சேந்தன் அமுதன் @Sakthivel_twitt
4th July 2013 from TwitLonger
ட்விட்டர் பட்ஜெட் 2013-14
என்னடா பட்ஜெட் மார்ச்-ஏப்ரல்ல தானா வரும். இப்ப வருதேன்னு பாக்குறீங்களா?? மார்ச்-ஏப்ரல்ல நிறைய பேர் பரீட்சைன்னு காலேஜ் பசங்க,வாத்தி,ஸ்கூல் போற பசங்களோட அப்பா,அம்மா இப்படி யாரும் ட்விட்டர்க்கு சரியா வர்றதில்ல... அதான், பள்ளிக்கூடம்,காலேஜ் திறந்த பிறகு பட்ஜெட்... அப்படியெல்லாம் சொல்லுவேன்னு நினைக்காதீங்க... நான் இப்ப தான் வெட்டியா இருக்கேன். அதோட,இப்ப தான் இது எனக்கு தோனுச்சு..
அரட்டைகேர்ள் ஐடிய கிட்டதட்ட 10000 பேர் ஃபாலோ பண்றாங்க. அதுல இருந்து ஒரு 7000-8000 கூட்டிக்குவோம். ஏன்னா 7,8 எனக்கு ராசியான நம்பர்ன்னு எங்க தெரு முக்குல இருக்குற ஜோசியன் சொன்னான். ஆக மொத்தம், 18000 தமிழ் ட்வீப்ஸ் இருக்காங்க.
மொத்தம் தமிழ் கீச்சர்கள் - 18000
யூஸ் பண்ணாம வெட்டியா இருக்குற ஐடி - 4000
ஃபேக் ஐடி - 8000
கனலோட ஃபேக் ஐடி(யூஸ் பண்ணுறது மட்டும்) - 500
ஃபேன் கிளப் ஐடிக்கள் - 100
-------------------------------------------------------------------------------
மொத்தம் இருக்குற ஒரிஜினல் ஐடி - 5400
5 இன் தி மைண்ட், 4 இன் தி ஃபிங்கர்ன்னு கூட்டினா 5400 தான் அக்மார்க் முத்திரை குத்திய சுத்த தமிழ் கீச்சர்கள்...
இது வரை பார்த்தது கணக்கு வழக்கு. இனி பாக்க போறது புள்ளி விவரம். புள்ளி என்பது பொதுவாக வட்ட வடிவமாக இருக்கும்.. கோலத்திலும்,கணக்கு நோட்டிலும் அதிகமாக காணப்படும். பாத்தீங்களா.. புள்ளியை பத்தி இவ்வளவு விவரமா யாராவது பேசி பாத்து இருக்கீங்களா?? அவ்வ் :-))
புள்ளி விவரம்:
* பல பிரபல(?) கீச்சர்கள் ஃபேஸ் புக்கில் நடக்கும் சண்டைகளை வேடிக்கை(ஆமாங்க,நம்ம ஆளுகளுக்கு ட்விட்டர் வெளிய சண்டை எல்லாம் போடத் தெரியாதுல) பாக்க போவதால், ஃபேஸ் புக்குக்கு நிகரான ட்விட்டரின் மதிப்பு இந்த வருடம் சரிந்து உள்ளது.
* மேலும்,கொடூரமான போட்டோக்களை இன்னும் கொடூரமாக காட்டும் இன்ஸ்டாகிராம் வந்ததால், இன்ஸ்டாக்ராம்க்கு நிகரான 'டிவிட்பிக்'கின் மதிப்பு சரிந்து உள்ளது.
*ட்விட்டரின் தமிழ் ஜிடிபி மொத்தமாக 8% மட்டுமே அதிகரித்து உள்ளது. இது சென்ற ஆண்டை விட மிகக் குறைவு ஆகும்.
*மொத்தமாக ட்விட்டர்க்கு புது வரவுகள் குறைந்து,பழைய உறவுகள் பிரிந்து... இது ஒரு வீணாப் போன வருடமாக உள்ளது.
* தூங்காமல் 24 மணி நேரமும் ராக்கோழியாய் இருந்து டிவிட்டும் ராஸ்கொலு போன்ற கீச்சர்களும் தூக்கம் மற்றும் பிற வேலைகளினால் ட்விட்டர் வராமல் இருப்பதால், ட்விட்டர் அடிமைகள் எண்ணிக்கை குறைந்து உள்ளது..
