Saturday, May 4, 2013
கனல் ப்ளாக் செய்ததற்கு எதிர்ப்பு
@IamKanal கனல் என்னை ப்ளாக் செய்ததற்கு எதிர்ப்பு
அனுப்புநர்:
சேந்தன் அமுதன் (@sakthivel_twitt)
பெறுநர்:
புரட்சி கனல் (@IamKanal)
அடிங்கொய்(ஐ)யா,
கனல் என்னை ப்ளாக் செய்ததை எதிர்த்தும் ட்விட்டர் சட்டத்துக்கு அடங்கியும், ஒரு பக்கத்துக்கு குறையாமல் இந்த டிவிட்லாங்கரை எழுதித் தொலைக்கிறேன். அழகான ரம்யாவான ச்சீ ரம்மியமான சனிக்கிழமை காலைப் பொழுதில், 7½ சனி போல் பாடாவதியான ஃபிரண்ட் பாதியில் என்னை எழுப்பிவிட கடுப்பில் வழக்கம் போல வணக்கம் போட்டு ட்விட்டர்க்குள்ள வந்தேன். எல்லாத் தூங்குமூஞ்சிகளும் தாங்கள் சீக்கரமாய் எழுந்ததை பெருமை பீத்திக் கொள்ள மந்தமாக சென்ற சந்தில், பூமாக்ரிஷ்(பெண் என்பதால் பெயர் மாற்றப்பட்டு ஹாண்டில் @umakrishh மட்டும் கொடுக்கப்பட்டுள்ளது.அவ்வ்) கந்த சஷ்டி பாட்டு பத்தி அங்கலாய்க்க, நானும் அதை கேட்டுக்கொண்டு, சரியாக இன்னைக்கு எக்ஸ்பைரி ஆகும் பிரட்டை டோஸ்ட் செய்து சாப்பிட்டு கொண்டே வழக்கம்போல மொக்கை டிவிட்ஸ் போட, வழக்கம் போல அரைகுறை(@Araikurai), கனல்(@Iamkanal) துப்பினார்கள். அதற்கு கண்டனம் தெரிவித்து பல்லை விலக்கிட்டு துப்பச்சொல்லி மென்சன் இல்லா டிவிட் போட அதை ஆவன்யா(பெயர் மாற்றப்பட்டு ஹாண்டில் @idhanya கொடுக்கப்பட்டுள்ளது) சிசி போட்டதும், ஒரு பாக்கெட் உப்பை ஒரேயடியாக தின்றவன் போல் ரோஷம் வந்து சத்தம் இல்லாமல் என்னை கனல் பிளாக் செய்துவிட்டான். அது கூட தெரியாமல் ஜாலியாக கீச்சிட்டு இருந்த என்னை அவனே அன்ப்ளாக் செய்து, பாலோ பேக் செய்ய சொன்னான். அவன் சந்தில் போய் பார்த்தால் ட்ரோல் என்று எனக்கு புரியாத வார்த்தையில் என்னைத் திட்டி இருந்ததால், காவலன் வடிவேலு சொன்னதை போல அன்னியோன்யம் கேட்டுப் போயி, இது கோவப்பட வேண்டிய தருணம் என உணர்ந்து, கோவப்பட தெரியாமல் அல்லாடினேன். அதற்குள், கனல் 10 ரூவாய் தருகிறேன் எனச் சொல்ல, நான் 10 முட்டைப் பரோட்டா என டீல் பேசினேன். சந்தில் கோவப்பட சொல்லித்தரக் கேட்டு போட்ட ட்விட் RT ஆகாததாலும், எனது பாசமலர்கள் அக்கா ரோசாகுமாரி, தங்கை கொழலி போன்றவர்களின் சண்டைக்கான ஆசையை புரிந்து கொள்ளாமல், இதை பூமாக்ரிஷ் மற்றும் நிரைநேர் இலக்கண விதிப்படி 3 எழுத்து ஒரிஜினல் பேர் கொண்ட @anu_twits ஏளனம் செய்ததாலும், ட்விட்டர் ச(ண்)மூகம் கோவம் கொண்டேன். வந்த