எங்கோ ஏங்கும் கீதம்... ஏன் கேட்கிறது?’ பாடலைக் கேட்க ஆரம்பித்தேன். பாடல் ஆரம்பித்து பல்லவியைக் கூடத் தாண்டவில்லை. 'ணங்’கென்று யாரோ முதுகில் குத்த... பயந்து திரும்பினேன். நந்தினி என்னை ஆவேசத்துடன் பார்த்தபடி நின்று கொண்டிருந்தாள். நான் கலக்கத் துடன், ''நந்தினி...' என்று ஆரம்பிக்க... நந்தினி என்னைப் பேச விடாமல், ''அன்னைக்கி எங்கிட்ட இனிமே இளையராஜா பாட்டக் கேக்க மாட்டேன்னு சொன்னீங்கள்ல?' என்று சத்தமாகக் கேட்டபடி என் நெஞ்சில் கைவைத்துத் தள்ளினாள்.
லேசாகத் தடுமாறிய நான் சமாளித்து நின்றுகொண்டு, ''ஏன் நந்தினி சின்னப் புள்ள மாதிரி பிடிவாதம் பண்ற? வெறும் பாட்டுதானே நந்தினி...' என்றேன்.
''உண்மையச் சொல்லுங்க... உங்களுக்கு அது வெறும் பாட்டுதானா? இளையராஜா பாட்டக் கேக்குறப்பல்லாம் அவ நினைப்பு உங்களுக்கு வர்றதில்ல?'
''சும்மா பாட்டு கேக்குறதால எதுவும் நடந்து டாது நந்தினி. அவ சென்னைல இருக்கா. நான் டெல்லில இருக்கேன். தேவையில்லாம நீ பயப் படற. பாட்டு கேக்குறது வேற. அவள நினைச்சுக் கிறது வேற.'
''உங்களுக்கு ரெண்டும் ஒண்ணுதாங்க' என்று என் அருகில் வந்த நந்தினி கண்களில் உக்கிரத் துடன், ''இனிமே இளையராஜா பாட்டு கேக்க மாட்டேன்னு சொல்லுங்க' என்றாள். நான் மௌனமாக நிற்க... ''கேக்க மாட்டேன்னு சொல்லுங்க... சொல்லுங்க... சொல்லுங்க' என்று மீண்டும் மீண்டும் ஆவேசத்துடன் கத்திய நந்தினி, என் சட்டைக் காலரைப் பிடித்து வெறி பிடித்தவள்போல் உலுக்கினாள்.
ஒரு கட்டத்தில் பொறுமையிழந்த நான், ''பைத்தியக்கார நாயே... ஏண்டி இப்படி என் உயிர எடுக்குற?' என்றபடி ஓங்கி அவள் கன்னத்தில் அறைந்தேன். சட்டென்று அமைதியாகி, அதிர்ச்சியுடன் என்னை நோக்கிய நந்தினியின் கண்களில் இருந்து நீர் வழிந்தது. சில விநாடிகள் என் முகத்தைப் பார்த்துக்கொண்டிருந்த நந்தினி மேற்கொண்டு ஒன்றும் பேசாமல், இறங்கிச் சென்றாள். நான் வீட்டுக்குச் செல்லப் பிடிக்காமல் மொட்டை மாடியிலேயே படுத்துக்கொண்டேன்.
எப்போது கண் அசந்தேன் என்று தெரியவில்லை. சட்டென்று விழித்தபோது விடிந்திருந்தது. கீழே இறங்கினேன். வீட்டினுள் நுழைந்தபோது வீடு அமைதியாக இருந்தது.
''நந்தினி...' என்றபடி படுக்கை அறையில் பார்த்தேன். நந்தினி அங்கு இல்லை. குழந்தையையும் காணவில்லை. சமையல் அறையிலும் நந்தினியைக் காணாமல், ஃப்ளாட் வாசலை நெருங்கியபோதுதான் கவனித்தேன். செருப்பு ஸ்டாண்டில் அவளுடைய செருப்பு இல்லை. சற்றே திகிலுடன் அவளுடைய பர்ஸையும் மொபைலையும் தேட... இரண்டும் கிடைக்கவில்லை. பதற்றத்துடன் என் மொபைலை எடுத்து அவள் மொபைலுக்கு அடிக்க சுவிட்ச் ஆஃப். வேகமாக பேன்ட், சட்டையை மாட்டிக்கொண்டு பைக் சாவியுடன் படி இறங்கினேன்.
வாட்ச்மேனிடம் விசாரித்தேன். ''சுப பாஞ்ச் பஜே, பச்சி கி சாத் மதுரா ரோட் கி தரஃப் ஜா ரஹி தி' என்றான். கடிகாரத்தில் நேரத்தைப் பார்த்தேன். ஆறரை. ஐந்து மணிக்கே குழந்தையோடு மதுரா ரோடு பக்கம் சென்றிருக்கிறாள். ஒருவேளை கோபித்துக்கொண்டு தமிழ்நாட்டுக்குக் கிளம்பியிருப்பாளோ? ஊருக்குப் போக வேண்டும் என்றாலும், மதியம் மூன்றரைக்குத்தான் ரயில். எனவே, அருகில்தான் எங்காவது சென்றிருக்க வேண்டும் என்ற முடிவோடு மதுரா மெயின் ரோடு, ஆனந்த்மாய் ரோடு, அர்பிந்தோ மார்க் ரோடு என்று அனைத்து வீதிகளையும் சுற்றிச் சுற்றி வந்தேன். அடுத்து எங்கு சென்று பார்ப்பது என்று புரியாமல் ஸாகர் ரத்னா ஹோட்டல் வாசலில் தவிப்புடன் நின்றுகொண்டிருந்தேன். என் துணை இல்லாமல் துக்ளகாபாத்துக்கு வெளியே நந்தினி சென்றது கிடையாது. இந்தியும் அவளுக்குத் தெரியாது. கையில் ஆறு மாதக் குழந்தையுடன், மொழி புரியா ஊரில் எங்கு சென்றிருப்பாள்?
நேரம் ஆக ஆக... எனக்குப் பயம் அதிகரித்தது. வாட்ச்சைப் பார்த்தேன். மணி எட்டு. வாட்ச்மேனை மொபைலில் அழைத்து விசாரித்தேன். அவன் 'நந்தினி இன்னும் வரவில்லை’ என்றான். சட்டென்று ஒருவேளை நந்தினி ஏதேனும் செய்துகொண்டிருப்பாளா என்று தோன்றியவுடனேயே வயிறு கலங்கியது. மேலும் யோசிக்கவும் நடக்கவும் சக்தியற்று தெருவையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தேன்.
'கடவுளே... எனக்கு மட்டும் ஏன் இப்படி ஒரு வாழ்க்கை?’ என்று மனதுக்குள் புலம்பியபோது என்னை அறியாமலேயே என் கண்களிலிருந்து நீர் வழிந்தது. கண்களைத் துடைத்துக்கொண்டு, மொபைலை எடுத்து மீண்டும் ஒரு முறை நந்தினியின் போனுக்கு அடித்துப் பார்த்தேன். சுவிட்ச் ஆஃப். ஊரில் இருக்கும் நந்தினியின் பெற்றோரிடம் ஏதாவது சொன்னாளா என்று தெரிந்துகொள்ள, நந்தினியின் அப்பாவை மொபைலில் அழைத்தேன். போனை எடுத்த என் மாமனாரிடம், ''மாமா... நந்தினி ஏதும் போன் பண்ணியிருந்தாளா?'' என்றேன்.
''ஒண்ணும் பண்ணலையே. என்ன விஷயம் மாப்ள?'
''நேத்து ராத்திரி ஒரு சின்ன சண்டை. மொட்டைமாடிலயே படுத்துத் தூங்கிட்டேன். காலைல எந்திரிச்சுப் பாத்தா ஆளக் காணோம்.'
''என்ன மாப்ள சொல்றீங்க?' என்ற மாமனாரின் குரலில் அதிர்ச்சி.
''நானும் மூணு மணி நேரமாத் தேடிப் பாத்துட்டேன். ஆளக் காணோம்...' என்ற என் குரல் உடைந்து அழுகை வரப் பார்த்தது.
''பயப்படாதீங்க மாப்ள. கோபத்துல பக்கத்துல எங்கயாச்சும் போயிருப்பா. நீங்க எல்லா இடத்துலயும் நல்லாத் தேடிப் பாத்தீங்களா?'
''பாத்தாச்சுங்க.'
''பக்கத்து கோயில்ல ஏதும் பாத்தீங்களா?'
''இல்லையே.'
''பக்கத்துல இருக்கிற கோயில்ல எல்லாம் பாருங்க. இங்க எங்ககூட ஏதாவது சண்டை வந்துச்சுன்னா, கோயில்ல தான் போய் உக்காந்திருப்பா' என்று மாமனார் கூற... எனக்கு மூச்சு வந்தது.
''சரி மாமா...' என்ற நான் வேகமாக பைக்கை உதைத்துக் கிளம்பினேன். அந்தப் பிரதேசத்தில் காணப்படும் ஷிவா மந்திர், லோட்டஸ் டெம்பிள், கல்காஜி காளி மந்திர், சாய் மந்திர் என்று அத்தனை கோயில்களிலும் தேடினேன். எங்கும் நந்தினியைப் பார்க்க முடியவில்லை. இன்னும் ஆர்.கே.புரம் மலைமந்திர் மட்டும்தான் பாக்கி. அது வீட்டிலிருந்து தூரம். இருப்பினும், அது தமிழர்களால் நடத்தப்படும் முருகன் கோயில் என்பதால், அங்கு வந்து செல்பவர்கள், அர்ச்சகர்கள் என்று எல்லோரும் தமிழர்களாகத்தான் இருப்பார்கள். எனவே, நந்தினி அங்கு சென்றிருக்கக்கூடும் என்று நம்பிக்கையுடன் பைக்கில் வேகமாகப் பறந்தேன். மலைமந்திர் வாசலில் பைக்கை நிறுத்தியபோது நான் மிகவும் களைத்திருந்தேன்.
மெதுவாக நடந்து கீழே விநாயகர் சந்நிதி, மீனாட்சி சந்நிதியில் பார்த்தேன். நந்தினி இல்லை. படியேறி மேலே சென்றேன். முருகன் சந்நிதியிலும் அவளைக் காணாமல் ஏமாற்றத்துடன் சுற்றிலும் பார்த்தேன். துர்கையம்மன் சந்நிதி அருகே ஒரு குழந்தையின் அழுகுரல் கேட்க... நான் வேகமாகச் சென்றேன். அங்கு நந்தினி புல்தரையில் அமர்ந்தபடி ரிங் ரோட்டையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தாள்.
வீட்டுக்கு வந்தும் இருவரும் ஒன்றும் பேசவில்லை. அழுத குழந்தைக்குப் பால் கொடுத்துத் தூங்கவைத்த பிறகு நிதானமாக நந்தினியிடம் பேச ஆரம்பித்தேன்.
''நான் உங்கிட்ட ஏன் போனேன்னு கேக்கப்போறதில்ல. இனிமே நான் என்ன பண்ணணும்னு மட்டும் சொல்லு' என்றேன்.
''இனிமே நீங்க இளையராஜா பாட்ட கேக்கக் கூடாது' என்றாள் வேகமாக.
நான் ஒரு விநாடியும் யோசிக்காமல், ''சரி... இனிமே கேக்க மாட்டேன்' என்றபோது லேசாகத் தொண்டை அடைத்தது.
''கேக்க மாட்டேன்னு சொல்லிட்டு, வெளிய போறப்ப கேட்டீங்கன்னா என்ன பண்றது? உங்க மொபைல்ல இருக்கிற இளையராஜா பாட்டையெல்லாம் அழிங்க' என்றாள். நான் மௌனமாக மொபைலில் இருந்த பாடல்களை அழித்துவிட்டு ''போதுமா?' என்றேன்.
''கம்ப்யூட்டர்ல இருக்கிற இளையராஜா பாட்டு?' என்று நந்தினி கூற... கணினியை இயக்கி இளையராஜா பாடல்களைஅழித்துவிட்டு அவள் முகத்தை நோக்கினேன். அவள், ''சி.டி-ல் லாம்...' என்றாள். நான் அலமாரியைத் திறந்து, இளையராஜாவின் பாடல்களைப் பதிவுசெய்து வைத்திருந்த சி.டி-க்கள், டி.வி.டி-க்கள் என்று எல்லாவற்றையும் ஒரு இயந்திரம்போல் எடுத்துக் கீழே போட்டேன்.
நந்தினி, ''இவரு இளையராஜா பாட்டு கேட்டு அவள நினைச்சுக்கிட்டே இருப்பாராம். நான் வேடிக்கை பாத்துட்டு இருக்கணுமாம்' என்றபடி வெறி பிடித்தாற்போல் சரக்... சரக்... என்று சி.டி-க்களைத் தரையில் தேய்த்தாள்.
அடுத்து வந்த மூன்று மாத காலமும் ஒரு பிரச்னையும் இல்லை. உள்ளுக்குள் ஒரு வெறுமை இருந்தாலும், வெளியில் என்னால் இயன்றளவு சகஜமாக இருக்க முயன்றேன். ஆனால், இளையராஜா பாடல்கள் கேட்காமல் இருப்பது, நெஞ்சில் முள்ளாக உறுத்திக்கொண்டேயிருந்தது. ஒரு நாள் தமிழர்கள் அதிகம் வசிக்கும் முனீர்கா பகுதியில் சென்றபோது ஒரு வீட்டிலிருந்து 'உன் குத்தமா... என் குத்தமா?’ பாடல் கேட்க, அப்படியே பைக்கை நிறுத்திக் கேட்டுக்கொண்டிருந்தேன். இரவுகளில் படுத்தபடி மனதுக்குள்ளேயே இளையராஜாவின் பாடல்களை ஆரம்பத்தில் இருந்து ஃப்ரீலூட், இன்டர்லூடுடன் கேட்க... மனம் சற்று நிம்மதியடைந்தது. என் செவியில் ஒலிக்காத இளையராஜாவின் பாடல்கள், என் மனதில் ஒலித்துக்கொண்டேயிருந்தன. அப்படியே தூங்கிவிட... கனவிலும் இளையராஜா பாடல்களைக் கேட்டுக்கொண்டேயிருந்தேன்.
ஒரு விடியற்காலை கனவில், 'நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி...’ பாடலைக் கேட்கக் கேட்க மிகவும் இன்பமாக இருந்தது. சட்டென்று விழிப்பு வர... அப்போதும் பாடல் தொடர்ந்து ஒலித்தது. விழித்த பிறகும் எப்படிப் பாடல் ஒலிக்கிறது என்று நான் திகைக்க... கட்டிலில் புன்னகையுடன் நந்தினி அமர்ந்திருந்தாள். அவள் கையில் இருந்த பாக்கெட் சி.டி. ப்ளேயரில் இருந்துதான் பாடல் ஒலித்துக்கொண்டிருந்தது. நடப்பதை நம்ப முடியாமல் ஆச்சர்யத்துடன் எழுந்து அமர்ந்தேன்.
சட்டென்று என் நெஞ்சில் சாய்ந்த நந்தினி, ''ஸாரிங்க?' என்றாள்.
''ஏய்... என்னாச்சு உனக்கு?' என்றேன்.
''நீங்க இளையராஜா பாட்ட கேக்குறத நிறுத்தின பிறகு, பழைய மாதிரியே இல்ல. நீங்க என்னதான் எங்கிட்ட சிரிச்சுப் பேசினாலும், அதெல்லாம் நடிப்புனு நல்லாத் தெரிஞ்சுபோச்சு. பழைய கலகலப்பு, மனசுவிட்டுச் சிரிக்கிறது, துறு துறுனு எங்கிட்ட வம்பிழுக்கிறதுனு எல்லாம் போயிடுச்சு. எனக்கு நீங்க பழைய வினோத்தா வேணுங்க. அதுவும் இல்லாம உங்ககூட சேர்ந்து இளையராஜா பாட்டக் கேட்டுக் கேட்டு, அது இல்லாம எனக்கே ஒரு மாதிரியா இருக்கு. அதான் இதுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைப்போம்னு நேத்து அலைஞ்சு திரிஞ்சு பத்து இளையராஜா பாட்டு டி.வி.டி. வாங்கிட்டு வந்தேன்' என்று கூறியவளை உற்றுப் பார்த்தேன்.
அப்போது என் மனதில் நந்தினியின் மீது ஏற்பட்ட அபாரமான காதலை இந்த சாதாரண எழுத்துக்களைப் பயன்படுத்திச் சொல்ல முடியும் என்று எனக்குத் தோன்றவில்லை. ஜெஸ்ஸியோடு எனக்கு இருந்த காதலைவிடப் பல மடங்கு பெரிய காதல் இது. ''நந்தினி...' என்று நான் ஆவேசத்துடன் அவளை இறுக அணைத் துக்கொண்டேன்.
''ஆனா, ஒரு கண்டிஷன்... பாட்டு கேக்குறப்ப நீங்க அவள நினைக்கக் கூடாது.'
''நினைச்சுப்பேன்... ஆனா, அவள இல்ல. இனிமே எங்கே இளையராஜா பாட்டக் கேட்டாலும், உன் நினைப்புதான் வரும்' என்று நான் கூற... நந்தினி என்னை இறுகத் தழுவிக்கொண்டாள். சி.டி-யில் அடுத்த பாடல் ஒலித்தது.
'என்னோடு வா வா... என்று சொல்ல மாட்டேன்...
உன்னைவிட்டு வேறு எங்கும் போக மாட்டேன்’! http://tl.gd/n_1rked91

சித்திரையில் நிலாச்சோறு



BlackOut @Sharankay


21st May 2013 from TwitLonger


சித்திரையில் நிலாச்சோறு பாடல்களை நீங்கள் கேட்டிருக்க மாட்டீர்கள்... உத்தேசமாக கேட்கவும் போவதில்லை, ஹிட் பாடல்கள் கிடையாதென்பதால்! மேலும் ராஜா படங்களுக்கே நேரும் மார்க்கெட்டிங்க தந்திராபயோகங்களால் பாடல்கள் வெளிவந்து ஒரு மாதம் ஆகியும் சிடிக்கள் கிடைப்பதில்லை. தலைமறைவு இயக்கம் போல் ராஜா பாடல்களை தேடித் தேடி கேட்கும் எங்களுக்கு மட்டுமே கிடைக்கிறது. ஆனாலும் எங்கள் முயற்சி வீணாவதில்லை. முக்கியமாக முக்கி முக்கி கேட்டு பிடிக்க செய்து கொள்வதெல்லாம் கிடையாது. கோடையில் மழை போல் வெள்ளத்தில் கரை போல் வெயிலில் நிழல் போல், வெகு இயல்பாய் முதல் முறை கேட்கும் போதே வசிகரீத்து விடுகிறது. இனி இந்த ஜென்மம் முழுதும் இந்த வசீகரம் தொடரும். நாளாக நாளாக போதை ஏறும் வைன் போலே பாடல்கள் எம் ஜீவனை நிரப்பும். நாங்கள் பாக்கியவான்கள். http://tl.gd/n_1rkdi4d

Ragams used in ChithirayilNilachoru :


Rajiv @skrajiv


22nd May 2013 from TwitLonger 

Ragams used in #ChithirayilNilachoru :
1. Kallale Senju Vecha - Sindhu Bhairavi
2. Unga Appan peyar solli - Keeravani
3. Kalayil Malayil Vandu - Abheri
4. Nandri Solla Vendum - Hamsadhwani
5. Kallale senju - Sindhu Bhairavi

Frontside scan : pic.twitter.com/riR7Ertipj

Backside scan : pic.twitter.com/VPxLWY02gW
 
http://tl.gd/n_1rkdr1m

Thursday, May 16, 2013

காலை ட்விட்டர் Satheesh Kumar saysatheesh


இன்று காலை ட்விட்டர் ஓப்பன் செய்தவுடன் கண்ணில் பட்டது ஒரு ட்வீட். அது அப்படி என் கண்ணில் படாமலேயே இருந்திருக்கலாம் என தோன்றுகிறது இப்போது!

