Friday, June 21, 2013

நீயா நானா பார்ட் 3

நீயா…நானா - குற்றம் நடந்தது என்ன? – பார்ட் 3 ஒருவழியா செட்டில் ஆகி உட்கார்ந்தோம்… பக்கத்துல இருந்த பீட்டர் அங்கிள்கிட்ட பேச்சுக்குடுத்தேன்… “நீங்க எப்படி இந்த நிகழ்ச்சிக்கு வந்தீங்க?” “எங்க கம்பெனிக்கு ஆடிஷன் வந்தாங்க… ரெண்டு மூணு ரவுண்ட் வச்சாங்க… அதுல செலக்ட் ஆகி வந்தேன்.. நீங்க” “ஹே…ஹே.. நாங்களாம் டைரக்ட் எண்ட்ரி” (இதுல ஒரு அல்ப சந்தோஷம்) சிக்கனாண்டா ஒருத்தன்னு அவர்கிட்ட நம்ம டிவிட்டர் பெருமையலாம் எடுத்துவிட்டேன்…. தமிழ் டிவிட்டர்கள் இவ்வளவு ஆக்டிவா இருக்கீங்களான்னு ஆச்சரியமா கேட்டுட்டு ஐடிலாம் வாங்கிவச்சாரு... பலபேருக்கு வலைபாயுதேன்னா என்னன்னே தெரியாத ஒரு கேவலமான இலக்கிய சூழல்ல தான் வாழ்ந்திட்டிருக்கோம்னு அவர்கிட்ட பேசனதுக்கபறம் தான் தெரிஞ்சிது… சைட்ல பார்த்தா, கார்க்கி யாருக்கிட்டயோ டீ ஆத்து ஆத்துன்னு ஆத்திக்கிட்டிருந்தாரு… பின்னாடி பிளிறல் மாம்ஸ் மட்டும் பரிதாபமா உட்கார்ந்துகிட்டு இருந்தாரு… கொஞ்ச நேரத்துல மொத வரிசை ஆளுங்களாம் வந்தாங்க… யாருன்னு பார்த்தா டான் அசோக், இளவரசன்னு ஒரு பதிவர், அராத்து, கவுதம சித்தார்தன். நிகழ்ச்சி ஆரம்பிக்கறதுக்கு கொஞ்ச நேரம் முன்னாடி செட் ப்ராப்பர்ட்டிய கூட்டிட்டு வந்து உட்கார வச்சாங்க… அதான் அந்த செவப்பு சொக்கா… அராத்து திரும்பி கொஞ்ச நேரம் எங்ககிட்ட பேசிக்கிட்டிருந்தாரு… பரவால்ல மனுஷன் யாரையும் ஃபாலோ பண்ணலனாலும், ஐடிய சொன்னதும்.. ஓ அந்த வயசானவர் டிபி வச்சிருப்பீங்க…அவர் தானேன்னு கரெக்டா கேட்டாரு…. அட்லீஸ்ட் இவருக்காவது நம்மளே தெரிஞ்சிருக்கேன்னு ஒரு ஆறுதல். நாமளும் ஏதாவது பேசணுமேன்னு சாருவ குசலம் விசாரிச்சிவச்சேன்… ஒரு அஞ்சு நிமிஷத்துல கோபி வந்தாரு நிகழ்ச்சி ஆரம்பிச்சது… முதல் கேள்வி ”அறிவாளி வேடம் போடுவதன் அவசியம் என்ன?” ஐ ஜாலி…. வெளிய பார்த்த டாப்பிக்… கிழிச்சி தொங்க விட்டுட வேண்டியது தான்னு நெஞ்ச நிமித்திக்கிட்டு ரெடியானேன்… முதல் கேள்விங்கறதால அவனவனும் காதுல ரத்தம் வர்ற அளவுக்கு பேசனாங்க. கோயில்ல உண்டக்கட்டி வாங்கறதுக்கு கூட இவ்வளவு அடிதடி இருக்காது போல, மைக்குக்கு செம கும்மாங்குத்து… மேல போன மைக் 20 நிமிஷம் ஆகியும் கீழ வர்றதுக்கான