Saturday, May 4, 2013

பின்தங்க வைக்கும் முயற்சி

நானும் ஒரு ட்விட்லாங்கரை போட்டு இந்த காட்டுமிராண்டி கூட்டத்துல ஒருத்தந்தேன்னு காட்டிக்கிற நேரம் வந்துருச்சி. தமிழ் கூறும் நல்லுலகில் ட்விட்லாங்கர் ஒரு சில வகையில்தான்(genre) இருக்கு(கனும்), அதில் முக்கியமானவை தனிமனித தாக்குதல் மற்றும் அங்கலாய்ப்பு. இது இரண்டாம் வகை. இப்போ ஒரு ட்வீட்: எல்லா சொற்களையும் தமிழ்ப் படுத்தியே தீருவேன்னு சொல்றவங்கதான் தமிழின் கொடிய எதிரிகள், அவர்களால் தமிழ் செத்தொழிந்து போகும். இது எல்லா மொழிக்கும் பொருந்தும். மேற்கண்ட ட்வீட் சரீன்னு பட்டுச்சின்னா, தப்பிச்சீங்க, இதோட திரும்பி போயிடலாம். இல்லேன்னா கீழ படிங்க. ஆக்சிஜனை பிராணவாயுன்னு சொன்னாங்க, எப்படியோ அரைகுறையா படிச்சு வந்துட்டோம் ஆனா ஒரு பலனும் இல்ல, தூய தமிழ்ல பேசமுடியலையேங்கிற குற்ற உணர்வுதான் மிச்சம், ஒரு காலத்துல பிராணவாயு புது வார்ததைதானே, அது ஏன் ஆக்சிஜனாவே, ஒரு புது வார்த்தையா இருந்திருந்திருக்க கூடாது? சரி அதைவிடுவோம், இன்று அசுர வளர்ச்சி கண்டுகொண்டிருக்கும் கம்ப்யூட்டர் (அதாம்பா உங்க கணிணி) மற்றும் செல்போன் துறை சம்பந்தமான எல்லாத்தையும் தமிழ்ப் படுத்த முயல்வதால் என்ன பயன்? இதற்கு சரியான தமிழ்ச்சொல் கண்டுபிடித்து, அதை எல்லோரிடமும் கொண்டு சேர்த்து, அதை அவர்களும் பயண்படுத்த தொடங்கி… மூச்சு வாங்குதுப்பா!! அதுக்குள்ள வேற எங்கேயோ போயிடாதா உலகம்? என் வாதம்: தமிழ்ப்படுத்துதல் தமிழனை முடமாக்கி பின்தங்க வைக்கும் முயற்சி!
'கம்ப்யூட்டர்'ல என்னங்க பிரச்சினை? அது ஏன் தமிழாகாது? அதுல கிரந்தம் கூட இல்லையே? ஆங்கிலம் மாதிரியே இருக்கு அப்டீங்குறதால, தமிழோட கற்பேதும் பறிபோயிடுமா? எல்லாத்தையும் இப்பிடி படுத்திதான் தமிழ் வழிக்கல்வி ஏட்டுச்சுரைக்காய் ஆனது. கணிணி, நுண்செயலி, சார்பிலாத் தெரிவு நினைவகம், வன்தட்டு நிலை நினைவகம் இப்பிடியெல்லாம் பள்ளிக்கூடதுல படிச்சிட்டு வந்தா இன்றைய உலகமயமாக்கலின் நடைமுறைக்கு உதவாதுன்னு ஒத்துக்குறீங்களா? அதெல்லாம் முடியாதா? சரி அடுத்த கட்டத்துக்கு போவோம்.
சார்பிலாத் தெரிவு நினைவகம் அப்டீன்னா என்னான்னு தெரிஞ்சுதா? RAM (Random Access Memory). இதை மட்டும் தமிழ்ப்படுத்தீட்டா போதுமா? ரேம்ல எத்தனை வகை இருக்கு, அது எப்படி இயங்குது, இன்றைய ஆராய்ச்சி/முன்னேற்றம் எதை நோக்கி இருக்குன்னு எல்லாத்திலுமிருக்கும் பெயர்ச்சொற்களை தமிழ்ப்படுத்தி சொல்றதுக்கு எவ்வளவு நேரமும் திறனும் வீணாகும்? அதைப்படித்து வந்தவன் பணியிடத்தில் மற்ற மொழியினரோடு தாம் படித்ததை தொடர்புப்படுத்தி உரையாடுவதில் எவ்வளவு நேரமும் திறனும் வீணாகும்?
நான் சொல்வது பெயர்ச்சொற்களை மட்டுமே!! எப்படி இயங்குகிறது என்கிற கோட்பாடு (concept) மட்டும்தான் தமிழில் வேண்டும், அது எளிதில் புரிந்துகொள்ள உதவும். முழுவதும் தாய்மொழியில் கற்பிக்கும் நாடுகளில் இந்த பைத்தியக்காரத்தனம் இல்லாதிருப்பதால்தான் அவர்களால் வெற்றிகரமாக செயல்பட முடிகிறது. உதா. ஜெர்மணியை எடுத்துக்ககொள்வோம். Computer = Komputer, Microprocessor = Mikroprocessor, Transistor = transistor. அவர்கள் நாட்டில் கண்டுபிடிக்காத பொருட்களின், உண்மையான பெயரைத்தான் பயன்படுத்துகிறார்கள். இதனால் எவ்வளவு நேரம் மிச்சமாயிருக்கும்? தாய்மொழியில் படிப்பதிலிருக்கும் தயக்கம் போய்விடாதா?
சொல்ல வந்தது புரிஞ்சிருக்கும்ன்னு நம்புறேன். இல்லேன்னா மேல இருக்க ட்வீட்லேர்ந்து திரும்ப படிங்க. எல்லாம் சரி, இந்த ஹிக்ஸ் போஸனுக்கு என்னங்க தமிழ்ப்பெயர்? -தருசு @tharusu 6th July 2012 from Twitlonger

No comments:

Post a Comment