Tuesday, October 22, 2013

எண்பதுகளில் இளையராஜா

எண்பதுகளில் இளையராஜா உச்சமாக இருந்த காலத்தில் வந்த நல்ல பல பாடல்களை வேறு இசையமைப்பாளர்கள் கொடுத்திருந்தாலும் அவை ராஜா பாடல்கள் என்று நினைத்து ஏமாந்து இசைத்தட்டு நிறுவனங்களே கண்மூடித்தனமாகப் பட்டியலிடுவதுண்டு. தவிர வானொலியில் நான் இப்படியான பிற இசையமைப்பாளரது பாடல்களைக் கொடுக்கும் போது நேயர்களே கூட "இவர் வழக்கம் போல இளையராஜா பாட்டைப் போட்டுட்டார்" என்று காதுபட வந்த பாடல்களில் ஒரு சில இங்கே
1. காதல் வைபோகமே (சுவர் இல்லாத சித்திரங்கள்) - கங்கை அமரன்
2. மலரே என்னென்ன கோபம் (ஆட்டோ ராஜா) - சங்கர் கணேஷ்
3. மெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டு (அண்ணா நகர் முதல் தெரு) - சந்திரபோஸ்
4. வேதம் புதிது அனைத்துப் பாடல்களும் - தேவேந்திரன்
5. சங்கீத ஸ்வரங்கள் (அழகன்) - மரகதமணி
6. பட்டு வண்ண ரோசாவாம் (கன்னிப்பருவத்திலே) - சங்கர் கணேஷ்
7. பூவுக்கொரு மாலை கட்டி (எங்க அண்ணன் வரட்டும்) - கங்கை அமரன்
8. நான் உன்னை நினைச்சேன் (கண்ணில் தெரியும் கதைகள்) - சங்கர் கணேஷ்
9.ஒரு காதல் தேவதை ( இதய தாமரை) சங்கர் கணேஷ்
10. மாம்பூவே சிறு மைனாவே ( மச்சானை பார்த்தீங்களா) - சந்திரபோஸ்
11. உதயமே உயிரே (ஒரு பொண்ணு நெனச்சா) எஸ்.ஏ.ராஜ்குமார்
12. மாலையிலே தெற்கு மூலையிலே (வாசலில் ஒரு வெண்ணிலா) - தேவா

இதை விட வேடிக்கையான ஒன்று "ஒரு காதல் என்பது" (சின்னதம்பி பெரியதம்பி) பாடலை இளையராஜா இசையமைத்ததாக இசைத்தட்டுகள் பகிர்ந்தாலும் பல ஆண்டுகளுக்குப் பின்னரே அந்தப் படத்தில் இசையமைத்த கங்கை அமரன் இந்த ஒரு பாட்டு மட்டும் அண்ணன் இசையமைத்தது என்று ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார் :-)

http://www.youtube.com/watch?v=ArkEtfzl34M&sns=tw 

கானா பிரபா @kanapraba


22nd October 2013 from TwitLonger

No comments:

Post a Comment