Wednesday, July 17, 2013

செல்வராகவன்


Haranprasanna @haranprasanna


17th July 2013 from TwitLonger 


செல்வராகவன் தமிழின் மிகச்சிறந்த இயக்குநர்களுள் ஒருவர். இன்றிருக்கும் ஒரே நம்பிக்கை இயக்குநர் (புது வரவுகளான நகொபகா, சூது கவ்வும் தவிர) இவர் மட்டுமே. ஏதோ ஒரு விரக்தியில் அவரது பேட்டி வெளிவந்திருக்கிறது. அவர் இத்தனை வருத்தப்படத் தேவையில்லை. மயக்கம் என்ன கூட என் ரசனையில் எனக்கு மிகவும் பிடித்திருந்த ஒரு படமே. ஆயிரத்தில் ஒருவன் இடைவேளைக்குப் பிறகு அட்டகாசமாக இருந்தது. அசாத்திய கற்பனை. அவரது புதுப்பேட்டை தமிழின் முக்கியமான படங்களுள் ஒன்று. எனவே அவரது வருத்தத்தையெல்லாம் விட்டுவிட்டு, தன்னை யார் தத்தெடுப்பார்கள் என்பதையும் மறந்துவிட்டு, (குமுதம் பேட்டியில் அவர் தத்து பற்றி எதுவும் பேசவில்லை. இந்த தத்து பேட்டி இணையத்தில் மட்டுமே காணக் கிடைக்கிறது. செல்வ ராகவன் அப்படிச் சொல்லவில்லை என்றால், அதை விட்டுவிட்டு மற்றவற்றை வாசிக்கவும். குமுதம் பேட்டியில், ‘இரண்டாம் உலகம் படத்துக்குப் பிறகு ஓய்வு பெற யோசிக்கிறேன்’ என்றே சொல்லியிருக்கிறார்) அவலமான நிலையில் உள்ள தமிழ் சினிமாவை அவர் தத்தெடுக்கவேண்டும். அவர் தத்தெடுத்தது பற்றி இன்று பலவாறாகக் கிண்டல்கள் வந்தவண்ணம் உள்ளன. அதையெல்லாம் அவர் பொருட்படுத்தக்கூடாது. உண்மையில் செல்வ ராகவன் மிகச் சிறந்த இயக்குநர் (7ஜி மிகவும் சுமாரான படம்தான் என்றாலும்!) என்பதில் எனக்கு மாற்றுக்கருத்தில்லை. 

No comments:

Post a Comment