Wednesday, June 26, 2013
தீயா வேலை செய்யணும் குமாரு
லக்கிப்பீடியா @luckykrishna
26th June 2013 from TwitLonger
’தீயா வேலை செய்யணும் குமாரு’ படத்தில் ஒரு டயலாக் “இது வீடு இல்லே. விக்கிரமன் சார் படம்” - தியேட்டரே அதிருகிறது.
கொஞ்சம் ஆழ்ந்து யோசித்தால் எங்க வீடும் விக்கிரமன் சார் படம் மாதிரிதான் இருக்கு. நினைச்சிப் பார்த்தா எங்க வீட்டுலே எல்லாருமே செண்டிமெண்டலாதான் ஒருத்தருக்கு ஒருத்தர் பேசிக்கறோம். குறிப்பா நானும் தங்கச்சியும் பேசும்போது, 1960களுக்கு முந்தைய திரைப்படத் தமிழில்தான் பேசுகிறோம். என்னுடைய அம்மாவும் சினிமா அம்மா மாதிரிதான் பேசுகிறார். துணைவியார் என்னை “நாதா” என்றோ, நான் அவரை “தேவி” என்றோ அழைத்துக் கொள்ளாதது மட்டும்தான் பாக்கி.
ஒருவேளை வெளியாள் யாராவது உள்ளே வந்து பார்த்தால் ஏதாவது டிராமா ரிகர்சலோன்னு சந்தேகப்படுற லெவலுக்குதான் எங்க குடும்பம் நடக்குது.
எனக்கு ஒரு டவுட்டு. எல்லா நடுத்தர வீடுமே கிட்டத்தட்ட இப்படித்தான் இருக்கா? இல்லேன்னா மணிரத்னம் சார் படம் மாதிரி நடக்குற குடும்பங்களும் இருக்கா?
http://tl.gd/n_1rl1g1j
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment