Monday, June 17, 2013

Tamil Tweet - Acronyms Raja.Vivaji 16th June 2013

Tamil Tweet- Acronyms

ASUKON-அருமையாகச் சொன்னீர்கள், உங்கள் கருத்துக்கள் ஒவ்வொன்றும் நெத்தியடி
ISNKK- இதைச் சொன்னால் நம்மை கேனக் கிறுக்கன் அப்படிப்பாங்க
OSI – ஒசொஇ: ஒண்ணும் சொல்றதுக்கு இல்ல!
OPU - ஒபிஉ: ஒண்ணுமே பிரியல உலகத்தில
கககபோ: கருத்துக்களை கச்சிதமாக கவ்விக் கொண்டாய் போ!
அஇசா: அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா
அஆகூ - அனுபவிக்கணும்! ஆராயக் கூடாது
இசெநாபா: இன்னைக்கு செத்தால் நாளைக்கு பால்.
இரூபோயோ: இதுக்குன்னே ரூம் போட்டு யோசிப்பாங்களோ ?
வேவேவஅ: வேண்டாம்…வேண்டாம்…வலிக்கிறது, அழுதுவிடுவேன்
சாநீஎபோ: சார் நீங்க எங்கேயோ போய்டீங்க
கெகெ: கெளம்பிட்டாங்கய்யா கெளம்பிட்டாங்கய்யா
ஏஇகொவெ: ஏன் இந்த கொலை வெறி?
எகொஇச: என்ன கொடுமை இது… சரவணன் (சந்திரமுகியில் பிரபு)
நுகபிநி: நுண்ணரசியலை கண்டு பிரமித்து நிற்கிறேன்!
அசெஆ: அடுத்தவன் செலவில் ஆப்பு
நாபிமுமூகா: நான் பிடிச்ச முயலுக்கு மூணே கால்
சொசெசூ: சொந்த செலவில் சூனியம்
புதசெவி: புரியவில்லை; தயவு செய்து விளக்கவும்
இமா: இரண்டாம் மாடி = டூ மச்சு!
எதஇசொ: என்ன தலைவா இப்படி சொல்லிடீங்க
எவேபொஇ: எனக்கு வேற பொழப்பு இல்லே?
இஎவபோ: இது என்னடா வம்பா போச்சு!
ககைநா: கணினி கை நாட்டு
எஅகவ: என் அறியாமையைக் கண்டு வருந்துகிறேன்
எஅகுஇ: எங்க அப்பன் குதிருக்குள் இல்லை
பிசுகாந — பிழையை சுட்டி காட்டியமைக்கு நன்றி
தஇம — தவறாக இருந்தால் மன்னிக்கவும்
தஇநபாகொ — தவறு இனிமேல் நடக்காமல் பார்த்துக் கொள்கிறேன்
எபிம — எழுத்துப் பிழைகளை மன்னிக்கவும்
விவிசி — விழுந்து விழுந்து சிரிக்கின்றேன். (ROTFL / LMAO மாதிரி)
எகொமேஇ: என்ன கொடுமை மேடம் இது…
முகோமுகோ — முதல் கோணல் முற்றிலும் கோணல்
ஒகரெமா: ஒரே கல்லுல ரெண்டு மாங்காய்!

நன்றி - @bsubra

Source http://10hot.wordpress.com/2009/07/30/tamil-bloggers-acronyms-twitter-shortforms-expansions/
http://tl.gd/n_1rkrq4u

No comments:

Post a Comment