Cross-Posted from Here By @Sharankay
முதலில் சில தெளிவுபடுத்தல்கள் தேவைப் படுகிறது. நான் மீண்டும் மீண்டும் எதிர் கொள்ளும் ஒரு கேள்வியாக உங்க அம்மாவையோ அக்காவையோ யாராவது இப்படி பேசி இருந்தா சும்மா விடுவியா என்பது. எங்கிருந்து இவர்கள் வருகிறார்கள் என்பது தெரிகிறது ஆனாலும் பதில் சொல்ல கடமைப் பட்டுள்ளேன். முதலில் அப்படி யாரோ இருவர் பேசி என்னிடம் ஏதாவது அல்லக்கை/குள்ளசைக்கோ அதை கொண்டு வந்து இருந்தால் எனக்கு மென்ஷனே போடாம யாரோ ரெண்டு போக்கிரிகள் பேசுவதை என்னிடம் கொண்டு வரும் அந்த சைக்கோக்களின் வக்கிரத்தைதான் கண்டித்து இருப்பேன். சரி வந்து விட்டது என் பார்வைக்கு என்ற பின்னும் ப்ளடி (பாஸ்டர்ட்) என்றெல்லாம் திட்டாமல் இது ஆபாசமாய் இருக்கிறது என கண்டித்து ஒரு மன்னிப்பையே கோரி இருப்பேன். அதற்காக செக்ஷன் 506(1) கொலை மிரட்டல், செக்ஷன் 4 பெண் பாலியில் வன்கொடுமை தடுப்பு சட்டம் என்றெல்லாம் சூழ்ச்சி செய்து, நீதிமன்றம் விடுமுறையில் இருக்கும் நாட்களாக பார்த்து கேஸ் போட்டு தொலைக்காட்சி, பத்திரிக்கை என நாறடித்து சிறையில் தள்ளி, வேலையை கெடுத்து ஒரு மொத்த குடும்பத்தையும் பேரழிவுக்கு உட்படுத்தி என் மன வக்கிரத்தை உலகறிய செய்திருக்க மாட்டேன். ஆதீதமாய் தெரிந்தாலும் இதுவே உண்மை. மேலும் வக்கிரம் பிடித்த மனிதர்களை ஏற்றி விட்டு என் 10 மாத பெண் குழந்தையின் படத்தையெல்லாம் எடுத்து போட்டு இதோ அந்த ஆபாச ப்ரொபசரின் குழந்தை என்றவர்களை ரசித்து கொண்டிருந்திருக்க மாட்டேன். (புரியாத ஒரு விஷயம் எதற்கு அந்த குழந்தையின் ஃபோட்டோ! ஓ டப்பிங் அர்டிஸ்ட்டே என் தனிப்பட்ட கருத்துக்கு என் நிறுவனத்தை
இழுக்கும் போது அவரது ரசிககுஞ்சு இதைக் கூட செய்யாவிட்டால் எப்படி) ஒரு கடலை போடு என்று சொன்னதற்கு எத்தனை வசவுகள் அந்த டப்பிங் ஆர்டிஸ்ட்டின் டைம்லைனிலும் எனது டைம்லைனிலும்! அதையெல்லாம் பார்த்து ரசிக்கும் வக்கிர மனம் எனக்கில்லாததால் நிச்சயம் கண்டித்து இருப்பேன். நல்ல வேலை அப்படி ஒரு வக்கிர மனம் இல்லாமல் இருப்பதால்தான் இன்னும் செருக்கோடு நடமாடிக்கொண்டிருக்கிறேன்.
சரி இப்போ சில சுயவிமர்சனங்கள் தேவைப் படுகிறது. நான் எழுதிய அந்த ட்வீட் ஆபாசம் என்பர்களிடம் சொல்கிறேன் ‘ஆம் அந்த ஒற்றை ட்வீட்டை தனித்து பார்த்தால் மிகவும் வக்கிரமாயும் ஆபாசமாகவும்தான்’ இருக்கிறது! பகிரங்க மன்னிப்பு கோருகிறேன் எந்த நிபந்தனையும் இல்லாமல். அனாலும் சில விளக்கங்கள் என் சார்பாக குடுக்க வேண்டியுள்ளது. செந்தில் துவங்கும் பொழுதே ஃபிகர் என்று துவங்குகிறார். சரி இது ஏதோ கிளூகிளுப்பான மேட்டர் போல என மைண்ட் செட்டாகிவிடுகிறது. ஃபிகர் போன் செய்தால் எதற்கு இருக்கும்? கடலை போடத்தானே! இல்லை சும்மா ஷேமமா இருக்கேளா என கேட்டு விட்டு வைப்பதற்கா! கடலை என்பது அவரது முதல் ட்வீட்டிலேயே முடிவு செய்யபட்டு விடுகிறது இரண்டாம் நபரான எனக்கு. அவர் மனதில் என்ன வருத்தம் இருக்கிறது என்பது எனக்கு தெரியாது. ஏன் ஆம்பளை ஃபோன் செஞ்ச்சுட்டாங்களா (காண்டாயிட்டீங்களா) என்பதே என் கிண்டல் கேள்வியாய் இருக்கிறது. அதற்கு