அன்பார்ந்த ட்விட்டர் பெருமக்களே எங்கடா சண்டை நடக்கும் ஒரு பட்டறையை போட்டு வேடிக்கை பார்க்கலாம் என அலைபாயும் அன்பு நெஞ்சங்களே:) உங்களுக்கு என் முதற்கண் வணக்கத்தைத் தெரிவித்துக் கொண்டு இந்த டிவிட்லாங்கரை உங்கள் ஆசியுடன் ஆரம்பிக்கிறேன்.அதாகப்பட்டது ஒரு சம்பவத்தினை மீண்டும் ஒரு கொசுவத்தி மூலம் நினைவூட்டி எனது கருத்து முத்துகளை அள்ளித் தெளிக்க சித்தமாயிருக்கிறேன்.அன்றொரு நாள் ........ஆறு மாதங்களுக்கு முன்பு பிரபல பதிவரும் அஜால் குஜால் ரைட்டருமான திரு.செந்தில் சிபி அவர்களுக்கும் எனக்கும் இடையில் ஒரு பிரச்சனை வந்தது.அவர் வழக்கம் போல பிகர் ட்வீட்ஸ் போட பல மாதங்கள் அவர் போடும் பொழுதெல்லாம் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த நான் அன்று மட்டும் இப்படி போடாதீங்க என்றும் உங்க மனைவி அம்மாவும் பிகர் தானா என்று கேட்டதும் ஹி ஹி என்று விட்டு போய்விட்டார்.ஆனால் டிவிட்டரில் ஒரு மாபெரும் அறச்சீற்றமே நிகழ்ந்தது.குடும்ப நபர்களை இழுத்தது தவறாம்.எவரோ ஒருவரை பிகர் ன்னு சொல்வதில் தவறில்லையாம்.
அவர்கள் குடும்பத்தைச் சார்ந்தவர்களைச் சொன்னால் மாபெரும் வரலாற்றுப் பிழையாம்.(அட முண்டங்களா! நானும் அதைத் தானடா சொன்னேன் யாரை வேணாலும் சொல்லு மரியாதைக்குரிய நெருங்கிப் பழகும் நல்ல தோழிகளை அப்படி அழைக்காதீங்க என்று) உன் பொண்டாட்டி செம கட்டை ன்னு சொல்றதுக்கும் உங்க மனைவி நல்ல அழகு என்பதற்கும் உள்ள வேறுபாடு அறியாதவர்கள்.பிகர்ன்னு யாரும் யாரையும் அழைக்கலாம் என்றால் ஏன் அம்மா,மனைவியைச் சொன்னால் மட்டும் பொத்துகிட்டு வரணும்?அதையும் பரந்த மனதோடு ஏற்றுக் கொள்ள வேண்டியதுதானே?ஒரு பெண்ணை ஆண் ரசிப்பதில் தவறே இல்லை.ஏன் ரசிக்காமல் இருப்பவன் ஆண் மகனுமில்லை.ஆனால் ஒரே பார்வையிலேயே ஒரே உரசலிலேயே புணர்ந்து விடும் வெறியோடு அந்தப் பெண்ணை பாதிக்குமாறு பார்ப்பது அருவெறுக்கத்தக்க ஒன்றே.உன் ரசனை எதுவும் தனிப்பட்ட முறையில் அந்தப் பெண்ணை பாதிக்காதவாறு பார்த்துக் கொள்வதுதானே?காமெடி என்ற பெயரில் என்ன எழுதினாலும் சிரிப்போம் என்று நினைக்க வேண்டாம் என்று அன்று நான் சொன்னது போது அவரது காமெடி யை ரசிக்கும் திறன் இல்லை என்று என்னைச் சொன்னவர்கள் இன்று மட்டும் பொங்குவது ஏனோ?அவரது குறையை DM இல் சொல்லாமல் ஏன் டைம் லைனில் சொன்னீர்கள் என்று பொங்கியவர்கள் இன்று பதிவு மேல் பதிவாக போடும் பொழுது அமைதி காப்பது ஏனோ?ஒரு முறை அல்ல பல முறை அந்த மனிதரிடம் சொல்லி இருக்கின்றேன்.ஒரு ட்வீட் போட விடுங்க.அதிலிருந்து உருவி உருவி அடுத்து என்ன போடணும் என்பதே எங்களுக்கு மறந்து போக வைக்காதீங்க.யாரோ ஒருத்தருக்கு தனிப்பட்ட முறையில் போட வேண்டிய மென்சனை ஊருக்கே தெரியற மாதிரி எழுதாதீங்க அயர்ச்சியா இருக்கு நீங்க மத்தவங்க கூட பேசுவதை எல்லாம் நான் வேடிக்கை பார்க்க.இப்படி என் கருத்து வேறுபாடு பலவற்றை DM ல தான் வச்சேன்.அவர் கேட்டால் தானே?எதிர்ப்பு தெரிவிப்பவர்களிடம் மட்டும் அமைதியாயிருந்து விட்டு வேறு ஒருவரிடம் அதையே தொடர்வது.
