Tuesday, July 9, 2013

அது தான் இளையராசா


ட்விட்டர்MGR @RavikumarMGR


8th July 2013 from TwitLonger

விகடன் மேடை - பாரதிராஜா பதில்களுக்கு வந்த கமெண்ட்டில் ஒருவர் பகிர்ந்த விஷயம்!

பாரதிராஜாவின் தாயாரை தன் தாயைப் போல் மதித்தார் இளையராஜா! இந்த சம்பவம் பாரதிராஜாவாலேயே இன்னொரு பிரபலத்திடம் பகிர்ந்து கொண்டது!

ஒரு முறை சென்னையில் பாரதிராஜாவின் வீட்டுக்கு அல்லிநகரத்திலிருந்து அவரது தாயார் கருத்தம்மா வந்து பத்து தங்கியிருந்து விட்டு ஊருக்கு செல்வதற்கு முன் பாரதிராஜாவிடம், “நான் போயி ராசாகிட்ட சொல்லிட்டு அப்படியே ஊருக்கு போறேம்பா” என்று சொன்னாராம். இவரும் சரிம்மா போயிட்டு வான்னு அனுப்பி வச்சாராம். ராஜா வீட்டுக்குக்கு போனவுடன் ராஜா, வாம்மா...! என்று ஆர்வமாக வரவேற்றாராம்! எப்போ வந்தே!? என்று கேட்டாராம். தான் வந்து பத்து நாள் ஆகியதை அவங்க சொல்லியுள்ளார்கள். பத்து நாள் ஆச்சா..!!? ம்.. அப்போ, எங்கிட்ட சொல்லிட்டு போகிறத்துக்காக வந்துருக்கிறியா? என்றாராம். ஆமாம் என்று அந்த தாய் சொன்னார். ரயில் டிக்கட் எல்லாம் எடுத்து கொடுத்துருக்கானா? காட்டு பாப்போம் என்று கேட்டாராம். அந்த அம்மா டிக்கட்டை எடுத்துக் கொடுக்க, வாங்கிய மாத்திரத்தில் அதை சுக்கு நூறாக கிழித்தெரிந்தாராம்! “அவன் வீட்டுல பத்து நாளு இருப்ப, எங்கிட்ட சொல்லிட்டு போக வருவியா!? இங்க இரு!, நான் சொல்லும்போது தான் நீ போகனும்”னு அன்பு கட்டளையிட்டாராம்! பின்பு சில நாட்கள் தன் வீட்டில் உபசரனைகள் செய்து, நகைகள், துணிமணிகளெல்லாம் எடுத்து கொடுத்து விமானம் மூலம் ஊருக்கு அனுப்பி வைத்தாராம்!

அது தான் இளையராசா, இதை கூட பெருமையாக சொன்னது இளையராசா இல்லை.. பாரதிராசா தான் இதை கூட வெளியில் சொன்னது...
http://tl.gd/n_1rl84au
 

No comments:

Post a Comment