அறிகுறியே தெரியல… ஒருவழியா மைக் சிக்கி சின்னாபின்னமாகி கார்க்கிக்கிட்ட வந்தது… அவர் சொன்ன பதில கோபி ”செல்லாது செல்லாது… வேற வேற”ன்னு (மேலதிக தகவலுக்கு http://www.twitlonger.com/show/n_1rkrts2 ) மைக்க புடிங்கி பீட்டர் அங்கிள்கிட்ட குடுத்துட்டாரு அவர் பேசி முடிச்சதும் மைக் என்கிட்ட வந்தது… இப்ப பாரு சரவெடியன்னு மைக்க வாங்கி வாய தொறந்தது தான் தாமதம்… கோபி அங்கிருந்து “சரி… ஆண்கள் சைட்ல இருந்து போதுமா பதில் வந்திடுச்சு… இப்ப பெண்கள் கிட்ட கேட்போம்”னு டிராப்பிக்க அந்த பக்கம் டைவர்ட் பண்ணிட்டாரு…செய்ங்கடா...செய்ங்க... ரைட்டு விடு, மைக் நம்மகிட்ட தானே இருக்கு அடுத்த கேள்வில பார்த்துக்கலாம்னு இருந்தேன்…. அது ஒரு மூதேவிக்கு பொறுக்கல… பின்னாடி இருந்து நோண்டி “சார் நாங்க ஒண்ணுமே பேசல…. மைக்க குடுங்க… பேசிட்டு உங்ககிட்டயே குடுத்துடறோம்…மதர் பிராமிஸ்”னு பரிதாபமா கேட்டான்… நாம தான் கொசுவுக்கே குடைபிடிக்கறவனாச்சே, சரின்னு நம்பி குடுத்தேன் (அதுக்கப்பறம் அந்த மைக்க அரைமணி நேரம் பார்க்கவேயில்லங்கறது வேற விஷயம்) பெண்கள் சைட்ல தான் பாவம் கோபிய தெளிய வச்சு தெளிய வச்சி அடிச்சாங்க… “இல்ல கேள்விய நல்லா புரிஞ்சிக்கோங்க… நான் கேட்டது அது இல்ல”ன்னு சொல்லி சொல்லியே அவருக்கு நாக்கு தள்ளிடுச்சு… ரேணுவ நான் பேசிப்பார்த்து அது தான் கடைசி… எனக்காவது பரவால்ல 50 ரூபாய் பெட்ரோல் செலவோட முடிஞ்சுது… அவுங்க தான் பாவம் பஸ்லாம் வச்சிலாம் வந்தாங்க… ஒருவழியா முதல் கேள்வி முடிந்து அடுத்த கேள்வி வந்துச்சு “நீயா நானா எப்படி தன்னை அறிவாளியாய் காட்டிக்கொள்கிறது” என்கிட்ட இருந்து மைக்க புடுங்கன மவராசன் அப்படி ஒரு சம்பவமே நடக்கலங்கற மாதிரி வேற எவன்கிட்டயோ மைக்க குடுத்துட்டான்… எப்படியோ அது நம்ம பிளிறல் கைல மாட்டுச்சு… முதல் பால்லயே அடிச்சாரு சிக்ஸர்…. செம க்ளாப்ஸ்…. அப்படியே ஒரு ரவுண்ட்டு வந்து கடைசிய நம்ம பீட்டர் அங்கிள்கிட்ட வந்தது… சரி அடுத்து நமக்கு தான்னு ஆசையா கைய நீட்டேன்… அவ்ளோ தான், கழுதைக்கு மூக்கு வேர்த்த மாதிரி கோபி….”