Wednesday, July 17, 2013

ராஜா ஒன் மேன் ஆர்மி

@sicmafia @mayilSK @nom_d_plum @seevin ராஜா ஒன் மேன் ஆர்மி என்பதில் எல்லாம் விவாதிக்க ஒன்றுமே இல்லை. அதே போல இசைத்துறையில் ஐன்ஸ்டீனைப் போல என்று சொன்னதும் சரியான பார்வை தான் . ஆனால் அவருக்கு வாசித்த இசைக்கலைஞர்களையும், திரைப்பட துறை சார்ந்த பிறரையும் இப்படி கீழிறக்க வேண்டிய அவசியம் இல்லை. எவ்வளவு பெரிய சாதனையாளனுக்கும் அவன் நினைப்பதை வார்த்தெடுக்க கடின உழைப்பு கொண்ட டீம் இல்லாமல் அது வடிவம் பெற்று வருவது சாத்தியம் அல்ல. அதற்கான க்ரெடிட் அவர்களுக்கு கொடுக்கப் பட்டே ஆக வேண்டும். ஆனால் அதற்கு உண்டான எல்லையில் மட்டும் நின்று கொள்ள வேண்டும். நிச்சயம் இளையராஜாவின் இசைக் கோர்வைகளுக்கு வாசிப்பவர்கள் சொந்தம் கொண்டாட முடியாது.

ஆனால் ராஜா இல்லாவிட்டால் திரைத்துறையே ஒன்றும் இல்லாமல் போய் இருக்கும் என்பதெல்லாம் பெருமைக்காக சொல்லிக் கொள்ளலாம். அவர் இல்லா விட்டால் என்ன, சினிமா பிழைப்பு யாரை வைத்தும் நடந்திருக்கும்.தமிழ் சினிமாவுக்கு ராஜா கிடைத்தது ஒரு வரலாற்று சாதனையின் மகத்தான அதிர்ஷ்டம். ஆனால் இளையதளம் போன்ற ஆட்கள் அவருக்கு அருகில் இருப்பது அவரது ரசிகர்களுக்கு மட்டும் ஆபத்தல்ல ராஜவுக்குமே ஆபத்தாகத்தான் முடியும். இதை 140 ல் முயற்சித்து முடியாததால் ஒரு லாங்கர் கட்டாயமாகி விட்டது

No comments:

Post a Comment