என்னை ஆரம்பம் நாள் தொட்டுப் பார்ப்பவர்கள் நன்கு அறிவார்கள் என்னைப் பற்றி நான் பெண்ணீயம் பேசித் திரியும் நபர் அல்ல என்று.அன்று மட்டும் ஏன் பொங்கல்?இந்த மனிதர் குந்தவை அவங்க புகைப்படம் DP யில் வைக்கவும் சிவப்பு கனிமொழி மாதிரி சூப்பரா இருக்கு இந்த பிகர் பாராட்டுக்கள் என்று தெரிவித்தார்.அதற்குத் தான் நான் சொன்னது எல்லாரையும் இதே போல சொல்லாதீங்க.அவங்க ரெண்டு குழந்தைக்கு அம்மா எனக்கு ஏதோ போல இருக்கு என்று.சத்தமில்லாம ட்வீட் நீக்கிட்டு அவங்ககிட்ட DM ல போய் சாரி கேட்டுவிட்டார்.இதன் நீட்சியாகத் தான் அன்று நான் சொன்ன அத்தனையும்.இது எத்தனை பேருக்குத் தெரியும் எங்கள் மூவரைத் தவிர.என்னிடம் வந்து வழக்கம் போல DM இல் பேசின பொழுது எல்லாரும் உங்களைப் பத்தி பதிவு எழுதச் சொல்லி வற்புறுத்தினாங்க ஆனால் என் மேல தவறு இருக்கு என நான் எழுதல என்றார்.உங்களுக்கு ஆதரவா ஏதேனும் எழுதினா எனக்கு பொம்பளைப் பொறுக்கின்னு முத்திரை குத்திருவாங்க நீங்க குந்தவியைச் சொன்னதுக்காகத் தான் திட்டிநீங்கன்னு எனக்குத் தெரியும் அவங்க அதை திசை திருப்புவாங்க என்பது நானே எதிர்பாராதது என்றார்.நான் கேட்டது ஒன்றுதான் எனக்கு ஆதரவாக நீங்க பேசவே வேணாம் ஆனால் இதுதான் விஷயம் என்று ஏன் வெளிப்படையாக இன்று வரை சொல்லவே இல்லை எனக் கேட்டேன் இன்றுவரை அதற்கு எனக்கு பதில் இல்லை.என் மேல இருக்கும் வெறுப்பைத் தீர்த்துக் கொள்ள இந்த விசயத்தைப் பயன்படுத்திக் கொண்டார்களே அன்றி நிச்சயம் இதை நட்பு என நம்பினால் உங்களை விட வேறு முட்டாள் யாரும் இருக்க முடியாது என்று சொல்லி ஒதுங்கிக் கொண்டேன்.