ஆங் மைக்க கீழ இவர்கிட்ட குடுங்க”ன்னு புடுங்கி அராத்துகிட்ட குடுத்துட்டாரு…. அவரு பொளந்து கட்டனத தான் நீங்க பார்த்திருப்பீங்க… எங்க சுத்தனாலும் மைக்கு நம்ம பீட்டர் அங்கிள்கிட்ட வந்திடுதுன்னு நானும் ஃபிரியாவுடு மாம்ஸும் அவர்கிட்ட ஒரு டீல போட்டோம்… ”சார் நீங்க பேசி முடிச்சதும் மைக்க எங்ககிட்ட குடுத்துடுங்க”ன்னு… கணபதி ஐயர் பேக்கரி டீல விட கொஞ்சம் கேவலமான டீல் தான்… இருந்தாலும் என்ன பண்றது.. வந்ததுக்கு நாலு வார்த்தையாவது பேசி ஆவணுமே… அவரும் பரிதாபமா ஒரு லுக்குவிட்டுட்டு, சரின்னாரு…. நான் பேசி முடிச்சதும் ஃபிரியாவுடு மாம்ஸுக்கிட்ட குடுத்துடறது தான் ப்ளான்… அடுத்த கேள்வி அறிவாளி தோற்றம் பற்றி… சொல்லிவச்ச மாதிரி நம்ம அங்கிள்கிட்ட மைக் வந்தது… அவரும் நல்ல மனுஷன், சொன்ன மாதிரி மைக்க என்கிட்ட குடுத்தாரு… நானும் “கொஞ்சம் fair’a இருக்கற ஆண்கள் மீசை இல்லாம மொழு மொழுன்னு இருந்தா அறிவாளி மாதிரி தெரிவாங்க… கூடவே ரிம்லெஸ் கண்ணாடி போட்டிருந்தா ஒரு இண்டலக்சுவல் லுக் வரும்”னு சொன்னேன்… எடிட்டிங்ல போயிந்தி… எந்த மாதிரி டாபிக் பேசுனா அறிவாளியாய் காட்டிகலாம்ங்கற கேள்விக்கு “இங்க உட்கார்ந்துகிட்டு ஓபாமாவோட ஹெல்த் பாலிசிய பத்தி பேசணும்… அதனால நமக்கு பத்து பைசாவுக்கு பிரயோஜனம் இல்லனாலும் அத பத்தி பேசனா…பார்க்கறவன்…ஓ இவுனுக்கு பல விஷயம் தெரியும்னு நெனச்சிப்பான்”ன்னு சொன்னேன்… இதையும் தூக்கிட்டாங்க… அனேகமா நம்ம ரிப்போர்டர் தம்பி தான் எடிட்டிங் இன்சார்ஜ்ன்னு நினைக்கிறேன்… இதே மாதிரி இன்னும் ரெண்டு மூணு கேள்விக்கு பதில் சொன்னேன்… எல்லாத்தையும் சொன்னா இது ரொம்ப சீரியஸ் டிவிட்லாங்கராயிடும்… ஸ்கிப் பண்ணிடலாம்… மாம்ஸும் என்னைய மாதிரி மூச்சை புடிச்சிக்கிட்டு வாய்ப்பு வரும் போதுலாம் பேசனாரு… அவர் செஞ்ச செலவுக்கு அட்லீஸ்ட் ஒண்ணாவது வந்துச்சே….இல்லனா ரொம்ப மனசு ஒடஞ்சிருப்பாரு… நாங்களாம் இங்க மைக்குக்கு மல்லுக்காட்டின்னு இருக்கறப்போ…பிளிறல் மாம்ஸுக்கு மட்டும் மைக்கு தேடி தேடி வந்துச்சு… அவருக்கு சேகுவேரான்னே பேரு வச்சிட்டாரு ஆண்டனி… அங்கிருந்து, சேகுவேரகிட்ட மைக்கு குடுங்க…சேகுவேராகிட்ட மைக்க குடுங்கன்னு டைரக்ஷன் வந்துகிட்டே இருந்தது… ரெண்டு பதிலுக்கு அப்பறம் கார்க்கி தெளிவாயிட்டாரு.... எங்கள பார்த்து, நீங்க புடுங்கறதுலாம் தேவையில்லாத ஆணி தாங்கற மாதிரி ஒரு லுக்கு விட்டாரு... அந்த பக்கம் ராசகுமாரி