அன்புள்ள விஜய்க்கு,
பரம ரசிகன் என்று சொல்ல முடியாது. ஆனால் தங்கள் ரசிகன். லீக் ஆகிடுச்சு என்று சொல்லி ரிலீஸ் செய்யப்பட்ட (!) 3 நிமிட பாடலான, தாங்கள் பாடிய "வாங்கண்ணா வணக்கங்கண்ணா" என்ற பாடலை கேட்டேன்.
நன்றாக இருந்தது. இந்த வருடத்தில் இந்த பாடல் மிகப்பெரும் வெற்றி அடையும் என்பதில் சந்தேகமே இல்லை.
இருப்பினும் ஒரு சமுதாய சீர்கேட்டிற்கு இந்த பாடல் துணை போகும் என்று தெரிகிறது.
தங்களுக்கு ரசிகர்கள் குழந்தை முதல் இளைஞர்கள் வரை இருக்கிறார்கள். இந்த பாடல் வெளிவந்த பிறகு எத்துனை குழந்தைகள் இந்த பாடலை குடித்தது போல் கற்பனை செய்து கொண்டு இந்த பாடலை பாட போகிறார்களோ?
அச்சிறுவர்களின் மனதில் குடித்தால் மட்டுமே இந்த மாதிரி பாடல்கள் பாட முடியும் என்ற எண்ணம் வலுவாக பதிந்துவிடும்.
மானாட மயிலாட, சூப்பர் சிங்கர், டான்ஸ் போட்டிகளில் எல்லாம் இந்த பாடலை போட்டு போட்டு எல்லார் மனதிலும் குடியை பற்றிய எண்ணம் அதிகமாக வளரும்தானே.
அதிலும் சில வரிகள் இவ்வாறு:
"ஊத்திக்க ஊத்திக்க ஊத்திக்க ணா, மனச நீ கொஞ்சம் தேத்திக்கண்ணா" - இந்த வரிக்கு அர்த்தம் யாருக்கும் சொல்லி புரிய வைக்க.தேவையில்லை.
மற்றொன்று.
"குவாட்டரும் வாட்டரும் சேர்ந்துச்சுணா, கொட்டுது காதல் தத்துவம்ணா"
- என்ன வரிகள் இவை.?
கூகிள் கூகிள் பாடல் ஹிட் ஆனதால், இந்த பாடலையும் எப்படியாவது ஹிட்டாக்கி விட வேண்டும் என்ற முயற்சியில் பாடகர், பாடலாசிரியார், இசையமைப்பாளர் இறங்கியுள்ளனர். மிகவும் மலிவான முயற்சி.
ஏற்கனவே பல பேர் குடியை அழித்துக்கொண்டிருக்கிறது இந்த குடி. அந்த குடிக்கு துணை போவது போல் உள்ளது இந்த பாட்டு.
என் மனதில் தோன்றியவை. அவ்வளவே.
-கீச்சான் @iAmKeechan
Its true
ReplyDelete