* நான் மெயின்டய்ன் பண்ற அட்டெண்டன்ஸ் ரிஜிஸ்டர்ல என் லீவு லிஸ்டே அதிகமா இருக்கு..இதுல நான் எங்க வேதம் ஓதுறது... :-))
இது போன்ற வரவு,செலவு கணக்கை பாத்துட்டு ஜாக்கு கனலையும்,என்னையும் கூப்பிட்டு பயங்கரமா திட்டி,இதுக்கு எல்லாம் காரணம் கேட்டான். அவனுக்கு விளக்கம் சொல்லியே ஓஞ்சு போயிட்டோம். அதில் சில கீழே....
ஃபேஸ் புக் மேல் ஏன் புது மோகம் என்றால்...இங்க இப்ப எல்லாம் சண்டை வறட்சி அதிகமா ஆயிடிச்சு...அதான் அங்க போய் வேடிக்கை பாத்துட்டு வந்து,அதை வச்சி இங்க சண்டை போடுறாங்க. அங்கயே சண்டைப் போட்டா நம்ம ஆளுக டவுசர் கிழிஞ்சு போயிடும்ன்னு விளக்கம் சொன்னோம். அதோட, அங்க ஊரா வீட்டு நெய்ய என் பொண்டாட்டி கையேன்னு லைக் போடுறாங்கன்னு சொன்னோம்.
இன்ஸ்டாக்ராம்ல என்ன தான் போட்டோ போட்டாலும்,அதுக்கு லைக் கேட்டு இங்க தான் நாக்கை தொங்கப் போட்டுட்டு வரணும்ன்னு உண்மையை சொல்லி சமாளிச்சோம்.அப்புறம் கேட்டான் பாரு ஜாக் ஒரு கேள்வி, அது யாரு தூக்கம்? அவன் எந்த கம்பெனி? அவன் வந்தா ஏன் யாரும் ட்விட்டர் வரமாட்டேங்குறாங்கன்னு கேட்டு தூக்கம் விக்குற கம்பெனிய விலைக்கு வாங்க கிளம்பிட்டான். அப்புறம், மெடுலா ஒப்லங்கேட்டால ஓங்கி அடிச்சு, தூக்கம் எல்லாம் மனுசனுக்கு முக்கியம்ன்னு சொல்லி அவனுக்கு 2 தூக்க மாத்திரை கொடுக்க வேண்டியதா போச்சு... ஸப்ப்ப்பா...
நீயா,நானா வுல நம்ம ஆளுக போய் பேசிட்டு வந்த பிறகு,நிறைய புது கீச்சர்கள் வந்தாங்கன்னு சமாளிச்சோம்.(பின்ன,நம்ம நீயா,நானா பிரபலங்கள் பொலம்பின பொலம்பலுக்கே ஆள் சேர்ந்தாங்களா இல்லையா? அவ்வ் :-)) )
இனிமே,தமிழ் கீச்சு உலகத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல சில நலத் திட்டங்கள் கீழே...
* கனலுக்கு வொர்க் லோட் குறைக்க, புதுசா "கனல் ஸ்கூல் ஆஃப் ஃபேக் ஐடி'ஸ்" ஆரம்பிச்சு, துடிப்பான 50 புது கீச்சர்களுக்கு ஃபேக் ஐடியாக வாழ்வது எப்படின்னு விலையில்லா பயிற்சி கொடுக்கனும். அவங்க யார் மேலும் தனி மனித தாக்குதல் நடத்தக் கூடாது. எல்லார் கீச்சும் ஆர்டி ஆகணும்,ஃபேவ் பண்ணனும். அது தான் அவங்க வேலை.
* அந்த திட்டத்துக்காக புதுசா 500 ஃபேக் ஐடி கனல் தலைமையில் உருவாக்கப்படும். தனியாக ஒரு புது சர்வர் இதுக்காக ஒதுக்கப்படும். இது மூலமா,யாரும் இனிமே ஆர்டி ஆகல,ஃபேவ் ஆகலைன்னு பொலம்பமாட்டாங்க...
*கவிதை பிளீஸ்,ஃபிகர் பிளீஸ்,4 வரிநோட் மாதிரி தினமும் எதையாவது வச்சி பொழப்பு ஒட்டும் நலிந்த கலைஞர்களை பாராட்டி பரிசு வழங்குறதா சொல்லணும்(கொடுத்துறக்கூடாது).ஏன்னா,எந்த டாபிக்கும் இல்லாதப்ப அவங்க தான் பொழுது ஒட்டும் தெய்வங்கள். தயிர்சாத ஊறுகாய் போல... அது போக பழைய ப்ரோக்ராம் KDQ,தினம் ஒரு தமிழ்ச் சொல் இதெல்லாம் கூட திரும்ப கொண்டு வந்தா நல்லா டைம் பாஸ் ஆகும்.
