Thursday, June 20, 2013

நல்லொழுக்கம்

Started by anandraaj04 on Jun 20, 2013
Sort tweets by latest first

பெரியோரைக் கண்டால் தன் இருக்கையிலிருந்துஎழுதலும், எதிர்சென்று வரவேற்றலும், பிரியும்போது சற்றுப் பின்செல்லும் பணிவு' #நல்லொழுக்கம் anandraaj04 tweeted on Jun 20, 2013 05:38

@Anandraaj04 வியத்தலுன் இலமே இகழ்தலும் இலமேன்னு முந்தி ட்விட் போட்டது நீங்கதான? :) ragavang replied on Jun 20, 2013 08:52

@RagavanG ஆமா .. புறநானூறில் இருந்து. ஆனா இது நாலடி. ;-) t.co/M4D9nq5sCf anandraaj04 replied on Jun 20, 2013 08:55

@Anandraaj04 அது சரி. நீங்க புறத்த பின்பற்றப் போறீங்களா? நாலடியாரின் அடியொற்றப் போறிங்களா? :) ragavang replied on Jun 20, 2013 09:01

@RagavanG ஆஹா.. உனக்கு அம்மா பிடிக்குமா..., அப்பா பிடிக்குமான்னு... கேக்குற மாதிரி இருக்கே. ;-)) anandraaj04 replied on Jun 20, 2013 09:02

@Anandraaj04 அம்மா சொல்றதும் அப்பா சொல்றதும் நேருக்குமாறா இருந்தா யார் சொன்னதக் கேட்டிருப்பிங்க? ragavang replied on Jun 20, 2013 09:04

@RagavanG அன்னப்பறவை மாதிரி தேவையானத கேட்டுக்க வேண்டியதான் ..! ;-) anandraaj04 replied on Jun 20, 2013 09:12

@Anandraaj04 வியத்தலும் இலமே/ பணிவு - அன்னப்பறவையாகிய உங்களுக்கு இந்த ரெண்டில் பாலெது நீரெது? :) ragavang replied on Jun 20, 2013 09:14

@RagavanG ம்ம்.. வியத்தல் என்பது மரியாதைக்கும் பணிவுக்கும் உரிய நிகரான சொல் எனத்தெரியவில்லை. anandraaj04 replied on Jun 20, 2013 09:17

@Anandraaj04 பணிவுக்குக் காரணம் பெரியோர் என வியத்தல். நீங்க வியத்தலும் இலமேன்னா பணிஞ்சிருக்க மாட்டீங்க. :) ragavang replied on Jun 20, 2013 09:21

@RagavanG கருணாநிதியை வியத்தலின் காரணம் வேறு... பெரியவர் என பணித்தல் வேறு. மழையை வியத்தல் வேறு.. வருண பகவானை பணித்தல் வேறு..! #சரிதானா anandraaj04 replied on Jun 20, 2013 09:26

@Anandraaj04 nope :) ragavang replied on Jun 20, 2013 09:27

@RagavanG அவ்வ்வ்... அப்ப புறநானுறு இல்லே நாலடி.. ரெண்டுல ஒண்ணு தப்பா..!! ;-) #அப்பாடா பழிய பழந்தமிழ் இலக்கியத்துல போட ஒரு சான்சு anandraaj04 replied on Jun 20, 2013 09:30

@Anandraaj04 அதை நான் எப்படிச் சொல்ல முடியும்? ரெண்டையும் ரசிச்சு ட்விட்டும் நீங்கதான் சொல்லனும் :) ragavang replied on Jun 20, 2013 11:34

@RagavanG We marvel not at the greatness of the great..,Yet Show the respect to whom deserves it, to get அப்படின்னு சொல்லலாமா கொழப்பி ;-) anandraaj04 replied on Jun 20, 2013 11:44

@Anandraaj04 திரும்பவும் என்னைக் கேக்குறிங்களே. கொழப்பாத விளக்கமா எனக்குச் சொல்லுங்க :) ragavang replied on Jun 20, 2013 11:47

@RagavanG ஒருவரின் அருமை பெருமைகளை வியக்கிறதும் பணிவு மரியாதை தருவதென்பதும் வெவ்வேறுதானே. anandraaj04 replied on Jun 20, 2013 11:53

@RagavanG ஆகையால் புறம் கணியன் சொன்னதும்.... சமண முனி சொன்னதும் வெவ்வேறு...!! anandraaj04 replied on Jun 20, 2013 11:53

@Anandraaj04 வியப்பின் நீட்சிதானே மரியாதை. வியப்பில்லாத இடத்தில் மரியாதை இருக்காதே :) ragavang replied on Jun 20, 2013 11:56

@RagavanG வியப்பை கொண்டாடலாம். ஆனால் அது "மரியாதை" என பண்பில்... ஒழுக்கத்தில்.. மாண்பில் வராது. anandraaj04 replied on Jun 20, 2013 12:01

@RagavanG என்னதான் வியத்தகு எழுத்தாற்றலைக் கொண்டிருந்தாலும் "சிலரை" ட்விட்டரில் சாத்துறாங்களே ...!! anandraaj04 replied on Jun 20, 2013 12:03

No comments:

Post a Comment