Tuesday, July 2, 2013

கடல் நல்ல படம் தான்

 1. ராவணன் - கடல் புரியாத ஆசாமிகள் "சூது கவ்வும் / NKPK" போன்ற படங்களை ரசித்து, கைதட்டி நவீன சினிமா என்று பட்டம் கொடுப்பதோடு நிறுத்திக்கணும்.
 2. மணிரத்னம் மனித மனங்களை மையப்படுத்தி தான் பெரும்பாலும் படங்கள் இயக்குகிறார்,.. அதை அரசியலோடு கட்டாய ஒப்புமை செய்வது அபத்த குப்பை ஆய்வுகள்..
 3. .. கடல் நல்ல படம் தான் ஆன எனக்கு பிடிக்கல
 4. காரணம் தெரிஞ்சுக்கலாமா?
 5. மனித மனங்களை மையப்படுத்தி இதில் என்ன ஒப்புமை செய்திருக்கிறார் என்று சொல்ல முடியுமா உங்களால் ?
 6. கடல் :: பாவத்துக்கும், மீட்புக்கும் இடையே அலையும் தாமஸ் எனும் இளைஞனை சுற்றி நிகழும் கதை..
 7. ஆனால் அவனை சுற்றி தினிக்கப்பட்டு இருக்கும் கதாபாத்திரங்கள் அபத்தம் !! பெரும்பாலும் உண்மை இல்லை !!
 8. உண்மையா? Wat u mean? என்ன அபத்தம்?
 9. இங்கு ஆய்வு செய்ய தவறிய இயக்குனர் அந்த கேப்டன் பதவிக்கு தகுதியானவர் தானா என்று கேள்வி எழுகிறது அல்லவா அதற்கு லாஜிக் தேவையற்ற
 10. nativity என்று இப்போது வரும் மதுரை சினிமாக்கள் மாதிரி எடுக்கணுமா? அது documentary போல் தான் இருக்கும்.. (2/2)
 11. மதுரை சார்ந்த படங்கள் மீது வரவேண்டியது அவர்சன் !! இப்படி எடுக்க வேண்டுமா என்று என்னை கேள்வி கேட்பதை விடுத்து அவர்
 12. படத்தின் nativityயை மட்டுமே supervise செய்தால் ரசிகன் மற்ற நுட்பமான தருணங்களை ரசிக்க முடியாது.
 13. அந்த ஊரில் தேவாலயமே புறக்கணிக்க பட்ட ஒன்று.. விசுவாசிகள் யாரும் இல்லை. இவர் வந்த பின் தான் சர்ச் சுத்தப்படவே தொடங்குகிறது
 14. இருக்கட்டுமே !!!
 15. அந்த ஊருக்கு அவர் விருப்பத்தின் பேரில் சென்றிருக்கலாம்.. இந்த விஷயங்கள் கதைக்கு அப்பாற்பட்டது..
 16. எல்லாமே கதைக்கு அப்பாற்பட்டத் என்றால் எது தான் கதைக்குட்பட்டது ?
 17. கதையை நகர்த்தும் கருவிகள் இவை. இதில் தேடி பிழைகள் கண்டுபிடித்தால் கதையின் Spiritual / Philosophical பாயிண்டை புரிய முடியாது.
 18. பிலாசபிகலா என்ன இருக்கு இதுல !!
 19. கிறிஸ்துவத்தின் சாயலில் அமைந்த வசனங்கள், ஊரை ஆசீர்வதித்து நகர்த்தி செல்லப்படும் இயேசு சிலை என எதுவும் புரியலையா? (2/4)
 20. பழங்குடிகளையும் மீனவர்களையும் காட்டுமிராண்டிகாளாக சித்தரிக்கும் படம் வந்துகொண்டுதான் இருக்கிறது இந்த நாட்டில் !
 21. காட்சிபடிமங்கள் ஓர் உணர்ச்சிகரமான ஆன்மீகமான அனுபவமாக மாறுவதை மிகச்சில இந்திய சினிமாக்களில்தான் காணமுடியும். கடல் அதில் ஒன்று
 22. ஆமென் என்றால் அப்படியே ஆகட்டும் என்று பொருள் !!!
 23. நான் அனுப்பிய பதிவுகளில் உள்ளதில் பாதியாவது நீங்கள் கடல் பார்த்த போது புரிந்தீர்களா? என்பதை நீங்களே நினைத்து பாருங்கள்..
