யோக்கியனாக, பெண்களை ஆராதிப்பவனாக இருந்துதான் ஆகவேண்டும்
என்றெல்லாம் அவசியமில்லை. ஆனால் பொது இடத்திலோ, சமூக வலைத்தளத்திலோ
பெண்களைப் பற்றிப் பேசும்போது கொஞ்சம் எச்சரிக்கையாகவே இருக்க வேண்டும்.
இந்த கருத்தை அறத்தின் அடிப்படையில் எல்லாம் சொல்லவில்லை. ஏனெனில் அறம்
என்பது ஆளாளுக்கு மாறுபடக்கூடிய தன்மை கொண்டது. பின்விளைவுகள் கொஞ்சம்
எகனைமொகனையாக அமையக்கூடிய கருத்து என்றால் அதை தவிர்த்துவிடுவதே மேல்.
ஏனெனில் பரம அயோக்கியன் கூட தன் பெயர் பெண்கள் விஷயத்தில் கெடுவதை
விரும்புவதில்லை. சமூகம் மன்னிக்கவே மன்னிக்காத விஷயமாக பெண்களுக்கு எதிரான
விஷயங்கள் அமைந்திருக்கிறது. நல்லவன் என்று யாருமில்லை. ஆனால் இந்த ஒரு
விஷயத்தில் நல்லவனாக நடிப்பவனுக்கு, எதிர்காலத்தில் தீங்கு எதுவுமில்லை.
http://tl.gd/n_1rkamb1
No comments:
Post a Comment