நான் மிகவும் மதிக்கும் மரியாதை வைத்திருக்கும் மூன்று சக ட்விட்டர்கள் அவர்களுக்குள் வழக்கம்போல பேசிக்கொண்டிருந்தார்கள். அப்போது ஒரு அருமை நண்பர் அவர்களிடம் “மற்றவர்களுக்கு சுவாரசியம் ஏற்படுத்தக்கூடிய ட்விட்டுக்களை டைம்லைனில் பேசுங்கள். மற்றவற்றை தனி செய்தியில் பேசுங்கள்” என நெறிப்படுத்திக்கொண்டிருந்தார். அவரது அந்த ட்விட் எனக்குள் எழுப்பிய கேள்விகளை விட கோபங்களே அதிகம். அதன் விளைவாக சிற்சில ஆதங்க ட்வீட்டுக்களை நானிட, என்னை பிலு பிலுவென பிடித்துக்கொண்டார்கள் என் நண்பர்கள்.

நான் ஒரு வகையில் பாக்கியவான். என்னையும், எனது மன உணர்வையும் சரியாக புரிந்துகொண்ட பற்பல ட்விட்டர்களை நண்பர்களை கொண்டிருக்கிறேன். அதனால் அவர்கள் யாரும் என்னை விமர்சிக்கவில்லை. என்னை புரிந்துகொள்ளாத, புரிந்துகொள்ள முயலாத சிலரின் விமர்சனக்கணைகளுக்கு தனித்தனியாக பதில்சொல்லிக்கொண்டிருக்க முடியாத நிலையில் (ஆபீஸ் அவஸ்தை!) இந்த ட்விட் லாங்கர் அவசியமாயிற்று! (இது தான் பின் கதை சுருக்கம்!)

“யாரோ எதுவோ சொல்லிவிட்டு போகட்டுமே சதீஷா! உனக்கென்ன?” என கேட்பவர்களுக்கு, இன்று யாரோவாக இருக்கும் பாதிக்கப்பட்ட நபர் நாளை நீங்களாகவோ, நானாகவோ, நமது மற்றுமொரு நண்பராகவோ கூட இருக்கக்கூடும் என்பதால், இது போன்ற எதேச்சதிகாரங்களை ஆரம்பத்திலேயே கண்டிக்கவேண்டியதாகிறது என்பதே எனது நிலைப்பாடு.

“அவர் சொல்வது சரிதானே? சுவாரசியமற்ற விவாதங்களை ஏன் டைம்லைனில் செய்யவேண்டும்? அதற்கு தான் தனி செய்தி இருக்கிறதே” என கேட்கும் அதி புத்திசாலிகளுக்கு தான் விரிவாக பதிலளிக்கவேண்டியதாகிறது.

இன்றைக்கு திடீரென (அவரது வார்த்தையில் சொல்வதானால்) ‘டிவிட்டர் காலாசார’த்தை கட்டி காக்க எழுந்தருளியிருக்கும் அந்த அருமை நண்பரும் எனது மரியாதைக்கும் மதிப்புக்கும் உரியவர் தான். இதே தமிழ் ட்விட்டர்களில் ஒரு குழு எப்போதுமே விதண்டாவாதத்துக்காக செயல்பட்டுக்கொண்டிருப்பதை நாம் அறிவோம். அவர்களில் யாரேனும் அப்படியான செயலில் ஈடுபட்டிருந்தால் இங்கு எல்லோரும் செய்வதை போல நானும் புறக்கணித்திருப்பேன் (துஷ்டனை கண்டால் தூர விலகு டைப்பில்). ஆனால் என் மிகவும் மதிப்புக்குரிய நபரே அப்படி ‘இறங்கிவிடும்’பொழுது அதனை சுட்டிக்காட்டவேண்டியது அவசியம் தானே?
யாரோ இருவர் என்னவோ பேசிக்கொண்டிருந்தால் யாருக்கு என்ன? யாரும் யாருடனும் தனி அரட்டை நடத்தக்கூடாது என கட்டுப்பாடு விதிக்கும் அளவுக்கு இங்கு யாருக்கும் அதிகாரமும் இல்லை, அதற்கான தகுதியும் இல்லை.
அநாகரீக சொற்கள், வன்முறை, ஆபாசம், வக்கிரம், இரட்டை வசனம், திரிபு, வரலாற்று பொய்கள், கற்பனை, வதந்தி என படு கேவலமான விஷயங்கள் நம் டைம்லைனை ‘அலங்கரித்து’க்கொண்டிருக்கும்போதெல்லாம் யாரும் ட்விட்டர் காவலராக அவதாரம் எடுத்து ‘ட்விட்டர் கலாசார’த்தை காக்க முற்பட்டதில்லையே? (அப்படி ‘எல்லா தவறுகளையும்’ கண்டித்திருந்தால், ஒருவேளை நானும் அவரது கண்டிப்பை சரி என ஒப்புக்கொண்டிருக்கக்கூடும்)

இப்போது யாரோ சில எளியவர்கள் ‘பேசி’க்கொண்டிருக்கையில் மட்டும் உட்புகுந்து ‘இதெல்லாம் தனி செய்தியில் பேசிக்கொள்ளுங்கள்’ என கட்டளையிட என்ன அவசியம் ஏற்பட்டிருக்கிறது? அப்படி கட்டளையிடவும், ட்விட்டர் கலாச்சாராத்தை வகுக்கவும், அதனை காப்பாற்றவும் யார் இவர்களை அதிகாரம் வழங்கி நியமித்தார்கள்? என்றெல்லாம் சில கேள்விகள் ஒரு புறம்!

இப்போது திடீர் அவதாரம் எடுத்திருப்போர், இந்த ட்விட்டர் கலாச்சாரத்தை அனைவருக்கும் உறுதிப்படுத்துகிறார்களா அல்லது எளியோருக்கு மட்டும் தான் இந்த கட்டுப்பாடா? வக்கிரமும், வன்மமும், ஆபாசமுமாக பேசுவோர்களை கண்டும் கணாமல் இருந்து கைதட்டி ஆர்ப்பரித்துக்கொண்டிருப்பதும் ட்விட்டர் கலாச்சார காவலில் வராதா என்கிற சில கேள்விகள் மறு புறம்!

இதற்கிடையில் அவரது பொழிப்புரையில் சொன்னபடி ‘மற்றவர்களுக்கு சுவாரசியத்தை ஏற்படுத்தும்’ கீச்சுக்களுக்கு தான் டைம்லைனில் அனுமதி எனில், வம்பிழுப்பது, பெண்களை குறித்தும், அரசியல்/அரசியல் தலைவர்கள் குறித்தும் வதந்தியும்/புனையுரையும் இட்டுக்கட்டிய கதைகளும் சொல்வது ஆகியவை தான் ட்விட்டர் கலாச்சாரத்தின்படியான ‘சுவாரசியம்’ ஏற்படுத்தும் விவாதங்களா என்கிற கேள்வி வேறு புதிதாக முளைத்தெழுகிறது.

எட்டாயிரத்து சொச்சம் தமிழ் ட்விட்டர்கள் இருக்கும் பரந்த இணையவெளியில் 27 பேர் ஒரு கூட்டமைப்பை ஏற்படுத்தி மொத்த தமிழகத்தின் பிரதிநிதி தாங்கள் தான் என சொல்லி எல்லாரையும் அதிகாரம் செய்வது, மிரட்டுவது, கட்டுப்படுத்துவது, கட்டுப்படாதவர்கள் குறித்து ஆபாசமாக பேசுவது போன்றவற்றை செய்து வருவது சரியானதாக படவில்லை.

அவரவர்க்கென்று இங்கே உரிய வெளி இருக்கிறது. யாரும் யாருடனும் எதை குறித்தும் பேச சுதந்திரம் இருக்கிறது. எந்த ஒரு தனி நபருக்கும் குழுவுக்கும் யாரும் அடிமைப்பட்டு நடக்கவேண்டும் என்கிற நிலை இங்கே இல்லை. அப்படி இருக்க, எப்படி மிக மிக சிலருக்கு மட்டும் எதேச்சதிகார தொனி தொற்றிக்கொள்கிறது என்பது தான் புரிபடவில்லை.

இனியேனும், ட்விட்டர்கள் தங்கள் கல்வியையும் அதன் பயனாக கிடைத்த சுய சிந்தனையையும் பயன்படுத்தி, அனைவரிடத்திலும் நல்லபடியாக நடந்துகொள்ளவேண்டும் என்கிற ‘பேராசை’யில் தான் எனது இன்றைய ட்விட்டுக்கள் வெளியாகின, என்கிற தன்னிலை விளக்கத்துடன் அமைகிறேன்!

நன்றி

அன்பன்
சதீஷ் குமார்.

R~ Rajanism 16th May 2013 from TwitLonger

இணைய நண்பர்களிடம் அடையாளங்களை மறைக்க வேண்டிய அவசியங்கள் குறித்து எழுதவேண்டிய அவசியம் எழுந்துவிட்டது. இதற்கு நாம் காலக்கொசுவர்த்தியை சற்று பின்னோக்கி சுழற்ற வேண்டியிருக்கிறது. டிவிட்டர் தளம் தமிழ் கூறும் நல்லுலகில் பிரபலமாவதற்கு முன்னர் பிளாகர் நண்பர் வால் பையன் நான் பேச்சிலராக இருந்த காலத்தில் ஒரு முறை அவினாசியில் எனது குவாட்ரஸில் வந்து சரக்கடித்தார்.சில குவார்ட்டர் பாட்டில்களைக் காலிசெய்த நிலையில் நிறை போதையில் ஜட்டியோடு அமர்ந்திருந்தார். இரவு மணி 11.30 ஆகிவிட்டிருந்த போது அவரைக் கைத்தாங்கலாக அழைத்துச் செல்ல வந்திருந்த நண்பரும் மட்டையாகிக் கிடந்தார்.

இவர்களை எப்படி ஈரோட்டுக்குத் திருப்பி அனுப்புவது என்று யோசித்துக்கொண்டே நானும் சில கட்டிங்குகளைப் போட்டதில் எனக்கும் போதை ஏறிவிட்டிருந்தது. நிறை போதையில் அவரது கொங்கிடைக்கோடு தெரியும் புகைப்படம் ஒன்றை எனது மொபைல் போனில் எடுத்துத் தொலைந்துவிட்டேன். அந்த குடியிருப்பில் இருந்தது மூன்று பேர். புகைப்படம் என் மொபைலில் இருக்கிறது. சம்மந்தப்பட்டவரும் மட்டை கூட வந்தவரும் மட்டை. புகைப்படம் எடுத்தபின்பு நானும் மட்டை.மறு நாள் காலை நான் எழுமுன்னரே அவர்கள் இருவரும் எழுந்து கிளம்பி விட்டனர். இங்கே நான் ஒரு விசயத்தைக் குறிப்பிட்டாக வேண்டும். அந்தப் புகைப்படம் எடுத்தது அவர்களிருவருக்குமே தெரியாது.

ஆனால் சில நாட்களுக்குப் பிறகு வால்பையனுடைய அந்த ஆபாசப்படம் இணையத்தில் உலவக் கண்டபோது நான் அடைந்த அதிர்ச்சியை வார்த்தைகளில் வடிக்கவே இயலாது.

அந்த நிகழ்வின் போதுதான் இணையம் எவ்வளவு அபாயகரமானது. அதன் கோரைக்கைகள் எவ்வளவு தூரம் நீண்டிருக்கின்றன என்பதை அறிந்து கொண்டேன். இச்சம்பவத்துக்குப் பிறகு நான் திருந்தியிருப்பேன் என்று நினைக்கிறீர்களா? அதுதான் இல்லை. அதற்குப் பிறகும் டிவிட்டர் நண்பர்களுடன் பலமுறை சுற்றுலாத் தலங்களுக்கும் பல்வேறு இடங்களுக்கும் சென்று கொண்டு தான் இருக்கிறேன்.

இணையத்தின் ஆண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி இருக்கும் இந்தச் சூழலிலும் கண நேர சாராய ஆசைக்காக பின்விளைவுகளைப் பற்றி சிறிதும் கவலைப்படாமல் ஊர் ஊராக ஆண் நண்பர்களுடன் சுற்றிக் கொண்டிருக்கிறேன்.

திருவாளர்கள் தேங்கா, கே7, டேவிட், தும்ததா,ஆறுமுகம் ஆகியோருடன் கேரளாவில் உள்ள அமைதிப் பள்ளத்தாக்கு(பேரைக்கேட்டாலே குலை நடுங்கவில்லையா) என்ற இடத்திற்குச் சென்றிருக்கிறேன். அங்கு ஒரு அருவியில் வெள்ளை நிற ஜட்டியுடன் நான் குளிக்கும் படங்கள் அடுத்த சில நாட்களிலேயே வெளியாயின. யோசித்துப்பாருங்கள் வெள்ளை நிற காட்டன் உடை நனைந்தால் என்னவாகும் என்று. அப்போதும் நினைத்தேன் இனி இந்த அபாயகரமான இணையச் சூழலில் இங்கனம் அஜாக்கிரதையாக எதுவும் செய்யக்கூடாது என்று.

அதன் பிறகு பாண்டிச்சேரியின் கடற்கரையில் டேவிட், தங்கவேல், கும்கி, தேங்கா ஆகியோருடன் குளித்த போதும் இதே போலதான் மர்ம நபர்களால் படமெடுக்கப்பட்டேன். நல்லவேளை அப்போது நான் பர்மடாஸ் அணிந்திருந்தேன். ஆனாலும் மேலாடை ஏதுமில்லை.

திரு குணா அவர்களின் கல்யாணத்திற்குச் சென்ற போதும் கூட காவிரிக்கரையில் அதே மர்ம நபர்களால் படமெடுக்கப்பட்டு கடும் மன உளைச்சலுக்குள்ளாக்கப்பட்டேன்.

இதற்கெல்லாம் சிகரம் வைத்தாற் போல கடந்த பிறந்த நாளான 18.11.2012 அன்று சென்னை ஈசிஆர் சவுக்குத்தோப்புக் கடற்கரையில் நான் குளிக்கும் காட்சிகளை வீடியோவாகவே சில மர்மநபர்கள் எடுத்து இணையத்தில் உலவவிட்டனர். ஏனய்யா பிறந்தநாளென்றும் பாராமல் ஒரு ஆணை அவனது அனுமதியின்றி படமெடுத்து இணையத்தில் உலவவிடுகிறீர்களே நீங்களெல்லாம் மனிதர்கள் தானா!? இதில் அன்றைய சம்பவத்தின் போது உயர்திரு மொட்டை மாம்ஸ் கூட அங்கே இருந்தார். அவரையெல்லாம் நம்பித்தானே நாங்கள் முக்கால் நிர்வாணமாகக் குளிக்கிறோம். இங்கே படமெடுத்தது அவரென நான் குற்றஞ்சுமத்தவில்லை ஆனால் அவரெல்லாம் இருக்கும்போதே மர்ம நபர்கள் கைவரிசையைக் காட்டுவதைத்தான் குறிப்பிட முயல்கிறேன்

இவை தவிரவும் பலமுறை திருமண சுப நிகழ்ச்சிகளுக்குச் செல்ல கொள்ள, நல்லது கெட்டதுகளில் எங்காவது தங்கவும் நேர்கையில் பல டிவிட்டர் நண்பர்களுடன் பாதுகாப்புணர்வுடன் இருக்க முடிவதில்லை. எப்போது மர்ம நபர்கள் கைவரிசையைக் காட்டுவார்களோ என்ற பயம் உள்ளூர இருந்துகொண்டே இருக்கிறது.

டிவிட்டர் மீட் என்று எங்கு சென்றாலும் பேண்டைக் கழட்டி லுங்கியை மாற்றும் அந்த சில நொடிகள் கூட பயமாகவே இருக்கின்றன. எங்கிருந்தோ ஒரு மெகாபிக்ஸல் டிஜிட்டல் கண் நம்மைப் படமெடுக்கும் உள்ளுணர்வு உறுத்தியவண்ணமே இருக்கின்றது.

ஆகவே, நமக்கான பாதுகாப்பை நாம் தான் உறுதி செய்து கொள்ளவேண்டியிருக்கிறது. இப்போது நன்றாக வியாக்யானங்கள் பேசுவோர் நமது அந்தரங்கப் புகைப்படங்கள் வெளியாகும் நேரத்தில் உச்சு கொட்டுவதைத் தவிர வேறொன்றும் செய்யப்போவதில்லை.

எதோ சொல்ல வேண்டுமென்று தோன்றியது. இன்று கொதி இறங்கியதும் இறக்கி விட்டேன். மனதிலிருந்த பாரம் குறைந்தாற்போல் ஒரு நிம்மதி.

நன்றி,

மிகுத்துச் செறிந்த வாஞ்சையுடன்

ராஜன்.
http://tl.gd/n_1rkanpj

டான் டான் டான் krajesh4u 16th May 2013 from TwitLonger

இந்த சமூகம் விசித்திரம் நிறைந்த பல ட்விட்லாங்கர்களைச் சந்தித்து இருக்கிறது. புதுமையான பல மனிதர்களைக் கண்டிருக்கிறது. ஆகவே இந்த ட்விட்லாங்கர் விசித்திரமல்ல, இதை எழுதிய நானும் புதுமையான மனிதனுமல்ல. வாழ்க்கைப் பாதையிலே சர்வ சாதாரணமாகக் காணக்கூடிய ரெண்டுகால் ஜீவன்தான்.
ட்விட்டரிலே குழப்பம் விளைவித்தேன்.

பல பாளோயர்களை தாக்கினேன். குற்றம் சாட்டப்பட்டிருக்கிறேன் இப்படியெல்லாம். நீங்கள் எதிர்பார்ப்பீர்கள், நான் இதையெல்லாம் மறுக்கப்போகிறேன் என்று. இல்லை நிச்சயமாக இல்லை. ட்விட்டரிலே குழப்பம் விளைவித்தேன். ட்விட்டர் கூடாது என்பதற்காக அல்ல. ட்விட்டர் கொடியவர்களின் கூடாரமாய் இருக்கக்கூடாது என்பதற்காக. பல பாலோயர்களை தாக்கினேன். அவன் பாளோயர் என்பதற்காக அல்ல. பாலோயிங் ஸ்கிரீன்ஷாட் எடுப்பதை கண்டிப்பதற்காக.

உனக்கேன் இவ்வளவு அக்கறை, உலகத்தில் யாருக்கும் இல்லாத அக்கறை, என்று கேட்பீர்கள். நானே பாதிக்கப்பட்டேன். சுயநிலம் என்பீர்கள். என் சுயநிலத்தில் பொதுநலம் கலந்திருக்கிறது. ஆகாரத்திற்காக ஆம்லேட்டுகளை சாப்பிட்டு கூமுட்டைகளை காலி பண்ணுகிறானே பரோட்டா மாஸ்டர் – அவனைப் போல.
என்னைக் குற்றவாளி, குற்றவாளி என்கிறார்களே, இந்தக் குற்றவாளியின் வாழ்க்கைப் பாதையிலே கொஞ்ச தூரம் பின்னோக்கி நிடந்து பார்த்தால் அவன் கடந்து வந்துள்ள மீன்பாடி வண்டி எவ்வளவு என்று கணக்கு பார்க்க முடியும்.

பாட்டொலிக்கும் பாடகிகள் இல்லை என் பாதையில், படமெடுத்தாடும் ஸ்கிரீன்ஷாட் பாம்புகள் நெளிந்திருக்கின்றன. தென்றலைத் தீண்டியதில்லை நான். ஆனால் டீக்கடைகளை தாண்டியிருக்கிறேன். கேளுங்கள் என் கதையை! நீதிபதி அவர்களே! தீர்ப்பு எழுதுவதற்கு முன் தயவு செய்து கேளுங்கள்.
தமிழ்நாட்டிலே இத்திருவிடத்திலே பிறந்தவன் நான்.

பிறக்க ஒரு நாடு பிழைக்க ஒரு நாடு. தமிழர்களின் தலையெழுத்துக்கு நானென்ன விதிவிலக்கா? தமிழ்நாடு! அது என் வயிரை வளர்த்தது. என்னை அகலவனாக ஆக்கியது. பிரபல டிவிட்டர் கோலத்தில் இருந்த என் தங்கையைக் காண வந்தேன். மோசடி வழக்கிலே ஈடுபட்டு இதோ குற்றவாளிக் கூண்டிலே உங்கள் முன் நிற்கிறாளே இந்த ஜாலக்காரி 'கனலி', இவள் வலையில் விழுந்தவர்களில் நானும் ஒருவன். பால் டப்பாவை பறிகொடுத்தேன். பசியால் மெலிந்தேன் நலிந்தேன், கடைசியில் பைத்தியமாக மாறினேன்.

காண வந்த பிரபல தங்கையைக் கண்டேன். கண்ணற்ற ஓவியமாக. ஆம் கைம்பெண்ணாக, தங்கையின் பெயரோ 'சொப்பனசுந்தரி'. மங்களகரமான பெயர். ஆனால் சொல்லுவதெல்லாம் புரிகிற மாதிரில்லை. செழித்து வளர்ந்த குடும்பம் சீரழிந்துவிட்டது. கையில் டிபி. கண்களிலே நீர். சுந்தரி அலைந்தாள். அவளுக்காக நான் அலைந்தேன்.

அவளுக்கு கருணை காட்டினர் பலர். அவர்களிலே காளையர் சிலர் அவளுடைய காதலைக் கேட்டனர். ட்ரோல்லிங் வழக்கிலே ஈடுபட்டு உங்கள் முன் நிற்கிறானே இக்கொடியவன் வேணு, இவன் பகட்டால் என் தங்கையைக் கெடுக முயன்றான். அவள் ஃபேக் ஐடியில் உள்ள ஆண் என்பதால் விட்டுவிட்டான்!.

விருப்பமானவர்களைக் ப்ளாக் பண்ணுவது விந்தையல்ல. உலக உத்தமர் காந்தி, அஹிம்சா மூர்த்தி ஜீவகாருண்ய சீலர், அவரே நோயால் துடித்துக் கொண்டிருந்த கன்று குட்டியைக் டீஆக்டிவேட் பண்ண சொல்லியிருக்கிறார், அது கஷ்டப்படுவதைக் காணச் சகிக்காமல். அந்த முறையைத்தான் கையாண்டிருக்கிறாள் சொப்பனசுந்தரி. இது எப்படி குற்றமாகும்?

என் தங்கை விட்டுக் கொடுத்திருந்தால், டிவிட்டப்பிலே ஒரு நாள் – மினி டிவிட்டப்பில் ஒருநாள் - மைக்ரோ மினி டிவிட்டப்பில் ஒரு நாள் – இப்படி ஓட்டியிருக்கலாம் நாட்களை. இதைத்தானா இந்த நீதிமன்றம் விரும்புகிறது?

ப்ளாக்கிங் என் தங்கையை மிரட்டியது. பயந்து ஓடினாள். அன்ஃபாலோ என் தங்கையைத் துரத்தியது. மீண்டும் ஓடினாள். Report as Spam என் தங்கையை பயமுறுத்தியது. ஓடினாள் ஓடினாள் ட்விட்டரின் ஓரத்திற்கே ஓடினாள். அந்த ஓட்டத்தைத் தடுத்திருக்கவேண்டும். வாட்டத்தைப் போக்கியிருக்கவேண்டும். இன்று ட்விட்லாங்கரை நீட்டுவோர். செய்தார்களா? வாழவிட்டார்களா என் சொப்பன சுந்தரியை?
அரசு வக்கீல்: குற்றவாளி யார் யார் வழக்கிற்கோ வக்கீலாக மாறுகிறார்.
குணசேகரன்: யார் வழக்கிற்குமில்லை. அதுவும் என் வழக்குதான். என் தங்கையின் வழக்கு. தங்கையின் மானத்தை அழிக்க எண்ணிய மாபாவிக்கு புத்தி புகட்ட அண்ணன் ஓடுவதில் என்ன தவறு? சொப்பன சுந்தரி டீஆக்டிவேட் செய்துகொள்ள முயன்றது ஒரு குற்றம். நான் கனலை ப்ளாக்கியது ஒரு குற்றம்.

இத்தனைக் குற்றங்களுக்கும் யார் காரணம்? சொப்பன சுந்தரியை கஞ்சிக்கில்லாமல் அலையவிட்டது யார் குற்றம்? விதியின் குற்றமா? அல்லது விதியின் பெயரைச் சொல்லி வயிறு வளர்க்கும் வீணர்களின் குற்றமா? பணம் பறிக்கும் கொள்ளைக் கூட்டத்தை வளரவிட்டது யார் குற்றம்? பஞ்சத்தின் குற்றமா? அல்லது பஞ்சத்தை மஞ்சத்திற்கு வரவழைக்கும் வஞ்சகர்களின் குற்றமா? கடவுள் பெயரால் காம லீலைகள் நடத்தும் ஃபேக் ஐடிகளை ட்விட்டரில் நடமாட விட்டது யார் குற்றம்? ஜாக்கின் குற்றமா? அல்லது ஜாக்கின் பெயரைச் சொல்லி காலட்சேபம் நடத்தும் கயவர்களின் குற்றமா?

இக்குற்றங்கள் களையப்படும் வரை ட்விட்லாங்கர்களும் சொப்பனசுந்தரிகளும் குறையப்போவதில்லை.

வாழ்க தமிழ் ட்விட்டர்,
வளர்க கமல் டாட்டர்!

வர்ர்ர்ர்ட்ட்ட்டா
http://tl.gd/n_1rkammm

ப்ளே பாய் prasanna2903 16th May 2013 from TwitLonger

நான் யாரை சொன்னேன் என்று உங்களால் தெளிவாக கூற முடியுமா? எனது ஊரில் எனது ட்விட்டர் நட்பு வட்டத்தில் ரைட்டர் என பெயர் வைத்துள்ள நண்பரை நீங்கள் அறிவீர்களா? அந்த நண்பர் பெண் பெயரில் பல ஐடிக்கள் வைத்திருப்பதை அறிவீர்களா?

எங்களது சந்திப்பில் நாங்கள் அவரை அவரது பெண் ஐடி பெயரை சொல்லி கலாயிப்பது உங்களுக்கு தெரியுமா? உங்களுக்கு வக்கிரமாக தோன்றும் சில செயல்கள் எங்களுக்கு விளையாட்டாக இருப்பதை அறிவீர்களா?
குறைந்தது இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை எங்காவது அருவிக்கு சென்று கூச்சமேயில்லாமல் நாங்கள அனைவரும் ஜட்டியோடு திரிவது உங்களுக்கு தெரியுமா?
நான் அவனை மனதில் வைத்து சொல்லிய சில விசயங்கள் தவறாக புரிந்துகொள்ளப்பட்டது என் தவறல்ல... அதற்க்கு நான் பொறுப்புமல்ல...

http://tl.gd/n_1rkam8u

பொதிகைச் செல்வன் thunukku 16th May 2013 from TwitLonger

@prasanna2903 இதுபோல ஏகப்பட்ட பித்தலாட்டத்தைப் பார்த்துட்டுதான் இங்க உட்காந்துருக்கோம் பாஸ்..

முதல்ல நீங்க ஒண்ணுமே பேசாத மாதிரியும் அவங்கதான் பேசினா மாதிரியும் பேசினீங்க.. நீங்க பேசினதெல்லாம் நான் பார்த்தேன்னு சொன்னதும் ட்ராக் மாறி அவங்களை பேசலை வேற ஒரு பையனை பேனினதா சொல்றீங்க (நீங்க சொல்ற பையன் ரைட்டர் மழலைதானே)..

அது தெரியுமா இது தெரியுமானு கேள்வி கேட்டா பதில் பேசாம போயிடுவாங்கனு நினைச்சீங்களா?

நீங்க டுவீட்டப்புக்கு போயிருந்தப்போ பேசினது ரைட்டர் மழலையில்லை ஒரு பெண் டுவீட்டரைப்பத்திதான்னு உங்க கூட ஜட்டியோட குளிச்ச உங்க நண்பரே உண்மைய ஒத்துகிட்டாரே..

http://www.twitlonger.com/show/n_1rkacd7

இப்ப என்ன சொல்லப்போறீங்க.. அங்க பேசினது அவங்களைப்பத்திதான்.. ஆனா டுவீட் போட்டது அவங்களைப்பத்தியில்லைனா?

அடுத்து எதுனா பொய் பேசுறதுக்கு முன்னாடி யோசிச்சு பேசுங்க பாஸ்.

ஜட்டியோட குளிக்கிறதெல்லாம் ஒரு குவாலிபிகேசனா? ஜட்டியோட குளிக்கிறவங்கல்லாம் அடுத்தவங்க வீட்டுப்பெண்ணை என்ன வேணாலும் பேசலாமா?
பொதுவா குளிக்கிறவங்க எல்லாருமே ஜட்டியோடதானே குளிப்பாங்க?

ரொம்ப மொக்கையா ”அப்ப ஜட்டியோட குளிக்கிறவங்க உங்க வீட்டுப் பொண்ணுகளை பத்தித் தவறாப் பேசலாமா?”னுலாம் நான் கேக்கமாட்டேன்

அன்னிக்கு நீங்கல்லாம் கும்மியடிக்கிறப்பவே ஏன்னு கேட்டுருக்கலாம்.. அந்த பெண் டுவீட்டரே அவங்க டைம்லைன்ல சர்ச்சைய ஏற்படுத்தாதீங்க.. அது அசிங்கம்னு சொன்னதாலேதான் பெரும்பாலானபேரு கண்டுக்கலை.

அத அட்வாண்டேஜா எடுத்துக்கிட்டு மேலும்மேலும் கதை திரிக்க வேண்டாம்..
http://tl.gd/n_1rkan6l

ஆனந்த யாழிசை!! RenugaRain 16th May 2013 from TwitLonger

சொந்தக்காரங்க, தெரிஞ்சவங்க தொல்லை பிடிக்காமத் தான் முகம் தெரியாத த்விட்டேரில் உலவுகிறோம். இங்கயும் மீட்டிங் அது இதுலாம் சரிப்படாது.
தத்துவம் சொன்னமா, நாலு ஆர்டி பண்ணமா, சொந்த கருத்தையும் சுட்டக் கருத்தையும் கலந்து கிரியெட்டிவிட்டிய வளத்தமா, நாலு பேர ப்ளாக் பண்ணமா, பிரபல த்விடேர்களோட சகஜமா பேசுனமா, மென்சன் பாத்து ரிப்ளை பண்ணமா, ப்ளாக் எழுதுனா விளம்பரம் பண்ணமா, அணில் தலை, ராஜா ரகுமான் சண்டை வேடிக்கை பாத்தமான்னு இருக்கணும்.

அத விட்டுட்டு ட்விட்டப் வந்து, எதுக்காக நம்ம ஒருத்தர் கேலி செய்ய வாய்ப்பளிக்கனும்? எனது நெருங்கிய தோழி ஒருவரை சிலிண்டெர் சிலிண்டெர் என்று கிண்டல் செய்கிறார்கள் மக்களே. பெயர் சொல்லப் போவதில்லை. பிறகு தேவை இல்லாமல் பொரணி வேறு பேசினார்கள். ஆதாரம் உள்ளது மக்களே.
விஜயகாந்த் பேசுவது போல் மக்களே என்று சொல்கிறேன் என்று பார்க்கிறீர்களா? காரணம் உள்ளது மக்களே.

சினிமாக்கு செல்வோம். ஆம். அங்கே எங்களை அறிந்தவர் யாரும் இல்லை. சினிமாக்கு செல்வதைப் போலத் தான் நாங்கள் த்விட்டருக்கு வருகிறோம். ட்விட்டப் வருவது அடுத்தவர் வீட்டிற்கு சென்று டிவி பார்ப்பதைப் போன்றது.. புரிந்ததா நண்பர்களே.

சம்சாரம் அது மின்சாரம் படத்தில் லக்ஷ்மி சொல்வது போல, நான் சௌக்கியம், நீங்க சௌக்கியமா? என்று கேட்டு விட்டு போயிட்டே இருக்க வேண்டும் மக்களே.

சந்திப்பது, உரையாடுவது எல்லாமே அவரவர் எல்லைகளுக்குட்பட்டது. சமூக ஈடுபாடுள்ள பெண்கள் தன்னைப் பற்றிய பேச்சுக்களில் கவலைப் படாத பெண்கள் கலந்து கொள்ளலாம். அப்படிப் பட்ட தைரிய சாலிகளை இந்த பெண்கள் சமூகம் தலை தாழ்ந்து முன் மாதிரிகளாகப் பார்க்கும்.

நான் சொன்ன அனைத்துமே இந்த "ரேணுகா"வின் கருத்து மட்டுமே. யாருக்காவது புரியவில்லை என்றால் மற்றொரு த்விட்லோங்கேரில் சந்திக்கிறேன்.

நன்றி வணக்கம்
http://tl.gd/n_1rkamo1

Selva Ganapathy aidselva 16th May 2013 from TwitLonger

இப்போ போட்டாதான் உண்டு... நான் என்ன சொல்ல வர்றேன்னா.. போங்கய்யா/போங்கம்மா போய் புள்ள குட்டிகள படிக்க வைங்க்.....

Eureka Schools - Design a Logo Contest

About Eureka Schools

Eureka Nursery and Primary Schools were founded in 2006. Our vision is to provide high quality affordable education to rural children. Our schools rest on the following pillars – meaningful methodology, attractive teaching learning materials, motivated teachers, focus on learning outcomes of every child and child-friendly infrastructure. In addition to academics, we focus on extra-curricular skills such as dance, yoga, sport and art & craft. Our schools demonstrate our firm belief that every child, irrespective of his/her social & financial background has the potential to achieve, provided he/she is given the right inputs.

Eureka Schools are managed by AID INDIA, started in 1996 by IIT & BITS alumni who quit corporate careers to work fulltime towards the mission of quality education for every poor child in India.

Awards

Eureka School received the Design Share Merit Award for innovative and child-friendly design.
AID won the Times of India Social Impact Award for Global Contribution to India in 2011.


Logo Theme

The logo should represent one or more of the following themes – ‘child-centered education’, ‘learning is fun’, ‘every child matters’.

Special requirements

4-colour vector image file - eps, psd, ai or cdr AND a PNG file
Dimensions – 6 inches by 4 inches
Text ‘Eureka School’ to be included in logo
Come up with a creative tagline.
Logo should work with or without tagline.
Should be vibrant
Coverage

The Eureka School logo will appear on our children’s school uniforms, notebooks, school diary, ID cards and other school material.

Terms and conditions

Participants can be of any age.
The content used in the logo must be original.
Each contestant can submit a maximum of 2 entries.
The copyright of the winning logo will be owned by Eureka Schools and AID INDIA.
Criteria for selecting the winning logo

A panel of judges will select the winning logo.
Entries with the maximum number of Facebook ‘likes’ have a better advantage.
The decision of the panel is final and binding on all contestants.

Process

Create your entry for the Eureka School logo.
Email it as a PNG file to eurekachild@aidindia.in with the following details on or before May 19, 2013. Name, Date of birth, Occupation, E-mail id Declaration: I undertake that the content submitted by me is original content to the best of my knowledge. Append your name and date.
You will receive a confirmation email and your entry will be posted on Eureka Child's Facebook page.
Share your logo posted on Eureka Child's Facebook page and solicit as many ‘likes’ as you can.
The winning logo will be finalized and announced on May 21, 2013.
The winner will be contacted with details of prize distribution.
Special Note: School students can submit photographed / scanned versions of hand-drawn entries. In addition to the basic info requirement, mention your class and your school name, specifying your city/town.
http://tl.gd/n_1rkamtp

சுதேசி ravan181 16th May 2013 from TwitLonger

எதோ என்னால் முடிஞ்சது ஏழைக்கேத்த எள்ளுருண்டை நானும் எழுதி இருக்கேன்

உறவுகள் மேம்பட .....

குடும்பத்திலும் சரி அலுவலகத்திலும் சரி மனித உறவுகளில் விரிசல்கள் ஏற்படாமல் இருக்கவும், ஏற்பட்ட விரிசல்கள் மேலும் பெரிதாகாமல் இருக்க

1. நானே பெரியவன் நானே சிறந்தவன் என்ற அகந்தையை விடுங்கள்.