கோவம் வேஸ்ட் ஆகாமல், கனலின் டீல் பிடிச்சு இருந்தாலும் அவன் மீதே அதை காண்பித்தேன். திரும்ப பாலோ செய்யமுடியாது எனச் சொல்லிவிட்டேன். இதற்கு பிறகு சந்து மக்கள் சண்டை ஆர்வம் பெருகி வரும்போது, எனக்கு சாப்பிட்ட பிரட் டோஸ்ட் தாவு தீர்ந்து போக,பேச்சுலரின் முக்கிய விடுமுறை வேலையான துணி துவைக்கும் வேலையும் இருந்ததால், கோவப்பட்டால் பசி வரும் என்ற பயத்தில் பாதியில் ஓடி விட, கனல் நான் கோவப்பட்டதை நம்பி, கட்டதுரை சொம்பை திருடிய கேசில் உள்ளே இருப்பதால், ஆவன்யாவை சமரசம் பேச அனுப்பினான். ஆவன்யாயும் பல உண்மை கதைகள் சொல்லி என்னை சமாதானம் செய்ய, என் கோவத்திற்கு கிடைத்த மரியாதையை எண்ணி இறும்பூதடைந்து, (சிரிப்பை அடக்கிக் கொண்டு) இந்த வலி காலப்போக்கில் மறைந்த பின்னர் பாலோ செய்வதாக வாக்குறுதி கொடுத்தேன். பின்னர், மதியம் சிக்கன் லெக் பீஸ் சாப்பிட்டு சந்தோஷமாக இருந்த சமயத்தில் “Sorry machi.. If I hurt u really sorry, ithuku mel english theriyaathu” எனத் தப்பு தப்பான இங்குலீசில் கனல் சாரி கேட்க சிரிப்பு வந்துவிட்டது. ட்விட்டரில் அவன் வராதபோது ஜாக்கிடம் அவனுக்கு ப்ராக்ஸி கொடுத்ததை எல்லாம் மறந்து போய் விட்டானே என்ற கோவம் இருந்தாலும், நேற்று படித்த சேத்தன் பகத்தின் “2 ஸ்டேட்ஸ்” புத்தகத்தில்(இருங்கையா கொஞ்சம் சீன் போட்டுக்கிறேன்) இங்குலீஸ் பகவத் கீதையின் சாராம்சம் ஆன “forgiveness” என்ற கேப்டனுக்கு பிடிக்காத மன்னிப்பை கொடுத்து புனலை பாலோ செய்துவிட்டேன். தங்கச்சி கியூட் புயிப்பம் அளவுக்கு எனக்கு டிவிட்லாங்கர் எழுத வராது என்றாலும் இது ஒரு சிறு முயற்சி. ஃப்ரெண்ட் படத்துக்கு கூப்பிடுவதால் இதுக்கு மேல் எழுத முடியவில்லை. கொத்தாலதேவன் சைட்ல மைக் கொடுங்கப்பா... நோ துப்பிங்...
‘அடி’ குறிப்பு: கோவத்துக்கு கோசிங்க் கிளாஸ் சேர்ந்து உள்ளேன். அடுத்த முறை கனல் போன்ற டம்மி பீசுகள், டம்மி காரணத்துக்காக பிளாக் செய்தாலும், பதிலுக்கு பிளாக் செய்யப்பட்டு மிக உக்கிரமான டிவிட்லாங்கர் வரும் என எச்சரிக்கிறேன். மேலும் “உலகின் கோமாளித்தனம் வெளிப்படுவது கோமாளிகளின் கோவத்தையும் கோமாளித்தனமாக பார்க்கும்போது தான்...” போன்ற தத்துவ டிவிட்கள் வரும் என எச்சரிக்கிறேன்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment