அன்புள்ள கீச்சர்களே..சந்து வாழ் பெரு மக்களே, காலை எழுந்தவுடன் வீடு கூட பெருக்காமல் கீச்சும் யுவதிகளே.
எதுக்கு வந்தோம் என்றே தெரியாமல் பேய் முழி முழிக்கும் புதிய கீச்சர்களே,கடலை மட்டுமே போட்டு வாழும் கனவான்களே,
உங்கள் அனைவருக்கும் என் முதற்கண் வணக்கம்.!
நம் நாட்டில் தமிழ் மொழி படும் பாடு சொல்லி மாளாதது. இணைய உலகில் அது படும் கொடுமை வார்த்தையில் அடங்காதது.
ஆங்கில மொழி அன்றாட வாழ்கைக்கு அவசியம் தான் எனினும், நாம் தினமும் செய்யும் மொழிகலப்பு, நம் தமிழ் மொழியாம்
தாய்மொழிக்கு செய்யும் துரோகமாமும். இது பல மொழிகளில் நடக்கும் வழக்கம் ஆனாலும், நம் தமிழ் மொழியில் அதிகமாவே உள்ளது.
அரபு நாடுகளில் பணி புரியும் தோழர்கள் கவனித்திருக்கலாம். இரு அரபிகள் பேசும் போது உங்களால் எதுவுமே அவதானிக்க முடியாது.
அவர்கள் முழுக்க முழுக்க அரபியிலெயே பேசுவார்கள். மருந்துக்கும் வேற்றுமொழிகலப்பு இருக்காது.
அனைத்து சொற்றொடர்களுக்கும், சரியான பதத்தில் அவர்களிடம் சொற்கள் உண்டு. புராதன மொழிகளில் முதன்மையானதும்
செம்மொழியான தமிழ் மொழிக்கு ஏன் அவ்வாறு இல்லாமல் போக கூடும். கணினி
உபயோகத்திற்கான அனைத்து சொற்றொடர்களும் தமிழில் உள்ளது நம்மில் பலரும் அறியாமல் இருப்பது கவலைக்குறியது.
ஆங்கிலம் வாழ்க்கைக்கு அவசியமானதெனினும் , தமிழ் குழந்தைக்கு தாய்ப்பால் போன்றது என்பதை நான் உணரவேண்டும்.
பிற மொழி கலப்பின்றி பேசுவது எழுதுவது, ஏதொ ஒரு நாள் இரவு நடந்தேறும் நிகழ்வு அல்ல. மெல்ல மெல்ல அந்த விழிப்புணர்வை
நாம் கொண்டு வரவேண்டும். தமிழில் கீச்சுவது நகையாடபடுவது நிறுத்தபடவேண்டும்.
சமூக வலை தளங்கள் வெறும் பொழுது போக்குதான் என்ற பொது நோக்கு மாற்றபடவேண்டுமானால், துவிட்டேரில் பங்கு
வகிக்கும் நாம் அதற்கான நடவடிக்கை முன்னெடுத்தால் போதும்.
கீச்சர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த, நாம் ஒரு நாள் மட்டும் ஒன்று கூடி தமிழில் மட்டுமே கீச்சவேண்டும். இதன் நோக்கம் என்னவெனில்,
மற்றவர்கள் கீச்சும் போது பயண் படுத்தும் பதங்களை கற்று கொள்ளவும், மற்றும் இது சாத்தியம் தான் என்பதை உணர்த்துவதும் தான்.
இதை ஏற்கனவே சாத்தியமாக்கிருக்கும் பிற மொழி கலாவாமல் கீச்சும் அன்பு நண்பர் கோ.அரவிந்தன் @tpkd_ அவர்களுக்கு நன்றி.
ஒரு பட்டியை (tag) உருவாக்கி, பிறமொழி கலப்புகள் என்னென்ன, அதன் தமிழ் பதம் என்ன என்பதையும் இந்த உலகத்துக்கு உணர்த்துவோம்.!
விருப்பம் உள்ளவர்கள் மட்டும் இந்த கட்டுரையை மறுகீச்சு செய்யவும்.
நம்மால் முடியும் தோழர்களே..ஒன்று படுவோம்!
தமிழ் பேச்சு, எங்கள் மூச்சு.!
நட்புடன் கட்டதொர!
-கட்டதொர™ @kattathora
16th May 2012 from Twitlonger
No comments:
Post a Comment