Tuesday, October 23, 2012

ராஜனோடு நான் நிற்கிறேன்

Cross Posted from http://www.twitlonger.com/show/jocmd4 Packiarajan S (@packiarajan) Posted Tuesday 23rd October 2012 from Twitlonger கருணாநிதி குடும்ப சண்டையில் நிம்மதி இழந்திருக்கிறாரோ இல்லையோ நான் இழந்திருக்கிறேன்.. ராஜன் மகளின் படத்திக்கு லைக் போட்டிருக்கிறேன், அவர் நிலையையும் அந்த குடும்பத்தின் நிலையையும் நினைத்து உண்மையில் நிம்மதி இழந்திருக்கிறேன்.. ராஜனின் சில பதிவுகள் மீதும் எனக்கும் மாற்று கருத்து இருக்கிறது ஒவ்வாமை இருக்கிறது ஆனால் அதை விட மோசமாக இந்த இணையத்தில் பலரை பலர் விமர்சித்திருக்கிறார்கள். நாட்டின் நிதியமைச்சரை சுப்பிரமணியசாமி திருடன் என்று இன்று நையாண்டி விமர்சனம் செய்திருக்கிறார் அதை போல பலரும் பலவிதாமாக விமர்சனம் செய்திருக்கிறார்கள். இது ஒரு கற்றட்ட சுதந்திர வெளியாகத்தான் நேற்றுவரை இருந்துவந்திருக்கிறது ஆனால் இன்று அது இல்லை என்று அதிகார ஆதிக்க வர்க்கத்தினால் மாற்றபட்டிருக்கிறது. ராஜன் கைது வெறும் இருவருக்குள்ளான இணைய சண்டையினால் நிகழ்ந்த கைது என்று மட்டும் நாம் பார்க்க முடியாது இதில் பெரும் அரசியல் அடங்கி இருக்கிறது. கடந்த மூன்று வருடங்களில் இணைய அரசியலின் தாக்கம் தமிழகத்தில் மிக அதிகம். முள்ளிவாய்க்கால் தொடங்கி முல்லை பெரியாறு, மூவர் விடுதலை, கூடங்குளம் வரை தமிழகத்தில் நடந்த நடக்கிற அரசியலில் இணைய அரசியலின் பங்கு மிக அதிகம். மிக சமீபத்தில் கூடங்குளம் விவகாரத்தில் அந்த மக்கள் காவல்துறையினரால் சுற்றி வளைக்கப்பட்டு பத்திரிக்கையாளர்கள் கூட அனுமதிக்க மறுத்த வேளையில் அங்கு நடக்கும் செய்திகளை வெளிக்கொண்டு வந்தது அந்த மக்கள் மீது ஏவப்பட்ட அநியாயத்தை வெளிக்கொணர செய்தது இணையம் மட்டுமே. ஆக தொடர்ந்து ஆட்சி அதிகாரத்திற்கு எதிரான அவர்கள் விரும்பாத விசயங்கள் இணையத்தில் மட்டுமே வெளிவந்தன.. இந்த இணைய வளர்ச்சியில் இதுவரை தமிழ்மண்ணில் தாங்கள் சொல்வது தான் சரி என்று எழுதி திரிந்த பல ஊடகங்களும் அடிபட்டன.. இங்கிருந்து எடுத்து செய்தி வெளியிடும் போக்கு அதிகரித்துள்ளது. ஊடகவியலாளர்கள் பலர் இணையத்தில் வந்து பங்குகொள்ள வேண்டிய கட்டயாம் உருவாகி இருக்கிறது. ஆக அவர்களுக்கும் இணைய வளர்ச்சியை விரும்பவில்லை.. அந்த நிலையில் தான் இன்று ராஜனின் கைது நிகழ்ந்திருக்கிறது.. சென்னை கமிசனர் நேரடியாக பேட்டியளித்து மூன்று வருடம் சிறை தண்டனை என்று அறிவிப்பதற்கு பின்னால் இருக்கும் அரசியல் இங்கு