2. அர்த்தமில்லாமலும் பின் விளைவு அறியாமலும் பேசிக் கொண்டிருப்பதை விடுங்கள்.

3. எந்த விஷயத்தையும் பிரச்சனையையும் நாசுக்காக கையாளுங்கள், விட்டுக்கொடுங்கள்.

4. சில நேரங்களில் சில சங்கடங்களை சகித்துத் தான் ஆகவேண்டும் என்று உணருங்கள்.

5. நீங்கள் சொன்னதே சரி செய்ததே சரி என்று வாதாடாதீர்கள். குறுகிய மனப்பான்மையை விட்டொழியுங்கள்.

6. உண்மை எது பொய் எது என்று விசாரிக்காமல் இங்கே கேட்டதை அங்கே சொல்வதையும் அங்கே கேட்டதை இங்கே சொல்வதையும் விடுங்கள்.

7. மற்றவர்களை விட உங்களையே எப்போதும் உயர்த்தி நினைத்து கர்வப்படாதீர்கள்.

8. அளவுக்கதிகமாய், தேவைக்கதிகமாய் ஆசைப்படாதீர்கள்.

9. எல்லோரிடத்திலும் எல்லா விஷயங்களையும், அவர்களுக்கு சம்பந்தம் உண்டோ, இல்லையோ சொல்லிக் கொண்டிருக்காதீர்கள்.

10. கேள்விப்படுகிற எல்லா விஷயங்களையும் நம்பிவிடாதீர்கள்.

11. அற்ப விஷயங்களைப் பெரிது படுத்தாதீர்கள்.

12. உங்கள் கருத்துக்களில் உடும்புப் பிடியாய் இல்லாமல், கொஞ்சம் தளர்த்திக் கொள்ளுங்கள்.

13. மற்றவர் கருத்துக்களில் செயல்களை நடக்கின்ற நிகழ்ச்சிகளைத் தவறாக புரிந்துக் கொள்ளாதீர்கள்.

14. மற்றவர்களுக்குரிய மரியாதை காட்டவும், இனிய இதமான சொற்களைப் பயன் படுத்தவும் தவறாதீர்கள்.

15. புன்முறுவல் காட்டவும் சிற்சில அன்புச் சொற்களைச் சொல்லவும் கூட நேரமில்லாதது போல் நடந்துக் கொள்ளாதீர்கள்.

16. பேச்சிலும் நடத்தையிலும் பண்பில்லாத வார்த்தைகளையும் தேவையில்லாத மிடுக்கையும் காட்டுவதைத் தவிர்த்து அடக்கத்தையும் பண்பையும் காட்டுங்கள்.

17. அவ்வப்போது நேரில் சந்தித்து மனம் திறந்து பேசுங்கள்.

18. பிரச்சனைகள் ஏற்படும் போது அடுத்தவர் முதலில் இறங்கி வரவேண்டும் என்று காத்திருக்காமல் நீங்களே பேச்சைத்துவக்க முன் வாருங்கள்.

http://tl.gd/n_1rkamu9

சேந்தன் அமுதன் Sakthivel_twitt 16th May 2013 from TwitLonger

கடந்த 2 நாட்களா ட்விட்டரில் நடக்கும் பிரச்சனை அனைவரையும் குழப்பத்தில் விட்டுள்ளது... அது பற்றி நான் என் மனசுக்கு தோனியதை சொல்லிடுறேன்...

அவங்க செய்தது தப்பு தான். அதை நியாயப்படுத்த விரும்பல.. இவங்க செய்தது தப்பு தான்... அதையும் நியாயப்படுத்த விரும்பல.. அவங்க அப்படி சொல்லி இருக்கக்கூடாது... இவங்களும் இப்படி சொல்லி இருக்க கூடாது... சொல்லுறதுக்கு அவங்களுக்கு என்ன உரிமை இருக்கு? இல்ல இவங்களுக்கு தான் என்ன உரிமை இருக்கு? இவங்கள பத்தி அவங்களுக்கு என்ன தெரியும்? அவங்கள பத்தி இவங்களுக்கு என்ன தெரியும்? இது இவங்களோட தனிப்பட்ட விஷயம். அதே மாதிரி அது அவங்களோட தனிப்பட்ட விஷயம். இதுல ஏன் எவங்க எவங்களோ கருத்து சொல்லணும். இவங்களுக்கு அவங்க ஏன் பொதுவுல விளக்கம் கொடுக்கணும்? அவங்க இவங்களுக்கு ஏன் பொதுவுல விளக்கம் கொடுக்கணும். மாறி மாறி பேசி... மாறி மாறி கேள்வி கேட்டு...

எல்லாருக்கும் எல்லாம் தெரியாது. எதுவும் தெரியாமலும் இருக்காது. இப்ப இவங்களும்,அவங்களும் உங்க கருத்தை கேட்டாங்களா? இதெல்லாம் பேச நீங்க யாரு? இதெல்லாம் பேச நான் யாரு? நாம யாரு? #ISNKK

இப்ப என் பிரச்சனை என்னன்னா... எதுக்கோ என் ட்விட்டர் அக்கவுண்ட்க்கு பூட்டு போட்டேன்... ஆனா அதோட காரணம் நிறைய டிவிட்லாங்கர் படிச்சுதுல மறந்து போச்சு... இப்ப என் மனசுக்கிட்ட சண்டை போட்டு பஞ்சாயத்து பண்ணி நிறைய டிவிட்லாங்கர் போட்டா உண்மை காரணம் தெரிஞ்சுடுமா? #டவுட்டு...



http://tl.gd/n_1rkampg

Luckykrishna 16th May 2013 from TwitLonger

யோக்கியனாக, பெண்களை ஆராதிப்பவனாக இருந்துதான் ஆகவேண்டும் என்றெல்லாம் அவசியமில்லை. ஆனால் பொது இடத்திலோ, சமூக வலைத்தளத்திலோ பெண்களைப் பற்றிப் பேசும்போது கொஞ்சம் எச்சரிக்கையாகவே இருக்க வேண்டும். இந்த கருத்தை அறத்தின் அடிப்படையில் எல்லாம் சொல்லவில்லை. ஏனெனில் அறம் என்பது ஆளாளுக்கு மாறுபடக்கூடிய தன்மை கொண்டது. பின்விளைவுகள் கொஞ்சம் எகனைமொகனையாக அமையக்கூடிய கருத்து என்றால் அதை தவிர்த்துவிடுவதே மேல். ஏனெனில் பரம அயோக்கியன் கூட தன் பெயர் பெண்கள் விஷயத்தில் கெடுவதை விரும்புவதில்லை. சமூகம் மன்னிக்கவே மன்னிக்காத விஷயமாக பெண்களுக்கு எதிரான விஷயங்கள் அமைந்திருக்கிறது. நல்லவன் என்று யாருமில்லை. ஆனால் இந்த ஒரு விஷயத்தில் நல்லவனாக நடிப்பவனுக்கு, எதிர்காலத்தில் தீங்கு எதுவுமில்லை.
http://tl.gd/n_1rkamb1

Wednesday, May 15, 2013

போக்கிரி ipokkiri 15th May 2013 from TwitLonger

பெண் என்றால் இளப்பமா? படவிமர்சனம். இயக்குநர் ஜாக். இனி கதையை பார்ப்போம்.

ஒரு ஆண், ஒரு பெண். இணையத்தில் சந்திக்கிறார்கள். அலைபேசி எண்களை பகிர்ந்துகொண்டு, குறுஞ்செய்தி மூலம் பேசிக்கொள்கிறார்கள். ஒருநாள் நேரில் சந்தித்தால் என்ன? நாள் பார்த்து நேரில் சந்தித்துக்கொள்கிறார்கள். நட்பை பரிமாறிக்கொள்கிறார்கள்.

இது நடந்து சில நாட்களில் டிவிட்டப் நடக்கிறது. அதில் ஆண் தனது 4 நண்பர்களுடன் கும்மாளமாக பெண்ணைப்பற்றி இழிவாக பேசிவிடுகிறார். அது எப்படியோ அந்தப்பெண்ணுக்கு தெரியவந்து துடிதுடித்து போகிறார். வம்பை விலை கொடுத்து வாங்கிவிட்டோமோ என்ற உணர்வில், அந்த ஆணுக்கு மென்ஷனிட்டு கடும் சொற்களால் அர்ச்சனை செய்கிறார். பின்னர், உள்ளுணர்வு ஏதோ சொல்ல ஐந்து நிமிடத்தில் அழித்தும்விடுகிறார். ஆனாலும் மனதுக்குள், அந்த வன்மத்தீ சுழன்று கொண்டிருக்கிறது பெண்ணுக்கு.

இந்த நிலையில் அந்த ஆணுக்கு ஒரு நெருக்கடி. நண்பனின் தங்கை விபத்தில் சிக்கிவிட, தனது தங்கையாக பாவித்து டிவிட்டரில் ஓர் உதவி கோருகிறார். ரத்ததானம். இதனை பார்த்த அந்த பெண், சாகட்டும், செத்து ஒழியட்டும். என்னை அவதூறு சொன்னாயே என்று ஒரு கருத்தை உதிர்க்கிறார். பின்னர் எதிர்ப்பு வலுத்ததும், அந்தக்கருத்தையும் அழிக்கிறார். அந்த ஆண் நெருக்கடியில் இருந்ததால், அவரின் நண்பர் ஒரு குறிப்பிட்ட மாஸ்க்குக்குள் புகுந்து, அந்த பெண்ணை சராமாரியாக வெளுத்து வாங்குகிறார். ஏக வசனம். ஒரே வித்தியாசம், அப்பெண் ஆங்கிலத்தில் வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார். இவரோ சுந்தரத்தமிழில், மென்ஷனிடாமல் பலமாக பலமுறை வாழ்த்தியிருந்தார். இவர் ஏற்கனவே ஒரு எழுத்தாளர் விசிறிகிளப்மீது இதேபோல் வாழ்த்திய பின்னணியை உடைய கேரக்டரை கடந்த படத்தில் செய்தவர்தான். இந்த பெண்ணும் எழுத்தாளர் என்ற அடைமொழியுடன் வலம் வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த விவகாரத்தை அறைகுறையாய் அறிந்த சில பதர்கள் (எஸ் மீ) கண்ணியத்தை பற்றி வகுப்பெடுக்க, ஷாலினியும், சச்சினும் அழைத்து வரப்படுகிறார்கள். வார்த்தைகள் உபயோகத்தை பற்றி கூறினால், ஆண்-பெண் யாருக்கு வெற்றி, மாஸ் என்ற ரீதியில் செல்கிறது ஊரார் வழக்கு.

இதற்குமுன்னர் இது போன்ற ஒரு சம்பவத்தில் மெளனமாக இருந்தவர்களை கூடவே இருந்தியே செவ்வாழ நீயாவது சொல்லியிருக்கக்கூடாது என்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அப்புகார், அதற்குப்பின்னர் நடந்த கைது நியாயமா, அநியாயமா என்பது நிரூபிக்கப்படாத நிலையில் சில அறிவுஜீவிகள் அது நியாயம் என்ற தீர்ப்பை வழங்கியதும் குறிப்பிடத்தக்கது.

இதெல்லாம் நமது கதைக்கு தேவையற்றது.

அழுது விடிகிறது டிவிட்டர். காலையில் ஒரு டிவிட்லாங்கரில் பெண்ணின் விளக்கம் வந்திருந்தது. மன்னிப்பு கேட்பது மாதிரியிருந்தது, தவறு என்று ஒப்புக்கொள்வது போன்றே இருந்தது, அவைகளை அழித்ததால் அதற்கு கவலை கொண்டதாய் அர்த்தம் எடுத்துக் கொள்ளவேண்டிய தொணியில் இருந்தது. ஆனாலும், தனது நிலையை நியாயப்படுத்தியே இருந்தது.

ஆணின் நண்பன் டிவிட்லாங்கரும் வந்தது. அது நான்தான் என்று ஒப்புக்கொண்டு, அப்பெண் அப்படிப்பேசியதால் நானும்... என்ற தொணியில், இனியும் அப்படி பேசினால், அப்படியே செய்வோம் என்றும் கூறப்பட்டிருந்தது.

பின்னர் அந்த ஆணின் டிவிட்லாங்கர். மன்னிக்க, நான் பேசியது தவறுதான், ஆனால் பெண் பேசியதும் தவறுதான், நண்பர் பேசியதற்காக நான் மன்னிப்பு கோருகிறேன். இவை அனைத்தும் பொதுவெளியில் நடந்தேறியது. ஆனால் ஆணோ, இதற்காக ரியாக்சன் கொடுத்த ஊரார் மற்றும் பஞ்சாயத்தார்களை, வேடிக்கை பார்த்தவர்களை வெகுவாக கடிந்து கொண்டார். இது எங்கள் இருவருக்குமான பிரச்சனை, நாங்களே தீர்த்துக் கொள்வோம் சுபம் என முடித்துவிட்டார்.

இக்கதை பல டிவிஸ்டுகளை கொண்டுள்ளது. இதில் எனக்கும் சிறுபாத்திரம் அளித்த டைரக்டர் ஜாக்கை உளமாற பாராட்டுகிறேன். ஆண் கேரக்டரை இளகிய மனதாக, மன்னிப்பு கேட்பவராகவும் தவறை திருத்திக்கொள்பவராகவும், மன்னிப்பு கோரும் மாமனிதராகவும் ஜாக் வடிவமைத்து இருக்கிறார்.

பெண் ஆத்திரம் கொண்டு வீட்டைப்பூட்டிக் கொண்டதையும், பெண்புத்தி பின்புத்தி என்பதற்கு இணங்க, கருத்தை உதிர்த்துவிட்டு, பின்னர் அதனை வாபஸ் பெறுபவராக காட்டியிருக்கிறார். இவரது போக்கு பிடிக்காமல் பல ஆண்கள் தியேட்டரில் திரையை கிழிக்கும் அளவுக்கு போனது அக்கதாப்பாத்திரம் சிறப்பாக பாத்திரம் ஏற்று நடித்தற்கான வெற்றி எனலாம். தேசிய விருது உறுதி.

ஆணின் நண்பர், மதுரை வழக்கு மொழியில் பிய்த்து உதறியிருக்கிறார். வசனங்களுக்கு யூ சர்டிஃபிகேட் எப்படி கிடைத்தது என்பது வியப்புதான். படம் வெளிவந்தபின் மாதர் கூட்டங்கள் போராட்டம் செய்திருப்பது, இக்கூற்றை நிரூபிக்கிறது.

இப்படத்தில் சில பாடங்களை ஆங்காங்கே சொல்லியிருக்கிறார் டைரக்டர் ஜாக்.

1. இணையத்தில் என்னதான் நல்லவனாக இருந்தாலும் முகம் தெரியாத ஒருவனை சந்திப்பது ஆபத்தில் முடியும்.
2. யாகாவாராயினும் நாகாக்க என்பதை விளக்கியிருக்கிறார்
3. பெண்களை தவறாக பேசினால், உடனே நம் வீட்டுப்பெண்களுக்கு நெருக்கடி வரலாம், அப்போது சமுதாயம் எவ்வாறு ரியாக்ட் செய்யும் என்பதை துல்லியப்படுத்தியிருக்கிறார்.

டைரக்டர் ஜாக்குக்கு சில கேள்விகள்

1. ஆண் மற்றும் 4 நண்பர்கள் குதூகலமாக பேசிய அந்த 'ஏ'த்தனமான வார்த்தைகள் எப்படி பெண்ணுக்கு போய் சேர்ந்தது என்பது விளங்கவில்லை. அந்த நால்வரில் ஒரு எட்டப்பன் யார் என்பதை கடைசிவரை சொல்லவேயில்லை.
2. நண்பனாக வரும் கேரக்டர், கடந்த படத்திலும் அதே கேரக்டரை செய்திருப்பதால் சிறிது அலுப்பு தட்டிவிடுகிறது. ஏன் இதை யோசிக்கவில்லை?
3. ரைட்டர் என்ற பதத்தின் மீதுள்ள நண்பனின் வன்மத்தை கடந்த படத்திலும், இந்த படத்திலும் விளக்காமல் சுபம் போட்டது ஏன்?

கடைசியாக ஆணின் விளக்கத்துக்கு பிறகாக பெண்ணின் ரியாக்சன் என்பதை பார்ட்-2 வாக படமெடுக்கும் எண்ணம் உள்ளதா என்று தெரியவில்லை. குடும்பத்துடன்-குழந்தைகளுடன் பார்க்கக்கூடிய படமில்லை. இந்தியத்தொலைக்காட்சிகளில் வராது, வரவும் முடியாது. எனவே குடும்பத்தில் உள்ளவர், தனித்தனியாக பார்ப்பது உத்தமம். "'பெண் என்றால் இளப்பமா?" - ஜாக்கின் மிகச்சிறந்த படைப்பு என்பதில் ஐயமேயில்லை.
http://tl.gd/n_1rkafva

Kirukkan KirukkanJagu 15th May 2013 from TwitLonger


தமிழில் டீக்கு "தேநீர்',
காபிக்கு "குளம்பி' என்று
பெரும்பாலோருக்குத் தெரியும்.
மற்ற சில முக்கியமான உணவு
பொருட்களின் தமிழ்ப்பெயர்கள் அறிவோம்!

சப்பாத்தி - கோந்தடை

புரோட்டா - புரியடை

நூடுல்ஸ் - குழைமா

கிச்சடி - காய்சோறு, காய்மா

கேக் - கட்டிகை, கடினி

சமோசா - கறிப்பொதி, முறுகி

பாயசம் - பாற்கன்னல்

சாம்பார் - பருப்பு குழம்பு, மென்குழம்பு

பஜ்ஜி - தோய்ச்சி, மாவேச்சி

பொறை - வறக்கை

கேசரி - செழும்பம், பழும்பம்

குருமா - கூட்டாளம்

ஐஸ்கிரீம் - பனிக்குழைவு

சோடா - காலகம்

ஜாங்கிரி - முறுக்கினி

ரோஸ்மில்க் - முளரிப்பால்

சட்னி - அரைப்பம், துவையல்

கூல்ட்ரிங்க்ஸ் - குளிர் குடிப்பு

பிஸ்கட் - ஈரட்டி, மாச்சில்

போண்டா - உழுந்தை

ஸர்பத் - நறுமட்டு

சோமாஸ் - பிறைமடி

பப்ஸ் - புடைச்சி

பன் - மெதுவன்

ரோஸ்டு - முறுவல்

லட்டு - கோளினி

புரூட் சாலட் - பழக்கூட்டு

சனியன் சகட SelvaaRocky 15th May 2013 from TwitLonger


முதலில் சொல்லிக்கொள்ள விரும்புவது நேற்றிரவு, “தக்காளி பாய்ஸ்” ஐடியில் இருந்து (யாருக்கும் மென்ஷன் போடாமல்) வசை பாடி வந்த கீச்சுக்கள் அனைத்தும் நான் (@SelvaaRocky) சுயநினைவுடன் மது அருந்தாமல் (பழக்கம் இல்லை) கீச்சியது.