* தனித்தனியா பொழுது போகலைன்னு பொலம்புற புதுக் கீச்சர் எல்லாரையும் அப்பப்ப ஒரு டிரைன்ல ஏத்தி ஊர் சுத்தி காமிக்கணும். அவங்களுக்கு, என்னோட புது ட்விட்டர் கைட் கொடுத்து இங்கயே அடிமை ஆக்கிடனும்...
* சண்டைக்கு ரொம்ப நாளா பழைய டாபிக் தான் ஓடிக்கிட்டு இருக்கு, புதுசு புதுசா சண்டைக்கு டாபிக் கொண்டு வர்றவங்களை பாராட்டி ஆர்டி,ஃபேவ் நிறைய விலையில்லாம கொடுக்கணும். சண்டை ஆரம்பிக்கும் போது 2 சைட்டும் ஏத்தி விட தனியா ஒரு இலாகாவும், சண்டை உக்கிரமாகும் போது பஞ்சாயத்து பண்ண புது இலாகாவும் தொடங்குறோம்.
* பாரதி,ஆதிரா,மதிவதனி மாதிரி ஆர்டி மட்டுமே ஐடிகளை நல்லா பாராட்டி ஊக்குவிச்சு அவங்களை 24 மணி நேரமும் ஆர்டி பண்ண வைக்கணும்.
* ரைட்டர் 1/n போடவும்,ஆச்சி(அனு) ஸ்மைலி போடவும் தனியாக புது சர்வர் வாங்கப்படும்.
* ப்ரியா நவ் ஐடியை மெயின்டய்ன் பண்ணும் அந்த 4 பேருக்கும் இந்த வருடத்திற்க்கான அசுகோன்(ASUKON) விருது வழங்கப்படுகிறது.
* புயிப்பம்,நான்(நோ துப்பிங்) போன்ற குழந்தைகள் விளையாடவும்,சாப்பிட்டு நல்லா வளரவும். புதிதாக, குழந்தைக்களுக்கான தனி சந்து அமைக்கப்படும்.
* நிறைய பேர் மென்சன்க்கு ரிப்ளை பண்றது இல்லைன்னு சொல்றாங்க. எப்பவாவது சந்துக்கு வர்றவங்களை விட்டுறலாம். ஆனா, 24 மணி நேரமும் இங்கயே இருந்துகிட்டு ரிப்ளை போடாம இருக்குறவங்களை,ஒரே நேரத்துல 10 டாபிக் பேசுற 10 புது கீச்சர் இருக்குற டிரைன்ல 3 நாள் சும்மாவே சுத்தவிட்டு தண்டிக்கணும்.
* கன்னா,பின்னான்னு புரியாத இங்குலீஷ்ல மட்டும் பேசுற தமிழ் கீச்சர்க்கு, அழிஞ்சு போன பிராமி,லத்தின்,பாரசீக மொழில பதிலுக்கு மென்சன் போட்டு தமிழ்ல பேச வைக்கணும். அது கூகிள் டிரான்ஸ்லிட்ரேட்டர் யூஸ் பண்ணிக்கலாம்.
* வீட்டில் ஒரு லாரி அழுக்கு இருந்தாலும், தன் சந்து சுத்தமா இருக்கணும்ன்னு மென்சனுக்கு ரிப்ளை போடாமலும், போட்ட மென்சன் அழிப்பவர்களுக்கும்,பேசி வச்சு அவங்களுக்குள்ள மட்டும் ஆர்டி பண்றவங்களுக்கும் 10 நாளுக்கு சந்தை விட்டு ஒதுக்கி வைக்குறோம். யாரும் ஆர்டி செய்யக் கூடாது,மென்சன் போடக் கூடாது.
* தேங்கா மாதிரி அடிக்கடி பிளாக் பண்றவங்களுக்கு, ஒரு வாரத்துக்கு 5 தடவை மட்டும் தான் பிளாக்கு பட்டன் வேலை செய்யும். அதுக்கு மேல,அமுக்குனா அவங்க அக்கவுண்ட்ல இருந்து காசு தான் போகும்... ஆங்.
* புதுசா நிறைய பேருக்கு ஃபேன் கிளப்(Fan Club) ஆரம்பிச்சு இருக்குறதால,ஏற்கனவே ஃபேன் கிளப் வச்சு இருக்கவங்க ஏசி கிளப்(AC Club) கேக்குறாங்க. அது ட்விட்டர் ஜனநாயக ஏற்றத் தாழ்வை உண்டு பண்ணும் என்பதாலும்,ஏசி சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் என்பதாலும்,வற்புறுத்தி கேட்பவர்களுக்கு ஒரு அண்டா க்ரீன் டீயை வாயில் புனல் வைத்து ஊற்றும் தண்டனை கொடுக்கப்படும்.