கொஞ்சம் கூட கூச்சப்படாம காவல் கோட்டம், பெண் விடுதலைன்னு ரவுண்டு கட்டி அடிச்சி விட்டுக்கிட்டிருந்தாங்க…. ரேணு, யாரு வீட்டு எழவோன்னு, மைக்க பாஸ் பண்றதுல பிஸியா இருந்தாங்க… நடுவுல இந்த செவப்பு சொக்கா டார்ச்சர் வேற… நிறுத்தி நிதானமா ப்ளேட போட்டுன்னு இருந்தான்…. ஆனா கவுதம சித்தார்த்தன் பேச ஆரம்பிச்சதும் தான் செவப்பு சொக்கா தெய்வமா கண்ணுக்கு தெரிஞ்சான்… மனுஷன் நைட்டு 2 மணிக்கு ஆரம்பிச்சாரு… கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாம 20 நிமிஷம் பேசிட்டு… நான் அதிகமா பேசிட்டேன்லன்னு ஒரு கேள்வி வேற... ஆமாம்னு சொல்லி சோலிய முடிக்காம கோபி ரொம்ப நல்லவனாட்டம் இல்ல பேசுங்கன்னு உசுப்பேத்த,…அவரு மறுபடியும் ஆரம்பிச்சாரு… ஒரு 30 நிமிஷம்… படிமங்கள், தரிசனங்கள்ன்னு மூச்சு தெனற தெனற அடிச்சாரு… ஆனா அவர் பேச்ச கேட்டதுல இருந்து எனக்குள்ள ஒரு பெரிய மாற்றம்… இப்ப கமல் பேசறதுலாம் ரொம்ப தெளிவா புரியுது… அப்புறம் தான் அந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க கேள்வி வந்தது….. தமிழகத்தின் அறிவுஜீவி யார்… பயபுள்ள நான் பேசுனது எல்லாத்தையும் கட் பண்ணிட்டு அத மட்டும் தெளிவா போட்டுடுச்சு… இதுக்கு நம்ம பீட்டர் அங்கிள் சொன்ன பதில் தான் டாப்க்ளாஸ். தமிழகத்தின் தலைசிறந்த அறிவுஜீவி ஜாவேத் அக்தராம்… இந்த ஒரு பதிலுக்காகவே தான் அவருக்கு அந்த டிவி பொட்டி… ஒருவழியா நைட்டு மூணு மணிக்கு முடிஞ்சுது… நாங்களும் ச்சீ ச்சீ இந்த பழம் புளிக்கும்னு சொல்லிட்டு நடைய கட்டிணோம்… முடிக்கறதுக்கு முன்னாடி, இதுவரை சொல்லாத விஷயம்… பெண்கள் சைட்ல கூட்டம் கம்மியா இருக்குன்னு என் வூட்டம்மாவையும் கூட்டு உட்கார வச்சிட்டாங்க (ரேணு செய்த சதி) நிகழ்ச்சி ஒளிபரப்பானதுக்கு அப்பறம் அவுங்க சொன்னது தான் என்னால இன்னும் தாங்கிக்க முடியல “பேச போன உங்கள விட வேடிக்கை பார்க்க வந்த என்னை அதிகமா காட்டனாங்க” அவ்வ்வ்வ்…… குத்துங்க எசமான்… குத்துங்க….. டிஸ்கி: இந்த டிவிட்லாங்கரில் வரும் சம்பவங்கள் 100% உண்மை முதல் பாகம்: http://www.twitlonger.com/show/n_1rksuhn இரண்டாம் பாகம் : http://www.twitlonger.com/show/n_1rktkjl http://tl.gd/n_1rkugt7

No comments:

Post a Comment