ட்விட்டர் வேண்டாம் என்று வெளிநடப்பு செய்து ஒரு மாதம் ஆகிப்போச்சு, நேற்றிரவு தற்செயலாக வேடிக்கை பார்க்க வந்த என் கண்ணில் பட்டதுதான், நான் வசைபாடியதாக குறிப்பிடும் பெண்ணின் கீச்சு; “ஒரு நாதாரியின் அக்காவிற்கு விபத்து, ஐயஹோ, என்னே சந்தோசம், சாகட்டும்!!! Godbless! Godbless! Peace! WhiteFlag! ROFL!” இதை பார்த்ததும் சற்று குழம்பிய நான் பின்பு தெரிந்து கொண்டது; நேற்று முன்தினம் என் நண்பனின் அக்கா விபத்துக்குள்ளாகி அதே இடத்தில் அம்மாவையும் இழந்து மருத்துவமனையில் அவசர பிரிவில் இருக்கும் பெண்ணிற்கு தான் அந்த சாபம் என்று. இதை நண்பனிடம் பகிர்ந்தால் அவன் அழுவான் என்று அவனிடம் சொல்லாமல் வேறு யாரிடமும் சொல்லாமல் தக்காளி பாய்ஸ் ஐடியில் நுழைந்து நானே கீச்சியதுதான் அந்த வசை பாடல்.

அந்த கீச்சை பார்த்ததும் ஒரு தம்பியாகவோ, அண்ணனாகவோ, அல்லாமல் ஒரு சராசரி மனிதனாக அந்நேரம் வந்தது கோவமும் ஆத்திரமும் தான். உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும் பெண்ணை சாகட்டும் என்று சொல்வது உங்களுக்கு இயல்பாக, பொழுதுபோக்காக இருக்கலாம், ஆனால் எனக்கு அல்ல.

அண்ணன், தம்பி ஒவ்வொருத்தனுக்கும் வர வேண்டிய நியாயமான கோவமாகத்தான் அதை நான் பார்க்கிறேன். நண்பனின் அக்கா என்று இல்லை யாராக இருந்திருந்தாலும் இதே மாதிரி தான் நான் திட்டியிருப்பேன், இனிமேல் பார்த்தாலும் அப்பிடித்தான் திட்டுவேன்.

முதலில் மென்ஷன் போடாமல் திட்டினேன், பிறகு அந்த பெண்ணிற்கு மென்ஷன் போட்டு கேட்டது இதுதான்; “உனக்கு அறிவே இல்லையா” இருந்தால் ஆம் என்று சொல்லியிருக்கலாம், இல்லையென்றால், இல்லை என்றிருக்கலாம். ஆனால் அதற்கு வந்த பதில்; “டேய் போடா நாயே, நீதாண்டா நீ சொன்னதெல்லாம், உங்கக்கா செத்து தாண்டா போவா.... நீ பேசினா எல்லாமே நீ தான்” இவ்வளவுதான் நடந்தது.

மேற்கூறிய பெண்ணிடம் எனக்கு எந்த பகையும் கிடையாது, சில மாதங்கள் முன்னாடி ட்விட்டரில் பாலோ பண்ணினாங்க நானும் பாலோ பண்ணினேன். இரண்டு மூன்று முறை மென்ஷன் போட்டு பேசியிருப்போம். இதுவரை எந்த தவறான பேச்சும் நான் உதிர்த்ததில்லை, அவுங்களும் தான்.

ஆனால் அதற்கு அந்த பெண்ணின் காரணம் அறிந்தபோது மிகவும் வியப்பாக இருந்தது, இரண்டு நாட்கள் முன்னாள் இரவில் என் நண்பர்களுடன் சண்டையாம் அதில் அவர்கள் அசிங்கமாக பேசினார்களாம். ஆனால் அப்போது அந்த பெண்ணும், இன்னொரு பெண்ணும் சேர்ந்து “பக்கிங் பாஸ்கர்” சொன்னதையும் அவர்களின் மனைவி வேறு ஒருவனுடன் சேர்த்து சொன்னதையும், மேலும் ஆங்கிலத்தில் அசிங்கமாக பேசியதையும் யாம் அறிவோம் (அது ஆங்கிலத்தில் பேசியதால் கெட்ட வார்த்தை இல்லையாம், கணக்கில் கொள்ள பட மாட்டாதாம்). (ஆதாரமும் இருக்கு) அதை தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு பின் மீண்டும் வாய் தவறி உதிர்த்ததுதான் அந்த பெண்ணிற்கு சாபம் குடுத்த வார்த்தைகளாம்.

இதுதான் காரணம் என்றால் எனக்கும் அதேதான் காரணம், ஆத்திரத்தில் வாய் தவறி...... ஆனால் எனக்கு வாயும் தவறவில்லை, கையும் தவறவில்லை.

அவர்களுடன் சண்டை என்றால் அந்த சண்டையை அவர்களுடன் அதே இடத்தில் முடித்திருக்க வேண்டும். (ஆண்கள் முடித்து விட்டார்கள், மறந்தும் விட்டார்கள்) ஆனால் இந்த பெண்ணின் பழிவாங்கும் படலம் தான் இங்கு உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் பெண்ணின் உயிருக்கு குடுத்த சாபம் “அவ செத்துதான் போவா”
நான் எழுதியதில் ஒரு வரியை மறுக்க நேரிட்டால் கூட ஆதாரத்துடன் வெளியிட நான் தயார்.

சனியன் சகட 

Senthil Nathan senthilchn 15th May 2013 from TwitLonger


ட்வீட்டப்பிற்கு ஏன் பெண்கள் வரவில்லை. அவர்கள் வரமாட்டார்கள் வரவேண்டாம் என நிறையவே பெண்களுக்கு ஆதரவு குரல்கள். உங்கள் வீட்டுப் பெண்களை ஏன் அழைத்து வரக்கூடாது என்பது போன்ற ஆச்சர்யப்படுத்தும் கேள்விகள். சூப்பர்.
இது குடும்ப விழா இல்லை. இருந்தும் ஒரு சிலர் அழைத்து வந்திருக்கிறார்கள். அது நல்ல ஆரம்பம்.

இது சரியா தவறான்னுலாம் எனகு தெரியாது. மனதில் தோன்றியது சொல்லியிருக்கிறேன்.

வந்தால் கேலி செய்வார்கள். போட்டோ எடுப்பார்கள். சண்டை போடுவார்கள். தினமும் ரோட்டில் இறங்கி நடக்கிறோம். பலவிதமான மனிதர்களை அங்கு பார்க்கிறோம். அங்கு சில நாள் சிலர் நம்மை கேலி செய்கிறார்கள். முடிந்தால் எதிர்க்கிறோம். முடியாவிட்டால் தவிர்த்துவிட்டு நம் வேலையை பார்க்கிறோம். உடன் துணைக்கு யாராவது இருந்தால் முறையிடுகிறோம். ஆனால் சாலையில் இறங்கிப் போவதை நிறுத்திவிடுவதில்லை. சரி அது சாலை என்கிறீர்களா.

ஒரு விசேஷத்திற்கு போகிறோம். ஒரு திருமணத்திற்கு என வைத்துக்கொள்வோம். அங்கு வந்திருக்கும் அனைத்து உறவினர்களையும் நமக்கு தெரிந்திருக்காது. அதில் நன் விரோதிகளாகிவிட்ட சில உறவினர்களும் இருப்பார்கள். நம்மை பற்றி புறம் பேசுபவர்களும் பொறாமை படுபவர்களும் இருப்பார்கள். இந்த காரணங்களை சொல்லி நாம் யாரும் விசேஷங்களுக்கு செல்வதை தவிர்ப்பதில்லை. சரி இது உறவினர்கள் அல்லது தெரிந்தவர்களின் விசேஷம் என்கிறீர்களா.

ஒரு திரைப்பட்த்திற்கு நண்பர்களுடன் போகிறீர்கள். வீட்டில் சொல்லிவிட்டோ அல்லது சொல்லாமலோ. அங்கு நாலு பேர் குடித்துவிட்டு ரகளை செய்யும் வாய்ப்புகள் அதிகம் இருப்பது தெரிந்தேதான் போகிறீர்கள். எந்த நம்பிக்கையில் போகிறீர்கள். 4 பேர் அப்படி இருந்தாலும் இந்த சமூகம் நம்மை அவர்களிடம் இருந்து காக்கும் என எண்ணத்திலோ அல்லது அவர்கள் நால்வரின் செயலை கடந்து போய்விடும் மனப்பான்மையிட்னோ அல்லது ஏதோ ஒன்று தரும் துணிவில் போகிறீர்கள். அப்படி ஒரு கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாகினாலும் அடுத்த முறை திரைப்படங்களுக்கு போவதை நாம் தவிர்ப்பதில்லை. எந்த நிகழ்ச்சியிலும் அசம்பாவிதம் நிகழலாம்.

நிலை இப்படி இருக்க பயமாக இருந்தது. வீட்டில் விட மாட்டார்கள் என எல்லோரும் ஒட்டு மொத்தமாய் ஒதுங்கி நின்றது சற்று மனதை உறுத்துகிறது. நாங்களெல்லாம் அத்தனை மோசமானவர்களா. அல்லது எங்கள் தோழமைகளுக்கு ஒரு பாதுகாப்பான உணர்வை நம்பிக்கையை எங்களில் ஒரு சிலரால்கூடவா கொடுக்க முடியவில்லை. 2012 இல் திருநாவு மற்றும் ஒரு பெயர் தெரியாத கீச்சரின் மனவியையும் சேர்த்து 8 பெண்கள் வந்திருந்தனர். (2 கீச்சர்களின் மனைவியர், அமாஸ், ராஜகுமாரி, ரியல்ரேனு, கீது ட்விட்ஸ், சுபாரைட்டர், ’வாழையின்’ ஏஜேதிவ்யா ). அவர்களுக்குள் பேசி திட்டமிட்டு ஒன்றாய் வந்தார்கள் மூவர். அமாஸ் எங்கள் மீது வைத்த நம்பிக்கைக்கு நெகிழ்ச்சி. சுபாரைட்டர் அவரது கணவர் பத்திரிக்கையாளர் பீர் முகமதுவுடன் வந்திருந்தார். திவ்யா வாழை நண்பர்களுடன் வந்திருந்தார்.

யாரையும் குறைகூற இதை எழுதவில்லை. வாதத்திற்காகவும் எழுதவில்லை. இது எங்களின் விருப்பம். தாய் என்கிறார்கள், அக்கா என்கிறார்கள். தங்கை என்கிறார்கள் அதெல்லாம் அர்த்தமற்றதாகிவிடுகின்றன. சமூக வலை தளங்கள் இணையத்தோடு நின்றுவிடுவதில்லை. பல நல்ல விஷயங்களை நிஜத்தில் நிகழ அது உறுதுணையாக இருக்கிறது. நமது தமிழ் சீச்சுலகிலேயே அதற்குரிய நிறைய உதாரணங்கள் எல்லோரும் அறிய நடக்கின்றன.

இது ஏதோ பெண்களுகாகவோ பெண் நட்புகளுக்காகவோ ஏங்கி எழுதப்பட்டதும் இல்லை. எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு எனக்கு தெரிந்த விளக்கங்களை சொல்ல முற்பட்டிருக்கிறேன். இந்த கோணத்தில் இருந்தும் இதை பாருங்கள். நாங்களும் உங்கள் வீட்டில் இருக்கும் ஆண்களை போன்ற சாதாரண மனிதர்கள்தான். வர விருப்பமில்லை என்பவர்களை பற்றி இங்கு பேசவில்லை. அல்லது அனுபதி கிடைக்காதர்களை பற்றி பேசவில்லை. முடியும் ஆனால் பயமாய் இருக்கிறது என்பவர்களுக்காக மட்டுமே இந்த வரிகள் மொக்கைகள். அடுத்த ட்வீட்டப்பில் ஒரு சில பெண் ட்வீப்புகளையாவது எதிர்பார்க்கும் ஒரு சராசரி சக ட்விட்டர். மகிழ்ந்திருப்போம் மனநிறைவுடன். 

பரிசல்காரன் iParisal TwitLonger


பெண்கள் இணையவெளியில் பாதுகாப்பற்ற தன்மையை உணர்கிறார்களா’ என்று கேட்டால் ஆம் என்றுதான் சொல்ல வேண்டும்.

மெகா ட்வீட் அப்பிற்குப் பிறகு இரு நாட்களாக இந்தக் கேள்வி என்னைக் குடைந்து கொண்டிருக்கிறது. ஒரு நண்பரை, சக இணையப்பயனாளியை ‘இவன் பாதுகாப்பானவன்’ என்று நம்பிச் சந்திக்கும் தோழிகள் பலரையும் எனக்குத் தெரியும். ஆனால் ஒரு பொது நிகழ்வென்றால் வர இவர்கள் தயங்குவதற்கு நேரடியாகவோ - மறைமுகமாகவோ ஆண்கள்தான் காரணமா?

என்னதான், ‘ஆண்களுக்குப் பெண் சரிநிகர் சமானம், நாங்களும் உங்களுக்கொன்றும் சளைத்தவர்கள் அல்ல’ என்று பேசும், இயல்பிலேயே அவ்வாறு இருக்கும் பெண்களில் ஒருவர்கூடவா ட்விட் அப்பிற்கு வரமுடியவில்லை?

தோழர் ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்த போது சொன்னார்: “அவங்க பயப்படறது 100% கரெக்ட்தான் பரிசல்” என்றார். ஆம். இன்னும் அவங்களுக்கு அந்த பாதுகாப்பான உணர்வை - Secured Feeling - நாம் தரவில்லை.

இந்த ட்வீட் அப் என்ற ஒரு நிகழ்விற்காக மட்டும் சொல்லவில்லை. அந்த ட்வீட் அப்பில் கலந்து கொண்ட ஒவ்வொருவரையும் நல்ல நண்பனாக பாவிக்கும் ஒரு பெண்நட்பு கண்டிப்பாக இருக்கும். ஆனாலும், ‘யார் யாரோ வரலாம். நமக்கெதுக்கு?’ என்று அவர்கள் வராமல் இருந்திருக்கிறார்கள் என்றால் அவர்களுக்கான அந்தப் பாதுகாப்பு உணர்வைத் தரவேண்டியது யார்.. எப்படி?

‘அத்தனை பேர் வர்ற இடத்துல யாரும் ஃபோட்டோ எடுக்கலாம்.. அதான்..’ என்று இவர்கள் சொல்வார்களானால்...

இதுவே ஒரு சந்திப்பு மீடியா ஒன்றில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறதென்றால் வரத் தயாராக இருக்கிறார்களே.. அதெப்படி? அங்கே இவர்களுக்கு அந்தப் பாதுகாப்பு உணர்வு எப்படி கிட்டுகிறது?

‘சைட் அடிப்பாங்க, கமெண்ட் அடிப்பாங்க’ என்கிறீர்களா? சென்னை ட்விட் அப்பில் அமாஸ் அம்மா, சோனியா உட்பட ஏழெட்டு பேர் கலந்து கொண்டார்கள். அவர்கள்தான் சொல்ல வேண்டும். ஏதும் தரக்குறைவாய் நடத்தினோமா? ஏன்.. திருச்சியிலிருந்து, ரியல்ரேணு கூட வந்திருந்தார். ஆனால், டைம்லைனில் சக மனுஷியாய் பலரையும் கலாய்க்கும் ஒரு பெண்கூட கோவை ட்விட் அப்பிற்கு வரவில்லை.

ட்விட் அப் ஃபோட்டோவைப் போட்டதுமே கிண்டலான கமெண்ட்ஸ் தோழிகளிடமிருந்து வருவது மகிழ்வாக இருக்கிறது. நாங்களும் ரசிக்கிறோம்.. பேசுகிறோம்.. ஆனால் நேரில் வர மட்டும் தயக்கம் ஏன்?

சௌமி, அரட்டைகேர்ள் சௌம்யா போன்ற முகம்காட்ட விரும்பாதவர்களை விட்டுவிடலாம். ஃபேஸ்புக்கிலோ, ட்விட்டரிலேயோ முகம் காட்டும் தோழிகள்கூட வராதது ஏன்? எங்கே தவறு?

”ட்வீட் அப்ல பொண்ணுக வராததுதான் உன் ப்ரச்சினையா?” என்றால்...

ஆம். பாலியல் சம்பவங்களையெல்லாம் படிக்க நேர்கையில் “ஏஏஏஏய்ய்ய்.. பெண்ணுக்குப் பாதுகாப்பில்லைடா” என்று போராளிக் குரல் கொடுக்கிறோம். இந்த மாதிரி ஒரு பொது நிகழ்வுக்கு, தெரிந்த நண்பர்களையே சந்திக்க வரத் தயங்குமளவுதான் பெண்களை நாம் வைத்திருக்கிறோம். அதை உடைக்க வேண்டாமா? அதை ட்வீட் அப்பில் நிகழ்த்திக் காட்டுவோமே... ‘பாருங்கடா.. வருஷா வருஷம் வர்றாங்க. மரியாதையாத்தான் நடத்தறோம்’ என்று காட்டுவோமே.. மாற்றம் ஒரு புள்ளியிலிருந்து தொடங்கட்டுமே..

உடனே பொங்காமல் - நிதானமாக இதைப் பற்றி விவாதியுங்கள்... ப்ளீஸ்...

லாஓசி TwitLonger

அன்று sharanky சின்மயி அம்மாவை பற்றி பேசிய பொழுது, அவரை பொறுத்த வரை அது கலாய்க்க சொன்ன விஷயம், ஆனாலும் அது சின்மயி மனதை புண் படுத்தி இருந்ததால் அவர் மன்னிப்பு கேட்டு இருந்திருக்கலாம்.... சின்மயி அன்று மீண்டும் மீண்டும் சொன்னதும் அதைத்தான்... (அவருடன் அன்று பேசியவன் என்ற முறையில் நான் அறிவேன்... ) இவர் மன்னிப்பு கேட்க மறுத்து மேலும் தவறாக பேசியதால் தான் சின்மயி நான் புகார் அளிப்பேன்.... and all those.. அதை செய்தும் காட்டினார்.

