Friday, February 15, 2013
The advantage of being Rajan.
ராஜனை அவ்ளோ சீக்கிரமா யாருக்கும் பிடிச்சிடாது! ஆம்! அதுதான் அவருடைய வெற்றி. அதுதான் அவரை மற்றெல்லாரைவிட வித்தியாசமாகவும், விகாரமாகவும் காட்டுகிறது. அதுதான் அவருடைய பலமென்பது என் எண்ணம். அவரிடம் ஒருநாள் சொல்லிருந்தேன், "அன்பாலோவர்ஸ் லிஸ்ட் என்றொன்று மட்டும் இருந்திருந்தால் நீங்கதான் டாப்பர்!" அப்படின்னு. ஏன்னா ஒருவருடம் முன்பு நான் ட்விட்டர் வந்த ஆரம்பக்கட்டத்தில் அவரை இருமுறை அன்பாலோவியுள்ளேன். பின்னர், ட்விட்டர் ஏற்படுத்திய முதிர்ச்சியோ என்னவோ, மீண்டும் மூன்றாவது மட்டும் கடைசியாகவும் அவர் ஃபாலோவர் லிஸ்ட்டில் ஐக்கியமானேன்.
என்னதான் அவர் பேச்சில் நமக்கு ஒப்புமை இல்லாவிடிலும், அவர் அணுகுமுறை, ஆட்டிட்யூட் (ஓ! ரெண்டும் ஒன்னுதானே) நிச்சயம் எல்லோருக்கும் சொந்தவாழ்வில் சிறு தாக்கத்தையாகிலும் ஏற்படுத்தியிருக்கும் என்பதை மறுக்கவியலாது. இங்கு மட்டுமல்ல, சொந்த வாழ்க்கையிலும் நம் கருத்தோடு ஒத்துப்போகாதவர்களையோ, எதிர்ப்பவர்களையோ நாம் எதிரிகளாக தான் பாவிக்கிறோம். அவர்கள் கஷ்டத்திலிருக்கும் போது சிலபலர் தங்களை யோக்கியனென்று காண்பிப்பதற்கான வாய்ப்புகளில் ஈடுபடுவதை கடைசி ஒருவாரத்தில் கண்கூடாக பார்த்தேன். அவர்களுக்கு என் அனுதாபங்கள்!
பாஸு நல்லவனையோ கெட்டவங்களையோ கண்டுப்பிடிக்கிறதுக்கு அவனுக்கு கஷ்டம் வரும்போது கடைசியா எவ்வளவு பேரு சப்போர்ட்டுக்கு நிக்கிறான் என்பதை வைத்து தான் முடிவெடுக்கணும். அதை விட்டுட்டு நான் தண்ணியடிக்கமாட்டேன், தம்மடிக்க மாட்டேன் , கெட்டவார்த்தை பேசமாட்டேன் அதனால நான் நல்லவன் என்கிற முடிவுக்கு நீங்களே வரக்கூடாது. ஏனென்றால் தண்ணி, தம் பழக்கம் இருக்கிறவங்கள விட, அந்த பழக்கம் இல்லாமல் இருக்கிறவர்கள் மிகவும் ஈனப்பிறவிகளாக இருப்பதை நான் அனுபவித்திருக்கறேன். தங்களை தாங்களே நல்லவர்களென்று நினைத்திருக்கும் அறிவிலிகளுக்கு ஒன்று சொல்கிறேன்: பொய், ஏமாத்து, பெருமை, இறுமாப்பு, வன்மம், எரிச்சல், சுயநலம், மேட்டிமை ஆகிய குணங்களை பெற்றிருக்கும் நீங்கள் "ஆபாசம்" என்ற வார்த்தையை மட்டுமே பிரஸ்தாபப்படுத்தி தப்பித்துக்கொள்ள முடியாது. நேற்றுவரை நான் ராஜன் வாழ்க்கைக் குறித்து மிகவும் பயந்திருந்தேன். ஆனால் இன்று அந்த பயம் துளியுமில்லை.
கடைசியாக, ராஜனுக்கும் சின்மயிக்கும் ஒரு பெரிய வித்தியாசம்- சின்மயி தான் தவறு செய்யவில்லை என்பதை விளக்க அவரே மெனக்கெட வேண்டியுள்ளது. ராஜனுக்கு அது தேவைப்படவில்லை. நாங்களே பார்த்துக் கொள்கிறோம். The advantage of being Rajan.
BY: காக்கைச் சித்தர் (@vandavaalam)
Posted Sunday 28th October 2012 from Twitlonger
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment