Wednesday, June 26, 2013

ஜெயமோகன் தளத்தில்


லக்கிப்பீடியா @luckykrishna


26th June 2013 from TwitLonger 

சமீபமாக ஜெயமோகன் தளத்தில் ‘நகைச்சுவை’ என்று பெயரிடப்பட்டு வரும் கட்டுரைகளை ஜெயமோகன்தான் எழுதுகிறாரா? தமிழர்களுக்கு நகைச்சுவையுணர்வு இல்லையென்ற கீறல்விழுந்த ரெக்கார்டையே திரும்பத் திரும்ப ஓட்டிக்கொண்டிருக்கிறார். இப்படி சொல்பவர் வாய்விட்டு கூட வேண்டாம், லேசாக சிரிப்பது மாதிரியாவது ஏதேனும் போட்டோவை யாராவது பார்த்திருக்கிறீர்களா? ஜெயமோகனுக்கும் இந்துஞான நகைச்சுவை மரபுக்கும் எந்த தொடர்புமில்லை என்றாலும் கூட அடுத்தடுத்து இணைய மொண்ணைத்தனமான ’உயர்தர நகைச்சுவை’, ’ராஜ தமிழாய்வு’, மாதிரியான கட்டுரைகளை எழுதுவது அவர்தானா என்று சந்தேகமாக இருக்கிறது. அவரது சிந்தனைதான் கொஞ்சம் ஓல்டே தவிர, எழுத்துநடை சுவாரஸ்யமானதுதான். இக்கட்டுரைகளில் அதுவும் மிஸ்ஸிங். மேலும் ஜெயமோகனின் கை கீபோர்டில் கைவைத்தாலே குறைந்தபட்சம் இரண்டாயிரம் வார்த்தைகள் நிச்சயம். ஆனால் மேற்குறிப்பிட்ட கட்டுரைகள் இருநூறு, இருநூற்றி ஐம்பது வார்த்தைகளுக்குள்ளாக முடிந்துவிடுகிறது என்பதுதான் கூடுதல் சந்தேகத்தை கிளப்புகிறது. கடைசியிலே நீங்களும் டொக்கு ஆயிட்டீங்களா ஜெயமோகன் சார்?

No comments:

Post a Comment