இதில் நான் சொல்ல வருவது.... மற்றவர் தாயை பற்றி பேசியது அவர் மனதை புண் படுத்தி இருந்தால் மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற சாதாரண எண்ணம் அன்று தோன்றாததற்கு காரணம் சொம்பு தூக்கிகள்... அவர் என்ன செய்தார் நிலமை என்ன எதையும் அறியாமல் வார்த்தைகளை ஏவி... செய்தது தவறு தானோ என்ற எண்ணத்தை கூட தராதது அன்று கீச்சிய அனைவரும் தான்... அன்று சந்தில் அனைவரும் சேர்ந்து தவறு என சொல்லி... மன்னிப்பு கேட்க வேண்டும் என சொல்லி இருந்தால்.... i mean சந்தின், தமிழ் சந்தின் குரலாய் ஒலித்திருந்தால் அவரும் புரிந்து கொண்டிருப்பார்... apologizing is not a sin. அதற்கு பின் ஏற்பட்ட அனைத்தையும் தடுத்திருக்கலாம்.... அல்லது தள்ளி போட்டிருக்கலாம்.... அன்று sharankyக்கு நீ செய்தது தவறே இல்லை என்ற எண்ணத்தை தந்த அந்த அர்த்தத்தில் கீச்சிய எவரும் பிரச்சனையின் பொழுது உடன் இல்லை என்பதை நான் அறிவேன்...

நேற்றும்... பாதிக்க பட்ட mr_idiot எதையுமே சொல்ல வில்லை... he was actually normal... எங்கிருந்து வந்தார்கள் இந்த தக்காளி பாய்ஸ் மற்றும் அவர்களுக்கு சொம்பு தூக்கியவர்கள்???!! இவர்களுக்கு இங்கு அவ்வளவு கொடிய வார்த்தைகள் உபயோகிக்க வேண்டிய அவசியம் என்ன??

பிரதீபா கீச்சை அழித்தது அது தவறு அப்படி சொல்லியிடுக்க கூடாது என்ற புரிதலினால் தானே.... அதன் பிறகும்... ஒன்று கூடி.... வன்மத்தை இறக்கி...
அதை பலரும் RT செய்து.... அவர்கள் உபயோகித்த வார்த்தைகளை பெண்ணுக்கு எதிராக உபயோகித்த வார்த்தைகள் 66A கீழ் வராதா என்ன???
தக்காளி பாய்ஸ் இது போன்ற சொற்களை பொதுவில் உபயோகிப்பது நான் அறிந்து இது இரண்டாவது முறை.... என்றேனும் ஏதேனும் பிரச்சனை வந்தால் இப்பொழுது சொம்பு தூக்கும் எவரும் உடன் இருக்க போவதில்லை....

சக கிச்சர்களே.... எங்கேனும் தவறு நடப்பது... சரி தவறு எதுவென சொல்ல நான் யார்... எங்கேனும் நடப்பது சரி அல்ல என்ற உணர்வு ஏற்பட்டால் அதை பதியுங்கள்... நேற்று நடந்ததை ஆதரித்தவரை விட வெறுத்தவர்கள் தான் அதிகம் எனினும் TLல் அவர்கள் குரல் தானே அதிகம் இருந்தது??


உங்கள் அமைதி எதையுமே சாதிக்க போவதில்லை... கண்டனங்களை பதிவு செய்வது மற்றவர்களுக்கு.. பெண்களுக்கு ஒரு நம்பிக்கை தரலாம்... பிடிக்காததை கண்டால் தூர விலகுவது ஒரு வகை அணுகுமுறை தான் ஆனால் சந்து என்பது பொது அல்லவா??? இங்கு நடக்கும் அனைத்தும் அனைத்திலும் அனைவருக்கும் பங்கு உள்ளது. மௌனம் சம்மதம்.... மௌனமாக நீங்கள் கடக்கும் அனைத்திற்கும் உங்கள் சம்மதத்தை தெரிவிக்கிறீர்கள் என ஆகுமல்லவா???

இணையத்தில் முதலில் பெண்களை தரமாக நடத்துவோம்... பின் டிவிட்டப் பற்றி யோசிக்கலாம்...
http://tl.gd/n_1rka6u8

A TwitLonger by Talkativewriter

To..... My ex tweeps

பலதரப்பட்ட புகார்கள், பலதரப்பட்ட சாபங்கள் கடந்த இரண்டு நாட்களாக என்னை நோக்கி! விட்டாள் சூனியம் வைக்கும் அளவிற்கு பொங்கும் சமூக சேவகர்கள்!

ஆனால் நிஜமென்று எதுவும் தெரியாமல் பொங்குவதே அநேகம்! ட்வீட் அப், முதல் நாள் இதே போல் நானும் இரவு இரண்டு மணியளவில் என் ப்ளாக்கை எழுதி முடித்து விட்டு, அதை போஸ்ட் செய்யவே டைம் லைன் வந்தேன்! ஆனால் எடுத்த உடனே என்னைப் பற்றி சிலர் புரணி பேசியது படு பயங்கரமாக இருந்தது!!!

ஆங்கில எழுத்தாளர் இவன் கிட்ட இத காமிச்சாடா-- இந்த வகையறா....

சில மாதங்களுக்கு முன்னே ட்விட்டர் உலகில் புதியதாய் வந்திருந்த பொழுது, ஒரு சக ட்வீட்டேரிடம் பேச நேர்ந்தது, மதுரை என்பதால், கூட கொஞ்சம் ஊர் பாசமும் சேர்ந்து கொள்ள, அந்த பையனின் வயதும் என்னை விட ஒரு 5 வருடமாவது கம்மியாக இருக்கும் என்று உணர்ந்ததால், சரி நேரில் பார்ப்போமே என்று சந்தித்தோம்

அந்த பையனை நேரில் பார்த்ததை நியாபகத்தில் கூட இல்லாத அளவிற்கு அந்த விஷயத்தை மறந்து போயிருந்தேன்! ஆனால் கடந்த வாரம் நடந்த ட்வீட் அப்பின் முதல் நாள் என்னை குறித்து சிலர் முழு போதையில், டைம் லைனில் பேசியது, அருவருப்பாக இருந்தது

அவ அதை காட்டினா டா, இத செஞ்சா டா போன்ற ட்வீட்கள் ..... நேற்று சகோதர பாசத்தில் பொங்கிய சகோதரர்கள் இதை உணர்ந்து பார்த்து, சம்பந்த பட்டவர்களிடம் கேள்வி கேட்க வேண்டும்!! உங்கள் வீட்டு பெண்ணிற்கும் ஒரு சக தோழிக்கும் நடக்கும் போது யாருக்கும் வர வேண்டிய கோபம்

ஆனால் சம்பவம் நடந்தது இரவு 4 மணியளிவில் என்பதால் யாரும் அதை குறித்து பேசவும் இல்லை, அவ்வுளவு அருவருப்பாக பேசியதனால் அவர்களை திட்டி நானே சில த்வீட்ஸ் போட்டேன்!

அது குறித்து இன்றளவும் வருத்தம் இல்லை! ஏனென்றால், உன் சகோதரியை கொஞ்சம் கூட கெட்ட வார்த்தை கலக்காமல் சாகட்டும் என்று நான் சொன்ன வார்த்தை உனக்கு இவ்வுளவு கோபம் உண்டு பண்ணுகிறதென்றால்,

என்னை, என் உருவத்தை, கிண்டல் செய்த குடிகார கூட்டதை ஏன் நீ சென்று கேள்வி கேட்கவில்லை, ஏண்டா அவள பத்தி அப்படி போட்டன்னு உன் சக த்வீத்ப் நண்பனிடம் நீ கேள்வி கேட்டு இருந்திருந்தால், நீ யோக்கியன்! அது எதுவும் செய்யாமல், உண்மை எதுவுமே புரியாமல், தான்தோன்றித் தனமாக ஒரு ட்வீட்டை மையப் படுத்தி உன் அதி புத்திசாலி முளையை உலகிற்கு வெளிக்காட்டி விட்டாய்

இப்பொழுது பொங்கியிருக்கும் சகோதரி பாசம், ஊர் பேர் தெரியாத சகோதரி பாசம் அப்பொழுதும் பொங்கி இருக்க வேண்டும்! யாரும், எந்த உயிரும் சாக வேண்டும் என்று நினைப்பதில்லை! ஆனால் என்னை அவ்வுளவு அசிங்கமாக பேசிய இளைஞனின் சகோதரிக்கு ஒரு விபத்து என்றவுடன் கடவுளே தண்டனை கொடுத்து விட்டார் என்று நினைத்து உணர்ச்சி வசப்பட்டு கோபத்தில் போட்ட ட்வீட் தான் அது! மனதால் யாருக்கும் சாவை வரவழைக்கும் எண்ணம் எனக்கு கிடையாது

ஆனால் டைம் லைனில் என் அந்த ஒரு ட்வீட் மட்டும் பார்த்த அனைவரும், பெண்ணா இவள், பேய், யாரையும் சாக சொல்கிறாளே, இவள் சாகட்டும், இவள் ஒருத்தருக்கு...... இவளை ஒ.........ம் போன்ற வார்த்தைகளை உபயோகித்து ட்வீட் போட்டார்கள்!

இது தவிர்த்து சில பல காவிய வார்த்தைகளை உபயோகித்தார்கள்! கோபத்தில் நான் போட்ட ஒரு ட்வீட் உனக்கு இவ்வுளவு கோபம் கொடுதிருக்குமானால், என்னை அவ்வுளவு கேவலப் படுத்திய அந்த நான்கு பேர் மீது எனக்கு எவ்வுளவு கோபம் உண்டாகியிருக்கும்!

ஆட்டு மந்தைகளாய் சிலரை திட்டுவதை விட்டுவிட்டு எது நிஜம், எதனால் கோபம் என்று யோசிக்க வேண்டும்! யோசிக்க முடியாவிட்டால் கெட்ட வார்த்தைகளை தவிர்க்கக் வேண்டும்!

ஆயிரம் ஸ்க்ரீன் சாட் எடுத்து இவள் கெட்டவள் என்று உலகிற்கு சொன்னாலும், என்னை நன்கு அறிந்தவர் யாரும் நம்ப போவதில்லை! உன் தாராதரம் எல்லோருக்கும் தெரிந்திருக்கும்.

இவன் இப்படி பேசின்னான்ல, சாகட்டும்..--- இது தான் என் மனநிலை, ஆனால் நான் அந்த ட்வீட் போட்டது தவறென்று உணர்ந்து ஐந்து நிமிடர்த்திக்கு உள்ளாகவே அதை டெலிட் செய்து விட்டேன், ஆனால் அதன் பிறகு, கொடூரமான கெட்ட வார்த்தைகளால் என்னை ,இதற்கு முற்றும் சம்பந்தமே இல்லாத ஒருவன் பேசியது நியாமா இல்லையா என்று நான் சொல்ல விரும்பவில்லை!!

இப்பொழுதும் இது ஒரு விளக்கம் கொடுக்கும் ட்வீட் லான்கர் இல்லை,அது எனக்கு அவசியமும் இல்லை, முகம் தெரியாத ஆட்கள் இங்கே கேவலமாக பேசியதனால் என் வாழ்விற்கு எந்த பாதகமும் இல்லை! பல மாதங்களாக நன்றாக பழகிய சிலரே மிக அருவருப்பாக பேசியது வருத்தம் தான்! ஆனால், அவர்களின் தரம் புரிந்து விட்டது!

முழு உண்மையும் தெரியாமல் யாரையும் தவறாய் பேசாதீர்கள் !!

மறுபடியும் செத்துபோ என்றாள் யாரும் சாவதுமில்லை, தீ என்றவுடம் சுடுவதுமில்லை!!! உனக்கு தேவையான, நீ உயிரைக் கொடுத்து அலையும் புகழ் உன் அருவருப்பான வார்த்தைகளால் நீ தேடிக் கொண்டாய்! அவ்வுளவு தான்!

ட்விட்டர்ரில் மற்ற பெண்களை விமரிசிக்கும் அளவிற்கு இங்கு யாருக்கும் தகுதி இல்லை, உனக்கு என்னை பிடிக்கவில்லையா, அன் பாலோ செய்து விட்டு போய் கொண்டே இரு, உன்னை யாரும் என்னை தொடர், என் ட்வீட்ஸ் சை ஆர் டி என்று கெஞ்ச வில்லை, உன்னால் எனக்கு ஒரு ப்ரோயோஜனமும் இல்லை!

விருப்பமில்லாத மனிதரிடம் பேச விருப்பமில்லாவிட்டால், இருக்கவே இருக்கிறது ப்ளாக்! அதை செய்து விட்டு போ! நீ எடுத்த அடுத்த ஸ்க்ரீ ஷாட் உன் அக்கா செத்து தான் போவா டா என்று நான் சொன்னதாக தான் இருக்கும்! அதையும் வைத்துக் கொள்!

ஆனால் நீ பேசிய கெட்ட வார்த்தைகளில் நான் ஒரு சதவிகிதம் கூட பேச வில்லை என்பதே உண்மை! இனி இதற்க்கு மேல் யாருக்கும் விளக்கம் கொடுக்க விருப்பமில்லை!

இதே போல் சில மாதங்களுக்கு முன்பு, இதே குடிகார கும்பலால் ட்விட்டர்ரை விட்டு துரத்தப் பட்டு, வீட்டில் முடங்கி கிடக்கும் பெண்ணை பற்றி எனக்கு தெரியும், இங்கு இருக்கும் சில ஆண்களின் வெளிவேஷமும் தெரியும்! ஆகவே நான் நல்லவன், அவள் என் சகோதரியை சாகச் சொன்னால் போன்ற மேலோ டிராமா த்வீட்ஸ் போடாமல்,

உன் நண்பன் என் குணத்தை பேசினான், என்னை அசிங்கப் படுத்தினான், யாராய் இருந்தாலும்(நீயாய் இருந்திருந்தாலும்) கோபத்தில் செத்து ஒழியட்டும் என்று பேசி இருப்பாய், உன் வார்த்தைகளின் தரத்தை பார்த்தல், அந்த பெண்ணை தேடிப் பிடித்து கொன்று போட்டிருப்பாய்!

அதே போல், என்ன ஏதென்று தெரியாமல், கிடைத்தால் ஒருத்தி என்று உங்கள் அறிவாளி தனத்தை யாரும் காட்ட வேண்டாம்! அவள செருப்பால அடிப்பேன் டா, நேர்ல பார்த்தா அவளா ஒபப்....டா போன்ற ட்வீட்கள், நீ ஆயிரம் சகோதரியுடைய அண்ணனாய் இருந்தாலும், அவளையும் நீ இதே போல் தான் சந்தர்ப்பம் கிடைத்தால் பேசுவாய் என்பது உண்மை
அதே போல், அவன் செய்ததிற்கு அவன் சகோதரி என்ன செய்வாள் என்று சொன்ன பலர், நான் பேசியதற்கு என் பெற்றோரை இழுத்துப் பேசியது எவ்விதத்தில் நியாயம்! அதை யாரும் கேட்க்க காணோமே, ஒரு வேலை ஆண் உணர்ச்சி வசப் பட்டால் மட்டும் பேசுவார்கள் போல


அந்த சாகக் கிடந்த பெண் பிழைக்கட்டும், ஆனால் அவள் பாவம் தான், உன் சகோதரியாய் பிறந்ததற்கு!

இதைக் குறித்து இதற்கு மேலும் பேசும் எண்ணம் எனக்கு இல்லை! யாரும் இதைப் பற்றி என்னிடம் பேசவோ கேட்கவோ வேண்டாம்! இதோடு முடியட்டும் டாட் 