தனிச்சையாக மாற்று கருத்துகளோடு ஆட்சி அதிகார ஆதிக்க வர்க்கத்திற்கு எதிராக எழும் குரல்களை அடக்க வேண்டும் என்பதே. ராஜன் கைதேன்பது வெறும் தனி நபரின் கைதல்ல ஒட்டுமொத்த மாற்றுகருத்தாளர்களின் தமிழர் அரசியல் ஆதரவாளர்களின் கருத்தியலுக்கான மறைமுக அச்சுறுத்தலே.. ஏனெனில் ராஜனுக்கும் சின்மயிக்கும் உருவான வாக்குவாதம் இந்த அரசியலை முன்வைத்துதான். தமிழர் நல அரசியலுக்கு எதிராக சின்மயி பேச ஆரம்பிக்கிறார் அதில் இருந்து விவாதம் ஆரம்பித்து அது வாக்குவாதமாக மாறி இன்று வன்மமாக மாறி பிரபலமாக இருப்பதால் அதிகார பலத்தை சுலபத்தில் நெருங்கி சின்மயி நடவவடிக்கை எடுக்க அது இரு குடும்பத்தை நிலைகுலைய வைத்திருக்கிறது. இது நாளை நமக்கும் நடக்கலாம்.. நாமும் தான் இப்படியான இதை விட மோசமான வாக்குவாதங்களின் ஈடுபட்டிருக்கிறோம். இப்படியான வாக்குவாதங்களுக்கு பின்னால் நமக்கான அரசியல் விருப்பமே அதிகமாக இருக்கிறது என்பது அப்படி வாக்குவாதங்களில் ஈடுபட்டவன் என்ற முறையில் நான் அறிவேன். ஆனால் எதிராளி அதிகார பலத்திற்கு நெருக்கமாக இருக்கும் பட்சத்தில் நாம் மிக பெரும் தமிழ் சமுதாயத்திற்காக பேசினாலும் நம் வாழ்க்கை சீரளிக்கப்படலாம். இதில் நாம் உற்று நோக்க வேண்டிய விசயம் என்னவென்றால் இதுவரை இந்த ஒதுக்கீட்டுக்கு எதிராகவோ ஆதிக்க சாதி மனோபாவத்திற்கு எதிராகவோ குரல் கொடுத்த அதிகார பலம் கொண்ட,அதற்க்கு நெருக்கமான எந்த அரசியல் கட்சிகளை சார்ந்தவர்களோ, இயக்கங்களை சார்ந்தவர்களோ நம்மோடு சேர்ந்து இதற்க்கு குரல் கொடுக்க வில்லை. எதிர்ப்பை பதிவு செய்யவில்லை. அவர்கள் நமக்கு அதரவாக நின்றிருந்தால் ராஜனுக்கு இந்த நிலை வந்திருக்காது. இட ஒதுக்கீடுக்கு பங்கம் வந்தால் உயிரை தருவோம் என்று கட்டுரை எழுதும் பெரியார் கம்பெனி நிறுவனர்கள் நான் உயர்ந்த சாதி என்பதால் படிக்க இடமில்லை அதனால் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக எழுதினேன் என்று சொன்ன பிறகும் வாய் மூடி அமைதியாக இருக்கிறார்கள். பார்ப்பனியத்திற்கு எதிராக இன்னமும் போராடுகிறோம் என்று ஆட்சியை இழந்த பிறகு மட்டும் பேசும் தலைவரும் அவர் தொண்டர்களும் ஆட்சி இழந்து தான் இருக்கிறார்கள் ஆனாலும் இதில் மூச்சு கூட விடவில்லை.. முடிவில் வந்து அறிவுரை வேறு சொன்னார்கள்.. பல காலமாக செயல்பட்டு வந்த ஏதோ ஒரு முட்டு சந்தில் இருக்கும் உணவு விடுதி பெயர் கண்ணுக்கு தெரிந்து அது ஆதிக்க சாதி மனோபாவம் என்று போராட்டம் வைப்பவர்களுக்கு இது