அவர் இன்னார் போன் செய்தார் என்று சொல்லவும், அந்த அழைப்பின் எந்த பின்னனி விவரமும் அறியாமல் வயசாயிடுச்சு பரவாயில்லை உமக்கு செட்டாவும் (சந்தர்ப்பத்தை) யூஸ் பண்ணிக்கோ என்கிறேன். இன்றளவும் நினைத்து பார்க்கிறேன் அவர்களை புன்படுத்த வேண்டும் என்றோ, கேவலமாக பேச வேண்டும் என்றோ ஏதாவது நோக்கம் இருந்ததா என்று. நிச்சயமாக என் மனதின் அடியாழம் வரை சலித்து பார்த்தாயிற்று. அப்படி எதுவும் இல்லை. அது அந்த நிமிடத்தில் தோன்றிய ஒரு கிண்டல்த்தனம் நிறைந்த ஒரு ட்வீட் அவ்வளவே. அதில் ஆபாசம் கண்டுபிடித்தவர்கள்/பிடிப்பவர்கள் மனம் தான் எனக்கு வக்கிரமாய் தெரிகிறது! மேலும் அவர்களுக்கு மென்ஷனும் இல்லை. அப்படியிருக்கையில் அதை ஆபாசமாக புன்படுத்தும் நோக்கத்தில் செய்தேன் என்பதெல்லாம் அல்லக்கை/குள்ளசைக்கோக்களின் ஊதி பெருக்கல்களே தவிர வேறோன்றுமில்லை. எதற்கு என கேட்கும் செந்திலிடம் அடுத்த கணமே ‘கடலைக்குதான்யா’ என ஆச்சரிய குறியோடே முடிக்கிறேன். இது உட்கார்ந்து யோசித்து நாம் தப்பு செய்து விட்டோமே அதை சரி செய்வோம் என செய்யவில்லை. அந்த தொடர்ச்சியான உரையாடலின் லாஜிக்கல் முடிவு அதுதான். மற்றபடி அந்தளவுக்கு சூழ்ச்சியும் அறிவும் இருந்தால் எதிரிகள் செய்வது போலவே ட்வீட்டை டீலீட் செய்து விட்டிருப்பேனே. இப்படி அப்பாவியாய் மாட்டிக் கொண்டு் பாக்யராஜ் முழிமுழித்து கொண்டிருக்கமாட்டேனே. அதற்கு பின்பு சிலரை திட்டியதெல்லாம் நான் விளக்க வேண்டியதில்லை ஃபேஸ்புக்கிலும், ட்விட்டர்ரிலும் ஏற்றி விடபட்ட டப்பிங் ஆர்டிஸ்ட்டின் ரசிககுஞ்சுகள், தீடீர் ஐ.டிக்கள், என என்னை திட்டி தீர்த்த, மிரட்டிய சிலரை ஆபாச வசை பாடினேன், உண்மை. ஒரு சிங்கத்தை கார்னர் செய்து பாருங்கள் எப்படி உறுமும் என அதுதான் அப்போழுதைய எனது நிலை!
என் படிப்பிற்கும், அறிவிற்கும், சிறிதும் ஈடு கொடுக்க முடியாத, நேரடியாய் வீர்யத்தோடு எம்மை எந்த விவாதத்திலும் சந்திக்க திராணியற்ற, துப்பற்ற, ஒரு சிறு சறுக்கலில் என்னை நிலைகுலைத்து பார்த்துவிட்ட இந்த குள்ளநரிக் கூட்டத்திடம் தோற்றதை எண்ணி வெட்கப்படுகிறேன். இந்த மாஃபியா கூட்டம் எம்மை நேரடியாய் சந்திக்க முடியாததால், டப்பிங் ஆர்டிஸ்ட்டையும் அவர் தாயையும் கூட தமது நோக்கத்திற்க்காக யூஸ் செய்து... சாரி சாரி உபயோகப் படுத்தி கொண்டு படு கேவலமாக செயல்பட்டுள்ளது. ஆனால் எம்மை வீழ்த்த முடியாது. சிறைபடுத்துவீர்கள்... எம் மனச்சிறகுகளை என்ன செய்ய முடியும். சூத்திரக்கூக்கள் எத்தனை காலம்தான் உங்களிடம் அடங்கி கிடப்பார்கள் என நினைத்தீர்கள்? பார்ப்பனிய சூழ்ச்சியால் இனையத்தை கையகபடுத்தும் உங்கள் திட்டத்தின் முதல் சுற்று உங்கள் பக்கமே இருக்கட்டும். எம்மைப் போல் அடங்க மறுப்பவர்களும் அத்து மீறுபவர்களும் தொடர்ந்து வந்து கொண்டிருப்பார்கள். உங்கள் கீதோபதேச உளறல்களையெல்லாம் களையெடுக்க. சிம்மக்கல்லு சிமரன்களின் ஆபாசத்தை கேள்வி கேட்க. ஒரு நாள் இனையம் கூறு போடப்படும், நாங்கள் நீங்கள் என. பொது அறம் நிர்னயிக்கும் நாங்களா நீங்களா என.
Cross-Posted from Here By @Sharankay
No comments:
Post a Comment