http://tl.gd/n_1rka6fg

Monday, May 6, 2013

கச்சத்தீவு குறித்து சட்டசபையில் முதல்வர் ஜெ

கருணாநிதி எதை மீட்டிக் கொண்டிருந்தார்? நான் முதன் முறையாக 1991ல் முதலமைச்சராக பொறுப்பேற்றவுடன் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் கலந்து கொண்டு, "கச்சத் தீவை மீட்போம்" என்று அறிவித்தேன். கச்சத் தீவு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை திரும்பப் பெற வேண்டும் என்பது தொடர்பான தீர்மானம் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் 3.10.1991 அன்று எனது அரசால் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. கச்சத் தீவை மீளப் பெறுவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று பிரதமரை நேரில் பல முறை வற்புறுத்தி கூறினேன். கடிதம் மூலமும் வற்புறுத்தி இருக்கிறேன். "ஜெயலலிதா, கச்சத் தீவை மீட்டே தீருவேன் என்றாரே? ஏன் இன்னும் மீட்கவில்லை? அதை மீட்காமல் எதை மீட்டிக் கொண்டிருக்கிறார்?" என்று என்னை அடிக்கடி கேலி செய்து வந்துள்ளார் கருணாநிதி. பின்னர் 1996ம் ஆண்டு முதல் 2001 வரை மாநிலத்தில் ஆட்சி அதிகாரத்தில் இருந்தார் கருணாநிதி. நடுவில் ஓர் ஆண்டைத் தவிர, 1996 முதல் ஒரு மாதத்திற்கு முன்பு வரை, வெவ்வேறு மத்திய அரசுகளை தாங்கிப் பிடித்துக் கொண்டு இருந்தார் கருணாநிதி. ஆனால் கச்சத் தீவை திரும்பப் பெறுவதற்காக ஒரு துரும்பைக் கூட கிள்ளிப் போடவில்லை. மத்திய ஆட்சியில் பங்கு கொண்ட அத்தனை ஆண்டுகள், 16 ஆண்டுகளில், கருணாநிதி எதை மீட்டிக் கொண்டிருந்தார்? என்று அவர் தான் கூற வேண்டும். நான் இரண்டாவது முறையாக முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு, நிரந்தரமான குத்தகை என்ற முறையிலாவது, கச்சத் தீவில் மீன் பிடிக்கும் உரிமையை இந்திய மீனவர்களுக்கு மத்திய அரசு பெற்றுத் தர வேண்டும் என்று பாரதப் பிரதமரை நேரில் சந்தித்து வலியுறுத்தினேன். கடிதங்கள் வாயிலாகவும் கேட்டுக் கொண்டேன். கருணாநிதியின் தயவில் மத்திய அரசு இருந்ததாலோ என்னவோ, எந்தவிதமான நடவடிக்கையையும் மத்திய அரசு எடுக்கவில்லை. 2006ம் ஆண்டில் நடைபெற்ற பொதுத் தேர்தலை அடுத்து தமிழகத்தின் முதலமைச்சராக கருணாநிதி பொறுப்பேற்றுக் கொண்டார். மத்தியில், திமுக ஆதரவுடன் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி நடைபெற்றது. எந்த மத்திய அரசும், மாநில திமுக அரசும், 1974ம் ஆண்டு கச்சத் தீவை இலங்கைக்கு தாரைவார்த்துக் கொடுத்தனவோ, அதே அரசுகள் மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சிப் பொறுப்பை வகித்தன. ஆனால், கச்சத் தீவை மீட்பதற்கான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை. மாறாக, தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்துக் கொண்டே சென்றன. இந்திய மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் தாக்குதலுக்கு நிரந்தரத் தீர்வு காணும் வகையில், நான் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போதே, அதிமுக கழகம் எனும் மாபெரும் மக்கள் இயக்கத்தின் பொதுச் செயலாளர் என்ற முறையில், பெருபாரி வழக்கினை மேற்கோள் காட்டி, கச்சத் தீவை இலங்கைக்கு தாரை வார்த்துக் கொடுத்த 1974 மற்றும் 1976 ஆண்டைய ஒப்பந்தங்கள் ‘சட்டப்படி செல்லத்தக்கவை அல்ல' என்று உத்தரவிட வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் 2008 ஆம் ஆண்டு ஒரு வழக்கினைத் தொடுத்தேன். இந்த வழக்கில் மத்திய அரசுடன் தமிழ்நாடு அரசையும் ஒரு பிரதிவாதியாக சேர்த்திருந்தேன். ஆனால், கருணாநிதி தலைமையிலான அன்றைய தமிழக அரசின் சார்பில் சாதகமான எதிர் உறுதி ஆவணம் ஏதும் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படவில்லை. இந்தச் சூழ்நிலையில், 2011ம் ஆண்டு மூன்றாவது முறையாக நான் ஆட்சிப் பொறுப்பை ஏற்றவுடன், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் ஒரு தீர்மானத்தை இயற்றி தமிழக அரசின் வருவாய்த் துறையையும் இந்த வழக்கில் இணையச் செய்தேன். மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியில் இருந்த வரை கச்சத் தீவை மீட்பதற்காக சுண்டு விரலைக் கூட அசைக்காத கருணாநிதி, பல்வேறு காரணங்களுக்காக புதுப்பிக்கப்பட்ட டெசோ அமைப்பு மூலம் "1974ம் ஆண்டு ஒப்பந்தத்தின் மூலம் கச்சத் தீவை விட்டுக் கொடுத்தது அரசியல் சட்ட ரீதியாக செல்லுபடியாகாது என்றும், அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும், கச்சத் தீவு இந்தியாவின் ஒரு பகுதி தான் என்பதை பிரகடனப்படுத்த டெசோ அமைப்பின் மூலம் உச்ச நீதிமன்றத்தை அணுகுவது என முடிவு செய்யப்பட்டுள்ளது" என்றும் ஒரு தீர்மானத்தினை 15.4.2013 அன்று நிறைவேற்றி இருக்கிறார். திரு. கருணாநிதிக்கு உண்மையாகவே அக்கறை இருந்திருந்தால்... கச்சத் தீவு மீட்கப்பட வேண்டும்; தமிழக மீனவர்களின் நலன் காக்கப்பட வேண்டும் என்ற அக்கறை திரு. கருணாநிதிக்கு உண்மையாகவே இருந்திருந்தால், இந்த ஒப்பந்தம் செல்லத்தக்கதல்ல என மத்திய அரசுக்கு எதிராக நான் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த போதே தமிழ்நாடு அரசையும் அதில் இணைத்துக் கொண்டு கச்சத் தீவை மீட்பதற்கான நடவடிக்கைகளை எடுத்திருக்க வேண்டும். இல்லையெனில், என்னுடைய கோரிக்கைக்கு வலு சேர்க்கும் விதமாகவாவது மாநில அரசின் சார்பில் எதிர் உறுதி ஆவணத்தை தாக்கல் செய்திருக்க வேண்டும். ஆனால் இப்படி எதையுமே செய்யாமல், மத்திய அரசு எந்தவித எதிர் உறுதி ஆவணத்தை தாக்கல் செய்கிறது என்று பார்த்துவிட்டு பின்னர் மாநில அரசு எதிர் உறுதி ஆவணத்தை தாக்கல் செய்து கொள்ளலாம் என்ற மழுப்பலான முடிவை எடுத்தார் அப்போதைய தமிழக முதல்வர் கருணாநிதி. குறைந்தபட்சம், தான் தாங்கிப் பிடித்திருந்த மத்திய அரசை வலியுறுத்தி தமிழக மீனவர்களுக்கு சாதகமான வகையில் மனுத்தாக்கல் செய்ய சொல்லி இருக்கலாம். ஆனால், அவ்வாறு எதையும் கருணாநிதி செய்யவில்லை. மத்திய அரசுக்கு கருணாநிதி அழுத்தம் கொடுக்காததன் காரணமாக, 1974 மற்றும் 1976ம் ஆண்டுகளில் போடப்பட்ட ஒப்பந்தங்களுக்கு நாடாளுமன்றத்தின் ஒப்புதல் பெறப்பட வேண்டியது இல்லை என்று தெரிவித்து, என்னுடைய ரிட் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என மத்திய அரசு எதிர் உறுதி ஆவணத்தை தாக்கல் செய்துள்ளது. இதன் பின்னர், நான் மூன்றாவது முறையாக மீண்டும் ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னர், 8.6.2011 அன்று இந்த மாமன்றத்தில் தமிழக அரசின் வருவாய்த் துறையையும் கச்சத் தீவு வழக்கில் இணைத்துக் கொள்ளும் வகையிலான தீர்மானத்தை நிறைவேற்றினேன். இந்த வழக்கில் தமிழக அரசின் வருவாய்த் துறை இணைத்துக் கொள்ளப்பட்ட பின்னராவது மத்திய அரசை கருணாநிதி வற்புறுத்தி இருக்கலாம். அல்லது இந்த வழக்கில் திமுகவை அப்போதே இணைத்துக் கொண்டிருக்கலாம். ஆனால், இதில் எதையும் செய்யாமல், இப்போது ‘டெசோ' மூலம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப் போவதாக அறிவித்து இருப்பது யாரை ஏமாற்ற என்பது தெரியவில்லை. முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மீது குற்றம் சாட்ட வேண்டும் என்பதற்காக நான் இதைச் சொல்லவில்லை. கச்சத் தீவு பிரச்சனையில் கருணாநிதி எவ்வாறு நடந்து கொண்டார் என்பதை இந்த நாட்டு மக்கள் அறிய வேண்டும், இந்த மாமன்ற உறுப்பினர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத் தான் இவற்றை எல்லாம் நான் இங்கே வேதனையுடன் குறிப்பிடுகிறேன். கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் ஏழு முறை இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் துன்புறுத்தப்பட்டு, கொடுமைப்படுத்தப்பட்டு, சிறை பிடிக்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவங்களில் தமிழக மீனவர்கள் பாதிக்கப்பட்டனர். அவர்களது உடைமைகள் இலங்கைக் கடற்படையினரால் நாசம் ஆக்கப்பட்டன. இவர்களில் 30 மீனவர்கள் இன்னமும் இலங்கை சிறைகளில் இருந்து விடுவிக்கப்படவில்லை. இது தவிர, 5 தமிழக மீனவர்கள் கடந்த ஓராண்டுக்கும் மேலாக இலங்கை சிறையில் வாடிக் கொண்டிருக்கிறார்கள். இந்தச் சூழ்நிலையில், தமிழக மீனவர்களைக் காக்க கச்சத் தீவினை மீட்பதைத் தவிர வேறு வழியில்லை என்பதால், இந்தத் தீர்மானத்தினை ஒருமனதாக நிறைவேற்றித் தருமாறு கேட்டுக் கொண்டு அமைகிறேன்

Saturday, May 4, 2013

அன்பார்ந்த ட்விட்டர் பெருமக்களே

அன்பார்ந்த ட்விட்டர் பெருமக்களே எங்கடா சண்டை நடக்கும் ஒரு பட்டறையை போட்டு வேடிக்கை பார்க்கலாம் என அலைபாயும் அன்பு நெஞ்சங்களே:) உங்களுக்கு என் முதற்கண் வணக்கத்தைத் தெரிவித்துக் கொண்டு இந்த டிவிட்லாங்கரை உங்கள் ஆசியுடன் ஆரம்பிக்கிறேன்.அதாகப்பட்டது ஒரு சம்பவத்தினை மீண்டும் ஒரு கொசுவத்தி மூலம் நினைவூட்டி எனது கருத்து முத்துகளை அள்ளித் தெளிக்க சித்தமாயிருக்கிறேன்.அன்றொரு நாள் ........ஆறு மாதங்களுக்கு முன்பு பிரபல பதிவரும் அஜால் குஜால் ரைட்டருமான திரு.செந்தில் சிபி அவர்களுக்கும் எனக்கும் இடையில் ஒரு பிரச்சனை வந்தது.அவர் வழக்கம் போல பிகர் ட்வீட்ஸ் போட பல மாதங்கள் அவர் போடும் பொழுதெல்லாம் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த நான் அன்று மட்டும் இப்படி போடாதீங்க என்றும் உங்க மனைவி அம்மாவும் பிகர் தானா என்று கேட்டதும் ஹி ஹி என்று விட்டு போய்விட்டார்.ஆனால் டிவிட்டரில் ஒரு மாபெரும் அறச்சீற்றமே நிகழ்ந்தது.குடும்ப நபர்களை இழுத்தது தவறாம்.எவரோ ஒருவரை பிகர் ன்னு சொல்வதில் தவறில்லையாம்.
அவர்கள் குடும்பத்தைச் சார்ந்தவர்களைச் சொன்னால் மாபெரும் வரலாற்றுப் பிழையாம்.(அட முண்டங்களா! நானும் அதைத் தானடா சொன்னேன் யாரை வேணாலும் சொல்லு மரியாதைக்குரிய நெருங்கிப் பழகும் நல்ல தோழிகளை அப்படி அழைக்காதீங்க என்று) உன் பொண்டாட்டி செம கட்டை ன்னு சொல்றதுக்கும் உங்க மனைவி நல்ல அழகு என்பதற்கும் உள்ள வேறுபாடு அறியாதவர்கள்.பிகர்ன்னு யாரும் யாரையும் அழைக்கலாம் என்றால் ஏன் அம்மா,மனைவியைச் சொன்னால் மட்டும் பொத்துகிட்டு வரணும்?அதையும் பரந்த மனதோடு ஏற்றுக் கொள்ள வேண்டியதுதானே?ஒரு பெண்ணை ஆண் ரசிப்பதில் தவறே இல்லை.ஏன் ரசிக்காமல் இருப்பவன் ஆண் மகனுமில்லை.ஆனால் ஒரே பார்வையிலேயே ஒரே உரசலிலேயே புணர்ந்து விடும் வெறியோடு அந்தப் பெண்ணை பாதிக்குமாறு பார்ப்பது அருவெறுக்கத்தக்க ஒன்றே.உன் ரசனை எதுவும் தனிப்பட்ட முறையில் அந்தப் பெண்ணை பாதிக்காதவாறு பார்த்துக் கொள்வதுதானே?காமெடி என்ற பெயரில் என்ன எழுதினாலும் சிரிப்போம் என்று நினைக்க வேண்டாம் என்று அன்று நான் சொன்னது போது அவரது காமெடி யை ரசிக்கும் திறன் இல்லை என்று என்னைச் சொன்னவர்கள் இன்று மட்டும் பொங்குவது ஏனோ?அவரது குறையை DM இல் சொல்லாமல் ஏன் டைம் லைனில் சொன்னீர்கள் என்று பொங்கியவர்கள் இன்று பதிவு மேல் பதிவாக போடும் பொழுது அமைதி காப்பது ஏனோ?ஒரு முறை அல்ல பல முறை அந்த மனிதரிடம் சொல்லி இருக்கின்றேன்.ஒரு ட்வீட் போட விடுங்க.அதிலிருந்து உருவி உருவி அடுத்து என்ன போடணும் என்பதே எங்களுக்கு மறந்து போக வைக்காதீங்க.யாரோ ஒருத்தருக்கு தனிப்பட்ட முறையில் போட வேண்டிய மென்சனை ஊருக்கே தெரியற மாதிரி எழுதாதீங்க அயர்ச்சியா இருக்கு நீங்க மத்தவங்க கூட பேசுவதை எல்லாம் நான் வேடிக்கை பார்க்க.இப்படி என் கருத்து வேறுபாடு பலவற்றை DM ல தான் வச்சேன்.அவர் கேட்டால் தானே?எதிர்ப்பு தெரிவிப்பவர்களிடம் மட்டும் அமைதியாயிருந்து விட்டு வேறு ஒருவரிடம் அதையே தொடர்வது.
என்னை ஆரம்பம் நாள் தொட்டுப் பார்ப்பவர்கள் நன்கு அறிவார்கள் என்னைப் பற்றி நான் பெண்ணீயம் பேசித் திரியும் நபர் அல்ல என்று.அன்று மட்டும் ஏன் பொங்கல்?இந்த மனிதர் குந்தவை அவங்க புகைப்படம் DP யில் வைக்கவும் சிவப்பு கனிமொழி மாதிரி சூப்பரா இருக்கு இந்த பிகர் பாராட்டுக்கள் என்று தெரிவித்தார்.அதற்குத் தான் நான் சொன்னது எல்லாரையும் இதே போல சொல்லாதீங்க.அவங்க ரெண்டு குழந்தைக்கு அம்மா எனக்கு ஏதோ போல இருக்கு என்று.சத்தமில்லாம ட்வீட் நீக்கிட்டு அவங்ககிட்ட DM ல போய் சாரி கேட்டுவிட்டார்.இதன் நீட்சியாகத் தான் அன்று நான் சொன்ன அத்தனையும்.இது எத்தனை பேருக்குத் தெரியும் எங்கள் மூவரைத் தவிர.என்னிடம் வந்து வழக்கம் போல DM இல் பேசின பொழுது எல்லாரும் உங்களைப் பத்தி பதிவு எழுதச் சொல்லி வற்புறுத்தினாங்க ஆனால் என் மேல தவறு இருக்கு என நான் எழுதல என்றார்.உங்களுக்கு ஆதரவா ஏதேனும் எழுதினா எனக்கு பொம்பளைப் பொறுக்கின்னு முத்திரை குத்திருவாங்க நீங்க குந்தவியைச் சொன்னதுக்காகத் தான் திட்டிநீங்கன்னு எனக்குத் தெரியும் அவங்க அதை திசை திருப்புவாங்க என்பது நானே எதிர்பாராதது என்றார்.நான் கேட்டது ஒன்றுதான் எனக்கு ஆதரவாக நீங்க பேசவே வேணாம் ஆனால் இதுதான் விஷயம் என்று ஏன் வெளிப்படையாக இன்று வரை சொல்லவே இல்லை எனக் கேட்டேன் இன்றுவரை அதற்கு எனக்கு பதில் இல்லை.என் மேல இருக்கும் வெறுப்பைத் தீர்த்துக் கொள்ள இந்த விசயத்தைப் பயன்படுத்திக் கொண்டார்களே அன்றி நிச்சயம் இதை நட்பு என நம்பினால் உங்களை விட வேறு முட்டாள் யாரும் இருக்க முடியாது என்று சொல்லி ஒதுங்கிக் கொண்டேன்.
இப்பவும் சொல்றேன் நான் சராசரிதான் எந்தப் பெண்ணீய கருத்துகளைப் பரப்ப நான் வரல..தனிப்பட்ட முறையில், "சாதரணமாக உங்களுக்கு அளித்த பதிலை இரட்டை அர்த்தத்தில் எடுத்து RT செய்துவிட்டார்கள் உமா மன்னிக்கவும் " என்று கேட்ட நண்பனின் கண்ணியத்தை நானறிவேன்.அதனால் தான் எந்த சோனாவுக்கும் இலியானாவுக்கும் நான் பொங்கியதே இல்லை.விமர்சனங்கள் பற்றிக் கவலைப்படாது அவர்களே இருக்கின்ற பட்சத்தில் அவர்களுக்கு எதற்காக நான் வக்காலத்து வாங்கணும்? காலம் காலமாக உண்டு நீ அக்கா தங்கையோடு பிறக்கலையா?நீயும் ஒரு தாய் வயிற்றில் பிறந்தவன் தானே உன் வீட்டுப் பெண் என்றால் இப்படிப் பேசுவியா என்ற வார்த்தைகள் யாவும்.அதன் நோக்கம் முழுக்க பெண்ணிடம் பிறந்து பெண்ணோடு வளர்ந்தவன் நிச்சயம் அவள் வலிகளை அறிந்திருக்கக் கூடும் என்ற ஒன்று மட்டுமே. "பெண்கள் கூட்டம் பேய்கள் என்று பாடம் சொன்ன சித்தர்களும் ஈன்ற தாயும் பெண்மை என்று எண்ணிடாத பித்தர்களே .."(மனதில் உறுதி வேண்டும்)
என்று கவிஞர் எண்பதுகளில் வந்த பாடல்களிலேயே எழுதி இருக்கின்றார்.முடிந்தால் அவரையும் சண்டையிடவும்.எனக்குத் தெரிய வேண்டியது எல்லாம் அன்று ஓவரா பொங்கிய அத்தனை வெண்ணை மயிராண்டிகளும் (அடடா மரியாதைக் குறைச்சலா இருக்குதோ ....ஆனா இதுவே அதிகம்ன்னு எனக்குத் தோணுது) இன்று ராஜன் பதிவுக்குப் பொங்குவாங்களா? நானாச்சும் ஒரே ஒரு ட்வீட் ல ஒரே ஒரு கேள்விதான் கேட்டேன்.மனுஷன் பதிவே போட்டிருக்கிறார்.ராஜன் பெண்களுக்காகக் குரல் ஓங்கி கொடுப்பவர் என்றெல்லாம் நம்பும் அளவுக்கு நான் பேதை அல்ல.ஆனா தில்லு இருந்தா இப்ப பொங்குங்கடா.. ஏன் பதிலுக்கு நாராசமா செமத்தியா வாங்க வேண்டி இருக்கும்ன்னு பயமா?இல்ல RT கிடைக்காது பிரபலம் அவர் மூலமா விளம்பரம் கிடைக்காது என்ற யோசனையா?அன்னைக்கு சூடு சொரணை ரோஷமெல்லாம் பொத்துகிட்டு வந்துச்சே இப்பவும் அதே சோறுதான் சாப்பிடறீங்களா பாஸ்?அன்று சென்னிமலையார் க்காக அக்கறையாய் பொங்கியவர்கள் இன்று ராஜனுக்கும் ஆதரவா பேசுறாங்க :) என்ன கூட்டமுடா நீங்க ?:) அன்னைக்கும் சரி இன்னைக்கும் சரி செந்தில் சிபி ஒரே மாதிரிதான் :) உங்க பார்வைகள் மட்டும் ஏன் மாறி இருக்கு?நான் சொன்னப்போ வராத யோசனை இப்ப மட்டும் வந்துச்சே ஏன்?ரொம்ப பழசு தான் இருந்தாலும் கேட்கறேன் அடுத்தவனுக்கு தக்காளிச் சட்னி உங்களுக்கு ரத்தமா?அவர் காமெடியை ரசிக்கும் பக்குவம் ஏன் இல்லை? மெனக்கெட்டு உங்க பக்கமெல்லாம் தேடி படிக்கும் அளவுக்கு நான் வெட்டியுமில்லை எனக்கு நேரமுமில்லை.ஆனா நிச்சயமா இதெல்லாம் நீங்க படிப்பீங்கன்னு உங்க அப்பத்தா மேல ஆணையா நான் நம்பறேன்.அதுதான் என் வெற்றியும் கூட :) சிலர் ட்வீட்ஸ் படிக்கக் கூடாதுன்னு தான் நான் follow வே பண்ணல.அந்த சிலர் என்னை ப்ளாக் பண்ணா என்ன பண்ணாட்டி என்ன?யார் என்னை unfollow செய்தாலும் ப்ளாக் செய்தாலும் எனக்கு எந்த சொத்து இழப்பும் இல்லை.followers காக எந்த வித காம்ப்ரமைசும் நான் இதுவரை பண்ணிகிட்டதே இல்லை.இனிமேலும் அப்படித்தான்.follow back பண்ணல ன்னு யார் கிட்டயும் நான் பிச்சை கேட்கல.பலருக்காக சுயம் இழந்து புழுங்குவதை விட சிலருக்கு மட்டுமே பிடித்த என்னை எனக்கே பிடிச்சிருக்கு.உண்மையா பழகும் சில நண்பர்களே போதும்ன்னு நினைக்கறேன்.வந்து படிச்சுட்டு நான் காறித் துப்பினதை மூஞ்சில வாங்கிட்டு அந்தப் பக்கம் போய் கதறுங்கள் :) எதையும் நான் படிக்கப் போவதே இல்லை.உங்க அத்தனை பேருக்கும் ஒரு பெரிய டாட் .
எனக்கு செந்தில் சிபி மீது யாதொரு துவேஷமும் இல்லை.இந்தப் பதிவைக் கூட அவரைக் கேட்டே எழுத விருந்தேன்.ஆனால் ஐயகோ அவருக்கு DM பார்க்கத் தெரியாதே :-O என்னதான் டைம் லைனில் கிண்டல் செய்தாலும் சட்டென்று DM இல் மன்னிப்பு கேட்டு விடும் நண்பர் (இந்த ட்ரிக்ஸ் பற்றியும் ஒரு பதிவெழுத வேண்டுகிறேன் ) யார் எங்கே என்னைப் பற்றி என்ன சொல்லி இருந்தாலும் அக்கறையோடு DM இல் "எடுத்துச் "சொல்பவர் .ஆனால் ஏனோ அந்தப் பிரச்சனைக்குப் பிறகு தனக்கு வேறு முத்திரை விழுந்து விடும் என அஞ்சி(??) என்னிடம் DM இல் மட்டுமே பேசிக் கொண்டிருந்தார்.நான் தான் நம்மால் அவருக்கு எதற்கு வீண் வம்பு என்று விலகி விட்டேன்.என்னை சீண்ட அனுமதி அளித்ததே இல்லை அவரும் அதை மதித்து விலகி இருக்கிறார் என்பதையும் இங்கே பதிவு செய்கிறேன். திசுகி : (கிரந்தம் தவிர்க்கறேன் :P )
ஏதோ செந்தில் சி பி பதிவுகளுக்கெல்லாம் பொங்கி அறச்சீற்றம் செய்திருப்பேன் என நம்பி படிக்க வந்தவங்களுக்கு ஒரு sorry :) எனக்கு அதெல்லாம் அவசியமே இல்ல சம்பந்தப்பட்டவங்க பொங்கறதோ பொங்காம போறதோ அது அவங்க பாடு :) அக்கார்டிங் டு மீ திஸ் இஸ் தக்காளிச் சட்னி :) இதன் மூலம் நான் உங்களுக்கு அறியத் தருவது வாழ்க்கை மட்டுமில்ல டிவிட்டரும் ஒரு வட்டம் :)
-உமாக்ருஷ் @umakrishh 1st June 2012 from Twitlonger

ரத்ததானம்

ரத்ததானம்
ரத்தமும், தசையும், எலும்பும் சேர்ந்ததுதான் உடல். ரத்த ஓட்டம்தான் உடலியக்கத்தில் பெரும் பங்கு வகிக்கிறது. ரத்தஓட்டம் தடைபடுவதால் தான் பல்வேறு பிரச்சினைகள் வருகிறது. இதயத்திற்கு செல்லும் ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டால் மாரடைப்பும், மூளைக்குச் செல்லும் ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டால் பக்கவாதமும், தசைகளுக்கு செல்லும் ரத்த ஓட்டம் தடை பட்டால் புண்களும் வந்துவிடும். ரத்த ஓட்டம் இல்லாமல் எந்த ஜீவராசிகளும் கிடையாது. ரத்த ஓட்டம் சீராக இருந்தால் எந்த வியாதியும் கிடையாது.
***
ரத்தம் உடல் முழுவதும் ஓடுகிறது என்பதே சில நூற்றாண்டுகளுக்கு முன்புதான் கண்டுபிடிக்கப்பட்டது. ரத்த ஓட்டத்தை கண்டறிந்தவர் வில்லியம் ஹார்வி. அதன்பிறகு தான் ரத்தத்தின் வழியாக மருந்துகளை செலுத்தினால் உடலின் எந்த பாகத்திற்கான வியாதியும் குணமடையும் என்பதே அறியப்பட்டது. ரத்தம் சிவப்பணுக்கள், வெள்ளையணுக்கள், பிளேட்லட் அணுக்களையும், திரவ பிளாஸ்மாவையும் கொண்டது. வெள்ளையணுக்கள்தான் நோய் எதிர்ப்பு சக்தி கொண்டவை. ரத்தம் சிவப்பாக இருப்பதற்கு ஹீமோகுளோபின் காரணம். இது ஒரு புரதப்பொருளாகும். இதுதான் நுரையீரலில் இருந்து ஆக்சிஜனைப் பெற்று திசுக்களுக்கு வழங்குகிறது.
***
உடலின் எல்லா உறுப்புகளுக்கும் ரத்தத்தை இதயம் `பம்ப்` செய்யும்போது ஏற்படும் அழுத்தமே ரத்த அழுத்தம் எனப்படுகிறது. இதயம் ஒரு நிமிஷத்துக்கு 5 லிட்டர் ரத்தத்தை பம்ப் செய்து எல்லா உறுப்புகளுக்கும் அனுப்புகிறது. இப்பணியைச் செய்யும் இதயத் தசைகளுக்கு மட்டும் ஒரு நிமிஷத்துக்கு 250 மில்லி லிட்டர் ரத்தம் தேவை. ரத்தக் குழாய்களுக்குள் ரத்தம் மணிக்கு 65 கி.மீ. வேகத்தில் பயணிக்கிறது. அவ்வளவு வேகத்தில் மருந்து ரத்தத்தின் வழியே கடத்தப்படுவதால்தான் மாத்திரை சாப்பிட்டவுடன் நோயின் தாக்கம் உடனடியாக குறைந்ததுபோல உணர முடிகிறது.
***
ரத்த ஓட்டத்தின் மூலம் நுரையீரலில் இருந்து அனைத்துத் திசுக்களுக்கும் ஆக்சிஜன் ரத்தம் எடுத்துச் செல்லப்படுகிறது. திரும்புகையில் திசுக்களில் இருந்து கார்பன்-டை-ஆக்சைடு நுரையீரலுக்கு எடுத்து வரப்பட்டு மூக்கு வழியே வெளியேற்றப்படுகிறது. ரத்த சிவப்பணுக்களில் உள்ள ஆன்டிஜன் எனும் புரதத்தின் தன்மைக்கேற்ப ரத்தங்களை வகைப்படுத்துகிறார்கள். அதன்படி `ஏ`, `பி`, `ஏபி`, `ஓ` என 4 குரூப் ரத்தம் உள்ளன. இது தவிர ஏ1, ஏ2 என்ற உப `குரூப்`களும் ரத்தத்தில் உண்டு. `ஓ` பிரிவு ரத்தம் உள்ளவர்கள் மற்ற அனைவருக்கும் ரத்ததானம் கொடுக்கலாம். அதனால்தான் அவர்களை “யுனிவர்சல் டோனர்` என்று அழைப்பதுண்டு.
***
ரத்த ஓட்டத்தில் தடை ஏற்பட்டால் பல வியாதிகள் வந்துவிடும். ஹீமோகுளோபின் குறைந்தால் ரத்த சோகை வியாதி ஏற்படும். இதனால் ரத்தம் இளஞ்சிவப்பாக மாறிவிடும். பசி குறையும், சோர்வு ஏற்படும், மூச்சிறைக்கும். நோய் முற்றிவிட்டால் நாக்கு வெளிறி விடும். நகங்கள் அடிக்கடி உடையும். ரத்த சிவப்பணுக்களை உடலில் செலுத்தி இந்த வியாதிக்கு சிகிச்சை அளிப்பார்கள். இரும்புச்சத்து அதிகமுள்ள உணவுகளை சாப்பிடுவதன் மூலம் ரத்த சோகை வராமல் தடுக்கலாம். கீரை, காய்கறிகள், பருப்பு வகைகள் அதிகம் சேர்க்க வேண்டும். அசைவ உணவிலுள்ள இரும்புச்சத்து உடலால் எளிதில் கிரகிக்கப்படுகிறது.
***
ரத்தசோகை ஆண்களை விட பெண்களைத்தான் அதிகம் தாக்கும். மாதவிடாய் காலத்தில் அவர்கள் அதிக ரத்தத்தை இழக்கிறார்கள். கர்ப்பமாய் இருக்கும்போது கருவிலுள்ள சிசுவுக்கு ரத்தத்தின் வழியே உணவு கடத்தப்படுகிறது. பிரசவ நேரத்திலும் பெண்கள் ரத்தம் இழக்கிறார்கள். எனவே பெண்கள் சத்தான உணவுகளை உட்கொண்டு உடலை நல்ல தகுதியுடன் வைத்திருந்தால் மட்டுமே ரத்த சோகையை தவிர்க்க முடியும். பாதிப்பு உடையவர்களுக்கு சத்து மாத்திரைகள், மருந்துகள் கிடைக்கின்றன. ஆனால் அவசியமற்ற நேரத்தில் வைட்டமின் மாத்திரைகளை விழுங்கி வருவது பயன் தராது. அதேநேரம் இது பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம் என்பதையும் கவனத்தில் கொள்ளுங்கள்.
***
நம் நாட்டில் ஏறக் குறைய 50 சதவீதம் குழந்தைகளுக்கும், பெண்களுக்கும் ரத்தசோகை இருப்பதாக ஒரு புள்ளி விவரம் தெரிவிக்கிறது. இதனால் அவர்கள் எளிதில் களைப்படைவதால் உழைப்பு, உற்பத்தி எல்லாமே பாதிக்கப்படும். இது நாட்டிற்கு பெரிய நஷ்டம். இதைத் தடுக்க அனைவருக்கும் சிகிச்சை அளிப்பதைவிட இரும்புச்சத்து நிறைந்த உப்பை சமையலில் சேர்த்துக் கொள்வது சிறந்த பலனைத் தரும் என்று உலக சுகாதார அமைப்பு பரிந்துரைத்துள்ளது. இரும்புச்சத்துள்ள உப்பு சேர்ப்பது மருந்து மாத்திரைகளை விட நல்லது. பக்க விளைவற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இனியாவது சாதா உப்பிற்குப் பதில் இரும்புச்சத்து நிறைந்த உப்பு உபயோகிக்கப் பழகுங்கள்.
***
ரத்த பாதிப்புகளில் குறிப்பிடத்தக்க இன்னொரு வியாதி தாலசீமியா. இதுவும் ரத்த இழப்பால் ஏற்படும் வியாதி தான். இதற்கு அவ்வப்போது போதுமான ரத்தம் வழங்கிக் கொண்டிருந்தால்தான் பாதிக்கப்பட்டவர் பிழைக்க முடியும். வாழ்நாள் முழுவதும் மாதம் ஒரு முறை ரத்ததானம் பெற்று வாழ்பவர்கள் இருக்கிறார்கள். இதேபோல பெரிய அறுவைச் சிகிச்சைகள் முதல், விபத்தில் சிக்கியவர்களுக்கு சிகிச்சை அளிப்பது வரை பலதரப்பட்டவர்களுக்கும் உயிர் பிழைக்க ரத்தம் அத்தியாவசிய தேவையாக இருக்கிறது. ஆனால் போதிய ரத்தம் கிடைக்காததால் ஏராளமானவர்கள் உயிரிழக்கிறார்கள்.
***
மருத்துவ சிகிச்சைக்கு ஆண்டு ஒன்றுக்கு சுமார் ஒரு கோடி யூனிட்டுக்கு மேல் ரத்தம் தேவைப்படுகிறது. இதில் 20 சதவீத ரத்தம் அவசர சிகிச்சைக்கு தேவைப்படுகிறது. ஆனால் தானமாக கிடைக்கும் ரத்தம் குறைவாகத்தான் இருக்கிறது. உடற்தகுதி உடையவர்கள் ஆண்டுக்கு ஒரு முறை ரத்தம் கொடுத்தாலே ரத்த தேவை பூர்த்தியாகி விடும் என்று ஒரு ஆய்வறிக்கை சொல்கிறது. 18 முதல் 60 வயது வரையுள்ள ஆரோக்கியமான ஒவ்வொருவரும் ரத்ததானம் செய்யலாம். எய்ட்ஸ், சிறுநீரக நோய், வலிப்பு நோய் உள்ளவர்கள் தவிர உடல் எடை 45 கிலோவுக்கு மேற்பட்டவர்கள் ரத்ததானம் செய்யலாம். ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு 12.5 கிராம் சதவீதமும், ரத்த அழுத்தம் குறிப்பிட்ட அளவுக்கு இருப்பதும் அவசியம்.
***
அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், ரத்த வங்கிகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்களில் ரத்ததானம் அளிக்கலாம். ரத்ததானம் செய்வதால் எடை குறையும், உடல்நலம் பாதிக்கும் என்பது கட்டுக்கதை. ரத்ததானம் செய்தால் புதிய ரத்தம் ஊறத் தொடங்கும் என்பது தான் உண்மை. இதனால் நமது உற்சாகமும், உடல்நலமும் கூடும். நண்பர்கள், உறவினர்களுக்கு ஆபத்து ஏற்படும்போது மட்டும் அவசர அவசரமாக ரத்தத்தை தேடி அலையும் நிலை மாற, தகுதி உடையவர்கள் ரத்ததானம் செய்ய வேண்டும். ஒருவரின் உயிர் காக்கப்படுவதாலும், நமக்கு அதனால் இழப்பு இல்லை என்பதாலும் ஒவ்வொருவரும் ரத்ததானம் செய்யலாம்.

தமிழ் கீச்சு - விழிப்புணர்வு

அன்புள்ள கீச்சர்களே..சந்து வாழ் பெரு மக்களே, காலை எழுந்தவுடன் வீடு கூட பெருக்காமல் கீச்சும் யுவதிகளே. எதுக்கு வந்தோம் என்றே தெரியாமல் பேய் முழி முழிக்கும் புதிய கீச்சர்களே,கடலை மட்டுமே போட்டு வாழும் கனவான்களே, உங்கள் அனைவருக்கும் என் முதற்கண் வணக்கம்.!
நம் நாட்டில் தமிழ் மொழி படும் பாடு சொல்லி மாளாதது. இணைய உலகில் அது படும் கொடுமை வார்த்தையில் அடங்காதது.
ஆங்கில மொழி அன்றாட வாழ்கைக்கு அவசியம் தான் எனினும், நாம் தினமும் செய்யும் மொழிகலப்பு, நம் தமிழ் மொழியாம் தாய்மொழிக்கு செய்யும் துரோகமாமும். இது பல மொழிகளில் நடக்கும் வழக்கம் ஆனாலும், நம் தமிழ் மொழியில் அதிகமாவே உள்ளது.
அரபு நாடுகளில் பணி புரியும் தோழர்கள் கவனித்திருக்கலாம். இரு அரபிகள் பேசும் போது உங்களால் எதுவுமே அவதானிக்க முடியாது. அவர்கள் முழுக்க முழுக்க அரபியிலெயே பேசுவார்கள். மருந்துக்கும் வேற்றுமொழிகலப்பு இருக்காது.
அனைத்து சொற்றொடர்களுக்கும், சரியான பதத்தில் அவர்களிடம் சொற்கள் உண்டு. புராதன மொழிகளில் முதன்மையானதும் செம்மொழியான தமிழ் மொழிக்கு ஏன் அவ்வாறு இல்லாமல் போக கூடும். கணினி உபயோகத்திற்கான அனைத்து சொற்றொடர்களும் தமிழில் உள்ளது நம்மில் பலரும் அறியாமல் இருப்பது கவலைக்குறியது.
ஆங்கிலம் வாழ்க்கைக்கு அவசியமானதெனினும் , தமிழ் குழந்தைக்கு தாய்ப்பால் போன்றது என்பதை நான் உணரவேண்டும். பிற மொழி கலப்பின்றி பேசுவது எழுதுவது, ஏதொ ஒரு நாள் இரவு நடந்தேறும் நிகழ்வு அல்ல. மெல்ல மெல்ல அந்த விழிப்புணர்வை நாம் கொண்டு வரவேண்டும். தமிழில் கீச்சுவது நகையாடபடுவது நிறுத்தபடவேண்டும்.
சமூக வலை தளங்கள் வெறும் பொழுது போக்குதான் என்ற பொது நோக்கு மாற்றபடவேண்டுமானால், துவிட்டேரில் பங்கு வகிக்கும் நாம் அதற்கான நடவடிக்கை முன்னெடுத்தால் போதும்.
கீச்சர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த, நாம் ஒரு நாள் மட்டும் ஒன்று கூடி தமிழில் மட்டுமே கீச்சவேண்டும். இதன் நோக்கம் என்னவெனில், மற்றவர்கள் கீச்சும் போது பயண் படுத்தும் பதங்களை கற்று கொள்ளவும், மற்றும் இது சாத்தியம் தான் என்பதை உணர்த்துவதும் தான்.
இதை ஏற்கனவே சாத்தியமாக்கிருக்கும் பிற மொழி கலாவாமல் கீச்சும் அன்பு நண்பர் கோ.அரவிந்தன் @tpkd_ அவர்களுக்கு நன்றி. ஒரு பட்டியை (tag) உருவாக்கி, பிறமொழி கலப்புகள் என்னென்ன, அதன் தமிழ் பதம் என்ன என்பதையும் இந்த உலகத்துக்கு உணர்த்துவோம்.!
விருப்பம் உள்ளவர்கள் மட்டும் இந்த கட்டுரையை மறுகீச்சு செய்யவும்.
நம்மால் முடியும் தோழர்களே..ஒன்று படுவோம்!
தமிழ் பேச்சு, எங்கள் மூச்சு.!
நட்புடன் கட்டதொர! -கட்டதொர™ @kattathora 16th May 2012 from Twitlonger