 24. பெறும்பாலான விமர்சனங்கள் விமர்சன யுடூயுப் வீடியோக்கல் காசுக்காக செய்யப்படுவது என்ற உணமை எனக்கு தெரியும் என்று நான் நினைக்கிறேன் !
 25. அந்த பதிவுகள் அந்த படத்தை பற்றிய புதிய நோக்கிற்கான திறப்பு ஏற்பட அத்தனை சாத்தியங்களும் உள்ளவை..
 26. சினிமா ஒரு விசுவல் மீடியம் அதை பார்க்கும் போதே புரிந்துவிடவேண்டும் இந்த கட்டுரைகள் அதற்கான டிஸ்கேலெய்மர்கள் மட்டுமே !!
 27. ரோமன் பொலான்ஸ்கியின் நைப் இன் தி வாட்டரில் புரிந்துவிட்ட தத்துவம் தான் எனக்கு கடல் படத்தில் புரிந்துவிடாமல் போய்விட்டது
 28. நீங்கள் தான் வட்டார வழக்கு, ஆடை அமைப்பு என irrelevant logicல் மூழ்கி பார்த்துள்ளீர்களே!! பின் எங்கே புரிதல் ஏற்பட>?
 29. உங்களை போல மூடத்தனமாக படங்களை பார்பது எனக்கு வராது ! நான் அப்படி வளர்க்கப்படவில்லை !!
 30. படத்தின் மற்ற விஷயங்கள் முக்கியம் தான். அதில் மட்டுமே அவார்டு தரும் jury போல் கண்காணித்தால் மற்ற விஷயங்கள் புரிய வாய்ப்பில்லை
 31. இங்கே யார் intellectual make up போடுவது என்று இதை படிப்பவர்களுக்கு நிச்சயம் தெரியும் !!
 32. அகிராவையே புரிந்தவன் நான். மணி சினிமா புரியாதா? என்ற ரீதியில் பேசியது நீங்களே. மேலும் இது யாரும் வாசிக்க செய்த விவாதமும் அல்ல
 33. குருட்டுத்தனமாக எல்லாம் படம் பார்க்க முடியாது !!!
 34. உங்களை போல முக்கு கண்ணாடி போட்டுட்டு "இவன் ஏன் இங்க நிக்கான்? இவ ஏன் தூத்துக்குடில இங்கிலீஷ் பேசுறா?"னும் பாக்க முடியாது..
 35. மேசக்காரனுக்கு விளக்கமளிக்கவில்லை நீங்கள் !!!
 36. எப்பவோ கொடுத்துட்டேன்.. நீங்க மிஸ் பண்ணிட்டீங்க..
 37. அவர்களை நேரடியாக யாரும் அப்படி அழைக்க மாட்டார்கள் பின்னாடி கேலிசெய்வார்கள் ஆய்வு செய்து பார்க்கவும் !
 38. மேசை என்றால் டேபிள் என்று அடிப்படை விளக்கம் தர நான் நினைக்கவில்லை. மேலும் அந்த பெயரின் காரணம் அவர்களது மேல்தட்டு முறை தான்.
 39. explaining things to these guys is nothing but saevudan kaadhil oodhum sangu.dont waste ur energry srikanth
 40. As u being judgemental immediately there is no point in talking or even giving an explanation to is waste
 41. ஸ்ரீதர், மகேந்திரனுக்கு பிறகு நல்ல இயக்குநர் இல்லை என்ற மொட்டை அறிக்கைக்கு தான் அவர் கோபப்படுகிறார். மற்றபடி எதுவும் இல்லை.
 42. நல்ல என்ற வார்தையை நீங்கள் கவனிக்க வில்லை போலும் ! தம்பி அது மொட்டை அறிக்கை அல்ல !
 43. நல்ல? பாலச்சந்தர், பாரதிராஜா, மணிரத்னம், பாலுமகேந்திரா, செல்வராகவன்.. இவர்கள் என்ன மசாலா சந்தையிலா புரள்கிறார்கள்?
 44. அப்ப அப்ப நல்ல படங்கள் தருவதால் மட்டும் அவர்கள் நல்ல இயக்குனர்கள் அல்ல ! u should know the meaning of consistency :)

No comments:

Post a Comment