Monday, July 8, 2013

சிங்கம் 3 - A Tamil Twitter part 1


வேதாளம் @iVedhaLam


8th July 2013 from TwitLonger

சிங்கம் 3 - A Tamil Twitter

எதோ ஒரு அமைதியான கிராமம் பேரு இன்ஸ்டாகிராமமாம். அங்க பூ பழம் செடின்னு போட்டா புடிச்சு போட்டு லைக் வாங்கிட்டு அமைதியா இருக்காரு சார் நம்ம துரைசிங்கம் ரகுபதி ராசா (@raguc). அப்பப்ப பெசண்ட் நகர் பீச்ல திருட்டுத்தனமா நடக்குற ட்வீட்டப்லாம் போட்டா எடுத்து டீட்டெய்ல்ஸ் கலெக்ட் பண்றாரு சார். இவுரு யாருன்னு வியூவர்ஸ்க்கே டவுட்டு வருது. அப்ப நாம சொல்றோம். ரகுபதி ஒரு பிரபல ட்விட்டர். அக்கவுண்ட் டீ-ஆக்டிவேட் பண்ணிட்டு இப்ப அமைதி விரும்பியா இன்ஸ்டால இருக்காருன்னு. கனலோட ஃபேக் ஐடி ஒண்ணு இன்ஸ்டால போய் “நான் உங்கள லவ் பண்றேன்”னு சொல்ல “உனக்கு வயசிருக்கு. எனக்கு லட்சியம் இருக்கு”ன்னு அட்வைஸ் பண்றாரு. அவ்ளோ நல்லவராம்.

ஒருநாள் பிரபல ட்விட்டர் பஞ்சாயத்து (@thirumarant) கிட்டேர்ந்து ரகுசிக்கு போன் வருது. அப்ப அவர் சொல்றாரு. ரெண்டு பிரபல ட்விட்டருங்க கட்டதொர (@kattathora) & (@thirutukumaran) ரெண்டு பேருதான் ட்விட்டர்ல டான்’னும். ரெண்டு பேரும் எதிரின்னும், கட்ட கடலை போட்டா திகுவுக்கு புடிக்காதுன்னும், திகுவுக்கு நீலிமா ரிப்ளை பண்ணா கட்ட டென்ஷன் ஆகுறார்ன்னும் ஏதோ ரகசியம் இருக்கிறதாவும், டீட்டெயில்ஸ் கலெக்ட் பண்ணிட்டு கால் பண்றேன்னும் சொல்லிட்டு போன வைக்கிறார்.

மறுபடி ஒருநாள் மெரினால ஒரு ரகசிய ட்வீட்டப் நடக்குது. அத மறைமுகமா நின்னு கவனிக்கிற ரகுசி டென்ஷனாகுறார் சார். உடனே பஞ்சாயத்துக்கு போன் போடுறார். “சார் நாம நடக்குற மாதிரி ட்விட்டர்ல நடக்குறது கடலையோ, வேற எதுவோ இல்ல சார். நம்ம மக்கள்க்கு இங்கிலீஸ் அறிவு போதலைன்னு ஒரு தாழ்வு மனப்பான்மைய கிரியேட் பண்ணி எல்லாரையும் இங்கிலீஸ் ட்விட்டர் ஆக்க சதி நடக்குது சார். நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன். இப்படியே போனா தமிழ்-ட்விட்டர்ன்னு ஒரு சமூகமே இல்லாம போயிடும்”ன்னு ஃபீல் பண்றார் .

சொல்லிவெச்சா மாதிரியே அடுத்தநாள் ட்விட்டர்ல ராஜா-ரகுமான் சண்டை வந்து கலவர பூமி ஆக எல்லாரும் அக்கவுண்ட் டீ ஆக்டிவேட் பண்ண ஆரம்பிக்குறாங்க. அப்ப ரகுசி பஞ்சாயத்துக்கு போன் பண்றார். ”சார் இப்ப இங்க நிலைமை கட்டுக்கடங்காம போயிகிட்டிருக்கு. உடனே நான் சார்ஜ் எடுத்துக்கிறேன்”ன்னு மறுபடியும் பிரபல ட்விட்டர் @RaguC யா லாகின் பண்றாரு. அப்ப அங்க சண்டைல முக்கிய புள்ளிகள் எல்லாரையும் ப்ளாக் பண்றாரு. தெரியாத்தனமா ஏதோ ஒரு இங்கிலீஸ் ஐடியையும் சேர்த்தே ப்ளாக் பண்ணிடுறாரு. அது யாரா இருக்கும்ன்னு யோசிச்சுகிட்டே இருக்கும்போது...

<இடைவேளை>

பார்ட்-டூ எழுதலாமா?
http://tl.gd/n_1rl7v69
 

No comments:

Post a Comment