தெரியவில்லை. தலித் அரசியல் வேறு தமிழர் அரசியல் வேறு அதை இரண்டையும் செய்ய நாங்கள் மட்டும் தானே இருக்கிறோம் என்று மார்தட்டி கொள்பவர்கள் எல்லாம் "so called" தாழ்த்தப்பட்டவர்கள் என்று சொன்ன பிறகும் அமைதியாக இருக்கிறார்கள். தீண்டாமை முன்னணி என்று வைத்து பொதுவுடைமை பேசுகிற எவரும் கூட மீனவரை பற்றி பேசும் பொழுது மீனை பற்றி பேசிய இந்த பிரச்சனையை பற்றி பேசவில்லை.. ஜெயலலிதா ஆட்சியில் இது தான் நடக்கும் என்று நாம் அனைவருக்கும் தெரியும் ஆனால் இவர்கள் யாராவது ஒருவர் குரல் கொடுத்திருந்தால் இன்று இந்த நிலை வந்திருக்காது. இவர்கள் குரல் கொடுக்காததற்கு காரணம் தமிழர் அரசியலை 2009 க்கு பிறகு மாற்று கருத்து என்ற பெயரில் இணையத்தில் பேசும் நாம் காயடிக்கப்படவேண்டும் என்பது தான்.. நாம் இதில் இருந்து கற்க வேண்டிய பாடம் பல இருக்கிறது என்றாலும் நம் எதிர்ப்பை எப்படி பதிவு செய்ய வேண்டும் என்பதில் தான் முக்கியாமாக இருக்கிறது என்றே எண்ணுகிறேன். இதுவரை திராவிட சிந்தனையாளர்கள் செய்ததை போன்று நாமும் அதே பாணியில் எதிர்ப்பை பதிவு செய்கிறோம். இவர்கள் யாரும் ஆதரவு தராவிட்டாலும் பொது சிந்தனையாளர்கள் ஆதரவு நமக்கு தேவை என்றால் இந்த பாணியை மாற்றவேண்டும் என்றே எனக்கு தோன்றுகிறது. நம் பக்கம் நியாயம் இருந்தாலும் இந்த பாணியில் எதிர்த்தாலே பலர் நம்முடைய நியாயத்தை புரிந்துகொள்ளவில்லை. நம்மோடு பல விசயங்களின் கூட இருந்தவர்கள் கூட இப்படி ஒரு குறுப்பிட்ட சாதி மீதான வன்மத்தோடு திட்டாதீர்கள் என்று அறிவுரை தான் கூறினார்கள்.. கூட நிற்கவில்லை. இன்னொன்று நமகென்ற அரசியல் பலம் கட்டாயம் தேவை.. இன்று நமக்கு இருக்கும் அரசியல் பலத்தால் ஒரு அறிக்கை வெளியிடலாம் ராஜனை விடுதலை செய்ய வேண்டும் என்று ஆனால் அதில் எந்த பயனும் இல்லை. தமிழர் அரசியலுக்கு ஆதரவு தெரிவிப்பவர்கள் ஒன்றாக நிற்கவேண்டிய கட்டயத்திற்கு ஆளாக்கபட்டிருக்கிறோம் என்பதை புரிந்துகொண்டு ஒன்றாக நிற்ப்போம். கடைசியாக ராஜனையும் அவரோடு கைதானவரையும் வெளியே எடுக்க திடமான முயற்சியை மேற்கொள்வோம். நாளை இந்த நிலை யாருக்கு வந்தாலும் பிரச்சனையில் இருந்து வெளிவர தமிழர் அரசியல் ஆதரவாளர்கள் உதவுவார்கள் என்ற எண்ணத்தை ஏற்ப்படுத்தும் அளவிற்கு செயலை செய்வோம். #ராஜனோடு நான் நிற்கிறேன்... Cross Posted from http://www.twitlonger.com/show/jocmd4 Packiarajan S (@packiarajan) Posted Tuesday 23rd October 2012 from Twitlonger

No comments:

Post a Comment