இப்பவும் சொல்றேன் நான் சராசரிதான் எந்தப் பெண்ணீய கருத்துகளைப் பரப்ப நான் வரல..தனிப்பட்ட முறையில், "சாதரணமாக உங்களுக்கு அளித்த பதிலை இரட்டை அர்த்தத்தில் எடுத்து RT செய்துவிட்டார்கள் உமா மன்னிக்கவும் " என்று கேட்ட நண்பனின் கண்ணியத்தை நானறிவேன்.அதனால் தான் எந்த சோனாவுக்கும் இலியானாவுக்கும் நான் பொங்கியதே இல்லை.விமர்சனங்கள் பற்றிக் கவலைப்படாது அவர்களே இருக்கின்ற பட்சத்தில் அவர்களுக்கு எதற்காக நான் வக்காலத்து வாங்கணும்?
காலம் காலமாக உண்டு நீ அக்கா தங்கையோடு பிறக்கலையா?நீயும் ஒரு தாய் வயிற்றில் பிறந்தவன் தானே உன் வீட்டுப் பெண் என்றால் இப்படிப் பேசுவியா என்ற வார்த்தைகள் யாவும்.அதன் நோக்கம் முழுக்க பெண்ணிடம் பிறந்து பெண்ணோடு வளர்ந்தவன் நிச்சயம் அவள் வலிகளை அறிந்திருக்கக் கூடும் என்ற ஒன்று மட்டுமே.
"பெண்கள் கூட்டம் பேய்கள் என்று பாடம் சொன்ன சித்தர்களும்
ஈன்ற தாயும் பெண்மை என்று எண்ணிடாத பித்தர்களே .."(மனதில் உறுதி வேண்டும்)
என்று கவிஞர் எண்பதுகளில் வந்த பாடல்களிலேயே எழுதி இருக்கின்றார்.முடிந்தால் அவரையும் சண்டையிடவும்.எனக்குத் தெரிய வேண்டியது எல்லாம் அன்று ஓவரா பொங்கிய அத்தனை வெண்ணை மயிராண்டிகளும் (அடடா மரியாதைக் குறைச்சலா இருக்குதோ ....ஆனா இதுவே அதிகம்ன்னு எனக்குத் தோணுது) இன்று ராஜன் பதிவுக்குப் பொங்குவாங்களா? நானாச்சும் ஒரே ஒரு ட்வீட் ல ஒரே ஒரு கேள்விதான் கேட்டேன்.மனுஷன் பதிவே போட்டிருக்கிறார்.ராஜன் பெண்களுக்காகக் குரல் ஓங்கி கொடுப்பவர் என்றெல்லாம் நம்பும் அளவுக்கு நான் பேதை அல்ல.ஆனா தில்லு இருந்தா இப்ப பொங்குங்கடா.. ஏன் பதிலுக்கு நாராசமா செமத்தியா வாங்க வேண்டி இருக்கும்ன்னு பயமா?இல்ல RT கிடைக்காது பிரபலம் அவர் மூலமா விளம்பரம் கிடைக்காது என்ற யோசனையா?அன்னைக்கு சூடு சொரணை ரோஷமெல்லாம் பொத்துகிட்டு வந்துச்சே இப்பவும் அதே சோறுதான் சாப்பிடறீங்களா பாஸ்?அன்று சென்னிமலையார் க்காக அக்கறையாய் பொங்கியவர்கள் இன்று ராஜனுக்கும் ஆதரவா பேசுறாங்க :) என்ன கூட்டமுடா நீங்க ?:) அன்னைக்கும் சரி இன்னைக்கும் சரி செந்தில் சிபி ஒரே மாதிரிதான் :) உங்க பார்வைகள் மட்டும் ஏன் மாறி இருக்கு?நான் சொன்னப்போ வராத யோசனை இப்ப மட்டும் வந்துச்சே ஏன்?ரொம்ப பழசு தான் இருந்தாலும் கேட்கறேன் அடுத்தவனுக்கு தக்காளிச் சட்னி உங்களுக்கு ரத்தமா?அவர் காமெடியை ரசிக்கும் பக்குவம் ஏன் இல்லை?
மெனக்கெட்டு உங்க பக்கமெல்லாம் தேடி படிக்கும் அளவுக்கு நான் வெட்டியுமில்லை எனக்கு நேரமுமில்லை.ஆனா நிச்சயமா இதெல்லாம் நீங்க படிப்பீங்கன்னு உங்க அப்பத்தா மேல ஆணையா நான் நம்பறேன்.அதுதான் என் வெற்றியும் கூட :) சிலர் ட்வீட்ஸ் படிக்கக் கூடாதுன்னு தான் நான் follow வே பண்ணல.அந்த சிலர் என்னை ப்ளாக் பண்ணா என்ன பண்ணாட்டி என்ன?யார் என்னை unfollow செய்தாலும் ப்ளாக் செய்தாலும் எனக்கு எந்த சொத்து இழப்பும் இல்லை.followers காக எந்த வித காம்ப்ரமைசும் நான் இதுவரை பண்ணிகிட்டதே இல்லை.இனிமேலும் அப்படித்தான்.follow back பண்ணல ன்னு யார் கிட்டயும் நான் பிச்சை கேட்கல.பலருக்காக சுயம் இழந்து புழுங்குவதை விட சிலருக்கு மட்டுமே பிடித்த என்னை எனக்கே பிடிச்சிருக்கு.உண்மையா பழகும் சில நண்பர்களே போதும்ன்னு நினைக்கறேன்.வந்து படிச்சுட்டு நான் காறித் துப்பினதை மூஞ்சில வாங்கிட்டு அந்தப் பக்கம் போய் கதறுங்கள் :) எதையும் நான் படிக்கப் போவதே இல்லை.உங்க அத்தனை பேருக்கும் ஒரு பெரிய டாட் .
எனக்கு செந்தில் சிபி மீது யாதொரு துவேஷமும் இல்லை.இந்தப் பதிவைக் கூட அவரைக் கேட்டே எழுத விருந்தேன்.ஆனால் ஐயகோ அவருக்கு DM பார்க்கத் தெரியாதே :-O என்னதான் டைம் லைனில் கிண்டல் செய்தாலும் சட்டென்று DM இல் மன்னிப்பு கேட்டு விடும் நண்பர் (இந்த ட்ரிக்ஸ் பற்றியும் ஒரு பதிவெழுத வேண்டுகிறேன் ) யார் எங்கே என்னைப் பற்றி என்ன சொல்லி இருந்தாலும் அக்கறையோடு DM இல் "எடுத்துச் "சொல்பவர் .ஆனால் ஏனோ அந்தப் பிரச்சனைக்குப் பிறகு தனக்கு வேறு முத்திரை விழுந்து விடும் என அஞ்சி(??) என்னிடம் DM இல் மட்டுமே பேசிக் கொண்டிருந்தார்.நான் தான் நம்மால் அவருக்கு எதற்கு வீண் வம்பு என்று விலகி விட்டேன்.என்னை சீண்ட அனுமதி அளித்ததே இல்லை அவரும் அதை மதித்து விலகி இருக்கிறார் என்பதையும் இங்கே பதிவு செய்கிறேன்.
திசுகி : (கிரந்தம் தவிர்க்கறேன் :P )
ஏதோ செந்தில் சி பி பதிவுகளுக்கெல்லாம் பொங்கி அறச்சீற்றம் செய்திருப்பேன் என நம்பி படிக்க வந்தவங்களுக்கு ஒரு sorry :) எனக்கு அதெல்லாம் அவசியமே இல்ல சம்பந்தப்பட்டவங்க பொங்கறதோ பொங்காம போறதோ அது அவங்க பாடு :) அக்கார்டிங் டு மீ திஸ் இஸ் தக்காளிச் சட்னி :)
இதன் மூலம் நான் உங்களுக்கு அறியத் தருவது வாழ்க்கை மட்டுமில்ல டிவிட்டரும் ஒரு வட்டம் :)
-உமாக்ருஷ் @umakrishh
1st June 2012 from Twitlonger
No comments:
Post a Comment