Wednesday, June 26, 2013

தேத்தண்ணி

19 Jun
எழுமிச்சை தேத்தண்ணி + தட்டை #இதிஇ

சார், வாட் இசு தட்டை?
Reply to   

Image will appear as a link
  1. புரியற மேரி டமில்ல சொன்னா டக்குன்னு புடிச்சுக்குவோம்.
  2. இப்படி ஒரு பண்டம் இருப்பதை அறியாமல் நீங்க எல்லாம் என்ன வாழ்க்கை வாழுறீங்க.. உங்கள் மீதான மதிப்பு அற்றுப்போனது
  3. ஐயா அந்தப் பண்டம் கிலோ கணக்கில் தின்னிருக்கேன். நீங்க பேர சரியாச் சொல்லியிருக்கோனும்.
  4. பாதி மதிப்பு திரும்பியிருக்கு.. ஒரு பண்டத்தின் பல் வேறு பெயர்களையும் அறிந்திருக்க வேண்டாமா ;-))
  5. எனக்குத் தெரிஞ்சு தமிழ்ல தட்டைதான். வேற பெயர் என்ன? :)
  6. தட்டுவட செட்டு பத்தி சேலத்துக்காரருக்கே பாடமா... ஐயகோ...
  7. தட்டவடையா? பஜ்ஜிவடை போண்டாவடைன்னும் சொல்வோம்னு சொல்லி என்னை அதிர்ச்சிக்கு ஆளாக்காதிங்க :)
  8. எங்கூர்லஎல்லாம் அப்படித்தான் :) இதேமாதிரி ரா(கி)யிவடையும் உண்டு, அதுல நிலக்கடலை சேர்த்தல் சிறப்பு
  9. மாங்காடு அம்மன் கோயிலில் கிடைக்கும் பிரசாத தட்டை எந்த ஊருக்கும் டஃப் கொடுக்கும்
  10. அப்படியா? ஆஞ்சநேயர் கோயில் வடையே தட்டையாட்டம்தானே இருக்கும்.
  11. ஆமவடையை என்னன்னு சொல்வீங்க? தெரிஞ்சிக்கதான் கேக்குறேன் :)
  12. இது கொஞ்சம் bigger, thikker with hole in the middle Non-oily and crispy++
  13. ஓஹோ! என்னடா தட்டையப் போய் வடைன்னு சொல்றாங்களேன்னு பலநாள் தலைய பிச்சிருக்கேன் :)
  14. மிளகு வடைன்னா திருப்பதி, இப்ப குடுக்கிறாங்களான்னு தெரியல
  15. இங்க நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோயில்ல கிடைக்குதே! பிரமாதமா இருக்கு
  16. கிராண்ட் ஸ்வீட்சில் போட்டுக்கிட்டிருந்தாங்க. நல்லாருக்கும்.
  17. ஆமவடை’ன்னு எல்லாம் இங்க படிச்சதுதான், கேட்டதேயில்லை.. பருப்புவடை’ய தான அப்படி சொல்றது
  18. தெரியும் ரொம்ப பிடிக்கும் வரும்போது வாங்கி வரவும் ;)
  19. அடையார் ஆனந்த பவனில் ராஜபாளையம் தட்டை என்று கேட்டு வாங்கவும் #வெரைடீ
  20. ஆமா. நாங்கள்ளாம் தெக்கு. பேரெல்லாம் அப்படித்தான் வெப்போம். :)
  21. ஆமைவடை சின்னதா ஓட்டையில்லாம இருக்கும் ஆனா பருப்புதான் மெயின் இங்கிரீடியன்ட்
  22. முறுகலான பச்சை மிளகாயும், வெங்காயமும் தான் ;-)
  23. ஓ! பருப்புவடை aka மசால்வடையத்தான் இந்த அசலூர்காரங்க ஆமவடைன்னு சொல்றாங்களா!
  24. இல்லை ஆமைவடை வேறு, வெங்காயம் அவ்வளாக இருக்காது பூண்டு துளியும் இருக்காது
  25. பருப்பில்லாத வடை எதுய்யா? :) (முருகா, நான் சரியாத்தான் பேசுறேனா?)
  26. இதில் ஏதோ சூது இருப்பதாக உணர்கிறேன்.. அவ்வ்வ்
  27. male வடை பத்தி இவ்ளோ சொல்றீங்க, female வடைக்கு உங்கூர்ல என்ன பேரு? எங்கூர்ல உழுந்து வடை.
  28. அண்ணே, நீங்க உழுந்து உழுந்து தின்னாலும் அது உளுந்து வடைதான்
  29. ஐ ப்ளேம் கூகிளாண்டவர் ஃபார் திஸ் மிஸின்ஃபர்மேஷன்.
  30. அதில் இருக்கும் மேற்கோள்களையும் பாருங்க. (சொக்கனுக்கே சங்க இலக்கிய மேற்கோளா, டேய், இது ஒனக்கே டூ மச்சா தெரியலியா)
  31. நீங்க சொல்றதுதான் கரெக்ட், I stand corrected :)
  32. உழுந்து சரிதான். உழுந்துருளும் எல்லைதனில்
  33. கரெக்டு, நாந்தான் தப்பாச் சொல்லிட்டேன்
  34. அப்படியே இந்த தவளை வடையும் பேசிட்டீங்கன்னா. சிறப்பா இருக்கும் :-)
  35. ஒரு ப்ளேட் கொடுங்க, சாப்டுகிட்டே பேசுவோம் ;)
  36. இங்க கிடைக்காது. பேசியே ஆசையை தீர்க்கலாம்ன்னு தான் வந்தேன் :-)
  37. உழுந்து/உளுந்து, பவழம்/பவளம்....
  38. நோ கோவம். சரியாத்தான் பேசுறேனான்னு டவுட்டு இருந்துச்சு. டேய்ய்ய்ய்ய்ல தெளிவாயிருச்சு :)

No comments:

Post a Comment