* ஜெமோ,சாரு,மனுஷ் போன்றவர்களை பாராட்டனும். மேலும், இன்னும் தட்டையாகவும்,மொண்ணையாகவும் பேசணும். அப்ப தான், அவங்க வெறுப்புல இன்னும் நிறைய எழுதுவாங்க. அதை வச்சு நாம டைம் பாஸ் பண்ணலாம்.ஆங்.. :-))
* பறவை,ரசனை போன்ற முழு நேர சமையல் ஹஸ்பண்ட்களை பாராட்டி பட்டம் கொடுக்கப்படும். மேலும்,அவர்கள் வெங்காயும் நறுக்கும் போது கூட கண்ணீர் வராத மிஷின் கண்டுபிடிக்க பரிந்துரை செய்யப்படும். இது மூலம், இளைஞர்களுக்கு திருமணம் மீதான பயம் நீங்கும். அவ்வ் :-))
* ட்விட்டரில் சைபர் க்ரைம் போலீசும்,வக்கீலும் இருக்கும்போது, நீதிபதியும்,நீதிமன்றமும் ஏன் இல்லையென கேள்வி எழுப்பபட்டுள்ளது. ஆனால், கட்டதொர போன்றவர்கள் பஞ்சாயத்து திருமாறன் சொம்பை திருடிக் கொண்டு வந்து, இனி நான் தான் நாட்டாமை என்று சொல்லுவார்களோ என்ற அச்சம் நிலவுகிறது.
* தமிழ் கலாச்சாரப்படி பிடிக்காத ஆளைப் பற்றி, கழிவறையில் தான் திட்டி எழுதுவார்கள். இப்போ,பொது சந்திலேயே வக்கிரமாக திட்டுவதால் கலாச்சாரம் சீர் கெடுகிறது. எனவே, கலாச்சாரத்தை காக்கும் பொருட்டு, கழிவறை சந்து ஒன்று உருவாக்கி அங்கு கழுவி ஊத்த பரிந்துரை செய்யப்படுகிறது..
* குடிகாரர்கள் இனி கீச்சக் கூடாது எனச் சொன்னால், அப்புறம் எல்லாரும் வெறுங்கையை தான் நக்கணும். அதனால, நம்ம நாட்டு வழக்கப்படி குடி கீச்சு போடும்போது, ஒரு டிஸ்கி போடச் சொல்லலாம். அதாவது, "குடிப்பழக்கம் உடல் நலத்திற்கு கேடு,சைட் டிஷ் உடல் நலத்திற்கு நல்லது"= #KUNKSUNS என்ற பட்டியை(tag) பயன்படுத்த பரிந்துரை செய்யபடுகிறது. அவ்வ்
இன்னும் நிறைய திட்டங்கள் இருந்தாலும், எல்லாத்தையும் இந்த வருசமே சொல்லிட்டா அடுத்த வருசத்துக்கு விட்டத்தை தான் பாக்கணும் என்பதால், இத்துடன் இந்த பட்ஜெட் அறிக்கையை முடித்துக் கொள்கிறேன்.
டிஸ்கி: இது யாரையும் புண்படுத்தும் பொருட்டு எழுதவில்லை, மீறி புண்பட்டு இருந்தால், நான் டம்மி பீசு என்பதை மனதில் நிறுத்திக் கொண்டு, புண்பட்ட இடத்தில் நியோஸ்பரின்(neosporin) போட்டுட்டு அடுத்த வேலையை பார்க்க போகவும். இல்லை, கோவப்படுவேன் என்றாலோ, பட்ஜெட் சரி இல்லை எனப் புகார் சொன்னலோ, எனது அடுத்த டிவிட்லாங்கர்க்கு உங்கள் மனதை திடப்படுத்தி கொள்ளவும். அவ்வ் :-))
http://tl.gd/n_1rl5sa0என்னடா பட்ஜெட் மார்ச்-ஏப்ரல்ல தானா வரும். இப்ப வருதேன்னு பாக்குறீங்களா?? மார்ச்-ஏப்ரல்ல நிறைய பேர் பரீட்சைன்னு காலேஜ் பசங்க,வாத்தி,ஸ்கூல் போற பசங்களோட அப்பா,அம்மா இப்படி யாரும் ட்விட்டர்க்கு சரியா வர்றதில்ல... அதான், பள்ளிக்கூடம்,காலேஜ் திறந்த பிறகு பட்ஜெட்... அப்படியெல்லாம் சொல்லுவேன்னு நினைக்காதீங்க... நான் இப்ப தான் வெட்டியா இருக்கேன். அதோட,இப்ப தான் இது எனக்கு தோனுச்சு..

No comments:
Post a Comment