Monday, March 11, 2013

நீதி வெல்லும்



Sricalifornia Sri
நீதி வெல்லும். போதனைகளை குழந்தைத் தனமாக எவ்வளவு பேர் இன்னமும் நம்புகிறோம் என்பது எல்லோரின் கோபத்திலும் வெளிச்சம்.

January 30     2 retweets #

senthilchn Senthil Nathan
@Sricalifornia என் மகளுக்கு அதை moral ஆக சொல்ல இன்னமும் யோசித்துக் கொண்டிருக்கிறேன் நண்பரே :(

January 30 #

Sricalifornia Sri
@senthilchn நாம் படித்த போது இருந்த குழந்தைத் தனம் ஏற்கனவே அற்று போயிருக்கிறது குழந்தைகளுக்கு.sometimes we are forced to lie.

January 30 #

senthilchn Senthil Nathan
@Sricalifornia இப்படி சில outdated ethics என்னை ஒரு ஏமாளியாக்கியது என்பதே உண்மை நண்பரே :)

January 30 #

Sricalifornia Sri
@senthilchn ஏமாந்துகொண்டு தான் இருக்கிறேன்.என் மனநிலை என் வாழ்க்கைப் பற்றிய கண்ணோட்டத்திற்கு அடிவாரம். மாற்றிக்கொள்ள இயலாது என்பது உண்மை.

January 30 #

Rasanai ரசனைக்காரன்
@Sricalifornia @senthilchn என்னய்யா ரொம்ப சீரியசா போறீங்க :))

January 30 #

senthilchn Senthil Nathan
@Rasanai :))) இது சீரியஸ்தான் தல :) உங்கள் மகளுக்கு என்னவெல்லாம் நல்ல குணங்களாக சொல்லிக் கொடுக்கறீங்க :) @Sricalifornia

January 30 #

Rasanai ரசனைக்காரன்
@senthilchn @Sricalifornia ஹானஸ்டாய் எதுவுமில்ல.ஆனா, இயல்பாய் அவளுக்குள் ஒரு தப்பு செய்யக்கூடாது எண்ணம் இருக்கு.இன்ஷால்லா அது நிலைக்கனும்

January 30 #

Sricalifornia Sri
@Rasanai @senthilchn சொல்லிக்கொடுப்பதை விட, எதை எதிர்பார்ப்பது என்பதில் தான் சிக்கல். Life is not fair.

January 30 #

Rasanai ரசனைக்காரன்
@Sricalifornia @senthilchn Right. It never is..

January 30 #

senthilchn Senthil Nathan
@Rasanai :)) @Sricalifornia :)

January 30 #

Sricalifornia Sri
@Rasanai சில போதனைகள் சொல்லும்பொழுது நமக்கே இது பொய் என்று தோன்றுகிறது. சில சமயம் உண்மை மறைக்கப்பட வேண்டிய ஒன்று:) @senthilchn

January 30 #

senthilchn Senthil Nathan
@Sricalifornia என்னால் இனி மாற முடியாது.. ஆனால் என் மகளையும் அப்படியே வளர்க்க வேண்டுமா என்ற கேள்வி வந்து கொண்டே இருக்கிறது நண்பரே ??

January 30 #

Sricalifornia Sri
@senthilchn சிறிதளவாவது தற்காப்பு, உடல் ரீதயாக, மன ரீதியாக, சொல்லிக்கொடுத்தல் அவசியமாகிறது. சமுதாயத்தின் நடப்பு அப்படி.

January 30 #

senthilchn Senthil Nathan
@Sricalifornia இதை சொல்லிக்கொடுக்க அடுத்தவரை சந்தேகப்பட சொல்லிக்கொடுக்கணும்.அதேசமயம் சந்தேகம் கொடிய நோய்னும் சொல்லிக் கொடுக்கனும் :(

January 30 #

Sricalifornia Sri
@senthilchn நவீனயுகத்தில் பெற்றோர் என்ற பதவி மிகக்கடினமானது. விட்டேத்தியாகவும் இருக்க முடிவதில்லை. Parenting is getting harder by the day

January 30 #

senthilchn Senthil Nathan
@Sricalifornia முற்றிலும் உண்மை.. Just what is going through in my mind ??

January 30 #

Sricalifornia Sri
@senthilchn நேர்மையாக இருக்கவும், பிறரின் நேர்மையற்ற செயலுக்கான சினத்தை கையாளவும், இரண்டையும் சொல்லித்தர வேண்டியுள்ளது.

January 30 #

senthilchn Senthil Nathan
@Sricalifornia பல சம்பவங்களில் என்ன செய்வது என சொல்லவும் முடியாமல் தேற்றவும் முடியாமல் விழித்துக்கொண்டிருக்கிறேன் நண்பரே :(

January 30 #

senthilchn Senthil Nathan
@Sricalifornia இது பொது விஷயங்கள்.. இன்னமும் பெண்களுக்கே உரிய ஸ்பெஷல் விஷயங்கள் வேறு இருக்கிறது ??

January 30 #

Sricalifornia Sri
@senthilchn தற்காப்பு,இன்ஸ்டின்க்ட் வலியுறுத்தவேண்டியுள்ளது.சரியில்லை என்று தோன்றினால் அவ்விடத்திலிருந்து உடன் விலகுவது 1/

January 30 #

Sricalifornia Sri
@senthilchn அச்சமின்மை,பேச்சில் உறுதி,படிப்பு. எனக்கு இவை தான் கொடுத்தார் என் அப்பா.

January 30 #

senthilchn Senthil Nathan
@Sricalifornia உண்மை நண்பரே.. :) தல @poosaari இந்த thread படித்துவிட்டு பயனுள்ளதெனில் பதிவெடுகக வேண்டுகிறேன் :)

January 30 #

No comments:

Post a Comment