Friday, July 5, 2013

தாம்ப்ராஸ்


kavirajan @kavi_rt


4th July 2013 from TwitLonger 

அனைத்து சமுதாயப்பேரவையில் தாம்ப்ராஸ்

பார்ப்பனரல்லாத பிற ஜாதிக்காரர்கள் அவரவர்களுக்கான அமைப்புகளிடம் வைத்திருக்கும் உறவைக்காட்டிலும் சாராசரி பார்ப்பனர்கள் பார்ப்பனசங்கத்திடம் வைத்திருக்கமாட்டார்கள் என்பதே ஒரு மோசமான சிந்தனை என்று நினைக்கிறேன். பொதுவாகவே தமிழகத்தில் எந்த ஜாதியைச்சார்ந்தவர்களும் அப்படி செயல்படுவதில்லை. கழகங்களின் ஆட்சியில் பொதுத்தளத்தில் தங்களுக்கான பிரதிநித்துவம் கிடைப்பது பற்றிய அறிவு அவர்களுக்குண்டு. அதனுள்ளாக தீவிர ஜாதி உணர்வோடு இயங்கும் சிலர் எப்போதும் இருந்துவந்திருக்கிறார்கள். வேண்டுமானால் இப்படிச்சொல்லலாம் சராசரி பார்ப்பனர்கள் அவர்களுக்கான சங்கத்தையும் கூட மிக ஜாக்கிரதையாக பயன்படுத்துவார்கள் இதன் அர்த்தம் ஜாதி உணர்வு இல்லை என்பது கிடையாது இது மற்ற ஜாதிகளுக்கும் அதேயளவு பொருந்தும்.

லௌகீக அடிப்படையில் யோசித்தால் அதற்கான தேவையும் அவர்களுக்கில்லை (இவ்விடத்தில் பெரியாரின் வைதீக / லௌகீக ஒப்புமை நினைவுகூறத்தக்கது) எதற்காக படிநிலையில் முதலிடத்தில் இருப்பவர்கள் அதைத்துறந்து சிக்கலில் மாட்டிக்கொள்ளவேண்டும்? மறைந்த டோண்டுவின் பாணியில் சொல்வதாக இருந்தால் “நீங்கள் என்னதான் தலைகீழாக நின்றாலும் பார்ப்பன அடையாளத்தை உங்கள் மீது சுமத்தப்போகிறார்கள் பிறகு ஏன் தேவையில்லாத தொந்தரவு?” இதை தானறிந்த பார்ப்பனராகப்பிறந்த ஆனால் முற்போக்கு சிந்தனையுடைய பலரிடம் அவர் வேண்டுகோளாகவே முன்வைத்திருக்கிறார்.

இன்றைய சூழலில் இது ஒரு முக்கியமான பிரச்சனை இல்லை என்றுதான் நானும் நினைக்கிறேன். ஆனால் பாமக சித்திரை முழுநிலவு நாளில் கூட்டிய தலித்துகளல்லாத அனைத்து சமுதாயப்பேரவை என்ற அமைப்பில் தாம்ப்ராஸ் கலந்துகொண்டதை ஒன்றுமில்லாத விஷயமாக்க சிலர் முயல்வதுதான் ஆச்சரியமாக இருக்கிறது. இதற்கு முன்பு நடந்த சித்திரை விழாவில் கைபர், போலன் கணவாய் வழியாக ஆடுமாடுகளை ஓட்டி வந்தவர்கள் ஆண்ட பரம்பரையான எங்களிடம் வேலை செய்தவர்கள் என்று ஆரம்பித்து காடுவெட்டி குரு பார்ப்பனர்களை வசைமாறிப் பொழிந்த பேச்சுகள் இன்னும் இணையதளங்களில் காணக்கிடைக்கிறது பாமக’வை அறிந்த யாருக்கும் இது புதிதான செய்தியுமல்ல. ஆனால் இதையும் மீறி தாம்ப்ராஸ் ஏன் மருத்துவர் ஐயாவை வானளாவ புகழ வேண்டும்? பாமக ஏன் பார்ப்பனர்களுக்கு பிரச்சனை என்றால் நாங்கள் முன்னிற்போம் என்று சூளுரைக்கவேண்டும்? சிந்திப்பவர்களுக்கு இந்தக் கேள்விகளுக்கான விடை தெரியும். சமாளிப்பவர்களுக்கு வழக்கம்போலவே இருக்கிறது திராவிட இயக்கங்களின் மீது பழி போடும் உத்தி.
http://tl.gd/n_1rl664j

No comments:

Post a Comment